யாழில் எலிக்காய்ச்சல் ஓய்ந்தது,
யாழில் எலிக்காய்ச்சல் ஓய்ந்தது , யாழ்ப்பாணத்தில் பரவலாக பரவி வந்த எலி காய்ச்சலானது தற்பொழுது கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்துறை , கரவெட்டி , சாவக் கச்சேரி பகுதிகளில் சமீப காலங்களாக பரவலாக பரவி வந்த எலிக்காய்ச்சல் நோய் தற்பொழுது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரர் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார் .
இந்த நோயானது அதிகரித்து வருவதாகவும் தற்போது அவை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
தற்பொழுது எலிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது எண்ணிக்கையில் சடுதியாக குறைவடைந்து காணப்படுவதாக மேல் அதிகமாக தெரிவித்தார்.
அதே நேரம் இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஐயா கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் .
தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டால் இந்த நோயை மிக வேகமாக கட்டுப்படுத்த முடியும் என அவர் கருத்துக்களை முன் வைத்தார்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு











