Posted in மருத்துவம்

மேக்கப் போடாமல் அழகாக தெரிய வேண்டுமா

மேக்கப் போடாமல் அழகாக தெரிய வேண்டுமா

மேக்கப்பு போடாமல் உங்கள் முகம் அழகாக தெரிய வேண்டுமானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் அழகியாக ஜொலிக்கலாம்.

  • பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.
  • தக்காளியை மிக்சியில் போட்டு அதனை ஜூஸாக்கி அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு அடையும்.
  • ஆரஞ்சு பழ தோலை காய வைத்து ஒரு கப் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கவும். மேலும் அதோடு
  • கடலைமாவு -2கப் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். தினமும், இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து, அதோடு
  • சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி, காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும்.
  • சிறியளவு வெண்வெண் எடுத்து நன்கு குழைத்து முகத்தில், முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும்.

மேக்கப் போடாமல் அழகாக தெரிய வேண்டுமா

  • கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.
  • நன்கு கனிந்து பழுத்த நிலையில் இருக்கும் வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து
  • முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும்.
  • பெண்கள் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.
  • தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல்
  • மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
  • உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.
  • செம்பருத்தி இலை, பயத்தம் பயறு இவற்றை சம அளவாக எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளக்கும்.
  • அகத்திக் கீரையை தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகமும், உடலும் வசீகரமாகும்.
    Posted in மருத்துவம்

    புற்றுநோயால் மார்பகங்களை இழக்கும் பெண்கள்

    புற்றுநோயால் மார்பகங்களை இழக்கும் பெண்கள்

    மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு சிலிக்கான் நாக்கர்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும்.

    மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மார்பகங்களை நீக்கம் செய்த பின்பு அவர்களுக்கு ஏற்படும்

    மனஉளைச்சல் சொல்ல முடியாததாக இருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களின் கவலையையும்,கண்ணீரையும் அருகில் இருந்து பார்த்த ஜெயஸ்ரீ ரத்தன் அவர்கள் வாழ்க்கையில் மீண்டும்

    புன்னகையை உருவாக்கச் செய்யும் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மார்பகங்களை இழந்த பெண்களின்

    வாழ்க்கையில் இதன் மூலம் புது வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார். அதற்காக சாய்ஷா என்ற அமைப்பையும் உருவாக்கி நடத்தி வருகிறார்.

    “புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழந்த பெண்களை இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்திக்கும் சூழ்நிலை உருவானது. அவர்களது மனக்கஷ்டங்களை கேட்டபோது பிராக்களின்

    உள்ளேவைக்க கூடிய பொருளை தயார் செய்யலாமா என்று யோசித்தேன். கம்பளி நூலால் மார்பக வடிவம்கொண்ட நாக்கர்ஸ் தயாரிப்பது பற்றி ஏற்கனவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    புற்றுநோயால் மார்பகங்களை இழக்கும் பெண்கள்

    அதற்காக அமெரிக்காவில் இயங்கிக்கொண்டிருக்கும் ‘நிட்டட் நாக்கர்ஸ்’ அமைப் பிடம் தொடர்புகொண்டு பேசினேன். அவர்கள் இங்கே அதனை தயார் செய்துகொள்ளும் உரிமையை

    வழங்கினார்கள். நாங்கள் இங்கே தயார்செய்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்குகிறோம். அவர்கள் கண்ணீர் கலந்த

    நன்றியை தெரிவிக்கிறார்கள்” என்கிறார், ஜெயஸ்ரீ. இவர் சென்னை குட்ஷெப்பர்டு கான்வென்டில் படித்தவர்.

    இவர் குரோஷா மற்றும் நிட்டிங் தெரிந்த தனது தோழிகளுடன் சேர்ந்து அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சாய்ஷா அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இந்த அமைப்புக்கு

    இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 170 சமூக சேவகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு வருடங்களில்

    இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு ‘நாக்கர்ஸ்’ வழங்கியிருக்கிறார்கள். தேவைப்படு பவர்களுக்கு வழங்குவதாகவும் சொல்கிறார்கள்.

    மார்பகம் நீக்கம் செய்யப்பட்ட பெண்களுக்கு சிலிக்கான் நாக்கர்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும். அதற்கு செலவு செய்ய முடியாதவர்களுக்கு

    இதனை இலவசமாக வழங்குவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது” என்கிறார், வல்ச மேரி மேத்யூ. திருவனந்தபுரத்தை

    சேர்ந்த இவரும் சாய்ஷா அமைப்பின் சேவகராக பணியாற்றுகிறார்.

    “நானும், ஜெயஸ்ரீயும் சென்னையில் உள்ள பள்ளியில் ஒன்றாக படித்தோம். பள்ளிப் படிப்பை முடித்து ஐம்பது ஆண்டுகள் ஆன பின்பு கடந்த ஆண்டு முன்னாள் மாணவிகளான நாங்கள்

    புற்றுநோயால் மார்பகங்களை இழக்கும் பெண்கள்

    அனைவரும் சென்னையில் ஒன்றுகூடினோம். அப்போதுதான் ஜெயஸ்ரீ, சாய்ஷா அமைப்பின் செயல்பாடுகள் பற்றி என்னிடம் சொன்னார். அப்போது நான் வங்கி மேனேஜராக பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தேன்.

