Tag: நடந்தது என்ன
செவ்வந்திக்கு நடந்தது என்ன
செவ்வந்திக்கு நடந்தது என்ன
செவ்வந்திக்கு நடந்தது என்ன ,கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பியோடியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை .
என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இந்த கொலை தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று (23) இரவு ‘டிவி தெரண’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘360’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆனந்த விஜயபால,
“எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பியோடியதாக எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக பார்க்கும்போது,
இந்த சந்தேக நபரிடம் இருந்த அனைத்து தகவல்களும் மற்ற சந்தேக நபர்கள் மூலம் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.மேற்படி விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
எரியும் ஆயுதகூடம் நடந்தது என்ன
எரியும் ஆயுதகூடம் நடந்தது என்ன
எரியும் ஆயுதகூடம் நடந்தது என்ன ,சிரியாவின் மிக முக்கியமான மாகாணத்தில் இடம்பெற்ற மிகப்பெரும் வெடிப்புச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடமேற்கு சிரியாவின் பகுதியில் அமையப்பெற்றுள்ள ஆயுதக் களஞ்சியம் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு மிகப்பெரும் வெடிப்புச் சம்பவங்கள் ஏற்பட்டதாகவும். குண்டு சத்தங்கள் போல அதிர்வுகள் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றன .
சிரியாவின் மீது தொடர் தாக்குதலை நடத்தி, ஈரானின் ஆதிக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் யூத படைகள் ஈடுபட்டு வருகின்றன.
அதனை அடுத்து சிரியாவுக்குள் தங்கி வாழ்கின்ற ஈரானுடைய மிக முக்கியமான இராணுவ தளபதிகளை அது போட்டு தள்ளி வருகிறது.
அவ்விதமான நிலையில் தற்பொழுது சிரியாவுக்குள் இந்த சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு எதிராக விரைவில் ஈரான் நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
இதனால் மூன்றாம் உலகப் போர் வெடித்து விடும் என்று அபாயம் காணப்படும் அதேவேளையில் , சிரியாவில் தொடர்ந்து நடத்தும் இந்த அதிரடி உட்கட்டமைப்பு சிதைக்கும் நடவடிக்கை, மிகப்பெரும் ஆபத்தை சிரியாவுக்கு ஏற்படுத்தி வருவதாகவே பார்க்க முடிகிறது.
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்

- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

குளிரினால் 1600 கால்நடைகள் மரணம் – உண்மையில் நடந்தது என்ன
குளிரினால் 1600 கால்நடைகள் மரணம் – உண்மையில் நடந்தது என்ன
இலங்கை வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1600 கால்நடைகள் பலியாகியுள்ளன .
இன்று மதியம் வரையிலான கணக்கெடுப்பின் பிரகாரம் இந்த விடயம் அறிவிக்க பட்டுள்ளது .
இலங்கையில் நிலவும் அதிக குளிர் காரணமாக இந்த இறப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை விவசாயத்துறை புதிய கட்டு கதையை பரப்பி விட்டுள்ளது .
இது வேறு விடயமாக பார்க்க படுகிறது .
இந்த விலங்குகள் இறப்பதற்கு முன்னர் மக்களுக்கு தோல் வியாதி ஒன்று உருவானது .
அதனை அடுத்து இந்த விலங்குகள் பலியாகியுள்ளமை ,சமாச்சாரம் வேறாக இருக்கலாம் என கணிக்க பெறுகிறது .
வெளியில் தெரிந்தால் தமது ஆட்சிக்கு ஆபத்து என்கின்ற விதத்தில் மூடி மறைப்புக்கள் அரங்கேற்ற பட்டு வருகின்றன .
வெடித்து சிதறிய தென்கொரியா இராணுவ முகம் நடந்தது என்ன ..?
வெடித்து சிதறிய தென்கொரியா இராணுவ முகம் நடந்தது என்ன ..?
வடகொரியா எல்லையில் அமைந்துள்ள ,தென்கொரியா விமான தளத்தில் மிக பெரும் வெடி சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளது .
தென்கொரியா விமான தளத்தில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ஏவுகணைகள் மற்றும், குண்டுகள் வெடித்து சிதறும் வெடிச் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாக ,அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
இந்த வெடி குண்டு சத்தங்கள் அதிர்வுகள் பல மைல் தொலைவுக்கு கேட்டுள்ளது .
இந்த வெடிப்பு சத்தங்கள் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடரில் தெரியவில்லை .
வடகொரியா தாக்குதல் நடத்தியதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் ,பெரும் பரபரப்பு நிலவுகிறது .
