கணவனைப் பழி வாங்க குழந்தையை கொல்ல முயன்ற தாய்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

கணவனைப் பழி வாங்க குழந்தையை கொல்ல முயன்ற தாய்| இலங்கை செய்திகள்

கணவனைப் பழி வாங்க குழந்தையை கொல்ல முயன்ற தாய்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |கணவனை பழிவாங்கும் நோக்கில் ஒன்றரை வயது சிறுமியை இறால் தொட்டியில் தள்ளிய சம்பவம் உடப்பு , கட்டகடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக உடப்புவ பொலிஸார் கடந்த 4 ஆம் திகதி தெரிவித்துள்ளனர்.

உடப்புவ, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவி, தனது பெண் குழந்தை இறால் தொட்டிக்குள் தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

சிறுமி குருநாகல் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் தள்ளப்பட்ட சிறுமி தற்போது குணமடைந்து வருவதாக குருநாகல் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சண்டமாலிசமரகோன் தெரிவித்துள்ளார்.

கணவனைப் பழி வாங்க குழந்தையை கொல்ல முயன்ற தாய்| இலங்கை செய்திகள்

சிறுமியை இறால் வளர்ப்பு தொட்டிக்குள் தள்ளியதாக கூறப்படும் 20 வயதுடைய தாய் சந்தேகத்தின் பேரில் உடப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி தொட்டியில் விழுந்ததாக சந்தேக நபர் முதலில் பொலிஸாரிடம் தெரிவித்த போதிலும், இறால் பண்ணையின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த

போது, சந்தேகநபர் குறித்த சிறுமியை பிடித்து அவளை தொட்டிக்குள் தள்ளும் காட்சி தெளிவாகத் தெரிந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இறால் தொட்டிக்குள் தள்ளிவிட்டு குழந்தையை காணவில்லை என கூறி தேடிய போது, ​​அதே இறால் பண்ணையில் பணிபுரியும் மற்றொரு தொழிலாளி, குழந்தை இறால் தொட்டியில் போராடுவதை பார்த்து அதில் குதித்து காப்பாற்றியதாக கூறினார்.

No posts found.
அரசாங்கத்தின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது| இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |தேர்தலில் முறைகேடு செய்யும் அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதோடு, உள்ளுராட்சி மன்றத்

தேர்தலுக்கு பணம் விடுவிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் மேற்கொண்ட சதி இதன் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அக்மீமன பிரதேசத்தில் நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருக்கு

உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அச்சகருக்கு நிதி விடுவிக்காதிருப்பதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையையும் உயர்

நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகவும், மக்களின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்திற்காக வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு இதுவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியை அணுகி தேர்தலை நடத்த வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கெஞ்சுவதாக கூறிய ஜனாதிபதியின் அபத்தமான கருத்துக்கள் இதன் மூலம் பொய்யானவை என தெரிவித்த

எதிர்க்கட்சித் தலைவர், இன்று வழங்கிய தீர்ப்பின் மூலம், நாட்டு மக்களின் வாக்குரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த
முற்போக்கு முன்னெடுப்பாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

No posts found.
மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு IMF ஆதரவு| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு IMF ஆதரவு| இலங்கை செய்திகள்

மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு IMF ஆதரவு| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி திட்டமிட்ட நடைமுறைக்கு ஏற்ப வட்டி விகிதங்களை உயர்த்தியது பொருத்தமான விடயம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பணவீக்கம் குறித்த கண்ணோட்டம் தொடர்பில் மத்திய வங்கிக்கும் சர்வதேச நாணய நிதிய ஊழியர்களுக்கும் இடையில் சில வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், கொள்கை வட்டி வீதத்தை 1% ஆல் உயர்த்துவதாக இலங்கை மத்திய வங்கி நேற்று (03) அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு IMF ஆதரவு| இலங்கை செய்திகள்

கொள்கை வட்டி வீதத்தை உயர்த்துவதற்கான மத்திய வங்கியின் முடிவு பொருத்தமானது மற்றும் பணவீக்க இலக்கு கட்டமைப்பின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்களுக்கு இணங்கியுள்ளதாக இலங்கைக்கான

தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளனர்.

