Tag: வடிவேலு
வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு
வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு
வடிவேலு
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை.
தற்போது தடை நீக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். அதன்படி அவர் நடிக்க உள்ள புதிய படத்தை சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்ற அறிவிப்பு கடந்த மாதமே வெளியானது.
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில், அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்திற்கு ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என தலைப்பு வைத்துள்ளனர். வடிவேலு கோர்ட் சூட் அணிந்தபடி கெத்தான தோற்றத்துடன் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
முதன்முறையாக வடிவேலு உடன் கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்
முதன்முறையாக வடிவேலு உடன் கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு, அடுத்ததாக சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
முதன்முறையாக வடிவேலு உடன் கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்
வடிவேலு
நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில
வருடங்களாக அவர் நடிக்கவில்லை. தற்போது தடை நீக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.
அவர் நடிக்க உள்ள புதிய படத்தை சுராஜ் இயக்க உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டி மூலம் அவர்
இதனை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இப்படத்தில் வடிவேலு 2 பாடல்கள் பாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர்.
நம்பாதீங்க… எல்லாம் போலி… வடிவேலு அதிரடி
நம்பாதீங்க… எல்லாம் போலி… வடிவேலு அதிரடி
தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்க தயாராகி வரும் நடிகர் வடிவேலு, தன்னைப் பற்றி சமூக வலைத்தளத்தில் வரும் புகைப்படங்கள் பற்றி கூறியிருக்கிறார்.
நம்பாதீங்க… எல்லாம் போலி… வடிவேலு அதிரடி
வடிவேலு
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி
படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை
புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேலு நடிக்கவில்லை.
சமீபத்தில் அவர் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் வடிவேலு. அதன்படி சுராஜ் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க உள்ளார் வடிவேலு,
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வடிவேலு
இந்நிலையில், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் எனக்கு கணக்கு கிடையாது, எனது பெயரில் வெளியாகும் பதிவுகள் போலியானவை என்று நடிகர் வடிவேலு கூறியிருக்கிறார்.
சந்திரமுகி 2-ம் பாகத்தில் வடிவேலு
சந்திரமுகி 2-ம் பாகத்தில் வடிவேலு
சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் காமெடி முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.
சந்திரமுகி 2-ம் பாகத்தில் வடிவேலு?
வடிவேலு
ரஜினியின் ‘சந்திரமுகி’ 2005–ம் ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பி.வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினியுடன் பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு, நயன்தாரா, மாளவிகா
உள்பட பலர் நடித்திருந்தனர். இதில் ரஜினியுடன் வடிவேலு இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இயக்குனர் பி.வாசு அடுத்ததாக இயக்க உள்ள சந்திரமுகி படத்தின் 2-ம் பாகத்திலும் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. முதல் பாகத்தை போல் இரண்டாம்
பாகத்திலும் காமெடி முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடிவேலு
சந்திரமுகி படத்தின் 2-ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ்
நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம்.
மீண்டும் வடிவேலுக்கு வந்த சிக்கல்
மீண்டும் வடிவேலுக்கு வந்த சிக்கல்
நடிகர் வடிவேலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடையை சமீபத்தில் நீக்கிய நிலையில், தற்போது அவரது படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
‘விடாது கருப்பு’ – மீண்டும் வடிவேலுக்கு வந்த சிக்கல்
வடிவேலு
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அவர் புதிய படங்களில் நடிக்க
தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்ததால் அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. அதையடுத்து வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்கத் தயாராகி உள்ளார்.
இந்நிலையில் தற்போது வடிவேலு நடிக்க இருக்கும் முதல் படமான ‘நாய் சேகர்’ படத்தின் தலைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காமெடி நடிகர் சதிஷ் மற்றும் குக்வித்
கோமாளி பவித்ரா நடிப்பில் புதிய படம் உருவாகி உள்ளது. அந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க உள்ளார். அந்தப் படத்திற்கும் நாய் சேகர் என்று தான் தலைப்பு வைத்துள்ளார்களாம்.
படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிடும் போது படத்தின் தலைப்பை வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் வடிவேலு தன்னுடைய அடுத்த படம் நாய்சேகர் என்று வடிவேலு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடிவேலு
நாய் சேகர் என்ற தலைப்பை அந்த நிறுவனம் பதிவு செய்திருக்கின்றனர். எனவே வடிவேலு, அந்தப் பெயரை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அந்தப் படத்தின்
கதைப்படி தலைப்பு மிக முக்கியமாக இருப்பதால் மறுத்து விட்டார்களாம். படத்தில் ஒரு நாய் முக்கியக் கதாபாத்திரத்தில்
இருப்பதால் படத்தின் தலைப்பு அவசியம் என்று சொல்லியிருக்கிறார்கள். விரைவில் இந்த சிக்கல் தீர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
வடிவேலு விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டது எப்படி
வடிவேலு விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டது எப்படி
நகைச்சுவை நடிகர் வடிவேலு சுராஜ் இயக்க உள்ள ‘நாய் சேகர்’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.
வடிவேலு விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டது எப்படி?
