Tag: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சிறிலங்காவுக்கு தோல்வி ஆனால் தமிழர்களுக்கு வெற்றியல்ல நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கு வெற்றியல்ல நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கு வெற்றியல்ல ! கேள்விக்குறியான பொறுப்புக்கூறல் பொறிமுறை !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சிறிலங்கா தொடர்பில் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சிறிலங்காவுக்கு தோல்வியாக இருந்தாலும், தமிழர்களுக்கு வெற்றியல்ல என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம், தமிழர்களுக்கு எதிரான பாரிய மனித உரிமைமீறல்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு இத்தீர்மானம் வழியமைக்கவில்லை என்பதோடு, தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிற்கின்ற சிறிலங்காவின் இனப்படுகொலை
இராணுவமானது, பொறுப்புக்கூறலுக்கான அச்சமேதுமின்றி, தமிழர்கள் எதிரான தனது பாரிய மனித உரிமைமீறல்களை தொடரவே வழிசெய்துள்ளது என தெரிவித்துள்ளது.
இன்று செப்-6 வியாழக்கிழமை சிறிலங்கா இரண்டு ஆண்டுகள் காலநீடிப்பு வழங்கும் வகையில் சபையில் கொண்டுவரப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான
51/1 தீர்மானத்துக்கு 20 நாடுகள் ஆதரவாகவும், 7 எதிராகவும் வாக்களித்திருந்தன. 20 நாடுகள் வாக்களிக்கவில்லை.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழர் அரசியல் தரப்புக்கள், புலம்பெயர் அமைப்புக்கள் என இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்புக்கூறவைக்க சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு
சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கு வெற்றியல்ல நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பாரப்படுத்துமாறு வேண்டப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான கோரிக்கை புறந்தள்ளப்பட்டு, சிறிலங்காவுக்கு மேலும் மேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது ஐ.நா எதற்காக உருவாக்கப்பட்டதோ,
அதன்தார்மீகத்துக்கு மாறாக அமைந்துள்ளதோடு, அரசுகள் தமது பூகோள புவிசார் நலன்களை அடைய, பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் மேலும் அநீதி இழைப்பதாகவே உள்ளது.
‘ இந்தியா மீண்டும் வாக்களிக்காமல் விலகியதால் ஈழத் தமிழர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சிறிலங்கா தனது ‘சீனத் துரும்புச்சிட்டையை’ நன்றாக கையாண்டு அதன் அண்டை நாடான இந்தியாவை பயமுறுத்தி
அமைதியாகி விட்டது’ எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், ‘பிராந்திய வல்லரசான
இந்தியாவும், உலக வல்லரசும் தார்மீகக் கோட்பாடுகள், துணிவு, உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படும் என்று ஈழத் தமிழர்களாகிய நாங்கள் எதிர்பார்த்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
‘ஐ.நா.வின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி இறுதிப்போரின் போது இனப்படுகொலை செய்யப்பட்ட 70,000 பேர் விடயத்தை புறந்தள்ளிவிட்டு,
தென்னிலங்கை கிளர்ச்சியில் உயிரிழந்த 10 பேருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது’ அதிர்ச்சியளிக்கிறது எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
‘தமிழ் தேசத்தின் மீதான சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பானது சிங்களமயமாக்கலுக்கும் பௌத்தமயமாக்கலுக்கும் அரணாக இருப்பதுடன், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் சுரண்டுகிறது.
குறைந்பட்சம் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் தமிழர் பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினை
குறைப்பதற்கும், வெளியேறுவதற்கான கால அட்டவணை அமைந்திருக்க வேண்டும்’ எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவுக்கு அப்பால் சர்வதேச ஜனநாயக சட்டவெளியில் நீதிக்கான புதிய புதிய களங்களை உருவாக்க முனைவதோடு, சிறிலங்காவினால்
நிராகரிக்கப்பட்ட ரோம் உடன்படிக்கையின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தினை அரசியல் இறைமையுள்ள ஓர் தேசமாக
, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தினை ஏற்றுக் கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிகு : பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைப்பு
தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைப்பு
தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைப்பு
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடரில், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வரவும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை
தடுக்கவும், சர்வதேசத்தின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைத்துள்ளது.
கூட்டத் தொடரின் ஐந்தாம் நாளான செப்ரெம்பர் 16 வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்த ( Special Rapporteur on the promotion of truth, justice, reparation and guarantees of non-recurrence) உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாத
தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைப்பு
உத்தரவாதங்கள் தொடர்பிலான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அறிக்கை தொடர்பான கருத்தாடலிலேயே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
காணொளி வாயிலாக பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரகளுக்கான அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம்
அவர்கள், தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இலங்கைத்தீவில் பாரிய அட்டூழியங்களை எதிர்கொண்டவர்கள் என்ற வகையில் தமிழர்களுக்களாகிய
எமக்கு, ஐ.நாவின் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாத உத்தரவாதங்கள் தொடர்பிலான சிறப்பு அறிக்கையாளரது அறிக்கை மிகவும் முக்கியமானது என தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ஐநாவின் உள் ஆய்வு அறிக்கையின்படி, இலங்கையின் போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாரிய குற்றங்கள் காரணமாகவே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அவர்கள் சிறிலங்காவின் சூழலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு பரிந்துரைத்து அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கு முன்னர் இருந்த அனைத்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர்களும் இதனை வலுப்படுத்தியுள்ளனர்.
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைக்கப்படாவிட்டால், தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள மிகப் பெரிய எண்ணிக்கையிலான சிறிலங்கா இராணுவத்தினர் எந்த தயக்கமும்
இல்லாமல் தமிழர்களுக்கு எதிராக பாரிய மனித உரிமைமீறல்களுக்கு பொறுப்பேற்ற வேண்டிய தேவை இல்லை என்ற நிலையில, அதனைச் செய்யத் துணிந்துவிடுவார்கள்.
இவைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு முன்னராக மேற்கொள்ளப்பட்ட அரசியல் தீர்விற்கான சர்வதேச மத்தியஸ்தம் உட்பட பல முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
நீண்ட காலமாக நீடித்து வரும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வரவும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுக்கவும்,
சர்வதேசத்தின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழர்மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் தனதுரையில் தெரிவித்திருந்தார்.
நடைபெற்று வரும் ஐ.நா கூட்டத் தொடரில் தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான
போராட்டத்தினை வெளிப்படுத்தும் வகையில் கருத்துரைகளை சபையில் தொடர்சியாக வெளிப்படுத்தி
வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
தமிழர்களை அடக்கி ஆளவே சிறிலங்காவின் இராணுவ செலவினம் ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு
தமிழர்களை அடக்கி ஆளவே சிறிலங்காவின் இராணுவ செலவினம் ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு
தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா அரசு, தனது மொத்த செலவீட்டில் 15 வீதத்தினை இராணுவத்துக்கு செலவிடுவதானது, தமிழர்களை
அடக்கி ஆளவே என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைச்சபையில் இடித்தரைத்துள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரது சிறிலங்கா தொடர்பிலான அறிக்கையில், சிறிலங்கா தனது 1.86 மில்லியன் டொலர் செலவீட்டில் 15
வீதத்தினை இராணுவ செலவினங்களுக்கு ஒதுக்குவதனை சுட்டிக்காட்டி, இராணுவச் செலவினம் குறைப்பீடு செய்யப்பட வேண்டியது மட்டுமன்றி,
தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக அதன் இராணுவச் செலவினங்களே அமைகின்றன என்பதனை பல மாதங்களாகவே சுட்டிக்காட்டி வந்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை தொடர்சியாக
வலியுறுத்தி வந்திருந்த நிலையில் ஆணையாளரின் அறிக்கையும் இந்நிலைப்பாட்டுக்கு வலுவூட்டியிருந்தது.