பணவீக்க இலக்குகளை அடைவதில் இலங்கை மத்திய வங்கியின்
அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

No posts found.
கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்| இலங்கை செய்திகள்

கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதி ஒருவரின் சடலம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள நிலையில் இன்று (04) காலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குறித்த யுவதி கடந்த 02ஆம் திகதி முதல் காணாமல் போனதாக பேருவளை பொலிஸில் அவரது பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர்.

கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்| இலங்கை செய்திகள்

சிசிடிவியை பரிசோதித்தபோது, ​​​​அவர் ஒரு பிரதான வீதியில் செல்வது அவதானிக்கப்பட்ட போதும், அதன் பிறகு அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அதன்படி இன்று காலை பேருவளை மருதானை லெல்லம மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இருந்து அவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது பெற்றோர் பொலிஸாரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No posts found.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தாமதமாவதால்
Posted in இலங்கை செய்திகள்

A/L மாணவர்களுக்கு அநீதி | இலங்கை செய்திகள்

A/L மாணவர்களுக்கு அநீதி | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தாமதமாவதால், பரீட்சார்த்திகள் பாரிய அநீதிக்கு உள்ளாகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் முன்மொழிந்த கொடுப்பனவுகளில் இருந்து ஆயிரம் ரூபாவைக் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சை முடிவடைந்து 02 வாரங்கள் கடந்துள்ள போதிலும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க முடியவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

A/L மாணவர்களுக்கு அநீதி | இலங்கை செய்திகள்

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

No posts found.
மகனின் மரணச் செய்தி கேட்டு உயிரிழந்த தாய் | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

மகனின் மரணச் செய்தி கேட்டு உயிரிழந்த தாய் | இலங்கை செய்திகள்

மகனின் மரணச் செய்தி கேட்டு உயிரிழந்த தாய் | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த மரண செய்தியை இன்று அறிந்த குறித்த குடும்பத்தரின் தாயாரான இராசரட்ணம் வீரம்மா என்ற 82 வயதுடைய முதியவரும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் பிரதேச மக்களை சோகத்துக்குள்ளாக்கியுள்ளது.

இருவரது மரண சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளது.

No posts found.
ஜெர்மனியில் வசித்த தமிழர் யாழில் பிச்சை எடுக்கும் பரிதாபம்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

ஜெர்மனியில் வசித்த தமிழர் யாழில் பிச்சை எடுக்கும் பரிதாபம்| இலங்கை செய்திகள்

ஜெர்மனியில் வசித்த தமிழர் யாழில் பிச்சை எடுக்கும் பரிதாபம்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |ஜெர்மன் நாட்டில் 12 வருடங்கள் வசித்த தமிழர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் ,ஆலயத்தின் முன்பாக பிச்சை எடுக்கும் பரிதாபம் .

நான்கு ஆண் பிள்ளைகளினால் கைவிட பட்ட நிலையில்,
உணவுக்கு வழியின்றி பிச்சை எடுத்து, வாழ்வை கழிக்கும் கண்ணீர் கோலம் .

இருப்பதற்கு வீடுகள் ஏதும் இல்லை .மனைவி இறந்து விட்டார் ,அன்பு செலுத்தவும் ,ஆறுதல் கூறவும் யாருமின்றி, கண்ணீரில் வாடும் இந்த பெரியவருக்கு உதவிகள் கிட்டுமா ..?

உங்கள் வீட்டில் ஒருவராக வெளிநாட்டு உறவுகளே அனைத்து அன்பு செலுத்துவீர்களா ..?
அப்படி என்றால் இதோ அழையுங்கள்.Whatsapp number – 0094 76 160 5288

Error: View 71ba60925p may not exist
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்

ஆணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் மாவில்மடு பிரதேசத்தில் மகாவலி கங்கையில் இருந்து ஆணின் சடலம் நேற்று (01) மீட்கப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

45 – 55 வயதுக்கு இடைப்பட்ட நபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No posts found.
ஓட்டோ சாரதியை கடத்திய தொகுதி அமைப்பாளர்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

ஓட்டோ சாரதியை கடத்திய தொகுதி அமைப்பாளர்| இலங்கை செய்திகள்

ஓட்டோ சாரதியை கடத்திய தொகுதி அமைப்பாளர்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைக் கடத்தி, தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக பொலன்னறுவை மாவட்டத்தில் பலம் வாய்ந்த அரசியல் கட்சியின் அமைப்பாளர் என கூறப்படும் நபர் ஒருவர்

