Posted in இலங்கை செய்திகள்

இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

தெஹிவளை கல்தேரா வீதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தெஹிவளை கல்தேரா வீதியில் வசிக்கும் 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    திதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ ஞானசக்தி விநாயகர் ஆலய பிரதிஷ்ட கும்பிஹேக நிகழ்வில் எண்ணெய் காப்பு

    புஸ்ஸல்லாவ நிவ்மெல்போட்டில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ ஞானசக்தி விநாயகர் ஆலய பிரதிஷ்ட கும்பிஹேக நிகழ்வில் எண்ணெய் காப்பு பிரதம குருக்கள் ஞானவரத

    ஐயப்பன் தேவஸ்தான பீடாதிபதி சிவஸ்ரீ க.மஹேஸ்வர குருக்கள் அவர்களின் தலைமையில் (05.01.2021) நடைபெற்றது

    இந் தெய்வீக நிகழ்வில் பக்த அடியார்கள் பலர் கலந்துக் கொண்டு ஸ்ரீ ஞானசக்தி விநாயகருக்கு எண்ணெய் சாய்வித்தனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட கொள்ளையன்

      கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட கொள்ளையன்

      காத்தான்குடியில் பல வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த கொள்ளையன் ஒருவனை கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டவனை முன்று

      தினங்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (05) அனுமதி வழங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

      காத்தான்குடி பிரதேசத்தில் அண்மைகாலங்களில் பல வீடுகள் உடைத்து அங்கிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிடப்பட்டுவந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது

      இதனை தொடர்ந்து பொலிசார் மேற்கொண்டுவந்த விசாரணையில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை (04) காத்தான்குடி கர்ப்லா பிரதேசத்தில் வைத்து கொள்ளையன் ஒருவரை கைக்குண்டுடன் கைது செய்தனர்.

      இதில் கைது செய்யப்பட்டவர் காளிகோவில் வீதி செல்வநகரைச் சேர்ந்த நிப்பிறாhஸ் என்பவர் எனவும் இவர் கடந்த வருடம் காத்தான்குடியில் இடம்பெற்ற பல கொள்ளைச்

      சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் இதில் காத்தான்குடி அன்னூர் பாடசாலை வீதியில் வீடு ஒன்றில் கொள்ளையிட்ட 4 அரைப்பவுண் தங்க ஆபரணங்களை

      கொள்ளையன் ஒந்தாச்சிமடம் பகுதியிலுள்ள தங்க ஆபரண கடை ஒன்றில் ஈடுவைத்த நிலையில் அதனை மீட்டுள்ளதுடன்

      இந்த கொள்ளையனை தொடர்ந்து பொலிஸ் தடுப்பு காவலில்வைத்து விசாரணை செய்ய நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.

      றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தபபட்டபோது அவரை 3 தினங்களான 7 ம்திகதிவரை பொலிஸ்தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

        செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
        Posted in இலங்கை செய்திகள்

        குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- தொடரும் மர்ம கொலைகள்

        குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- தொடரும் மர்ம கொலைகள்

        நிகவெரட்டிய, கலபிட்டியகம குளத்தில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

        குறித்த பெண் கலபிட்டியகம பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான தம்மிக்க பத்திரன (வயது – 59) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

        நேற்று குறித்த குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், நீரில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு அதுபற்றி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

        குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

        குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார் , இதுதொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

        இவ்வாறு குளத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக நிக்கவெரட்டிய தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

        இந்த சம்பவம் தொடர்பில் நிகவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

          பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி
          Posted in இலங்கை செய்திகள்

          பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்து சேகரிக்கும் மக்கள் போராட்டம்

          பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்து சேகரிக்கும் மக்கள் போராட்டம்

          பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்து சேகரிக்கும் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.

          குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் தமிழரசு கட்சியில் வாலிபர்

          முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் தனராஜ் தலைமையில் கிளிநொச்சி சேவைச் சந்தை வளாகத்தில் ஆரம்பமானது.

          குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை

          தவிசாளர் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

          இதேவேளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான டிவனியாவின் மகளும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு ஒப்பமிட்டிருந்தார்.

          இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர்

          வேழமாலிகிதன் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டத்தின் தாக்கம் தொடர்பில் உரையாற்றியிருந்தனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்களை அனுமதிக்கவும்- தமிழக அரசு அதிரடி

            கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்களை அனுமதிக்கவும்- தமிழக அரசு அதிரடி

            கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கவலை வெளியிட்டுள்ளார்.

            இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து, இவ்விழாவில் தமிழக மீனவர்கள்

            பங்கேற்க வழிவகை செய்யுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் வலியுறுத்தியுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

            “தமிழ் மீனவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளனர்,

            மேலும் பல தசாப்தங்களாக இந்த பாரம்பரிய நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர்.

            இந்நிலையில் தற்போது தமிழக மீனவர்களுக்கு நிகழ்வில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளின் மறுப்பு தெரிவித்துள்ளமை மாநிலத்தில் உள்ள மீனவர்

            சமூகத்தினரிடையே ஆழ்ந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

            Posted in இலங்கை செய்திகள்

            தடுப்பூசி போடாதவர்களுக்கு ஏப்.30 முதல் பொது இடங்களில் தடை

            தடுப்பூசி போடாதவர்களுக்கு ஏப்.30 முதல் பொது இடங்களில் தடை

            ஏப்ரல் 30 முதல் கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி

            போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை செய்யும் விசேட

            வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர் இன்று (05) காலை வெளியிட்டுள்ளார்.

            அதற்கமைய, ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களில் காதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

            ‘பொது இடங்கள்’ மற்றும் ‘முழு தடுப்பூசி’ பற்றிய வரையறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

            Posted in இலங்கை செய்திகள்

            கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் சுமார் ஐந்து மடங்கு அதிகம்

            கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் சுமார் ஐந்து மடங்கு அதிகம்

            கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகளை விட கொரோனா வைரஸின்

            தாக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் சுமார் ஐந்து மடங்கு அதிகம் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

            கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியை டாக்டர் பிரியதர்ஷனி கலப்பத்தி இதை தெரிவித்தார்.

            தடுப்பூசியை பெறும் போது வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்ற சாதாரண பக்கவிளைவுகளே ஏற்படும்.

            மேலும், சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்படும் மருந்துகளை உட்கொள்வது ஆபத்தானது எனவும் டாக்டர் பிரியதர்ஷனி கலப்பத்தி தெரிவித்துள்ளார்.

              Posted in இலங்கை செய்திகள்

              வெடிகுண்டுடன் சிக்கிய நபர்

              வெடிகுண்டுடன் சிக்கிய நபர்

              மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் வைத்து

              நேற்று இரவு கைக்குண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

              நேற்று இரவு பாலமுனையில் உள்ள பொலிஸ் காவலரணுக்கு அருகில் வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

              கைதுசெய்யப்பட்டவர் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

              குறித்த நபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

                nternational Truth and Justice Project
                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கைக்கு பிரிட்டன் கடும் கண்டனம் – சுதந்திர தின நாளில் அறிவிப்பு

                இலங்கைக்கு பிரிட்டன் கடும் கண்டனம் – சுதந்திர தின நாளில் அறிவிப்பு

                இலங்கையில் 2020 மற்றும் 2021 ஆண்டளவில் பாலியல் ,கடத்தல் மற்றும் சித்திரவதைகள் என்பன இடம்பெற்றுள்ளதாக தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தொனியா பாராளுமன்றில் பேசியுள்ளார்

                மேலும் கோனம்வெல்த் வெளிநாட்டு அமைச்சும் ,சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் என்பன கடுமையான கண்டனத்துடன் அறிவித்துள்ளன

                கோட்டா ஆட்சியில் மக்கள் நாடளாவிய ரீதியில் பலமாக பாதிக்க பட்ட வண்ண உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                80500 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு

                80500 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு

                இலங்கையின் 74 வைத்து சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தில்

                80500 க்கு மேற்பட்டவர்களுக்கு பதவிஉயர்வு வழங்க பட்டுள்ளது

                இவ்விதம் வழங்க பட்டவர்களில் 480 உயர்தர அதிகாரிகள் ,இவர்களே முள்ளிவாய்க்கால்

                அழிவின் முக்கிய சூத்திரதாரிகள் என்பது குறிப்பிட தக்கது

                இலங்கையின் 74ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்
                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையின் 74ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்

                இலங்கையின் 74ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்

                ‘சவால்களை வெற்றி கொண்ட வளமான நாள் – சுபீட்சமான தாய் நாடு’ என்ற தொனிப்பொருளில் ,இலங்கையின் 74ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று (04) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளன.