தமிழர்களை அடக்கி ஆளவே சிறிலங்காவின் இராணுவ செலவினம் ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு
இந்நிலையில் ஆணையாளரின் அறிக்கையினை கோடிட்டுக்காட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் லிங்கஜோதி, சிறிலங்காவின் இராணுவத்துக்கு செலவினடானது தமிழர்களை
அடக்கி ஆளவேண்டும் என்பதற்கானதோடு, தமிழர்களுக்கு எதிராக தொடரும் மனித உரிமைமீறல்களுக்குஅது வழிசெய்கின்றது என தெரிவித்துள்ளார்.
மேலும் சிறிலங்கா அரசானது சிங்கள பௌத்த பெரும்பான்மை
சித்தாந்தத்தை ஊக்குவித்து வருவதோடு, அது இனநாயக அடிப்படைவாத அரசாக மாறியுள்ளது எனவும் தனதுரையில் அமைச்சர் லிங்கஜோதி தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவர்கள்
எவ்வளவு காலம் நீதிக்காக காத்திருக்க வேண்டும் என ஐ.நா உறுப்பு நாடுகளை நோக்கி கேள்வி
எழுப்பிய அமைச்சர் லிங்கஜோதி, தீர்மானங்கள் மற்றும் கால நீடிப்புகளுக்கு பின்னரும்,
இனியும் சிறிலங்காவுக்கு மேலதிக காலநீடிப்பு வழங்கப்படக் கூடாது என தெரிவித்திருந்ததோடு போரில்
பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக பொறுமையுடன் 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில்,
சிறிலங்காவின் நிலைமைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த
பரிந்துரைக்க வேண்டும் என தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
ஐ.நாவை துர்பிரயோகம் செய்யும் சிறிலங்காவின் தொடரும் வேடிக்கை
ஐ.நாவை துர்பிரயோகம் செய்யும் சிறிலங்காவின் தொடரும் வேடிக்கை இலக்க தந்திர விளையாட்டு ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தனது தடைப்பட்டியில் இருந்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை நீக்கம் செய்வதும், நீடிப்பதும் என்பதான அதன் நடத்தையானது எண்ணிக்கை
இலக்கங்களுடன் சர்வதேசத்தினை ஏமாற்றும் ஒர் வேடிக்கை தந்திர விளையாட்டையே வெளிப்படுத்தி வருவதோடு, ஐ.நா.வின் 2012ம் ஆண்டு
ஒழுங்குமுறை இலக்கம் 1ஐஎன நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 கீழ், இலங்கைக்குள் 577 நபர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 18 அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு
அமைச்சின் வர்த்தகமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 316 பேருக்கான தடை நீக்கப்பட்டுள்ளதுடன், 6 புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஐ.நாவை துர்பிரயோகம் செய்யும் சிறிலங்காவின் தொடரும் வேடிக்கை
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு, கடந்த ஜூன் 13, 2022ம் அன்று,
சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஐ.நா மனித உரிமைச்சபை கூட்டத் தொடர் உரையில், ‘ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை எண்.1 இன் கீழ் 2012ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்ட தனிநபர்கள், அமைப்புக்கள்
தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்படுவதோடு, தற்போது 318 தனிநபர்கள் மற்றும் 4 அமைப்புக்கள் தடைப்பட்டியலில் இருந்து நீக்க முன்மொழியப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
தற்போது, அடுத்த சில வாரங்களின் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத்தொடர் தொடங்க இருக்கின்ற நிலையில் மற்றுமொரு பட்டியல்
வெளிவந்துள்ளது. இது சர்தேசத்தினை ஏமாற்றும் வேடிக்கை இலக்க தந்திர விளையாட்டையே வெளிக்காட்டுகின்றது.
2014 ஆண்டில் சிறிலங்கா அரசாங்கம், 424 தனிநபர்கள் மற்றும் 16 அமைப்புக்களை ‘பயங்கரவாத பட்டியலிட்டு’ தடைவித்தது. 2015ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் மீண்டும் எண்ணிக்கை இலக்க வேடிக்கை
விளையாட்டாக 8 அமைப்புக்களையும், 259 தனிபர்களையும் புனிதர்களாக்கி தனது தடைப் பட்டியலில் இருந்து நீக்கியது. திரும்பவும் 2021ல் புதிய அரசாங்கம் மீண்டும் தனது எண்ணிக்கை இலக்க வேடிக்கை விiளாட்டை
காட்டியது. 380 தனிநபர்களையும் மற்றும் 7 அமைப்புக்களையும் பயங்கரவாத தடைப்பட்டியலில் இட்டுக்கொண்டதென எமது முன்னைய அறிக்கையொனறில் குறிப்பிட்டிருந்தோம்.
தற்போது வெளிவந்துள்ள புதியபட்டியலானது, சிறிலங்காவின் வேடிக்கை இலக்க தந்திர விளையாட்டை மீளவும் தொடர்வதனை வெளிக்காட்டுகின்றது.
குறிப்பாக சிறிலங்காவின் இந்த நடத்தையானது 2012ம் ஆண்டு-ஐ.நா. ஒழுங்குமுறை இலக்கம் 1ஐ, சிறிலங்கா துர்பிரயோகசம் செய்வதனை
நிரூபிக்கின்றது. ஐ.நாவின் நம்பகத்தன்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
ஐ.நாவை துர்பிரயோகம் செய்யும் சிறிலங்காவின் தொடரும் வேடிக்கை
இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது தொடரும் தடையானது, ‘தமிழீழம்’
என்ற கொள்கை, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும்
என்ற நிலைப்பாட்டிலும் உறுதியுடனும் செயற்படுகின்றோம் என்பதனை சான்றுபகிர்வதாவே
சிறிலங்காவின் இந்த அச்சம் வெளிப்படுத்துகின்றது. இலங்கைக்கு வெளியே ‘தமிழீழத்துக்காக’
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போன்றவர்கள் இன்னும் போராடும் செயற்பாட்டில் உள்ளனர் என்ற
சிறிலங்கா இராணுவத்தளபதியின் சமீபத்திய கருத்தும் இதனையே வெளிப்படுத்துகின்றது என அரசியல்
விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
கோத்தபாய எங்கு சென்றாலும் நீதிக்கான போராட்டம் தொடரும் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
கோத்தபாய எங்கு சென்றாலும் நீதிக்கான போராட்டம் தொடரும் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
இனப்படுகொலையாளியும், சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியுமாகிய கோத்தபாய இராஜபக்சே எந்த நாட்டுக்கு சென்றாலும், உலகளாவிய
நியாயாதிக்கத்தின் கீழ் அவரை கைது செய்யக் கோரும் நீதிக்கான போராட்டம் தொடரும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவூடாக சிங்கப்பூரில் சென்று, அங்கிருந்து தற்போது தாய்லாந்துக்கு செல்வதாக
தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நா.தமிழீழ அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது.
கோத்தபாய எங்கு சென்றாலும் நீதிக்கான போராட்டம் தொடரும் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி முன்னெடுக்கப்பட்டிருந்த கையெழுத்துப் போராட்டம், தாய்லாந்து சட்டமா அதிபரை நோக்கியதாக மாற்றம்
செய்யப்படுவதோடு, முன்னராக பெறப்பட்ட கையொப்பங்கள் நீதிக்கான நோக்கத்தின் அடிப்படையில் இதனோடு இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த http://tgte-us.org/ இணையப்பக்கத்துக்கு சென்று (தொடுப்பு : https://tgte-us.org/?page_id=4340 ) இலகுவாக ஒப்பமிட முடியும் என
தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நீதிக்கான போராட்டத்தில் அனைவரையும் பங்கெடுக்குமாறு கோரியுள்ளது.
இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன. 1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின்
கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு Additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் கையெழுத்துப் போராட்டத்தின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Thailand Urged to Arrest Visiting Former Sri Lankan President Gothabaya for Tamil Genocide: TGTE
கனடாவில் கறுப்பு யூலை-83ஐ நினைவேந்தி குருதிக்கொடை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
கனடாவில் கறுப்பு யூலை-83ஐ நினைவேந்தி குருதிக்கொடை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழினத்தின் மீதான திட்டமிட்ட இனப்படுகொலையாக அமைந்த கறுப்பு யூலை-83ஐ நினைவேந்தி குருதிக்கொடை நிகழ்வொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனடாவில் ஒருங்கு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ( 23-07-2022) யூலை23ம் நாள் சனிக்கிழமை, மதியம்11:20 மணி முதல் இக்குருத்திக் கொடை நிகழ்வு Richmond Hill பகுதியில் உள்ள Hillcrest Mall , 9350 Yonge St, Richmond Hill, ON L4C 5G2 இந்த மையத்தில் இடம்பெற இருக்கின்றது.
கறுப்பு யூலை-83 இனப்படுகொலையில் கொலையுண்ட உறவுகளை நினைவேந்தி ‘உயிர்கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற இருக்கின்றது.
இற்றைக்கு 39 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள பௌத்த இனவாதத்தினால் நடத்தப்பட்ட இந்த இனஅழிப்பினை எந்தக் கட்சி செய்திருந்தாலும், யார்
செய்திருந்தாலும் அது தொடர்பில் விசாரணை நடத்தி தண்டைனை வழங்கப்படும் என ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதியினை சிறிலங்கா அரசு இன்றுவரை நிறைவேற்றவில்லை.
ஐ.நாவுக்கு கொடுத்த இந்த வாக்குறுதி முதற்கொண்டு இற்றைவரை அனைத்துலக சமூகத்தினை பல்வேறு
வடிவங்களில் சிறிலங்கா அரசு ஏமாற்றியும் நாடகமாடியும் வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
கோத்தாவை கைது செய் சட்டத்தின் முன் நிறுத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழுத்தம்
கோத்தாவை கைது செய் சட்டத்தின் முன் நிறுத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழுத்தம்
பிரான்ஸ் ; தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரச இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து என்ற தொடர்
போராட்டங்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் இடம்பெற இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காவின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச நியாயாதிக்கத்தின்
கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையாhர் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார்.
அந்தவகையில் தற்போது ஒரு நாட்டின் அதிபருக்குரிய இராஜீக வரப்பிரசாதங்கள் ஏதுமன்ற ஓர் சாதாரண பொதுமகனாக சிங்கப்பூரில்
நிற்கின்ற சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவை, சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, மலேசியா என பல்வேறு நாடுகளிலும் உள்ள சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால்
கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற இருப்பதோடு கோரிக்கை மனுவும் கையளிக்கப்படவுள்ளது.
கோத்தபாய சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஆறு மாத காலத்தில் 40 முதல் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என
ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவிப்பதோடு, நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானர்கள்
தெரிவிக்கின்றது. தவிர ஆயிரக்கணக்கான தமிழர்கள், குழந்தைகள் இவரது காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான
குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இன்னும் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் ஓர் நாட்டின் எல்லைக்குள் நடக்காதபோதும், பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றவாளியோ அந்த நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், சர்வதேச சட்டத்திற்கு எதிரான
குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க, ஓர் நாட்டின் அதிகார வரம்பிற்கு சர்வதேச நியாயாதிக்கம் வழி சமைக்கின்றது. இந்தக் கொள்கை மூன்றாம்
நாடுகளின் தேசிய நீதிமன்றங்களுக்கு வாய்பளிக்கின்றது. வேறு நாட்டில் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்களை பொறுப்புக்கு உட்படுத்தவும்,
தண்டனையிலிருந்து விடுபடுவதை தடுக்கவும் முடியும் என்ற சர்வதேச சட்டவெளி காணப்படுகின்றது.
இந்நிலையில், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் இனப்படுகொலையாளியான
கோத்தபாய கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை
நாம் வலுவாக முன்வைக்கின்றோம் என தெரவித்துள்ள நா.தமிழீழ அரசாங்கம்,
தமிழினத்தின் மீது இனப்படுகொலையினை புரிந்தவர்களுக்கு எதிரான உளவியல் யுத்தமாகவும் இது
உள்ளதென அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி தமிழர்களுக்கு அநீதியா
ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி தமிழர்களுக்கு அநீதியா
பிரித்தானியாவை நோக்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி !
உக்ரைன் போர் தொடர்பில் ரஸ்யாவுக்கு எதிரான பல தீர்மானங்கள் ஐநா பாதுகாப்பு சபையில் அது நிறைவேற்றாது எனத் தெரிந்தும் அதனைக் கொண்டுவரக் காரணம் உக்ரைன் விடயத்தினை சர்வதேச தளத்தில்
வெளிப்படுத்துவதே ஆகும். அதுபோலவே தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்கா விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு
கொண்டுவர போதுமான காரணங்கள் காணப்படுகின்றன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும் நிலைப்பாட்டுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு கிட்டாது என பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும்
அபிவிருத்தி அலுவலகத்தின் பாராளுமன்ற துணைச் செயலாளர் விக்கி வோட் அவர்கள் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது தெரிவித்திருந்தார்.
பிரித்தானியா உட்பட ஐந்து கூட்டு நாடுகளே ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பிலான 46ஃ1 தீர்மானத்தினை முன்னெடுத்திருந்த
நிலையில், பிரித்தானிய அரசாங்கத்தின் இக்கருத்து தமிழர்களுக்கு பெருத்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானியா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு புதிதல்ல. இதேநிலைப்பாட்டினை முன்னரும் ஒரு தடவை வெளிப்படுத்தியுள்ளது.
ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி தமிழர்களுக்கு அநீதியா
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவுவதில் முன்னிற்று உழைத்த பிரித்தானியா, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு நீதியைத் தேட,
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை பயன்படுத்த தயங்குவது ஏமாற்றத்தையே தருகின்றது.
குறிப்பாக சமகாலத்தில் உக்ரைன் போர் தொடர்பில் பிரித்தானியா உட்பட மேற்குலகம் நாடுகள் ரஸ்யாவுக்கு எதிரான பல தீர்மானங்களை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு சென்றுள்ளன. பாதுகாப்பு சபையில் அது
நிறைவேற்றப்படாது எனத் தெரிந்தும் அதனைக் கொண்டுவரக் காரணம் உக்ரைன் விடயத்தினை சர்வதேச தளத்தில் வெளிப்படுத்துவதே ஆகும்.
அதுபோலவே தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்கா விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர போதுமான காரணங்கள் காணப்படுகின்றன.
உக்ரைன் மக்களுக்கு ஒரு நீதி, தமிழ்மக்களுக்கு ஒரு நீதியா என்ற கேள்வி எழுகின்றது.
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையில் கையாளப்படட்டும்.
ஆனால் இனழிப்புக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் போர்க் குற்றங்களுக்குமான பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை என்பது ஐ.நா பாதுகாப்புச் சபையூடாகவே கையாளப்படவேண்டியுள்ளது.
பொறுப்புகூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த, சிறிலங்கா விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு
செல்லுங்கள். அப்போது நீதிக்கு எதிரானவர்கள் யார் என்பது தெரியவரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2021 ஜனவரி 12ம் தேதி ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளரர் மிசேல்
பசேலேற் அம்மையாரின் அறிக்கையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு விடுத்திருந்ததோடு,
ஐநா மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள் ஆணையாளர்கள், ஐ.நா.வின் நான்கு முன்னாள் உயர் அதிகாரிகள்,
இலங்கைக்கு பயணம் செய்து அறிக்கைகளை எழுதிய ஐ.நாவின் ஒன்பது முன்னாள் சிறப்பு அறிக்கையாளர்கள், ஐ.நா.