திலீபனின் நினைவு நாளில் நடந்தது என்ன
திலீபனின் நினைவு நாளில் நடந்தது என்ன
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர்,
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், சக கட்சியினர் என
அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர்.
அவர்கள் அவ்வாறு அநாகரிகமான முறையில் நடந்து கொண்டிருந்த போது, அவர்களை கட்டுப்படுத்தாது, அருகில் இருந்த கொட்டகைக்குள் இருந்து அகில
இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தமை அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.
தொடக்க நாள் முதல் முரண்பாடுகளை வளர்த்தார்கள்
தியாக தீபத்தின் நினைவேந்தல் நாளின் தொடக்க நாளுக்கு முந்தைய நாளான 14 ஆம் திகதி இரவு அகில இலங்கை தமிழ் காங்கிரசினர்
நினைவிடத்தினை மறைத்தவாறு பந்தல் அமைத்த போது அங்கிருந்தவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற போது அவர்களுடன் முரண்பட்டார்கள்.
தொடக்க நாளான மறுநாள் , தியாக தீபத்தின் நினைவிடத்தில் வைக்கப்பட்டு இருந்த படத்தினை மறைத்தவாறு காங்கிரசினர் கொடி கம்பங்களை நாட்டினார்கள்.
திலீபனின் நினைவு நாளில் நடந்தது என்ன
அவ்வாறு படங்களை மறைக்குமாறு கொடி கம்பங்களை நட வேண்டாம் என்ற போதும் முரண்பட்டுக்கொண்டார்கள்.
தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளிலும் சிறு சிறு சச்சரவில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்றைய தினமும் முரண்பாடு
இறுதி நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நேற்றைய தினம் செய்ய முற்பட்ட யாழ். மாநகர சபை உறுப்பினர்களான பார்தீபன் மற்றும் தனுஜன் ஆகியோருடன் முரண்பட்ட காங்கிரசினர் அவர்ளை தாக்கவும் முற்பட்டனர்.
காலை முதல் இடம் பிடித்து காத்திருந்தனர்
தியாக தீபத்தின் நினைவிடத்தை. காலை முதல் காங்கிரசினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
நினைவிடத்தை சுற்றி மஞ்சள் உடுப்புக்களுடன் நின்று , அஞ்சலி செலுத்த வருபவர்களை மாத்திரம் அனுமதித்து மற்றைய கட்சிகள், அமைப்புக்களை
சார்ந்தவர்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நேரம் முந்தி தீபம் ஏற்றினார்கள்
தியாக தீபம் உயிரிழந்த 10.48 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுவதாக இருந்த போது , தாமே அவற்றை முன்னிருந்து ஏற்ற வேண்டும் எனும்
போட்டியில், தள்ளு முள்ளுக்களுக்கு மத்தியில் 3 நிமிடங்கள் முந்தி 10.45 மணியளவில் தீபத்தினை ஏற்றினார்கள்.
தூக்கு காவடியை சுமார் 40 நிமிடங்கள் காத்திருக்க வைத்தனர்
கைதடி பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் தூக்கு காவடி எடுத்து தியாக தீபத்தின் நினைவிடத்தினை 10.40 மணியளவில் வந்தடைந்தனர்.
அவ்வாறு வந்தவர்கள் நினைவிடத்தின் முன்பாக காவடியை இறக்க முற்பட்ட போது காங்கிரசினர் அனுமதிக்காது முரண்பாடுகளை வளர்த்தனர்.
தாம் நினைவிடம் முன்பாக தீபம் ஏற்ற போகிறோம். என அவ்விடத்தினை சுற்றி கைகளை கோர்த்தவாறு நின்றனர்.
அதன் போது காவடியுடன் வந்தவர்கள் காவடியை இறக்கிய பின்னர் தீபம் ஏற்றுங்கள் , தீபம் ஏற்றுவதற்கு 08 நிமிடங்கள் இருக்கின்றன தானே என கேட்ட போது , அவ்வாறு அனுமதிக்க முடியாது என முரண்பட்டுக்கொண்டனர்.
அதனால் அப்பகுதியில் தர்க்கம் ஏற்பட்ட போது, அந்த அமளிக்குள் அவசரப்பட்டு , மூன்று நிமிடங்களுக்கு முன்னரே தீபம் ஏற்றினார்கள்.
வேலன் சுவாமிகளை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள்
அமளிக்குள் சுடர் ஏற்றிய பின்னரே ஒலிபெருக்கியில் இரு நிமிட அக வணக்கம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. அதன் போதும் அவ்விடத்தில் அமைதியின்மை
காணப்பட்டமையால் , வேலன் சுவாமிகள் அமைதி காக்குமாறு கூறிய போது ,காங்கிரசினர் தகாத வார்த்தைகளால் அவரை பேசினார்கள்.
தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது மலர் அஞ்சலி செலுத்த வருவோருக்கு இடையூறாக அவ்விடத்தில் தாமே மலர் அஞ்சலி செலுத்த
காங்கிரசினர் தடைகளை ஏற்படுத்தும் விதமாக நினைவிடத்தில் குழுமி நின்றனர்.
மலரஞ்சலி செலுத்தியவர்கள் கீழே இறங்கி மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்குமாறு கோரிய போது முரண்பட்டு கொண்டனர்.
40 நிமிட பொறுமைக்கு பின் அடாத்தாக காவடியை இறக்கிய முன்னாள் போராளிகள்
காலை 10.40 மணியளவில் நினைவிடத்திற்கு வந்த காவடியை 11.15 மணி தாண்டியும் இறக்க விடாது தடுத்து வைத்திருந்த காங்கிரசினரின் தடைகளை மீறி முன்னாள் போராளிகள் காவடியை இறக்க முற்பட்ட போது தர்க்கம் ஏற்பட்டது.
அவற்றையும் மீறி முன்னாள் போராளிகள் காவடியை நினைவிடத்தின் முன்பாக இறங்கினார்கள்.
ஒருவர் காயம்
காவடியை இறக்க தடை ஏற்படுத்தும் விதமாக பிரதான தீபத்தினை காங்கிரசினர் நினைவிடத்தின் முன்பாக வைத்திருந்தனர்.
காவடி இறக்க ஏதுவாக அதனை சற்று தள்ளி வைக்குமாறு கூறிய போது ஏற்பட்ட தள்ளு முள்ளில் , தீபத்தின் சுடு எண்ணெய் பட்டு ஒருவர் காயங்களுக்கு உள்ளானார்.
அவரை அங்கிருந்தவர்கள் நோயாளர் காவு வண்டியில் ஏற்றி யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்வாறாக இன்றைய தினம் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பை சேர்ந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர்
நடந்து கொண்ட அநாகரிக செயற்பாடு அப்பகுதியில் நின்ற மக்கள் மத்தியில் கடுமையான விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.
கடற்கரை மிதந்த ஆணின் சடலம் நடந்தது என்ன
கடற்கரை மிதந்த ஆணின் சடலம் நடந்தது என்ன
இலங்கை மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பகுதியில் ,ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது .
சடலமாக மீட்க பட்டவர் 45 வயதுடையவ தமிழர் என கண்டறிய பட்டுள்ளது .
சடலமாக மீட்க பட்டவர் கொலை செய்யப் பட்டாரா .அல்லது இயற்கையாக
இறந்தாரா என்பது தொடர்பில் காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
ஈராக்கில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – நடந்தது என்ன
ஈராக்கில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – நடந்தது என்ன
ஈராக்கில் வீழ்ந்து நொறுங்கியது அமெரிக்கா ஆள் இல்லாத உளவு விமானம் .
இயந்திர கோளாறு காரணமாக ,அமெரிக்காவின் இந்த உயர் ரக ஆள் இல்லா விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது .
எனினும் இது ஈரானின் ,திட்டமிடப்பட்ட சதி வேலைகளில் , ஒன்றாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
தமது உளவு விமானத்தின் கண் காணிப்பை, தாம் அதிகரித்துள்ளதாக ,ஈரான் அறிவித்திருந்தது .
அவ்வாறு அறிவித்த சில நாட்களில் ,ஈராக்கில் அமெரிக்காவின், ஆள் இல்லாத உளவு விமானம் இவ்விதம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
அமெரிக்கா உளவு விமானம் ,வீழ்ந்து நொறுங்கியதன், பின்புலத்தில் நடந்தது என்ன என்பதே கேள்வியாக உள்ளது .
ஒரே நாளில் அமெரிக்கா ,மற்றும் அவர்கள் கூட்டாளி நாடான, இஸ்ரேல் இராணுவத்தின் ,ஆள் இல்லா உளவு விமானங்கள் வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
இந்த இரு நாடுகளின் உளவு விமானங்கள், வீழ்த்த பட்டதன் பின்புலத்தில் ,இரு நாடுகளுக்கும் ,ஈரான் என்ன சொல்லி கொள்ள முனைகிறது என்பதை ,இதன் ஊடாக அவதானிக்க முடிகிறது .
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ,அமெரிக்கா இராணுவம் , விலகும் வரை .தமது பழிவாங்கும் தாக்குதல்கள், தொடரும் என அறிவித்து இருந்தது .
இவ்வாறு ஈரான் அறிவித்திருந்த நிலையில் ,இந்த தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

























