Tag: அழைப்பு
வங்கியில் அதிக பணம் 4ம் மாடிக்கு மக்கள் அழைப்பு
வங்கியில் அதிக பணம் 4ம் மாடிக்கு மக்கள் அழைப்பு
வங்கியில் அதிக பணம் 4ம் மாடிக்கு மக்கள் அழைப்பு என பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் ஆளும் அனுரா அரசு 87 பில்லியன் கடனில் தத்தளித்து வருகிறது .
கடன் சுமையை நிவர்தி செய்ய முடியாத நிலை
இந்த கடன் சுமையை நிவர்தி செய்ய முடியாத நிலையில் தமிழ் மக்களை இலக்கு வைத்து அவர்கள் பணம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது .
இதன் அடிப்படையில் தற்போது தமிழர் வங்கிகளில் பணம் சேமிப்பு மற்றும் அந்த பணம் எப்படி பெற்றீர்கள் என்பது
தொடர்பில் கணக்கு காட்டும் படி நான்காம் மாடிக்கு தமிழர்கள் அழைக்க பட்டுள்ளனர் .
இலங்கை கொழும்பில் உள்ள நான்காம் மாடி என்பது சிறப்பு பயங்கரவாத தடுப்பு முகாம் ஆகும் .
தமிழர்கள் பணம் விடயம்
அதனை அடுத்து தற்போது தமிழர்கள் பணம் விடயம் தொடர்பாக நான்காம் மாடிக்கு அழைக்க பட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
வெளிநாட்டு தமிழர்களே உங்கள் முதுகெலும்பை முறிக்க அனுரா அரசு சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
கொழும்பு நாயகம் மாடிக்கு தமிழர்கள் அழைக்க பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர 25 நாடுகள் அழைப்பு
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர 25 நாடுகள் அழைப்பு
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர 25 நாடுகள் அழைப்பு ,காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர 25 நாடுகள் அழைப்பு ,காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுக்கும் அறிக்கையில் 25 நாடுகள் கையெழுத்திட்டன.
இஸ்ரேல் போதுமான உதவியை அனுமதிக்கவில்லை
காசாவில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும், இஸ்ரேல் போதுமான உதவியை அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியும், சர்வதேச
மனிதாபிமான சட்டத்திற்கு இணங்க அவ்வாறு செய்ய வேண்டும் என்று கோரியும் இருபத்தைந்து நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
“கீழே பட்டியலிடப்பட்டுள்ள கையொப்பமிட்டவர்களான நாங்கள், ஒரு எளிய, அவசர செய்தியுடன் ஒன்றிணைகிறோம்: காசாவில் போர் இப்போதே முடிவுக்கு வர வேண்டும்,” என்று அறிக்கை தொடங்கியது.
“காசாவில் பொதுமக்களின் துன்பம் புதிய ஆழங்களை எட்டியுள்ளது. இஸ்ரேலிய அரசாங்கத்தின் உதவி விநியோக மாதிரி ஆபத்தானது, உறுதியற்ற
தன்மையைத் தூண்டுகிறது மற்றும் காசாவில் உள்ள மக்களின் மனித கண்ணியத்தை இழக்கச் செய்கிறது.”
“இஸ்ரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவியை மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. சர்வதேச மனிதாபிமான
சட்டத்தின் கீழ் இஸ்ரேல் அதன் கடமைகளுக்கு இணங்க வேண்டும்
சட்டத்தின் கீழ் இஸ்ரேல் அதன் கடமைகளுக்கு இணங்க வேண்டும்,” என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
மோதல் முழுவதும், இஸ்ரேல் காசாவிற்கு போதுமான உதவிகளை அனுப்புவதாகக் கூறி வருகிறது, ஆனால் சர்வதேச உதவி அமைப்புகள்
போதுமான உதவி இல்லை என்று பலமுறை கூறியுள்ளன, மேலும் காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு நிலைமைகளை ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து,
இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, போலந்து, போர்ச்சுகல், ஸ்லோவேனியா, ஸ்பெயின்,
சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளனர். click here
தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு
தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு
தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பை விடுத்து இருக்கின்றனர் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு.
தமிழரசுக் கட்சி பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு
தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுப்பதாக,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் வியாழக்கிழமை (08) மாலை மட்டக்களப்பில் உள்ள
அவரது கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் படகு சின்னத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வழங்கிய ஆணைக்காக அந்த மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உள்ளூராட்சி சபைகளில் மக்கள் வழங்கிய ஆணை
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் 37 ஆசனங்கள் எமக்கு கிடைத்துள்ளன.
