யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட குழுவினர் கள விஜயமொன்றை வியாழக்கிழமை (10) மேற்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான சனத் ஜயசூரிய குறித்த விஜயத்தில் பங்கேற்றார்.

மண்டைதீவுக்கு விஜயம் செய்த குழுவினர் மைதானம் அமைப்பது தொடர்பான நிலைமைகளை ஆராய்ந்தனர்.இதன்போது பாராளுமன்ற

உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், விளையாட்டு திணைக்களத்தின் அதிகாரிகள், பிரதேச செயலாளர், இராணுவத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

Galle Face மைதானம் தொடர்பில் முக்கிய தீர்மானம்
Posted in இலங்கை செய்திகள்

Galle Face மைதானம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

Galle Face மைதானம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

Galle Face மைதானம் தொடர்பில் முக்கிய தீர்மானம் ,காலி முகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு கீழுள்ள இலங்கை துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ள காலிமுகத்திடல்

மைதானத்தை மதம் சார்ந்த நோக்கங்கள் தவிர, பிற நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கக் கூடாது என 17-04-2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டது.

காலி முகத்திடல் மைதானத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்கு மாதாந்தம் சுமார் 2.5 – 3.0 மில்லியன் ரூபா செலவாகும். எனவே 2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததைப் போன்று உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்

பயணிகள் சுதந்திரமாக உலாவுவதற்கு மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும், அந்தத் தொகையை ஈடுகட்டுவதற்கும் சிறந்த வாய்ப்பாக இது அமையும். விழாக்கள், இசைக்

கச்சேரிகள் மற்றும் மக்கள் சுதந்திரமாக பங்கேற்க அனுமதிக்கும் பிற கொண்டாட்டங்களுக்கு பொருத்தமான அளவுகோல்களுக்கு உட்பட்டு காலி முகத்திடல் மைதானத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கவுள்ளோம்.

இதன்படி, “தூய்மையான மற்றும் பசுமையான காலி முகத்திடல்” என்ற கருத்தின் அடிப்படையில் காலி முகத்திடலின் நிர்வாகத்தை மிகவும் ஒழுங்காகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொள்ள தேவையான

நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Posted in உலக செய்திகள்

விளையாடடு மைதானம் இடிந்து வீழ்ந்து 332 பேர் காயம்

விளையாடடு மைதானம் இடிந்து வீழ்ந்து 332 பேர் காயம்

கொலம்பியா ; விளையாட்டு மைதானம் ஒன்று கொலம்பியாவில் இடிந்து வீழ்ந்ததில் அந்த கட்டட இடி பாடுகளுக்குள்ள சிக்கி 332 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

இந்த இந்த விளையாட்டு மைதான இடிபாட்டில் சிக்கி இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 12 பேர் மிக அபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

கிளிநொச்சியில் 60.000 பார்வையாளர்களை கொண்ட விளையாட்டு மைதானம்

இந்த விளையாட்டு மைதானம் இடிந்து வீழ்ந்த விபத்து தொட்ரபில் ஆராய விசேட குழு ஒன்று நியமிக்க பட்டுள்ளது.

இந்த விளையாடடு மைதானம் இடிந்து வீழ்ந்த
சம்பவம் கொலம்பியா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.