பொரளை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடவத்த ரன்முத்துகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியைக் கடத்த பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஜீப் ஒன்றும் சந்தேகநபருடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஓட்டோ சாரதியை கடத்திய தொகுதி அமைப்பாளர்| இலங்கை செய்திகள்

பொரளையில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதி, கடந்த மாதம் 13ஆம் திகதி கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களாகக் காட்டிக் கொண்டு வந்தவர்களால் , அவரது வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கடவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலன்னறுவை மாவட்டத்தின் தொகுதி அமைப்பாளர் என பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது

No posts found.
பெண் யாசகரின் கைக்குழந்தையை அபகரித்து பறந்த ஜோடி| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

பெண் யாசகரின் கைக்குழந்தையை அபகரித்து பறந்த ஜோடி| இலங்கை செய்திகள்

பெண் யாசகரின் கைக்குழந்தையை அபகரித்து பறந்த ஜோடி| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பெண் யாசகரிடம் இருந்து சுமார் ஒன்றரை வயது அடங்கிய கைக்குழந்தையை மூவரடங்கிய குழுவொன்று அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவரும் ஆண்கள் இருவருமே அந்த யாசகரிடமிருந்த கைக்குழந்தையை பலவந்தமாக பிடுங்கி, ஓட்டோவொன்றில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம், கடந்த 28 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அந்த பெண் யாசகர் பம்பலப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பெண் யாசகரின் கைக்குழந்தையை அபகரித்து பறந்த ஜோடி| இலங்கை செய்திகள்

பம்பலப்பிட்டியவில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு முன்பாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்த கைக்குழந்தையே இவ்வாறு அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டியவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது ஓட்டோவில் வந்திறங்கிய மூவரடங்கிய குழுவினர், அந்தக் குழந்தைக்கு ஆடைகளை வாங்கி தருவதாகக் கூறி, அப்பெண்ணையும் ஓட்டோவில் ஏற்றிக்கொண்டு தெமட்டகொடை பிரதேசத்துள்ள ஆடை விற்பனை நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு ஓட்டோவுக்கான வாடகை கட்டணத்தை செலுத்தி ஓட்டோவை அனுப்பி வைத்துள்ளனர்.

பு​டவை கடைக்குச் சென்றவர்கள் சுமார் 1,900 ரூபாய்க்கு ஆடைகளை குழந்தைக்காக கொள்வனவு செய்துள்ளனர். அதனை குழந்தைக்கு உடுத்திவிட்டதன் பின்னர். அங்கிருந்து மற்றுமொரு ஓட்டோவில் ஏறி, கொம்பனி வீதிக்கு வந்துள்ளனர்.

அங்குள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாகவிருக்கும் வாகன தரிப்பிடத்துக்கு ஓட்டோவை செலுத்திச் சென்றுள்ளனர். ஆட்டோவில் இருந்த பெண், கைக்குழந்தை தன்னிடம் தாருமாறும் தான் தூக்கிக்கொண்டு வருவமாகவும் யாசகரிடம் (பெண்) கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், அதற்கு அந்த பெண் யாசகர் ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது அப்பெண்ணுடன் வந்திருந்த ஆண், யாசகரை தாக்கி ஓட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டு, கைக்குழந்தையுடன் தப்பியோடிவிட்டனர்.

இதுதொடர்பில் பெண் யாசகரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தார்.

தன்னுடைய குழந்தை இல்லாது அந்த பெண் யாசகர் கதறி அழுதுகொண்டிருக்கின்றார் என்றும்​ தெரிவித்த பொலிஸார், குழந்தையை கடத்தியவர்கள் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை. எனினும், குழந்தை பாக்கியம் இல்லாத
ஜோடியே இந்தக் குழந்தையை கடத்தியிருக்கவேண்டும் என்றும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

No posts found.
இலங்கையில் குண்டாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் குண்டாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு| இலங்கை செய்திகள்

இலங்கையில் குண்டாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |இலங்கையில் அதிக எடை மற்றும் பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எடை அதிகரிப்பால் பிற்காலத்தில் தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சாந்தி குணவர்தன கூறுகிறார்.

உலக உடல் பருமன் தடுப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் “விழிப்புடன் இருப்போம், பருமனில் இருந்து விடுபடுவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சாந்தி குணவர்தன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இலங்கையில் குண்டாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு| இலங்கை செய்திகள்

“2015 ஆம் ஆண்டில், ஆண்களில் 22.5% பேர் அதிக எடை மற்றும் பருமனானவர்களாக இருந்தனர்.