வடிவேலு
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கி, வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஷங்கர் முன்வந்தார். இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இப்படத்துக்காக அவருக்கு ரூ.12 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், அதற்கு ‘அட்வான்ஸ்’ ஆக ரூ.5 கோடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து திடீரென்று அந்த படத்தில் இருந்து
வடிவேலு நடிக்க மறுத்து விலகினார். இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஷங்கர் புகார் அளித்தார். இதனால் நடிகர் வடிவேலு புதிய படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. வடிவேலு வாங்கிய ‘அட்வான்ஸ்’ தொகை ரூ.5 கோடியை இயக்குனர் ஷங்கரிடம் திருப்பிக் கொடுக்கும்படி, பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
வடிவேலு கொடுக்க வேண்டிய ரூ.5 கோடியை, அவரை வைத்து படம் தயாரிக்கும் ஒரு பட நிறுவனம், ஷங்கரிடம் திருப்பி கொடுத்ததால், இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு சுமுகமாக
முடிந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் வடிவேலு படங்களில் நடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
அதிரடியாக களமிறங்கும் வடிவேலு-ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.
அதிரடியாக களமிறங்கும் வடிவேலு-ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.
தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்ததால் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.
நல்ல நேரம் பொறந்தாச்சு…. மீண்டும் அதிரடியாக களமிறங்கும் வடிவேலு
வடிவேலு
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படப்பிடிப்பின்போது சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தனக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஷங்கர் தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகார் காரணமாக வடிவேல் புதிய படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சினையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வடிவேலு
இது தொடர்பாக வடிவேலுவிடம் கேட்டபோது, ‘மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு போல் இருக்கிறது. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள். ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம்தான்.
என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன். ஐந்து படங்களில் என்னை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். என்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார். நல்ல நேரம் பொறந்தாச்சு. இந்த சந்தோஷத்தில் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
துக்கம் தொண்டையை அடைக்கிறது…. நண்பன் விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்
துக்கம் தொண்டையை அடைக்கிறது…. நண்பன் விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு, விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “என் நண்பன் விவேக் மாரடைப்பால்
இறந்துட்டான் என்று இன்றைக்கு காலையில் செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். அந்த செய்தியைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிவிட்டது. அதை பற்றி பேசவே முடியவில்லை. அவன் இல்லையே என்று நினைக்கும் போது, எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது.
வடிவேலு
பிறருக்கு உதவும் சிந்தனை அதிகம் உள்ளவன். அப்துல் கலாய் ஐயா அவர்களுடன் நல்ல நெருக்கமாக இருப்பான். அதே மாதிரி விழிப்புணர்வு பிரச்சாரம், மரம் நடுவது என எவ்வளவோ
நல்ல விஷயம் பண்ணுவான். எனக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் அவனும் ஒருவன். நானும் அவனுக்கு ரசிகன் தான். என்னால் அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. என்
நெஞ்சார்ந்த இரங்கலை அவன் குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கண்ணீர்மல்க பேசியிருக்கிறார் வடிவே
நடிக்க வாங்க – வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்
நடிக்க வாங்க – வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்
திரைப்படங்களில் நடிக்க தடை விதித்ததால் ஒதுங்கி இருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேல் சமீபத்தில் வாட்ஸ் அப் குழு நண்பர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது,
“நான் நடிக்காமல் 10 வருடங்களாக வீட்டில் முடங்கி கிடப்பது பெரிய ரணம். எனது உடலில் தெம்பு இருக்கிறது. நடிக்கவும் ஆசை
இருக்கிறது. ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை” என்றார். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற பாடலை பாடியும் கண்கலங்கினார்.
அதைப் பார்த்து வருந்திய நடிகை மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில், “வடிவேலுவின் சமீபத்திய பேச்சுகள், பேட்டிகளை பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று வருத்தப்பட்டு
இருந்தார். எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனாலும்
யாரையும் யாருமே ஒதுக்க முடியாது. இது எனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம்.
மீரா மிதுன்
உங்கள் தெனாலிராமன் படம் பார்த்து இருக்கிறேன். அந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை. நிறைய பேர் நடிப்புக்கான
விதிமுறையே தெரியாமல் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் பெரிய சகாப்தம். கண்கலங்க கூடாது. நான்
சொந்தமாக படம் தயாரிக்கிறேன். எனது படத்தில் உங்களுக்கு நடிக்க விருப்பம் இருந்தால் நடியுங்கள். பெருமைப்படுவேன்” என்று கூறியுள்ளார்.
நடிக்க உடம்பில் தெம்பு இருக்கு…. யாரும் வாய்ப்பு தருவதில்லை – கண்கலங்கிய வடிவேலு
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய
படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.
இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பு அளிக்க பட அதிபர்கள் தயங்குகின்றனர்.
வடிவேலு
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வடிவேலு, பட வாய்ப்பு கிடைக்காதது குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது: “உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம் தான் லாக்டவுன்.
பட வாய்ப்பு இல்லை வடிவேலு
ஆனால் நான் பத்து வருஷமா லாக்டவுனிலேயே தான் இருக்கிறேன். இப்போதும் நடிக்க உடம்பில் தெம்பு இருக்கு, ஆனால் யாரும்
வாய்ப்பு தருவதில்லை எனக்கூறிய வடிவேலு, கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலில் வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற வரியை பாடும்போது கண்கலங்கினாராம்.
வடிவேலு பாடிய கொரோனா பாடல்
வடிவேலு பாடிய கொரோனா பாடல்
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு, கொரோனாவை பற்றி உருக்கமான பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
கொரோனாவை வெல்வோம் – வடிவேலு பாடிய உருக்கமான பாடல்
வடிவேலு
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் வடிவேலு. ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன்
காமெடியில் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு கமல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில் வடிவேலு கொரோனாவை வெல்வோம் என்று பதிவு செய்து ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
மனிதர்களின் அலட்சியமும், அதை கொரோனா எப்படி உணர வைத்தது என்றும் அவர் தனது பாடலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.