செயலாளர் நாயகம் குழுவின் மூன்று உறுப்பினர்கள், இலங்கை பற்றிய நிபுணர்கள் ஆகியோர் சிறிலங்காவை சர்வதேச
குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு என்ற அழைப்பை விடுத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
பொதுநலவாய உச்சிமாநாட்டில் சிறிலங்கா ! இராணுவ நீக்கத்தை கோரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
பொதுநலவாய உச்சிமாநாட்டில் சிறிலங்கா ! இராணுவ நீக்கத்தை கோரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!
பொதுநலவாய நாடுகள் சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு காரணங்களில் முதன்மையாக இருக்கின்ற இராணுவச் செலவினங்கள் குறித்து கவனம் செலுத்த
வேண்டும் என கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இராணுவத்தினை விலக்குவத்தற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் 24வது உச்சி மாநாடு ஆபிரிக்காவின் றுவண்டாவில் யூன் 24ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. பிரித்தானிய இளவரசர் தலைமையில்
தொடங்கியுள்ள இந்த உச்சி மாநாட்டில் 54 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கெடுத்துள்ள நிலையில், சிறிலங்காவின் அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்து கொண்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியினை சந்தித்து வருகின்ற நிலையில், அதற்கு
முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவினங்கள் குறித்து பொதுநலவாய நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நா.
தமிழீழ அரசாங்கம், தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினை விலக்குவத்தற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.
6 சிவிலியன்களுக்கு 1 இராணுவம் என தமிழர் தாயகத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு, தமிழர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் நா. தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
2022 ஆண்டுக்கான நிதியொதிக்கீட்டில் 12.3 வீதத்தினை தனது இராணுவச் செலவினங்களுக்கு ஒதுக்கியுள்ள சிறிலங்கா, மக்கள் எரிபொருளுக்காகவும், உணவுக்காகவும் வரிசையில் மணிக் கணக்கில் காத்திருக்கும் நிலையிலும்,
இராணுவத்துக்கான செலவினங்கள் எந்தவகையிலும் குறைக்கப்படாது என்ற சிறிலங்கா அதிபர் கோத்தபாய இராஜபக்சவின் சமீபத்திய கூற்றினையும் நா.தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுநலவாய நாடுகளில் அதிக இராணுவச் செலவினங்கள் கொண்டுள்ள
நாடாக சிறிலங்கா இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடதக்கது.
பொருளாதார நெருக்கடிக்கு நடுவே தொடரும் பண்பாட்டு இனஅழிப்பு
பொருளாதார நெருக்கடிக்கு நடுவே தொடரும் பண்பாட்டு இனஅழிப்பு
சிறிலங்கா அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், தனது பௌத்த மேலாதிக்க சிந்தனையின் வடிவமாக, தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை தொடர்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர்களின் பூர்வீக பண்பாட்டு வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், அத்துமீறி நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலச பூசை தமிழ் மக்களால் நேற்று (12-06-2022) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியில் விவகாரங்களுக்கான அமைச்சு,

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு சிக்குண்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், அதிலிருந்து மீளுவதற்கு பல மாற்றங்களை முன்னெடுத்து வந்தாலும், மாறாத ஓன்றாக தமிழர் தேசத்தின் மீதான அதன் ஆக்கிரமிப்பும், அபகரிப்பும் உள்ளது.
தொல்பொருள் செயலணி, வனஜீவராசிகள் இலக்கா என தனது திணைக்களங்கள் ஊடாக தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை முன்னெடுத்து வரும்
சிறிலங்கா அரசாங்கம், இதற்கு துணையாக தனது இனவழிப்பு இராணுவத்தினை கையாளுகின்றது.
மக்கள்திரள் போராட்டங்கள் மூலமே தமிழர் தேசத்தின் மீது தொடரும் இந்த
பண்பாட்டு இனவழிப்பினை எதிர்கொள்ள முடியும் என்பதோடு,
ஆக்கிரமிப்பு இராணுவத்தினை வெளியேற்றச் கூறி மக்கள் போராட்டங்களை கூர்மைப்படுத்த
வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவாகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம்
ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம்
இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம்
நிறைவேற்றியுள்ளதோடு, நா.தமிழீழ அரசாங்கத்தின் கனேடிய உறுப்பினர் திரு.நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண உதவிகள், ஈழத்தமிழ் மக்களை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்
என கோரியுள்ள இத்தீர்மானம், ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும் தமிழக அரசிடம் இருந்து ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பதாக கோரியுள்ளது.
சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவீனங்களின் அடிப்படையில் தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து
சிறிலங்கா இராணுவத்தினை வெளியேற்ற தமிழ்நாடு அரசு, இந்த வேளையில் வலியுறுத்த வேண்டும் என்பதனையும் எதிர்பார்ப்பதாக தீர்மானம் கோரியுள்ளது.
கடந்த மே21-22 ஆகிய நாட்கள் இடம்பெற்றிருந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அசரவையில் உறுப்பினர் திரு நிமால் விநாயகமூர்த்தி அவர்களால முன்மொழியபட்டு, அரசவையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முழுவிபரம் :
தமிழ்நாட்டுக்கும் ஈழத்தமிழர் தேசத்துக்குமான உறவு என்பது உணர்வுபூர்வமானது. அது தொப்புள்கொடி உறவு. நிலத்தால் வேறுபட்டிருந்தாலும், உணர்வால்,
கலாசாரத்தால் பிரிக்கவியலாத ஒரு இனமாகும். ஈழத் தமிழர்களுக்கான நீதிக்கும் அரசியல் இறைமைக்கும் செயல்வடிவம் கொடுப்பதில் இந்திய அரசின் பங்களிப்பு
முக்கியமானதொன்றாகும் தங்கியிருக்கின்றது. இதற்கான திறவுகோல் எப்போதும் தமிழ்நாடாகவே இருக்கின்றது. இது வரலாறு முழுவதும் நிருபிக்கப்பட்டுவரும் உண்மையாகும்.
ஈழத்தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போதும், எமக்காக குரல் கொடுக்கும், எமக்குதவும் முதல் கரமாக, தமிழ்நாடே இருக்கின்றது. இந்த பின்புலத்தில்தான், மாண்புமிகு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு,
இலங்கைதீவின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் ஈழத்தமிழர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதை, ஈழத்தமிழர்களாகிய நாம் வரவேற்று மகிழ்கின்றோம். இது தொடர்பில், ஏற்கனவே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
பிரதமர். உருத்திரகுமாரன் அவர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின், மனிதபிமான நிவாரண உதவி முயற்சியை வரவேற்றிருந்ததோடு,
சிங்கள அரசாங்கங்கள் எவையும் தமிழ்மக்களை பாரபட்டசமின்றி நீதியாக நடத்தப் போவதில்லை. இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளிலும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள். இந்நிலையில் நேரடி
உதவிப்பொறிமுறையொன்றினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே தலைமை தாங்கி உருவாக்குமாறும் கோரியிருந்ததர் என்பதனையும் இந்த சந்தர்பத்தில் மீ;ண்டுமொருமுறை சுட்டிக்காட்டுகின்றது.
இதேவேளை ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும் நாம் இவ்வேளையில் எதிர்பார்கின்றது.