2021 கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை 30% ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், 2015 இல், 34% பெண்கள் அதிக எடை மற்றும் பருமனான பிரிவில் இருந்தனர்.

2021 கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை 48% ஆக அதிகரித்துள்ளது

அதிகமாக உட்கொண்டால் அதிகப்படியான அளவு எண்ணெயாக நம் உடலில் தேங்குகிறது.எடை அதிகரிப்பை பாதிக்கிறது.இது பிற்காலத்தில் தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயத்தை உருவாக்குகிறது என்றார்.

No posts found.
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

10 வயது சிறுமி துஷ்பிரயோகம் 46 வயதான ஆசிரியர் கைது | இலங்கை செய்திகள்

10 வயது சிறுமி துஷ்பிரயோகம் 46 வயதான ஆசிரியர் கைது | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பாடசாலை மாணவியான பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த ​எஹலியகொட பொலிஸார், அந்த ஆசிரியருக்கு 46 வயதாகும் என்றனர்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக கூறப்படும் அந்த சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், ​வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அச்சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

பெண் கான்ஸ்டபிளை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது|இலங்கை செய்திகள்

பெண் கான்ஸ்டபிளை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் களனி பொலிஸ் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரி ஒன்றின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், தாக்குதலை மேற்கொண்ட கான்ஸ்டபிள் அவரின் கைத்தொலைபேசியையும் திருடிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னர் சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிளும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் கான்ஸ்டபிளை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது|இலங்கை செய்திகள்

இந்த கான்ஸ்டபிள் கடந்த 25 ஆம் திகதி இரவு கடமைக்கு வருகை தந்ததுடன், கடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரியை காண சாதாரண உடையில் யாரிடமும் கூறாமல் சென்றுள்ளார்.

அங்கு இசை நிகழ்ச்சியின் பாதுகாப்புக்காக சீருடையில் இருந்த பியகம பொலிஸ் பயிலுனர் கான்ஸ்டபிளிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்கி காயப்படுத்திவிட்டு கைத்தொலைபேசியை திருடிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெண் கான்ஸ்டபிள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் களனி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த கான்ஸ்டபிள் நேற்று (27) கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

No posts found.
இரண்டு வாகனங்களை பந்தாடிய லேண்ட் ரோவர்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்களை பந்தாடிய லேண்ட் ரோவர்| இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்களை பந்தாடிய லேண்ட் ரோவர்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |அதிக வேகத்தில் பயணித்த லேண்ட் ரோவர் வாகனமொன்று, வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி மற்றும் முச்சக்கரவண்டியை பந்தாடி பதம் பார்த்துவிட்டு பஸ்தரிப்பிடத்தில் முட்டிமோதி நின்றுள்ளது.

ஹட்டன்-டிக்கோயாவில் இருந்து நோர்வூட் வரையிலும் அதிவேகத்தில் பயணித்த லேண்ட் ரோவர் வாகனமே டிக்கோயா- வனராஜா பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மேலே குறிப்பிட்ட இரண்டு வாகனங்கள் மீது மோதிவிட்டு, பஸ்தரப்பிடத்தையும் பதம் பார்த்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த லேண்ட் ரோவரின் சாரதியும் மற்றுமொருவரும் ​டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (01) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், லேண்ட் ரோவரின் சுக்கான் திடீரென செயற்பட மறுத்தமையை அடுத்தே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

No posts found.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள்

மைத்திரியின் மனு நிராகரிக்கப்பட்டது | இலங்கை செய்திகள்

மைத்திரியின் மனு நிராகரிக்கப்பட்டது | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை 21,000 ரூபாயட கட்டணத்துக்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க போதிய புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காததற்காக முன்னாள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 108 வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No posts found.
வீழ்ந்து நொறுங்கிட ரஷ்யா உலங்குவானூர்தி பலர் காயம்| இலங்கை செய்திகள்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிட ரஷ்யா உலங்குவானூர்தி பலர் காயம்| இலங்கை செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிட ரஷ்யா உலங்குவானூர்தி பலர் காயம்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |ரஷ்ய வடமேற்கு பகுதியில் அரசுக்கு சொந்தமான Mi-8 உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் நால்வர் காயமடைந்தனர் .

