Tag: காணி சுவீகரிப்பு
காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம்
காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம்
காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம் ,காணி நிர்ணயச் சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ், வடக்கு மாகாணத்தில் காணிகளை சுவீகரிப்பதற்காக 28.03.2025
திகதியிட்ட 2430/25 இலக்க வர்த்தமானியை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனு நேற்று (27) விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக
வலுவிழக்கச் செய்யும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஜூலை 2, 2025 அன்று நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னர், அரசாங்கம் குறித்த வர்த்தமானியை மீளப்பெறுவதற்கான புதிய வர்த்தமானியை வெளியிட்டால், அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடிப்படை உரிமை மீறல் வழக்கு
இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு (SC/FR/112/25) இல், மனுதாரர் எம்.ஏ. சுமந்திரன் சார்பில், சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின்
பேரில், ஜனாதிபதி சட்டத்தரணிகள் கே. கனக-ஈஸ்வரன், விரான் கொறேயா, மற்றும் சட்டத்தரணிகள் பவானி பொன்சேகா, நிலோஷன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் ஆஜராகினர்.
அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு மக்களின் கடும் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, சிறிலங்கா இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்துக்கு வழங்குவதற்கு நான்காவது தடவையாகவும் எடுக்கப்பட்ட முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று (02) தடுத்து நிறுத்தப்பட்டது.
குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர், கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர் துயிலுமில்ல காணியினை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர்.
மாவீரர்களின் பெற்றோர் அப்பகுதி மக்கள்போராட்டம்
இந்த நிலையில் மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்களான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீட்சன் உள்ளிட்டவர்கள் குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
அத்துடன் குறித்த காணியினை அளவீடு செய்து, இராணுவத்திற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையினை அனுமதிக்க முடியாதென அப்பகுதி மக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் அங்கு வருகைதந்த நில அளவைத்திணைக்கள அதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டு, நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து சென்றிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் அதிகளவிலான காவல்துறையினரின் பிரசன்னம் இருந்தததாக துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார் .
குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியினை தற்போது சிறிலங்கா இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
மக்களின் எதிர்ப்பு
இதனால் துயிலுமில்லக் காணியின் வெளிப்புறத்திலேயே வருடா வருடம் மாவீரர் நாளில் உறவுகளால் அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறான சூழலில் கடந்த வருடம் குறித்த மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் விடுவிக்க வலியுறுத்தி மாவீரர்களின் உறவுகள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதியும் அளவீட்டு பணிக்காக வருகைதந்த போது துரைராசா ரவிகரன் ,மக்கள் எதிர்ப்பினை வெளியிட்ட பின்னர் அங்கிருந்து சென்றிருந்தனர்.
இதற்கு முன்னரும் பலதடவைகள் நில அளவைத் திணைக்களத்தினர் இவ்வாறு நில அளவீட்டு முயற்சியில் ஈடுபட்டபோதும் மக்கள் எதிர்ப்புகளால் விடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .
மக்களை அச்சுறுத்தும் காவல்துறையினர்
அளம்பில் பகுதியில் குமுழமுனை செல்லும் பிரதான வீதியின் ஒரு புறத்தில் உள்ள அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினையும் (தனியார்
காணியினையும்) மற்றைய புறத்தில் தென்னைப் பயிர்ச்செய்கை சபைக் காணியினையும் சிறிலங்கா இராணுவத்தின், சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்துக்காக 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் கையகப்படுத்தியிருந்தனர்.
இதன் பின்னர் தென்னைப் பயிர்ச்செய்கை சபைக் காணியினை நிரந்தரமாக கையகப்படுத்தியுள்ள நிலையில் துயிலுமில்லக் காணியில் இராணுவத்தினர் உணவகம் ஒன்றை மாத்திரமே தற்போது வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்தக் காணியினை உயிரிழந்த தமது உறவுகளினை நிம்மதியாக நினைவுகூர தருமாறு மக்கள் பலதடவை கோரியும் இராணுவம் இவ்வாறு தொடர்ச்சியாக அபகரிக்க முயன்றுவரும் நிலையில் மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக இன்று இராணுவத்துக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு துணையாக முல்லைத்தீவு காவல்துறையினர்
குவிக்கப்பட்டிருந்ததோடு மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்ப்பாடுகளிலும் ஈடுபட்டிருந்த நிலையில் இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு தொடர்பாக துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துளளார் .


