தீர்மானம் :
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல் வெளி முழுமையாக இல்லாத நிலையிலும், புலம்பெயர் ஈழத்தழர்களுக்கான தேசக்கட்டுமானமாகவும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பினை
- இலங்கைத்தீவுக்கு வெளியே சர்வதேச அரசியல் வெளியில் வெளிப்படுத்தும் ஜனநாயக போராட்ட வடிவம் என்னும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முன்னெடுக்கப்படும், நலிவுற்ற இலங்கை
- மக்களுக்கான, மனிதாபிமான நிவாரண உதவியை வரவேற்பதுடன், அதற்கான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் நாடுகடந்த தமிழீழ
- அரசாங்கம் தோழமையினை வெளிப்படுத்தும் வகையில் நிதியுதவியையும் வழங்கும்.
- தமிழ்நாட்டு அரசாங்கத்தின் இந்த மனிதாபிமான நிவாரண உதவிகள், தமிழர் தாயகத்தின் நலிவுற்ற எமது உறவுகளை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்பதனையும் வேண்டுகின்றது.
- இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 1.4ம் சரத்தில் குறிப்பிட்டவாறு, இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம்
- என்பதனை உறுதிசெய்தே, சிறிலங்காவுக்கான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவீனங்களின் அடிப்படையில் தமிழர்
- தாயகப்பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினை வெளியேற்ற தமிழ்நாடு அரசு, இந்த வேளையில் வலியுறுத்த வேண்டும் என்பதனையும் எதிர்பார்கின்றது.
- மேலும், உலகெங்கும் பரந்துவாழும் உலகத்தமிழ் உறவுகள், மாண்புமிகு,
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முன்னெடுக்கப்படும் இலங்கை மக்களுக்கான மனிதாபிமான நிவாரண திட்டத்திற்கு தாராளமாக உதவிகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றது என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே-18ல் பேரறிவாளனின் விடுதலை உலகத்தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
மே-18ல் பேரறிவாளனின் விடுதலை உலகத்தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
உலகத் தமிழர்கள் உணர்வுபூர்வமாக தமிழினப்படுகொலையினை நினைவேந்திக் கொண்டிருந்த மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில், பேரறிவாளன் அவர்களை இந்தி
ய உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது என்ற செய்தி உலகத்தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் செய்தியறிக்கையினை வெளியிட்டுள்ள அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு,
பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலையில் தமிழகத்தின் உணர்வுடன் ஈழத்தமிழர்கள் நாமும் அணிதிரண்டிருந்தோம். விடுதலைக்காக ஓயாது போராடிய அற்புதம்மாவுக்கு
கிடைத்த இந்த நீதியின் வெற்றி என்பது, நீதிக்கான ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு நம்பிக்கையினை கொடுத்துள்ளது.
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் ஆட்சிப்பொறுப்பேற்ற காலத்தில் இருந்தே, பேரறிவாளின் விடுதலையில் கொண்டிருந்த
கரிசனையும், நீதிமன்றில் தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்டிருந்த வாதங்களும் பேரறிவாளனின் இவ்விடுதலையில் முக்கிய பங்கினை வகித்துள்ளன.
பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலைக்காக தொடர்ந்து
அயராது போராடிய அனைவரையும் இவ்வேளையில் நெஞ்சார்ந்து பாராட்டுவதோடு,
மிகுதி ஆறு பேரினது விடுதலைக்கு பேரறிவாளது விடுதலை,
நீதியின் கதவுகளை திறக்க வழிசெய்யும் என நம்புகின்றோம் என தெரிவித்துள்ளது.
ஆர்மேனிய ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஆர்மேனிய ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் ஆர்மேனியாவின் முன்னாள் அரசுத் தலைவரான யுசஅநn ளுயசமளைளயைn ஆர்மென் சர்கிசியன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ( Armen Sarkissian ) ஒன்றினை வழங்க இருக்கின்றார்.
ஒவ்வொரு ஆண்டின் உலகின் முக்கிய பிரமுகர்களை அழைத்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இம்முறை எட்டாவது அரங்கினை தொட்டுநிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை வழங்கும் அரசியல் பிரமுகரான ஆர்மென் சர்கிசியன்
அவர்கள், (2018-2022) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் 4வது அரசுத் தலைவராக இருந்துள்ளார். (1996-1997) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் பிரதமராகவும் பொறுப்பு
வகித்த இவர், (1998-2018) காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தில் நாட்டின் நீண்ட காலம் பணியாற்றிய தூதராகவும் இருந்துள்ளார்.
(1995-1996) காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆர்மேனியாவின் தலைவராக இருந்துள்ளதோடு, மேற்குலகில் தொடங்கிய முதல் ஆர்மேனிய
தூதரகத்தினை லண்டனில் தொடங்கியவர் என்பதோடு, பெல்ஜியம, நெதர்லாந்து, லக்செம்பர்க் மற்றும் வற்றிக்கான் ஆகிய நாடுகளுக்கு ஆர்மேனியாவின் மூத்த தூதராக விளங்கியுள்ளார்.
பல்வேறு ஆளுமைகளை கொண்ட இவரது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையானது,
மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளாகிய புதன்கிழமை, செவ்வாய்க்கிழமை
New York 2:00 PM / UK : 7:00 PM / EU : 8:00 PM
நேரத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சியிலும், இதர உலகத்தமிழ் ஊடகங்கள் வழியாகவும் காணலாம்.
ஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி ! தமிழக சட்டசபைத் தீர்மானத்தினை வரவேற்கின்றோம் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி ! தமிழக சட்டசபைத் தீர்மானத்தினை வரவேற்கின்றோம் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை தமிழக
சட்டமன்றில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை வரவேற்கின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் ஆகியனவற்றை தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக இலங்கைத்தீவுக்கு அனுப்பி வைக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களினால் தனித்தீர்மானமாக இது முன்மொழியப்பட்டிருந்தது.
இச்சிறப்பு தீர்மானம் தொடர்பில் பேசிய முதல்வர் அவர்கள், ‘இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாடு அரசு உதவ தயாராக உள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு உணவு அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்க வேண்டும் இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரி தமிழ்நாடு
அரசு கடிதம் எழுதியும் மத்திய அரசிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கை சிங்களவர்களுக்கும் உதய தயார்’ என பேசியிருந்தார்.
பிரதான எதிர்கட்சியான அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தமது கருத்துக்களை வழங்கியிருந்ததோடு, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேறியது சபாநாயகர் அறிவித்திருந்தார்.
அனைத்துக்கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ள இத்தீர்மானத்தினை நன்றியோடு வரவேற்பாதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைதாங்கி இந்த முயற்சியினை முன்னெடுப்பதனை நன்றியோடு வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஈழத்தமிழர் தேசத்தின் உண்மை நிலையையைக் கண்டறிவதற்கான குழு ஒன்றினை அங்கு உடன் அனுப்பி வைப்பதும் இம் முயற்சிக்கு
வலுச் சேர்க்கும் என்பதோடு, நேரடி உதவிப் பொறிமுறை ஊடாக ஈழத்தமிழ் மக்களுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பங்களிப்பை
வழங்கும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு முன்னராக அனுப்பியிருந்த கடிதமொன்றில் தெரிவித்தார்.
தமிழருக்கான நீதி கிடைப்பதற்கு சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழருக்கான நீதி கிடைப்பதற்கு சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
மியான்மர், ஈரான் நாடுகள் போல் இன-மத அடிப்படைவாதிகளின் பிடியில் சிறிலங்கா அரசு, அதன் அரச கட்டமைப்புகள், அரச குழுமம் ஆகியன சிக்கியிருப்பதாலேயே தமிழருக்கான நீதிக்கும், பொறுப்புக்கூறலுக்கும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழருக்கான நீதிகிடைப்பதற்கும், தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த அரசின் கொடுங்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கும் பல்முனைப்பட்ட காத்திரமான அணுகுமுறையொன்றினை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் பாஷேலே அம்மையாரின் அறிக்கை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது
‘இராணுவ மயமாக்கல் மற்றும் இன-மதவாதத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகள் சனநாயக அமைப்புக்களை சிதைக்கின்றன’ என்ற ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையளரின் கூற்றினை சுட்டிக்காட்டியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், ‘தண்டனைப் பயமின்மையானது சிறிலங்காவின் கலாச்சாரத்தில் ஊறிப்போன ஒன்று என்பதோடு அதனது அரசியலில் சிங்கள பௌத்தமத இனவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளது’ என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களது அவதானிப்பினையும் இவ்விடயத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. ‘கொடுங்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு தடையென்பது அரசியல் திடமின்மை அல்லது செயல் திறனின்மையோ காரணமல்ல என்பதற்கு அப்பால், சிங்கள பௌத்த மத அடிப்படைவாதமே காரணமென்பது தெளிவாகின்றது என இடித்துரைத்துள்ளது.
