மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
Posted in சமையல் சமையல் cook

மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி கடை சுவையில் உங்க வீட்டில் இது போல செய்முறையில் செய்து பாருங்க .

சின்ன குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .அம்புட்டு சுவையான மொறு மொறு கோவை வுருண்டை பொரியல்.

மொறு மொறு கோவா உருண்டை தேவையான பொருட்கள்


கோவா 500 கிராம், குடமிளகாய் ( capsicum) 1
வெங்காயம் 100g
மிளகாய்த்தூள், பூண்டு 1, உப்புத்தூள், கோதுமை மா,corn flour, soya sauce, Tomato sauce பொரிப்பதற்கு oil

செய்வது எப்படி

  1. கோவாவை கரட் ஸ்கிரேப்பரில் துருவுதல்,
    2.வெங்காயம்,பூண்டு குடமிளகாயை சிறுசிறு துண்டாக வெட்டுதல்.

  2. 3.துருவிய கோவாவுக்குள் வெட்டிய பொருட்களையும் போட்டு உப்புத்தூள், மிளகாய் தூள் கான்பிளவர், கோதுமை மா போட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி எண் ணெயில் பொரித்தல்
  3. வெட்டிய பூண்டு, வெங்காயம், குடமிளகாயை எண்ணெயில் வதக்கி சோயா சாஸ், டொமேட்டோ சாஸ் விட்டு பொரித்த கோவா உருண்டைகளை கிளறுதல்.
  4. click here video
மொறு மொறு பருப்பு வடை | கடலைப்பருப்பு வடை | CHANA DAL VADAI |CRUNCHY PARUPPU VADAI
Posted in சமையல் சமையல் cook

மொறு மொறு பருப்பு வடை | கடலைப்பருப்பு வடை | CHANA DAL VADAI |CRUNCHY PARUPPU VADAI

மொறு மொறு பருப்பு வடை | கடலைப்பருப்பு வடை | CHANA DAL VADAI |CRUNCHY PARUPPU VADAI

மொறு மொறு பருப்பு வடை | கடலைப்பருப்பு வடை | CHANA DAL VADAI |CRUNCHY PARUPPU VADAIதேவையான பொருட்கள் ,

கடலைப்பருப்பை 3-4 மணத்தியாளம் ஊற வைக்கவும்

கடலைப்பருப்பு 2 கப்
வெங்காயம் 1
காய்ந்த மிளகாய் 4
ஒரு துண்டு இஞ்சி
பச்சை மிளகாய் 4
பெரிய சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயம்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பில்லை

முதலில் அரைவாசி கடலைப்பருப்பை மிக்ஸ்சி யாரில் போட்டு அரை பதத்தில் அரைத்து எடுக்கவும் .. மீதி அரைவாசியை முழுதாக போடவும். மீதி உள்ள பருப்பில் காயந்த மிளகாய் மற்றும் பெரிய சீரகம் போட்டு அரைத்து எடுக்கவும் . பின் தேவையான உப்பு மற்றும் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பிசையவும் .

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில அரைத்த வடை மாவை தேவையான அளவுகளாக எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டி கொதித்த எண்ணெய்யில் போட்டு பொன்னிரமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

video

மொறு மொறு மெது வடை
Posted in சமையல் சமையல் cook

மொறு மொறு மெது வடை

மொறு மொறு மெது வடை

மொறு மொறு மெது வடை வீட்டில் செய்வது எப்படி செய்முறை விளக்கம் காணொளியில் முழுமையாக பாருங்க மக்களே .

தேவையான பொருட்கள்
2 கப் உளுந்து
சில கறிவேப்பிலைகள்
2 வெங்காயம்
4 பச்சை மிளகாய்
3 காய்ந்த மிளகாய்
பெரிய சீரகம்
உப்பு தேவைக்கு
டீப் ஃப்ரைக்கு எண்ணெய்

செய்முறை:
கழுவிய உளுத்தம்பருப்பை 3 மணத்தியாளம் ஊறவைத்து, விழுதாக அரைக்கவும் அத்தோடு பெரிய சீரகமும் காய்ந்த மிளகாயும் சேர்த்து அரைக்கவும் .

ஒரு பாத்திரத்திற்கு மாற்றி நன்றாக கலக்கவும். நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு , பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும்.

வடை வடிவில் செய்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மிதமான தீயில் நிறம் மாறும் வரை பொறிக்கவும், பின் எடுக்கவும். சுவையான மொறு மொறு மெது வடை தயார்.