பெண்களை இரவில் பணியமர்த்தும் சட்டங்களில் திருத்தம்
Posted in இலங்கை செய்திகள்

பெண்களை இரவில் பணியமர்த்தும் சட்டங்களில் திருத்தம்

பெண்களை இரவில் பணியமர்த்தும் சட்டங்களில் திருத்தம்

பெண்களை இரவில் பணியமர்த்தும் சட்டங்களில் திருத்தம் ,பரந்த தொழிலாளர் சட்ட சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெண் தொழிலாளர்களை இரவில் பணியமர்த்துவது தொடர்பான தற்போதைய

சட்டங்களைத் திருத்துவதற்கான

சட்டங்களைத் திருத்துவதற்கான திட்டங்களை தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களின் கீழ் நான்கு முக்கிய சட்டமூலங்களை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர்

அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

சமீபத்தில் (08) நடைபெற்ற தொழிலாளர் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் வேலை நீக்கம்

தொழிற்சங்கங்கள், தொழிலாளர், தொழில் பாதுகாப்பு மற்றும் வேலை நீக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய 14 தற்போதைய தொழிலாளர் சட்டங்களை

மறுஆய்வு செய்வதற்கும், நான்கு முக்கிய தொழிலாளர் தொடர்பான சட்டமூலங்களை வரைவதற்கும் 17 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சக செயலாளர் தெரிவித்தார்.

இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, இரவில் பணிபுரியும் பெண்கள் சட்டம், தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் மற்றும் வேலை நிறுத்தப்பட்டால் காப்பீடு தொடர்பான விதிகளில் திருத்தங்கள் செய்யப்படும்.

புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை விதிமுறைகளை நவீனமயமாக்குவதையும் தொழிலாளர் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும்

இந்த மாற்றங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த தேசிய கொள்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், தொழிலாளர் துறையின் தரவுத்தளம்

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு வரைவு சீர்திருத்தங்கள்

உருவாக்கப்படும் என்று துணை அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்
Posted in இலங்கை செய்திகள்

அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்

அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானி திருத்தம்

அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம் ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்.

ரயில் நிலைய அதிபர்கள் பதவி

ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு .

திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மூன்று நீதியர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்ட

போது, ​​சிரேஸ்ட அரச சட்டத்தரணி இதனை அறியப்படுத்தியுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட அரச சட்டத்தரணி

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட அரச சட்டத்தரணி நயநதாரா பாலபட்டபெந்தி, குறித்த வர்த்தமானி அறிவிப்பு திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மனுவின் முன்னேற்றம் குறித்து அறிவிக்க மற்றொரு திகதியில் அழைக்கப்பட வேண்டும் என்றும் அரச சட்டத்தரணி கோரினார்.

அதன்படி, குறித்த மனுவை ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் ஆண்கள் மட்டுமே

பொருத்தமான பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இதன் ஊடாக தகுதிவாய்ந்த பெண்கள் அந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் உள்ள வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதன் ஊடாக தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், பெண்களும் விண்ணப்பிக்கும் வகையில் குறித்த

வர்த்தமானி அறிவிப்பைத் திருத்துமாறு பிரதிவாதியான ரயில்வே திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம், கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம்
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம்

உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம்

உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம் , உள்ளூராட்சி சபை தேர்தலில் திருட்டு சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தம் அரசவை முடிவெடுத்து அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அதற்கான வேட்பாளர்கள் கோள்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் அவை இந்த சட்டத்தின் மூலம் அவை நீக்கப்பட்டு புதிய கோள்கள் தொடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆதலால் இந்த சட்டசபை ஊடாக புதிய மாற்றங்கள் அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

வீடியோ

உள்ளாட்சி சபை தேர்தலுக்கு போட்டியிட மகாண சபைகள் தயாராகி வருகின்ற நிலையில் அந்த மாகாண சபையில் வேட்பாளர்கள் போட்டி தேர்வு முன்று கொடுக்கப்பட்டது .

இவ்வாறான நிலையில் அதனை நீக்கி தற்பொழுது புதியவர்கள் அதில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை இது ஏற்படுத்துவர தெரிவிக்கப்படுகிறது.

ஆதலால் இந்த தேர்தல் சட்ட திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.