Posted in சினிமா

சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் – தர்பார் பட நிறுவனம் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் – தர்பார் பட நிறுவனம் அறிவிப்பு

ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘தர்பார்’ படத்தில் இடம் பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் – தர்பார் பட நிறுவனம் அறிவிப்பு
தர்பார் படத்தில் ரஜினி


ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா

அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரி ஒருவர், இப்போதெல்லாம் சிறையிலிருப்பவர்கள் ஷாப்பிங் போகிறார்கள் என்று ரஜினியிடம் பேசுவதாக வசனம்

அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது.

இந்நிலையில், தர்பாரில் இருக்கும் வசனத்தை நீக்க தயார் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், எங்களின் தர்பார் திரைப்படத்தில் கைதிகள்

சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ அல்லது யார் மனதையும்

புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்த குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதை

புண்படுத்துவதுவாக தெரியவந்ததால், அது படத்திலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துக் கொள்கிறோம்’ இவ்வாறு லைகா நிறுவனம் கூறியுள்ளது.

Posted in சினிமா

தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் தர்பார்படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

தர்பார் படத்தைஇணையதளங்களில் வெளியிட தடை – ஐகோர்ட்டு உத்தரவு
ரஜினிகாந்த்


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று வெளியானது. வழக்கம் போல ரஜினி ரசிகர்கள் இதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

தர்பார் படம் இன்று வெளியானதையொட்டி தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். இந்தியாவில் மட்டும், 4,000 தியேட்டர்களில், ‘தர்பார்‘ படம் வெளியானது.

பொங்கல் பண்டிகைக்கு, ஒரு வாரம் முன்னதாகவே வெளியான ‘தர்பார்’ படத்திற்கு, சிறப்பு காட்சிக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு

இதனிடையே, தர்பார் படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை கோரி அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை

ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,

தர்பார் படத்தை 1,370 இணையதளங்களில்வெளியிட தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தர்பார் படத்தை இணையதளங்களில்