இவ்வகையிலேயே சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கையின் முன்வைத்ததுபோல், பன்னாட்டு சமூகம் சர்வதேச நீதிக்கான நோக்கினை கொள்ளவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
ஆணையாளர் தனது அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக அதனை உபயோகிப்பதற்கு ஒரு தற்காலிக தடையும் அதன் மீதான அடிப்படை மாற்றங்கள் செய்யப்படவேண்டும் எனவும் கேட்டுள்ளார். (மார்ச் 7ம்-2022) மனித உரிமைகள் கண்காணிப்பகம், (மார்ச் 4-2022) சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியனவற்றின் வாய்மொழி அறிக்கையிலும், பயங்கரவாத தடைச் சட்டமானது சித்திரவதைகளை ஏதுவாக்கும் வகையில் திரும்ப திரும்ப உபயோகிக்கப்பட்டு வருவதாகவும், அது காணாமல் ஆக்கப்படுவோரை அதிகப்படுத்தும் அபாயத்திற்கு இட்டுச்செல்வதாக கூறியுள்ளது. ‘பயங்கரவாத தடைச் சட்டம் தமிழரையே அதிகமாக பாதிப்பதாக’ மனித உரிமைகள், மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் கூறியுள்ளார்.
1979இல் பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு சட்டமாக நிலைக்கொண்தில் இருந்து பல மனித உரிமைகள் அமைப்புக்களினாலும் அதனை இரத்துச் செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான அதனுடைய இருப்பு, சிறிலங்கா அரசால் உத்தேசிக்கப்பட்டவாறான திருத்தங்களோடு கூட, சிறிலங்காவின் அரசியல்-இராணுவ கட்டமைப்புக்கள் மீதான சிங்கள பௌத்தமத அடிப்படைவாதத்தின் கிடுக்கிப் பிடியினை நிலைப்படுத்தவே செய்யும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியதற்கு காரணமே தமிழர்கள் மீதான இனவழிப்பும், சிங்கள- தமிழ் அரசியல் தலைமைகள் இன முரண்பாடுகளுக்கான தீர்வினை எட்டுமுகமாக எடுக்கப்பட்ட ஒப்பந்தங்களை சிங்கள தலைவர்கள்
தொடர்ச்சியாக மீறியதும் தான் என இரா.சம்பந்தன தனது அறிக்கையில்கூறியுள்ளார். சிங்கள பௌத்த இனவாதமே அதன் வேராக இருப்பதே காரணமாகும்.
வழமைபோலவே, ஐ.நா மனித உரிiமைச்சபை ஆணையாளரது அறிக்கைக்கு
சிறிலங்கா பௌத்த இனவாத அரசு பதிலளிக்கையில், சர்வதேச அமைப்புகளை, குறிப்பாக மனித உரிமைச்சபை, தமது ‘நாட்டு இறையாண்மை’ என்ற கோட்பாட்டின் பின்னின்று தாக்கியும் பயமுறுத்தியும் உள்ளது என தெரிவித்துள்ளது. இது
சிறிலங்காவின் சந்தர்ப்பவாதப் போக்கையே காட்டுகிறது, அதாவது, பொருளாதார மேம்பாட்டிற்கு நிதியுதவி, பேரிடர்காலத்தில் தனது மக்களுக்கு தடுப்பூசி போடுதல் என தனக்கு தேவை என வரும்போது, சர்வதேச அமைப்புக்களிடம் செல்வதும், ஆனால் தான்
இழைத்த கொடுங்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் என வரும்போது நாட்டின் இறையாண்மை என்ற கேடயத்தினை பாவிப்பதுமாக இருக்கின்றது.
சர்வதேச குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபடும் போது, சிறிலங்கா அரசு இறையாண்மை என்ற அடிப்படையிலான தற்காப்பை இழக்கிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இங்கே குறிப்பிட விரும்புவது என்னவெனில், சிறிலங்காவின் 1972 இல் உருவாக்கப்பட்ட அதன முதலாவது குடியரசுக்கான அரசியலமைப்பு, அல்லது 1978இல் உருவாக்கப்பட்ட அதன் இரண்டாவது அரசியல்
அமைப்பிலோ தமிழர்கள் எவ்வகையிலும் பங்குபற்றவோ அல்லது அதனை ஆதரிக்கவோ இல்லை. அவை தமிழர்களின் பெரும் ஆட்சேபணைகளுக்கிடையே
தமிழர்கள் மீது சுமத்தப்பட்டவையாகும். ஆகவே, சிறிலங்கா அரசின் இந்த ‘நாட்டின் இறையாண்மை’ என்ற கோட்பாட்டின் பின்னே தமது கொடூர குற்றங்களை மறைக்கப்பார்ப்பது என்பது ஒரு தார்மீக கபடநாடகம் ஆகும்.
தற்போது சிறிலங்கா அரசானது, இலங்கைத்தீவின் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பகுதிகளான வடக்கு கிழக்கில், தமிழ் பேசும் மக்களை ‘சிறுபான்மையினராக’ ஆக்கும் விதத்தில் குடிப்பரம்பலை மாற்றி அமைக்கும் காரியங்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை தளமாக கொண்டுள்ள ஓக்லண்ட் அமைப்பு 2021 மார்சில் வெளியிட்ட ‘முடிவற்ற யுத்தம்’ என்ற தமது ஆய்வுக்கட்டுரையில் ‘தமிழர் பெரும்பான்மையாக செறிந்து வாழும் பிரதேசங்களில் வலிந்து மேற்கொள்ளப்படும்
சிங்கள குடியேற்றங்கள், இராணுவ வெற்றிச்சின்னங்கள், அகழ்வாராய்வு ஒதுக்கிடங்கள், வனவிலங்கு காப்பகங்கள், வன ஒதுக்கிடங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார பிரதேசங்கள் அமைக்கப்படுகின்றன. இவை யாவுமே, தமிழர்களது
பிரதிநிதிகளிடம் சம்மதமோ அல்லது எந்த விதமான ஆலோசனைகளும் தமிழர் தரப்பிடம் பெறப்படாமலே, தமிழர்களது நிலங்களை அபகரிக்கும விதமாகவும், அவர்களது அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் விதமாகவும், மற்றும் அவர்களது
அடையாளத்தினையே துடைத்து அழிக்கும் வகையிலும் தெளிவான ஒரு நோக்கில் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் சிங்கள மக்களது விகிதாசாரத்தினை அதிகரிக்கும் விதமாக சிங்கள கிராமங்களை தமிழ்
மாவட்டங்களோடு இணைக்கும் வகையில் எல்லைகளை மறுசீரமைக்கிறார்கள். இது சிறிலங்காவின் அதிகமாக சிங்களவரைக் கொண்ட இராணுவம் தமிழர் பிரதேசங்களில்
நிலைகொண்டுள்ளமையால் சாத்தியப்படுகிறது. இந்த தமிழர் தாயகத்தின் நிலம் அபகரித்தலால் தமிழ் மக்களது தனித்துவமான அடையாளம் அற்றுப் போய்விடும்.
