Tag: யோஷித
மஹிந்தமகன் யோஷித வழக்கு ஒத்திவைப்பு
மஹிந்தமகன் யோஷித வழக்கு ஒத்திவைப்பு
மஹிந்தமகன் யோஷித வழக்கு ஒத்திவைப்பு ,பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக
வழக்கு விசாரணை
தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை ஒக்டோபர் 22 ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
வழக்கு இன்று (4) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப்
எனினும், இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன இன்று விடுமுறையில் உள்ளதால், வழக்கை ஒக்டோபர் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 மற்றும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முறைகேடாக ஈட்டிய 59 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மூன்று தனியார் வங்கிக்
கணக்குகளில் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக குறித்த
பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபாரால் மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
73மில்லியன் சொத்து யோஷிதவின் வழக்கு
73மில்லியன் சொத்து யோஷிதவின் வழக்கு
73மில்லியன் சொத்து யோஷிதவின் வழக்கு ,சுமார் 73 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித
ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைகளை செப்டம்பர் 22 ஆம்
திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
யோஷித ராஜபக்ஷ சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கும் போது இந்த
தடயவியல் கணக்காய்வு அறிக்கை
வழக்கில் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை ஆதாரமாக முன்வைத்ததோடு, கணக்காய்வு அறிக்கையை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் செய்திகள் அடங்கிய 26 இறுவெட்டுகள் (CD), 8
USB, வன்தட்டு (Hard Disk), 1 மடிக்கணினி மற்றும் ஒரு CPU ஆகியவற்றை அணுகி ஆய்வு செய்ய அனுமதி கோரினார்.
இந்தக் கோரிக்கைக்கு தாம் ஆட்சேபனைகளை தெரிவிக்க போவதில்லை என்று அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார்.
அதன்படி, இந்த முறைப்பாடு செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ச
சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி
டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிக்கிய மஹிந்த மகன் யோஷித
சிக்கிய மஹிந்த மகன் யோஷித
சிக்கிய மஹிந்த மகன் யோஷித ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணமோசடி
தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் இரு பிரதிவாதிகளையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.
இந்த வழக்குக்கு இணையான மற்றொரு வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி மேல் நீதிமன்றம் இலக்கம் 1 இல் அழைக்கப்படவுள்ளதாக அரசு தரப்பு சட்டத்தரணி ஒஸ்வல்ட் பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த வழக்கின் ஆவணங்களும் இந்த வழக்கின் ஆவணங்களும் ஒன்றே என்பதை சுட்டிக்காட்டிய அரசு சட்டத்தரணி, சம்பந்தப்பட்ட ஆவணங்களில்
ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தனக்குத் தெரிவிக்குமாறு பிரதிவாதிகள் சட்டத்தரணிகளிடம் கோருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் மற்றும் அனில் சில்வா ஆகியோர், தொடர்புடைய ஆவணங்களை ஆராய்ந்து,
ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக தெரிவித்தனர்.
பின்னர் வழக்கை ஓகஸ்ட்மாதம் 4 ஆம் திகதி அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி மற்றும், 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முறைகேடாக ஈட்டிய 59 மில்லியன் ரூபாயிக்கும் அதிகமான பணத்தை மூன்று தனியார் வங்கிக்
கணக்குகளில் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக குறித்த
பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபாரால் மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகிந்த மகன் யோஷித ராஜபக்ஷ தப்பினார்
மகிந்த மகன் யோஷித ராஜபக்ஷ தப்பினார்
மகிந்த மகன் யோஷித ராஜபக்ஷ தப்பினார் ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, வார இறுதியில் கொழும்பு பார்க் தெருவில் உள்ள இரவு விடுதியில் நடந்த கைகலப்பில் ஈடுபடவில்லை என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெள்ளிக்கிழமை (21) இரவு விடுதிக்கு வெளியே யோஷித ராஜபக்ஷவுடன் வந்த ஒரு குழு மோதலில் ஈடுபட்டதை அடுத்து, கொம்பனித் தீவு பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கினர்.
இந்த வாக்குவாதம் சிசிரிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தின் போது கிளப்பைச் சேர்ந்த ஒரு பவுன்சர் காயமடைந்து தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
இரவு விடுதியில் தங்குவதற்கு அடையாள அட்டைகளை அணிவது கட்டாயம் என்று பாதுகாப்பு காவலர் தெரிவித்ததை அடுத்து, இரவு விடுதியின் பவுன்சர்களுக்கும் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த மோதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு அத்தகைய பேட்ஜ் இல்லாததால், பாதுகாப்புக் காவலர் நடத்திய விசாரணையின் போது வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் ஏற்பட்டபோது யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யோஷித ராஜபக்ஷவிற்கு பிணை
யோஷித ராஜபக்ஷவிற்கு பிணை
யோஷித ராஜபக்ஷவிற்கு பிணை ,பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீண்ட சமர்ப்பணங்களுக்கு பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்படி, சந்தேகநபரை தலா 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதன்படி, சந்தேகநபரை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறும் உத்தரவிட்ட நீதவான், சாட்சிகளுக்கு அழுத்தம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும் உத்தரவிட்டார்.
நீதிபதி தனது முடிவை அறிவிக்கும் போது, சந்தேகநபரை மேலும் விளக்கமறியலில் வைக்க போதுமான மற்றும் திருப்திகரமான ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்கத் தவறியதால், பிணைச் சட்டத்தின் விதிகளின்படி பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
யோஷித ராஜபக்ஷ கைது
யோஷித ராஜபக்ஷ கைது
யோஷித ராஜபக்ஷ கைது ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை பெலியத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை யோஷித ராஜபக்ஷ செய்ததற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் தெரிவித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, யோஷித ராஜபக்ஷ தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணியின் உரிமை குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த 3ஆம் திகதி யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
