                கொரோனா தொற்றின் காரணமாக சுகாதார வழிமுறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு தேசத்தின் அபிமானத்தைகாக்கும் வகையில் வழக்கம்போன்று எவ்வித குறைபாடுகளுமின்றி கம்பீரமானதாகவும் எளிமையான முறையிலும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

                இம்முறை சுதந்திர தின அணி வகுப்புகளில் 3,463 இராணுவத்தினரும் 919 கடற்படையினரும் 804 விமானப் படையினரும் 336 பொலிசாரும் 282 பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் 437 சிவில் பாதுகாப்புப் படையினருமாக மொத்தமாக 6,500 முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸார் அணி வகுப்புக்களில் கலந்து கொள்ளவுள்ளனர்.

                விமானப் படையினரின் விமான சாகசங்களும் நடைபெறவுள்ளன. வழமை போன்று இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படையின் அணிவகுப்புடன் முப்படைகளின் பல்வேறு வகையான கவச வாகனங்களும் இயந்திரங்களும் அணிவகுத்து செல்லவுள்ளன.
                சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத வழிபாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

                சுதந்திரத்திற்காக போராடிய அனைத்து தலைவர்களையும் நினைவு கூர்ந்து இம்முறை சுதந்திர தினத்தன்று மலர் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலுள்ள உருவச்சிலைகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

                சுதந்திரதின நிகழ்வுகளில் இம்முறை பொது மக்கள் பங்கேற்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
                அத்துடன் கொழும்பு 07 சுதந்திர சதுக்க பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் 21 வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன் அதற்கான மாற்றுவழிகளை வாகன பயன்படுத்துமாறு மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் அறிவித்துள்ளார்.

                சுதந்திர தின நிகழ்வுகளில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்புகள் இடம்பெறுவதுடன் கலை கலாசார அம்சங்களும் வழமைபோன்று இடம்பெறவுள்ளன. பாடசாலை மாணவ மாணவிகள் ஜய மங்கள கீதம் இசைப்பதுடன் அவர்களுக்கு மேலதிகமாக தேசிய மாணவர் படையணிகளைச் சேர்ந்த 259 மாணவ மாணவியர் பங்கேற்கும் பாரம்பரிய கலை கலாசார அம்சங்களும் நடை பெறவுள்ளன.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின நிகழ்வுகளை ஆரம்பித்து வைப்பதுடன் தேசிய கீதத்தையடுத்து பாடசாலை மாணவ மாணவிகளின் ஜய மங்கள கீதம் இசைக்கப்படும். அத்துடன் நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

                அத்துடன் ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவுள்ளன. அதனைத்தொடர்ந்து சுதந்திர சதுக்கத்திலருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு தனதுசுதந்திர தின பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார்.

                இம்முறை தேசபிதா டி.எஸ். சேநானாயக்கவிற்கு மேலதிகமாக தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக அவருடன் இணைந்து போராடிய ஏனையவர்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர்சமல் ராஜபக்ஷ தெரிவித்தார

                இதேவேளை, கொழும்பில் நடைபெறும் பிரதான நிகழ்வுகளுக்கு மேலதிகமாக சமகாலத்தில் நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேச பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். விசேட நடவடிக்கைக்கான செயலணி மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டு பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

                சுதந்திரதின விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள விசேட அதிதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழில் இணைக்கப்பட்டுள்ள வாகன தரிப்பிடலேபிள்களுடன் காலை 7.30மணிக்கு முதல் வருகை தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இலங்கை கடற்படையினரால் தாய் நாட்டிற்காக கஜபாகு கப்பலிலிருந்து 25 பீரங்கி வேட்டுக்கள் காலி முகத்திடலில் தீர்க்கப்படவுள்ளன.

                தமிழர்களின் கரிநாள்
                Posted in இலங்கை செய்திகள்

                இன்று தமிழர்களின் கரிநாள் – தமிழர்கள் கருப்பு கொடி போராட்டம்

                இன்று தமிழர்களின் கரிநாள் – தமிழர்கள் கருப்பு கொடி போராட்டம்

                ஸ்ரீ லங்காவின் சுதந்திர நாள், தமிழ் தேசத்தின் கரிநாள்’ எனும் தொனிப்பொருளில்

                முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.

                வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும்

                வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்

                முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணி, முல்லைத்தீவு நகரை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது.

                குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள், வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு

                மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல்

                பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                துரத்தும் டெங்கு – 8000 பேர் பாதிப்பு

                துரத்தும் டெங்கு – 8000 பேர் பாதிப்பு

                இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் நாடளாவிய ரீதியில்

                டெங்கு நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 8000 க்கு மேலானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                சுற்றுப்புற சூழல் சுத்த இன்மை காரணமாகவே அதிக நோயாளர்கள் பாதிக்க பட்டுள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது

                  கடன் பெறும் இலங்கை
                  Posted in இலங்கை செய்திகள்

                  இந்தியாவிடம் 500 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை

                  இந்தியாவிடம் 500 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை

                  எரிபொருள் நெருக்கடிக்கு நிவாரணத்தை வழங்கும் நோக்கில் ,கனிய வள

                  உற்பத்தியை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 500 டொலர் மில்லியன்

                  அமெரிக்க டொலர் கடனை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

                  இதுதொடர்பான நிகழ்வில் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே ஆகியோர் கலந்துக்கொண்டார்.

                    விவசாய இயந்திரங்கள் கையளிப்பு
                    Posted in இலங்கை செய்திகள்

                    6 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கு விவசாய இயந்திரங்கள் கையளிப்பு…

                    6 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கு விவசாய இயந்திரங்கள் கையளிப்பு…

                    06 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கான விவசாய

                    இயந்திரங்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்றது.

                    இதற்காகச் செலவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை 250 மில்லியன் ரூபாயாகும்.

                    பசுமை விவசாயத்துக்காக விவசாயிகளை ஊக்குவித்தல் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வகையில் செயற்படுத்தப்படும் “காலநிலைக்கு உகந்த நீர்ப்பாசனத்

                    திட்டம்” ஆகியவற்றின் கீழ், கமநலச் சேவை நிலையங்களுக்கு இந்த விவசாய இயந்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

                    அறுவடை செய்யும் இயந்திரங்கள், களை பறித்தல் இயந்திரங்கள், நாற்று நடும் இயந்திரங்கள், 45 குதிரை வலுவுடைய டிரெக்டர் வண்டிகள் உள்ளிட்ட 7 வகையான

                    இயந்திரங்களே இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டன. வடக்கு, வடமத்தி, கிழக்கு, வடமேல்,

                    ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு உரித்தான 11 மாவட்டங்களில் அமைந்துள்ள 47 கமநலச் சேவை நிலையங்களுக்கே இந்த இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

                    அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், விவசாயத்துறை அமைச்சின் செயலாளர்

                    டீ.எம்.எல்.பண்டாரநாயக்க ஆகியோரும் விவசாய அமைப்புகளின் உறுப்பினர்களும், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

                    வெடித்த போராட்டம்
                    Posted in இலங்கை செய்திகள்

                    யாழில் வெடித்த போராட்டம் – முடங்கிய வீதிகள்

                    யாழில் வெடித்த போராட்டம் – முடங்கிய வீதிகள்

                    யாழ்ப்பாணம் – மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

                    அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராகவும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

                    இதன்போது மாவட்ட செயலகத்தின் இரண்டு பிரதான வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருந்து மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

                    இதன்னால் மாவட்ட செயலகத்தின் இன்றைய செயற்பாடுகள் யாவும் பாதிக்கப்பட்டிருந்தது.

                    அத்தோடு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியையும் மறித்தும் போராட்த்தை முன்னெடுத்துள்ளனர்.

                    இதனால் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

                    போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

                      ஆர்ப்பாட்டம்
                      Posted in இலங்கை செய்திகள்

                      ஆசிரியையை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

                      ஆசிரியையை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

                      திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முஸ்லிம் ஆசிரியையை இடமாற்றக் கோரி குறித்த பாடசாலையின் பெற்றோர் இன்று (03) வியாழக்கிழமை வலயக் கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

                      நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பாடசாலையில் நேற்று (02) கடமையேற்கச் சென்ற ஆசிரியை பாத்திமா பஹ்மிதாவுகும் பாடசாலை நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட

                      சர்ச்சை காரணமாக அதிபரும் ஆசிரியையும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                      அபாயா அணிந்து​கொண்டு சென்றமையால் இந்த சர்ச்சை வெடித்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (03) காலை 8.00 மணியலவில் பாடசாலைக்கு

                      முன்பாக ஒன்று கூடிய பெற்றோர் சிலர், திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று அங்கு ஒன்றுகூடி பதாதைகளைத் தாங்கியவாறு கோஷமெழுப்பினர்.