தமிழரின் அரசியல் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்புக்கான கோரிக்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளருக்கு ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளால் அனுப்ப்பட்ட கடிதத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கவனத்தில் கொள்கின்றது. ஆயினும், நாட்டில் நிலவும்
சரித்திர பூர்வமான சிங்கள பௌத்தமத அடிப்படைவாதம், அத்துடன் சிங்கள தலைவர்கள் அவர்கள் இழைக்கும் கொடூர குற்றங்களுக்கு தண்டனைப் பயமின்மை மற்றும் தமிழர்களை பரவலாக துன்புறுத்துதல், தமிழரது அடையாளங்களை அழித்தல்
என்பவற்றை மனதில் கொண்டு, தமிழர்தாம் இங்கே பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில் அவர்களது அரசியல் எதிகாலத்தை தீர்மானிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.
ஆகையினால், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் பாஷேலே அம்மையாரின் அறிக்கைக்கு சர்வதேச சமூகம் கவனம் கொடுத்து சிறிலங்கா அரசு பொறுப்புக்கூறும் வண்ணம் ஒரு மாறுபாடான ஏற்பாட்டை எடுப்பதன் பேரில் இலங்கைத்தீவில்
தமிழருக்கான அரசியல் தீர்வு, நீதி, மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை சாத்தியமாக்க பல்முனைப்பட்ட காத்திரமான அணுகுமுறையொன்றினை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும்என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின் செய்தி – நீதிமன்றத்தினை நாட வேண்டிவரும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின் செய்தி – நீதிமன்றத்தினை நாட வேண்டிவரும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் அமைதியான முறையில், பிரென்சு மண்ணில் மேற்கொண்டு வரும் அரசியல் செயற்பாடுகளுக்கு, ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின்
செய்திகள் குந்தகம் விளைவிப்பதாக குற்றஞச்சாட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அராங்சகத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகள், இவ்விடயத்தில் உண்மைத்தன்மை வெளிக்கொணர நீதிமன்றத்தில் முறையிட வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தலைநகர் பரிசின் அமைந்துள்ள தமிழர் வர்த்தக மையப்பகுதியாக லாச்சப்பலில், வர்த்தக நிலையமொன்றின் மறைவிடத்தில் இருந்து, காவல்துறை சோதனையொன்றின் போது மீட்கப்பட்ட தங்கம், பெருமளவு பணம் தொடர்பில் விடுதலைப் புலிகளை இணைத்து செய்தி வெளியிட்டிருந்தமை பிரான்ஸ் தமிழர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட நபர், ‘விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்றும், இலங்கையின் பிரிவினைவாத செயற்பாடுகளுக்காக பண சேகரிப்பில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் செய்தியில் குறிப்பிட்டிருந்தமை தமிழ்உணர்வாளர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இவ்வியடம் தொடர்பில் பிரதான பிரென்சு ஊடகங்களுக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்த கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகளின் கடிதத்தில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கைது செய்யப்பட்ட நபருக்கும் தமிழீழ புலிகளின் இயக்கத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்த இந்த சந்தேகங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. உண்மை முற்றிலும் வேறுபட்டது.
இந்த உண்மைகளின் யதார்த்தத்தை எந்தவொரு விசாரணையும் செய்யாமல் இத்தகைய குற்றச்சாட்டுகள் பிரெஞ்சு ஊடக ;பரப்பில் பரப்பப்படும் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது.
சட்டத்தின் ஆட்சி கொண்ட பிரான்ஸ் நாட்டில் நாங்கள் இருக்கிறோம். இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான நீதிக்கும், அரசியல் இறமைக்குமான வெளி இல்லா நிலையில், நாங்கள் பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி வாழ்ந்து வருகின்றோம்.
தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களாகிய நாம் எமக்கான நீதி கோரி போராடி வருவதோடு, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தமிழ்மக்களாகிய நாம், எமக்கான நீதிக்கும் அரசியல் இறைமைக்கும் பிரென்சு மண்ணில் நாம் அமைதியான முறையி;ல் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு இவ்வாறான ஆதரமற்ற செய்திகள் குந்தகம் விளைவிப்பதாக கருதுகின்றோம்.
எங்கள் கருத்துக்களை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுவதோடு,செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உங்கள் ஆதாரங்களின் உண்மைத்தன்மை குறித்து உங்கள் விழிப்புணர்வை நாங்கள் கேட்கிறோம்.
எங்கள் கோரிக்கை உங்களின் கவனத்திற்கு ஈர்க்கவில்லை என்றால், இந்த விடயத்தில் நீதிமன்றத்தினை நாட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தமது கடித்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கனேடிய அரசினை நோக்கி ஈழத்தமிழர்களின் நீதிக்கான குரல்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
கனேடிய அரசினை நோக்கி ஈழத்தமிழர்களின் நீதிக்கான குரல்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
விவகாரத்தில் கனேடிய அரசுக்கு அழுத்தம் கொடுகின்ற செயல்முனைப்பில்
கனேடிய தமிழ்சமூகம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதற்கான செயல்முனைப்பினை
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தி முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.
சிறிலங்காவை மையப்படுத்தி புதிய தீர்மானமொன்று கூட்டுநாடுகளால்
ஐ.நாவில் கொண்டுவரப்படலாம் என்ற நிலையில், அக்கூட்டு நாடுகளில்
ஒன்றாக கனடா காணப்படுகின்ற நிலையில், சிறிலங்காவை சர்வதேச
குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துகின்ற வகையில் தீர்மானம் அமையவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தப்படுகின்றது.
ஐ.நா மனித உரிமைச்சபையும்.. கனேடிய தமிழ்சமூகத்தின் வகிபாகமும்…
என்ற தொனிப்பொருளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த இணைவழி கருத்தாடல் நிகழ்வில் இதற்கான செயற்திட்டங்கள் கலந்தாய்வு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.
கனேடிய அரசுக்கு அழுத்தங் கொடுக்கும் வகையில், இணைவழியிலான
https://ctcja.com/ கையெழுத்து வேட்டை கனடா தமிழ்அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பினால்
முன்னெடுக்கப்படுகின்றது. இன்று வெள்ளிக்கிழமை கனேடிய நேரம்
இரவு எட்டுமணிக்கு ஒன்ராறியோ மாகாண சபை உறுப்பினர் திரு.லோகன்
கணபதிப்பிள்ளை அவர்களினால் தொடங்கி வைக்கப்பட இருக்கின்றது.
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை
உறுதி செய்வதன் அவசியத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
அறிக்கை சுட்டிக்காட்டி கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னோ தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
சென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !
சென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !
இலங்கைத்தீவில் இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான வெளி தமிழ்மக்களுக்கு இல்லாத நிலையில், சென்னை மெரினா
கடற்கரையிலோ அல்லது சென்னையின் வேறு பகுதியிலோ முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் ஒன்றினை தமிழ்நாட்டு அரசு
நிறுவ வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை தொடர்பில் இடம்பெற்றிருந்த
கவனயீர்ப்பு கண்டன கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே இக்கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கான அரசியல்வெளி இல்லாத நிலையில்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தது.
தற்போது நினைவுகூர்வதற்கான வெளிiயும் தமிழ்மக்களுக்கு அங்கில்லாத நிலையில், அதற்கான வெளியினை
இலங்கைத்தீவுக்கு வெளியே உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
உலகின் தலைநகரங்களில் முள்ளிவாய்க்கால் அடையாளச்சின்னங்களை உருவாக்கும் வகையில், அதற்கு முன்மாதிரியாக தமிழகத்தின் சென்னை மெரீனா கடற்கரையிலோ
அல்லது சென்னையின் வேறு பகுதியிலோ முள்ளிவாய்க்கால் அடையாளச்சின்னத்தை தமிழ்நாட்டு அரசு உருவாக்க வேண்டும்
என கோருகின்றோம். இதற்கு தமிழ்நாட்டின் கட்சிகள், அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் ஆதரவு வழங்க வேண்டுகிறோம்.