    அக்ரிலிக் நூல் மூலம் வழக்கமாக குரோஷா தயார் செய்வார்கள். ஆனால் நமது நாட்டு சீதோஷ்ணநிலைக்கு காட்டன் நூலால்தான் நாக்கர்ஸ் தயார்செய்யவேண்டும். கோவா, வதோரா போன்ற

    பகுதிகளில் இருந்துதான் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் காட்டன் நூல் வினியோகிக்கிறார்கள். அதற்கான செலவுகளை வாலண்டியர்களான நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். குரோஷா,

    நிட்டிங் தெரிந்த எல்லோருமே ‘பேட்டர்ன்’ தெரிந்தால் நாக்கர்ஸ் வடிவமைக்கலாம். ஏ, பி, சி, டி போன்ற கப் சைஸ்களில் எவ்வாறு

    நாக்கர்ஸ் தயார் செய்வது என்ற விவரம் பேட்டனில் தரப்பட்டிருக்கிறது.

    நாக்கர்ஸின் உள்ளே ரெக்ரான் பைபரை வைக்கிறோம். இது ஆரோக்கியத்திற்கு எதிரானதல்ல. மட்டுமின்றி கழுவியும் பயன்படுத்தலாம். எடை மிக குறைந்தது என்பதால்

    உபயோகிக்கவும் சிரமம் ஏற்படாது. உலகின் பல பகுதிகளில் இருந்து தயார் செய்து அனுப்பப்படும் நாக்கர்ஸில் கப் சைஸ்

    அளவுக்கு ஏற்றபடி ரெக்ரான் பைபரை நிரப்பி, லேபிள் செய்யும் பணி மும்பையில் நடக்கிறது.

    ஒரு மார்பகம் மட்டும் நீக்கப்பட்டவர்களுக்கு இரண்டு நாக்கர்ஸ் வழங்குகிறோம். கழுவி, காயவைத்து பயன்படுத்துவதற்கு ஏற்ப கூடுதலாக ஒன்று வழங்குகிறோம். ஒருமுறை பெறுபவற்றை

    இரண்டு வருடங்கள் பயன்படுத்தலாம். அதன் பிறகு எங்கள் அமைப்பை தொடர்புகொண்டு புதியவற்றை வாங்கிக்கொள்ளலாம். இந்த சேவையில் மனநிறைவு கிடைக்கிறது.

    முதலில் எங்களிடம் இருந்து நாக்கர்ஸ் பெற்றவர்கள், பின்பு எங்களோடு சேர்ந்து வாலண்டியராக சேவை செய்ய

    முன்வருகிறார்கள். அதனால் எங்கள் சேவை விரிவடைந்துகொண்டிருக்கிறது” என்கிறார், ஜெயஸ்ரீ ரத்தன்.

      Posted in மருத்துவம்

      கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்கும் நோய்

      கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்கும் நோய்

      கர்ப்ப காலத்தின் இந்த உணவுமுறைகளை பின்பற்றினால் ஸ்பைனா பிபிடா(Spina bifida), என்கெபலோசீல் போன்ற பிறவி குறைபாடுகளை 70 முதல் 75 சதவீதம் வரை தடுக்கலாம்.

      நிற்பது, நடப்பது, அமர்வது, ஓடுவது என நமது இயக்கத்துக்கு காரணமான ஆணைகளை இடுவது தலைமைச் செயலகமான மூளை. அதை கட்டுப்படுத்தி, செயல்படுத்துவது முதன்மை

      கம்பித்தடம் போன்ற நமது தண்டுவட நரம்புகளே. மூளை, தண்டுவடம் என்கிற இந்த முக்கிய உறுப்புகள் இரண்டையும் பல அடுக்கு பாதுகாப்புடன் படைத்துள்ளது இயற்கை. மூளைக்கு எப்படி

      மெனிஞ்சஸ் என்கிற மூன்றடுக்கு பாதுகாப்பு உறையும் அதற்கு மேல் மண்டையோடு என்கிற உறுதியான வளையமும் இருக்கின்றனவோ, அதேபோல் மூளையில் இருந்து வெளிவரும்

      நரம்பு மண்டலத்துக்கும் மெனிஞ்சியல் உறைகளும் அதற்கு மேல் முதுகுத் தண்டுவட எலும்புகளும் பாதுகாப்பை வழங்குகின்றன.

      கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்கும் நோய்

      அதேபோல் மூளையை கதகதப்பாக வைத்துக்கொள்ள உதவும் சி.எஸ்.எப். என்கிற மூளை தண்டுவட திரவம், தண்டுவட நரம்புகளின் வெப்பத்தைச் சீராக்கி பாதுகாக்கிறது. இவை

      அனைத்துக்கும் மேலாக, தோல் என்கிற முக்கிய உறுப்பு, வெப்பத்தின் அளவை மாற்றும் குளிர்சாதன பெட்டிபோல் வேலைசெய்வதால்தான், நம்மால் இயங்கவே முடிகிறது. ஆனால்

      ஒரு சிலருக்கு மட்டும் கரு உருவாகும் தொடக்க நாட்களிலேயே, பல்வேறு காரணங்களால் இந்தப் பாதுகாப்பு வளையங்களில் ஒன்றோ இரண்டோ உருவாகாமல் போக நேரிடலாம்.