குறித்த உலங்குவானூர்தி தரை இறக்கத்தை மேக்கொள்ள தயாராகி கொண்டிருந்த வேளைவீழ்ந்து நொறுங்கியது .

காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

இந்த வானூர்தி விபத்து விமானியின் தவறால் இடம்பெற்றதா ,
அல்லது இயந்திர கோளாறு காரணமாக இடம்பெற்றதா ,
என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி பொலிஸ் விளக்கம்| இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி பொலிஸ் விளக்கம்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி: குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது எனும் தலைப்பில், தனியார் ஊடகமொன்றின் இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பில் ​பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.

அந்த இணையளத்தள செய்தியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது,

இந்த நாட்டின் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடொன்றில் இன்றைக்கு சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர் என்றும் இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது என பொலிஸ் தலைமையக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி பொலிஸ் விளக்கம்| இலங்கை செய்திகள்

அத்துடன், இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்காக அந்த குழு சூழ்ச்சிகளை செய்துள்ளது என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதைப் ​போல, படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில் எந்தவொரு தகவலும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கவில்லை. அதேபோல, செய்தியில் கூறப்பட்டுள்ளதைப் போல விசாரணைகளும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆரம்பிக்கப்படவில்லை.

ஆகையால் அந்த இணையளத்தள செய்தியானது முழுமையாக பொய்யாக சித்திரிக்கப்பட்ட செய்தியாகும்
என்று பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No posts found.
யானை தாக்கி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

ரஷ்ய குடும்பத்தை விரட்டியடித்த காட்டுயானை| இலங்கை செய்திகள்

ரஷ்ய குடும்பத்தை விரட்டியடித்த காட்டுயானை| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வாகனம் ஒன்று காட்டுயானையால் தாக்கப்பட்ட சம்பவம் பொலன்னறுவை மின்னேரியா தேசிய பூங்காவில் பதிவாகியுள்ளது.

8 வயது பிள்ளை மற்றும் 10 மாத குழந்தையை உள்ளடக்கிய ஒரு ரஷ்ய குடும்பம் காட்டு யானையின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற

போது அவர்களை யானை துரத்தியுள்ளது, அவர்கள் ஓடத் தொடங்கி வாகனத்தில் ஏறிய போதும் யானை வாகனத்தைத் தாக்கி சேதப்படுத்தியது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனத்துடன் பொலன்னறுவைக்கு சுற்றுலா சென்ற குடும்பம்,
திரும்பி வரும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்ச்சியாளர் பணி நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

10 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்: நிர்வாகியின் கணவர் கைது| இலங்கை செய்திகள்

10 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்: நிர்வாகியின் கணவர் கைது| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | ரக்வானை சிறுவர் இல்லத்திலுள்ள யுவதிகள் மற்றும் சிறுவர்களை அவ்வப்போது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் குறித்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி ரக்வானை பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் யுவதிகள், மற்றும் சிறுவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

சிறுவர் இல்லத்திலுள்ள சிறுவர்கள், சிறுமிகள் வயது பூர்த்தியடைந்தவுட நிர்வாகியின் வீட்டுக்கு அழைத்துச்சென்று பாடசாலைக்கு அனுப்பப்படுபவர்களே இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகி வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே
அவரது கணவரால் இவ்வாறு பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.

No posts found.
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

உண்டியலை உடைக்கும் போது வசமாக சிக்கிய திருடன்| இலங்கை செய்திகள்

உண்டியலை உடைக்கும் போது வசமாக சிக்கிய திருடன்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன ஊறணி பேச்சியமன் ஆலய உண்டியலை உடைத்து திருட முற்பட்ட இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை இரவு 11 மணியளவில் சின்ன ஊறணி பேச்சியமன் கோயிலில் சத்தம் கேட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த பகுதி

மக்களை ஒன்றிணைத்து வந்த போது, உண்டியலை கல்லால் அடித்து உடைக்க முயற்சித்த ஒருவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

உண்டியலை உடைக்கும் போது வசமாக சிக்கிய திருடன்| இலங்கை செய்திகள்

கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் எனவும், இவருக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்கள் சுமத்தப்பட்டு, நீதிமன்ற பிணையில் வெளிவந்தவர் எனவும் இவரை ஞாயிற்றுக்கிழமை (26)

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்திய போது இவரை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

No posts found.