இதுமட்டுமல்லாது மே-18 முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாளினை உலகெங்கும் வாழும் தமிழர்களை அடையாளப்படுத்தும் விதமாக
‘உலகத்தமிழர் தேசிய துக்க நாளாக’ மே-18ஐ தமிழ்நாட்டு அரசு பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவீரர்களை நினைவேந்த உலகத்தமிழர்களாய் தயாராவோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
மாவீரர்களை நினைவேந்த உலகத்தமிழர்களாய் தயாராவோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை முன்னெடுப்பதற்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் தாயக மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழர்கள் நாம்
இணையவழியே ஒன்று கூடி மாவீரர்களை நினைவேந்த தயாராவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
ஆக்கிரமிப்புக்கு எதிராக, இனஅழிப்புக்கு எதிராக மண்ணையும் மக்களையும் பாதுகாக்கப் போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள்
போராடவில்லை. ஆனால் இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள பேரினவாத அரசு, தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு சவால்விடுத்து வருகின்றது.
இந்நிலையில் தாயகம், தேசிய, அரசியல் இறைமைக்காக தமது உன்னதமான உயிர்களை ஈகம் செய்த எமது தேசப்புதல்வர்களை நெஞ்சினில் ஏந்தி, உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற
ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுவோம் என அறைகூவல் விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மாவீரர்
வாரம், மாவீரர் நாள் நிகழ்வுகளை மற்றும் உலகத்தமிழ் ஊடகங்கள் மூலமாக நேரஞ்சலாக காணமுடியும் எனத் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் :
தமிழீழ தேசத்தை தமது உதிரத்தால் உயிர்ப்பித்த நம் தேசப் புதல்வர்களின் திருநாளாகிய மாவீரர் நாளினை நினைவேந்த உலகத்தமிழர்களாய் நாம் தயாராவோம்.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலை வேட்கையினைத் தமது வீரத்தாலும் ஈகத்தாலும் உலகெங்கும் முரசறைந்து, அனைத்துலக உலக
ஒழுங்கில் ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு பேசுபொருளாக மாற்றிய விடுதலை வீரர்கள் மாவீரர்கள்.
ஆக்கிரமிப்புக்கு எதிராக, இனஅழிப்புக்கு எதிராக மண்ணையும் மக்களையும் பாதுகாக்கப் போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள்
போராடவில்லை. ஆனால் இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள பேரினவாக அரசு, தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு சவால்விடுத்து வருகின்றது.
ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அணையாத தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின்
நினைவேந்தல் நிகழ்வுகளை, தாயக மக்கள் முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசகட்டமைப்பு ஏற்படுத்திய தடைகளை முன்னராக ஏற்படுத்தியிருந்தது.
தற்போது மாவீரர் நாளினை முன்னெடுக்க முனையும் செயற்பாடுகளுக்கு சிறிலங்கா பாதுகாப்பு தரப்பு அச்சுறுத்தி வருகின்றது.
மறுபுறம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல்வேறு புலம்பெயர் நாடுகளில் மக்கள் பெருமளவில் பங்கெடுத்து மாவீரர்களை நினைவேந்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமைகளை கவனத்தில் கொண்டு தாயக மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழர்கள் நாம் இணையவழியே ஒன்றுகூடி மாவீரர்களை நினைவேந்த
தயாராவோம். இதற்காக உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்தவாறு ஏற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
மாவீரர் நாள் வாரம் :
நொவெம்பர் 21ம் நாள் முதல் 26ம் நாள் வரை உணர்வுபூர்மாக புலம்பெயர் இளையோர்களால் முன்னெடுக்கப்படுகின்றது.
நொவெம்பர் 27 – மாவீரர் நாள் :
தாயக நேரம் மாலை 6h05க்கு தொடங்கவிருக்கின்ற இணைவழியிலான மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது.
இந்நிகழ்வுகளை www.tgte.tv – Facebook : tgteofficial மற்றும் உலகத்தமிழ் ஊடகங்கள் மூலமாக நேரஞ்சலாக ஒளிபரப்பாகின்றது.
தாயகம், தேசிய, அரசியல் இறைமைக்காக தமது உன்னதமான உயிர்களை ஈகம் செய்த எமது தேசப்புதல்வர்களை நெஞ்சினில்
ஏந்தி, உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை’ சாதகமாக்கும் சிறிலங்கா அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
கொரோனாவை’ சாதகமாக்கும் சிறிலங்கா அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
உலக மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் நெருக்கடிநிலையினை தனக்கு சதகமாக்கி
சிறிலங்கா அரசாங்கம் நடந்து கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்போர்கைதிகளின் உயிர்ப்பாதுகாப்பு தொடர்பிலும்,
சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் தமிழர்களை படுகொலை செய்த போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை தொடர்பிலும்
இருவேறு ஊடகச் செய்திகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.
சிறைகளில் வைக்கப்பட்டுள்ள தமிழ்போர்கைதிகளின் (அரசியற்கைதிகள்) உயிர்பாதுகாப்பினை
உத்தரவாதப்படுத்துமாறு, சிறிலங்காவின் ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும், இந்தியா, அமெரிக்கா மற்றும் சர்வதேச
செங்சிலுவைச் சங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,
தமிழ்போர்கைதிகள் சிறிலங்கா அரசின் பின்புலத்துடன் சிங்களக் கைதிகளால் படுகொலை செய்யப்பட்டலாம் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ்போர்கைதிகளுக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவல்களில், கொரோன வைரஸ் தொற்று தொடர்பில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தின் போது, சிங்கள கைதிகள்
தமிழ்போர்கைதிகளை தங்களுடன் இணைந்து வருமாறு அழைத்திருந்ததாகவும், இதற்கு தமிழ்கைதிகள் மறுத்திவிட்ட
நிலையில், தமிழ்கைதிகள் மீது சிங்கள கைதிகளுக்கு வெறுப்பு நிலைகாணப்படுவதாகவும் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம், இந்த வெறுப்புணர்வை பயன்படுத்தி சிங்கள கைதிகள் ஊடாக தமிழ்கைதிகளை படுகொலை செய்யலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
1) 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறையில் 53 தமிழர்கள் படுகொலை
2) 1997ம் ஆண்டு களுத்துறை சிறையில் 3 தமிழர்கள் படுகொலை
3) 2000ம் ஆண்டு பிந்துனுவேவ சிறையில் 26 தமிழர்கள் படுகொலை
சிறைக்கூடங்களில் சிங்கள கைதிகளை ஏவிவிட்டு தமிழர்களை படுகொலை செய்த சம்பவங்கள் சிறிலங்காவின் கடந்த கால
வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளாக பதிவாகியுள்ளன என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக்காட்டியுள்ளது.
இதேவேளை, சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த
போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது, சிறிலங்காவில் நீதிக்கானவெளி
தமிழர்களுக்கு இல்லை என்பதனை வெளிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவை
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, அனைத்துலக நீதிமன்றத்திலோ நிறுத்தவதன் ஊடாகத்தான் தமிழர்களுக்கான
நீதியினைப் பெறமுடியும் எனத் மற்றைய ஊடகச் செய்தியில் தெரிவித்துள்ளது.
இதேவேளை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மனிதஉயிர்களுக்கு அச்சுறுத்தலாக பாரிய நெருக்கடி நிலையினை
ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை தனக்கு சாதகமாக்கிய ஒரே அரசு என்ற இடத்தினை ‘சிறிலங்கா’ பிடித்துள்ளது என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது












