Tag: கோர விபத்து
கோர விபத்து நால்வர் மரணம்
கோர விபத்து நால்வர் மரணம்
கோர விபத்து நால்வர் மரணம் ,குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில், தலாவ, மீரிகம பகுதியில் இன்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
லொறியும் மோதியதால் இவ் விபத்து
குருணாகலிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேனும் எதிர்த்திசையில் பயணித்த லொறியும் மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
அநுராதபுரம் வைத்தியசாலை
விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கோர விபத்து 4வயது சிறுவன்பலி
கோர விபத்து 4வயது சிறுவன்பலி
கோர விபத்து 4வயது சிறுவன்பலி , மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிகுளம் பகுதியில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்
மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய மூவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவரும்போது, அப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய்,
மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் இன்று (10) மாலை நானாட்டான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது,
நானாட்டான் பிரதான வீதி வழியாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பிக்கப் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு
பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தான்.
மேலும், தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய மூவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்த முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கோர விபத்து மக்கள் காயம்
கோர விபத்து மக்கள் காயம்
கொழும்பு வீதியில் கோர விபத்து மக்கள் காயம் ,செவ்வாய்க்கிழமை காலை கட்டன் கொழும்பு பிரதான வீதியில் வான் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாரிய விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது .
இந்த வான் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் மூன்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .
பேருந்தும் பல சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் கண்டியிலிருந்து கட்டநோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சம்பவத்தது .
பேருந்து வான் நேருக்கு நேர் மோதி விபத்து
பேருந்து வான் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியதால் கொழும்பு கண்டி பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்வாறான வாகன விபத்துகளினால் மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்து வருகின்றனர் .
இலங்கையில் பேருந்துகளில் பயணிப்பது மிக அபாயகரமான நடவடிக்கை ஒன்றாக காணப்படுகிறது .
தொடரும் பேருந்து விபத்துக்கள்
தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான பேருந்து விபத்துக்கள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன .
தனியார் பேருந்துக்கும் அரச பேருந்துக்கும் இடையில் இடம்பெறுகின்ற போட்டி காரணமாக மிக வேகமாக தனியார் பேருந்துகளும் அரச பேருந்துகளும் போட்டி போட்டு பயணிப்பதால் இந்த விபத்து சம்பவங்கள் ஏற்படுவதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர் .
வீதி போக்குவரத்து முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே இவ்வாறான மீதி விபத்து களில் இருந்த மக்களையும் வாகனங்களையும் பாதசாரிகளையும் காப்பாற்ற முடியும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ,இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழப்பு
ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழப்பு
சற்று முன் வவுனியா ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழப்பு
வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு 7.00மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி
அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி
அனுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியையான 36 வயதுடைய பெண்ணும் அவரது 8 வயது மகளுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் ராஜாங்கனை, தஹதர காலனி பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது பின்னால் வந்த டிப்பர் ரக வாகனம் குறித்த இருவரும் பயணித்த ஸ்கூட்டருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி
சம்பவ இடத்தில் இருந்தவர்கள் விபத்துக்குள்ளான தாய் மற்றும் மகளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிப்பர் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்by நிருபர் காவலன்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்by நிருபர் காவலன்
- நாய்களை எரிக்க சுடலைby நிருபர் காவலன்
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைதுby நிருபர் காவலன்
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவுby நிருபர் காவலன்
கெமராவில் பதிவான கோர விபத்து
கெமராவில் பதிவான கோர விபத்து
பாணந்துறை நல்லுருவ பிரதேசத்தில் கெப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (04) நள்ளிரவு 12 மணியளவில் காலி – கொழும்பு பிரதான வீதியில் நல்லுருவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து கெப் வண்டியின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது.
களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த கெப் வண்டி, முன்னால் பயணித்த டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, கெப் வண்டியின் அதிவேகத்தினால் வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் சேவை நிலையம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கெமராவில் பதிவான கோர விபத்து
இந்த விபத்தில் மின்கம்பம் மற்றும் மின் கம்பிகள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்திற்கும் பாரிய சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கெப் வண்டியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
by நிருபர் காவலன் - சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
by நிருபர் காவலன் - நாய்களை எரிக்க சுடலை
by நிருபர் காவலன் - கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
by நிருபர் காவலன் - ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
by நிருபர் காவலன்
தனியார் பேருந்து கோர விபத்து
தனியார் பேருந்து கோர விபத்து
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று தெமோதராவில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் குறைந்தது 25 பேர் இருந்ததாகவும், இதில் இதுவரையில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்தனர்.
காயமடைந்த பயணிகள் மருத்துவ சிகிச்சைக்காக பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியில் மீட்பு பணிகள் துரதமாக இடம்பெறுவதாக தெரிவித்துள்ள பொலிஸார் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து
கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து
கொழும்பு – கண்டி வீதியில் நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கண்டி திசை நோக்கி இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று எதிர்திசையில் வந்த பௌசருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து
விபத்தின் போது, வேனில் 6 இராணுவ அதிகாரிகள் இருந்ததாகவும், அவர்களில் 5 பேர் காயமடைந்து வத்துப்பிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
பின்னா், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
பொல்ஹேன்கொடை இராணுவ முகாம் அதிகாரிகள் குழுவொன்று கிரிதலே முகாமிற்கு கடமைகளுக்காக சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடா்பில் பௌசரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் நடந்த கோர விபத்து 6 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் நடந்த கோர விபத்து 6 பேர் உயிரிழப்பு
இந்தியா கர்நாடக கோபால் பகுதியில் சரக்கு லொறியுடன் ,கார்
ஒன்று நேர் எதிர் மோதி விபத்தில் சிக்கியது .
இந்த விபத்தில் ஆறு மக்கள் சம்பவ இடத்தில பலியாகினர் .
லாரியின் இயந்திர பகுதிக்குள் ,கார் இயந்திர பகுதிக்குள் ,
நுளைந்துள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது ,
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
பேருந்தில் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து
பேருந்தில் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்தில் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்ததுடன், அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
கோர விபத்து – இருவர் பலி
கோர விபத்து – இருவர் பலி
கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், கொக்க பகுதியில் கார் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணிக்க முற்பட்ட கார் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் பின்னர் காருக்குள் 2 பேர் சிக்கிக் கொண்டதையடுத்து, அவர்களைக் காப்பாற்ற அப்பகுதி மக்கள் கடுமையான பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தனர்.
எவ்வாறாயினும், குறித்த இருவரும் காரின் உள்ளேயே உயிரிழந்திருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியாவில் கோர விபத்து – 10 பேர் காயம்
வவுனியாவில் கோர விபத்து – 10 பேர் காயம்
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (24) காலை பஸ் – டிப்பர் மோதிக்கொண்ட விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (24) காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வவுனியாவில் கோர விபத்து – 10 பேர் காயம்
தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தும் மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கி சென்ற டிப்பரும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் டிப்பர் வாகன சாரதி உட்பட பேருந்தில் பயணித்த பயணிகள் உள்ளிட்டோர் காயமடைந்த நிலையில் 6 பேர் மாங்குளம் வைத்தியசாலையிலும் 4 பேர் வவுனியா வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
வவுனியாவில் கோர விபத்து மூவர் மரணம்
வவுனியாவில் கோர விபத்து மூவர் மரணம்
வவுனியா நொச்சிமோட்டை பலத்துக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இரவு 12.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 17 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துருக்கியில் இடம்பெற்ற கோர விபத்து 32 பேர் மரணம் 51 பேர் காயம்
துருக்கியில் இடம்பெற்ற கோர விபத்து 32 பேர் மரணம் 51 பேர் காயம்
துருக்கியில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் சிக்கி ,32 பேர் பலியாகியும் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த இரண்டாவது விபத்தில் அம்புலன்ஸ் ஒன்று சிக்கியதில் , அதில் பயணித்த மருத்துவ அவசர பிரிவினரும் பலியாகியுள்ளனர்.
இந்த கோர விபத்து துருக்கிய சுகாதார அமைச்சை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
துருக்கியில் இடம்பெற்ற இரண்டு வாகன விபத்துகளினால் , அந்த சாலை போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்க பட்டது.
இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்த பலர் உலங்கு வானூர்திகள் மூலம் ,மீட்கப் பட்டுள்ளனர்.
உலக ஊடகங்களில் ,துருக்கியில் இடம்பெற்ற கோரவிபத்து, தலைப்பு செய்திகளாக இடம் பிடித்துள்ளன.
இலங்கையில் கோர விபத்து இருவர் மரணம்
இலங்கையில் கோர விபத்து இருவர் மரணம்
இன்று முதல் Meerigama-Pasyala வீதியில் இரு வாகனங்கள் நேரெதிர் மோதி சிதறியதில் சம்பவ
இடத்தில இருவர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது
கோர விபத்து -சிதறிய வாகனங்கள் – மக்கள் அவதி
கோர விபத்து -சிதறிய வாகனங்கள் – மக்கள் அவதி
மீகஹவத்த தெல்கொட பகுதியில் சாரதியின் கவனயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று நான்கு வாகனங்கள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
குறித்த கார் நிர்மாணப்பணியில் இருக்கும் பாலம் ஒன்றில் இருந்த பீப்பாய் ஒன்றில் மோதிய பின்னர் முன்னால் வந்த இரண்டு முச்சக்கரவண்டிகளிலும், மோட்டார் சைக்கிள் ஒன்றிலும் மற்றும் லொறி ஒன்றிலும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில், முச்சக்கரவண்டி ஒன்றின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் ஹோமாகம மற்றும் கம்பஹா பிரதேசங்களை சேர்ந்த 31 வயது மற்றும் 38 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
22 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து
22 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து
அமெரிக்கா அதிவேக சாலையில் பயணித்து கொண்டிருந்த வாகனங்கள் 22 ஒன்றுடன் ஒன்று
மோதி விபத்தில் சிக்கின ,இந்த பாரிய விபத்தில் சிக்க பலர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது
இதே போன்று நூறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது






































