Posted in சினிமா

நீச்சலுடையில் கலக்கும் காதல் இளவரசி ஓவியா

நீச்சலுடையில் கலக்கும் காதல் இளவரசி ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஓவியா கடலில் குளிக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

நீச்சலுடையில் ஓவியா… வைரலாகும் புகைப்படங்கள்
ஓவியா


களவாணி படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது

ஓவியாவுக்கு தான். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்.

ஓவியா

இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதோடு தத்துவங்களையும் பதிவு செய்வார்.

இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஓவியா

மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’கவலைகளை கடலில் கரைத்து விடுங்கள்’

என்றும் அவர் பதிவு செய்துள்ளார். ஓவியாவின் இந்த கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்

    Posted in சினிமா

    என்னை கைது செய்யுங்கள் – நடிகை ஓவியா

    .என்னை கைது செய்யுங்கள் – நடிகை ஓவியா

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஓவியா டுவிட்டரில், என்னையும் கைது செய்யுங்கள் என பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    என்னையும் கைது செய்யுங்கள் – நடிகை ஓவியா பரபரப்பு டுவிட்
    ஓவியா


    தலைநகர் டெல்லியில், ‘எங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்?’ என பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பும் வகையில்,

    போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக டெல்லியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த போஸ்டர்களை ஒட்டிய 17 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    இதையடுத்து ‘என்னையும் கைது செய்யுங்கள்’ (#ArrestMetoo) என்ற ஹேஷ்டேக்கை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட் செய்திருந்தார்.

    ஓவியாவின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில் நடிகை ஓவியா, டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ததைக் கண்டித்து, இது ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பியதோடு, #ArrestMetoo என்ற

    ஹேஷ்டேக்கையும் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

      Posted in சினிமா

      தீவிர ரசிகை மரணம்… துடி துடித்து போன ஓவியா.

      தீவிர ரசிகை மரணம்… துடி துடித்து போன ஓவியா.

      பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப்

      பெற்ற ஓவியா, தனது ரசிகை ஒருவர் மரணத்திற்கு துடி துடித்து போயிருக்கிறார்.

      தீவிர ரசிகை மரணம்… துடி துடித்து போன ஓவியா
      ஓவியா


      பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஓவியா தான். சமூக வலைதளங்களில் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் பக்கங்கள் தொடங்கப்பட்டது.

      ஓவியா மீது கோடிக்கணக்கான ரசிகர்கள் அன்பு வைத்தது போலவே

      அவரும் தனது ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். இந்த நிலையில்

      ஓவியாவின் தீவிர ரசிகைகளில் ஒருவரான சான்வி என்பவர் திடீரென சமீபத்தில் மரணம் அடைந்தார்.

      ஓவியாவின் பதிவு

      இதுகுறித்து தகவலறிந்த ஓவியா உடனடியாக தன்னுடைய தீவிர ரசிகையின்

      மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த அவர், சான்வியின் பெற்றோர்களை

      தான் சந்திக்க விரும்புவதாகவும், அவர்களை தொடர்புகொள்ள தனக்கு யாராவது உதவுங்கள் என்றும் கேட்டுள்ளார்.