இதனை மக்கள் எமக்கு வழங்கிய பெரும் ஆணையாகவே நாம் பார்க்கின்றோம்.
அதனடிப்படையில் கிழக்கு மக்களுக்கு தனித்துவமான ஒரு அரசியல் குரல் தேவை என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
எமது கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது வாகரையில் ஏழு ஆசனங்களை பெற்றிருக்கின்றோம் அதே போன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலும் இரண்டு வட்டாரங்களை தம்வசப்படுத்தியதுடன்
மண்முனை தென் மேற்கு பிரதேசத்தில் ஆறு ஆசனங்களைப் பெற்று கிழக்கு தமிழர் கூட்டமைப்பு முன்னிலையில் நிற்கின்றது.
அந்த அடிப்படையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் தமிழர்களின் ஆட்சியினை உறுதிப்படுத்துவதற்காக
இணைந்து செயற்படுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபையில் இருக்கின்ற எல்லைப் புற கிராமங்கள் இரண்டில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கின்றது.
அதனடிப்படையில் மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு தனிப்பட்ட அல்லது கட்சி விருப்பு வெறுப்பிற்கு அப்பால் கிழக்கு மாகாணத்தில்
தமிழர்கள் அனைவரும் ஒருமித்து பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்த்தியிருக்கின்றார்கள்.
அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்காக அழைப்பு விடுக்கின்றோம்.
அவ்வாறு ஒன்றாக பயணிக்கின்ற போது கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று, ஏறாவூர்ப்பற்று, மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை தென் மேற்கு மற்றும் போரதீவுப்பற்று ஆகிய
உள்ளூராட்சி மன்றங்களிலும் நாங்கள் ஆட்சியமைக்க முடியும். அதாவது தமிழர்களின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வாய்ப்பு இருக்கின்றது.
பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் பயணிக்கின்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் இந்த கோரிக்கையினை ஏற்று இலங்கை தமிழரசுக் கட்சியினர் ஒன்றாக பயணிப்பதற்கு முன் வருவார்கள் என நம்புகின்றோம்.
ஏன் என்றால் 2015 ஆண்டு மாகாண சபை தேர்தலின் பின்னர் எமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் அவர்களினால் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தோம்.
மாகாண சபை ஆட்சியினை நடாத்துவதற்கு நாங்கள் உங்களுடன் சேர்ந்து பயணிப்பதற்கு உறுதியாக இருக்கின்றோம். ஆனால் அந்த கருத்தை நிராகரித்திருந்தார்கள்.
மீண்டும் 2018 வருடமும் சேர்ந்து பயணிக்க அழைப்பு விடுத்திருந்தோம் அதனையும் நிராகரித்திருந்தார்கள். அதன் அடிப்படையில் கிழக்கு மக்கள் நில, நிருவாக, பொருளாதார இருப்புக்களில்
கிழக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என நாங்கள் நம்புகின்றோம் என்றார்.
மத்திய வங்கி சம்பள அதிகரிப்பு விசாரணைக்கு அழைப்பு
மத்திய வங்கி சம்பள அதிகரிப்பு விசாரணைக்கு அழைப்பு
எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (04) அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கி ஊழியர்கள் அண்மையில் தமது சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் இது சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மத்திய வங்கி அதிகாரிகள் இவ்வாறு சம்பளத்தை உயர்த்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மத்திய வங்கி சம்பள அதிகரிப்பு விசாரணைக்கு அழைப்பு
இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்று பிற்பகல் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு மத்திய வங்கியின் பிரதானிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நாளை (05) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கும் மத்திய வங்கியின் பிரதானிகள் அழைக்கப்பட்டு இவ்விடயம் தொடர்பில் வினவப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கும், அரசாங்க நிதி பற்றிய குழு கூட்டம் நாளை முற்பகல் 11.30 மணிக்கும் நடைபெறவுள்ளது
வாலிபர் சுட்டு கொலை – மனித உரிமை ஆணையகம் பொலிசாருக்கு அழைப்பு
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பல சிரேஷ்ட பொலிஸ்
அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைத்துள்ளது.
இதன்படி, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி
பொலிஸ்மா அதிபர், கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை
ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


