                      “அடாவடி ஆசிரியை எமக்கு வேண்டாம்”, “தமிழ் கலாசாரத்தை மிதிக்காதே”, “அதிபரை அடித்த ஆசிரியை வேண்டாம்”, “உனது கலாசாரம் உனக்கு எனது கலாசாரம் எனக்கு” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோஷமிட்டனர்.

                      குறித்த இடத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை செய்வதற்கு சிலரை வருமாறு அழைத்தார். எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் இதனை ஏற்க மறுத்துவிட்டனர்.

                      மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் நடந்து கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் வினயமாக வேண்டிக் கொண்டார்.

                      நீதிமன்ற நடவடிக்கை இருப்பதால் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை சமுகத்தோடு பேச்சுவார்த்தைக்கு வருவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

                        கப்பல் சிக்கியது
                        Posted in இலங்கை செய்திகள்

                        200 கி​​லோ போதைப்பொருளை கடத்திய கப்பல் சிக்கியது

                        200 கி​​லோ போதைப்பொருளை கடத்திய கப்பல் சிக்கியது

                        ஈரானில் இருந்து கடல்வழியாக கப்பல் ஒன்றில் 200 கிலோகிராம் போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தி வந்த  ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                         இலங்கை  கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும், கொழும்பு கடற்படை தளத்திற்கு இன்று (03) வியாழக்கிழமை  கொண்டுவரப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

                        ஈரானில் இருந்து கடல்வழியாக கப்பல் ஒன்றில் 200 கிலோகிராம் போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தி வந்த  ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                        இலங்கை  கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும், கொழும்பு கடற்படை தளத்திற்கு இன்று (03) வியாழக்கிழமை  கொண்டுவரப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

                        மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோதவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா

                        அதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வாவின்  பணிப்புரைக்கமைய  மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவிலன் வழிகாட்டலில்  பொலிஸ் குழுவினர்

                        கடற்படையுடன் இணைந்து,  சுமார் 15 தினங்களுக்கு மேலாக இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

                        ஈரானில் இருந்து 200 கிலோகிராம் போதைப் பொருளை கடத்திவந்த கப்பலை, கடலில் வைத்தே வழிமறித்துள்ளனர். இதன்போது,     சுமார் 200 கிலோகிராம் போதைப்

                        பொருளை, கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி போட்டுள்ளனர். எனினும், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் தங்களுடைய பாவனைக்காக வைத்திருந்த போதைப்பொருள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன.

                        கைது செய்யப்பட்ட கடத்தல் காரர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

                          வேலைத்திட்டம்
                          Posted in இலங்கை செய்திகள்

                          ஒரு இலட்சம் வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஆரம்பம்

                          ஒரு இலட்சம் வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஆரம்பம்

                          பொருளாதாரத்தை வலுவூட்டும் கிராமத்துடன் கலந்துரையாடல் வரவு செலவு திட்ட ஒரு இலட்ச வேலைத்திட்டம் இன்று (04) காலை 8.52 மணிக்கு நாடு முழுவதும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

                          2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டத்திற்கு அமைவாக உற்பத்தி பொருளாதாரத்தை வலுவூட்டும் நோக்குடன்

                          மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தேசிய வேலைத்திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

                          நாடு முழுவதிலும் உள்ள 336 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் 14 ஆயிரத்து 21 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இந்த திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

                          இதற்கமைவாக ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 5 தொடக்கம் 6 வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்

                          பிரிவுகளை கேந்திரமாக கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

                          பொது மக்கள் தமது தேவையை அவர்களினாலேயே அடையாளம் காணக்கூடிய வகையிலும் அதற்கான திட்டத்தை அவர்களே தேர்ந்தெடுத்து செயற்திறன் மிக்கதாக

                          முழுமையாக பன்முகப்படுத்தலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

                          ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷவின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டம் நிதியமைச்சர் பெசில்

                          ராஜபக்சவினால் வகுக்கப்பட்டு அவரது வழிகாட்டலுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.