      இதனால், அந்தக் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் எல்லாச் செயல்பாடுகளுக்கும் மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அடிக்கடி மருத்துவ உதவி பெற வேண்டிய

      கட்டாயமும், வாழ்நாளின் பெரும் பகுதியை மருத்துவமனைகளில் கழிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம். இவ்வளவு

      பிரச்சினைகளை தரக்கூடிய ஸ்பைனா பிபிடா வராமலேயே தடுக்க முடியாதா.

      அதை தடுப்பது மிக எளிது. பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், பருப்பு, கொட்டை வகைகள், சிறுதானியம் போன்றவற்றை உண்ணும்போது இவற்றில் இயற்கையாகவே

      கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்கும் நோய்

      காணப்படும் போலிக் அமிலம், செல்களின் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. வளர்ச்சிக்கும், மூளை நரம்புகளின் வளர்ச்சிக்கும் பெருமளவு

      உதவுகிறது. அத்துடன், ஸ்பைனா பிபிடா, என்கெபலோசீல் போன்ற பிறவி குறைபாடுகளை 70 முதல் 75 சதவீதம் வரை தடுக்கிறது.

      கருவில் வளரும் குழந்தைக்கு நன்மை செய்வது மட்டுமன்றி, கருச்சிதைவையும் குறைப்பிரசவத்தையும் கட்டுப்படுத்தி, தாயின் ரத்த சோகைக்கும் அருமருந்தாவதால் ‘கருவின் தோழி‘ என்று

      கொண்டாடப்படுகிறது போலிக் அமிலம் என்கிற இந்த எளிய ‘பி‘ விட்டமின். ஆனால், இயற்கை தரும் உணவு வகைகளில் இருக்கும் போலிக் அமிலம், சமைக்கும்போது நீரில் கரைந்து

      சிதைந்துவிடுவதால், 400 முதல் 600 மெக் போலிக் அமில மாத்திரைகள் கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன.

      கர்ப்ப காலத்தின் தொடக்க நிலையில் மட்டுமன்றி, கருத்தரிப்பதற்கு முன்பாகவே, ஏன் திருமண வயதை அடையும்போதே பெண்கள் இதை உட்கொள்வது அவசியம்.

      இரும்புச்சத்து போலிக் அமில மாத்திரைகளை கர்ப்பிணிப் பெண்களுக்கும், பருவ வயதை எட்டிய பெண்களுக்கும் அரசு இலவசமாக வழங்கிவருவது இதனால்தான்.

        Posted in மருத்துவம்

        புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்கள்

        புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்கள்

        மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு சிலிக்கான் நாக்கர்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும்.

        புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு புது வெளிச்சம்


        புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு புது வெளிச்சம்
        மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும்

        பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மார்பகங்களை நீக்கம் செய்த பின்பு அவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல் சொல்ல முடியாததாக இருக்கிறது. அப்படிப்பட்ட

        பெண்களின் கவலையையும்,கண்ணீரையும் அருகில் இருந்து பார்த்த ஜெயஸ்ரீ ரத்தன் அவர்கள் வாழ்க்கையில் மீண்டும்

        புன்னகையை உருவாக்கச் செய்யும் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மார்பகங்களை இழந்த பெண்களின்

        புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்கள்

        வாழ்க்கையில் இதன் மூலம் புது வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார். அதற்காக சாய்ஷா என்ற அமைப்பையும் உருவாக்கி நடத்தி வருகிறார்.

        “புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழந்த பெண்களை இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்திக்கும் சூழ்நிலை உருவானது. அவர்களது மனக்கஷ்டங்களை கேட்டபோது பிராக்களின்

        உள்ளேவைக்க கூடிய பொருளை தயார் செய்யலாமா என்று யோசித்தேன். கம்பளி நூலால் மார்பக வடிவம்கொண்ட நாக்கர்ஸ் தயாரிப்பது பற்றி ஏற்கனவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

        அதற்காக அமெரிக்காவில் இயங்கிக்கொண்டிருக்கும் ‘நிட்டட் நாக்கர்ஸ்’ அமைப் பிடம் தொடர்புகொண்டு பேசினேன். அவர்கள் இங்கே அதனை தயார் செய்துகொள்ளும் உரிமையை

        வழங்கினார்கள். நாங்கள் இங்கே தயார்செய்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்குகிறோம். அவர்கள் கண்ணீர் கலந்த

        நன்றியை தெரிவிக்கிறார்கள்” என்கிறார், ஜெயஸ்ரீ. இவர் சென்னை குட்ஷெப்பர்டு கான்வென்டில் படித்தவர்.

        இவர் குரோஷா மற்றும் நிட்டிங் தெரிந்த தனது தோழிகளுடன் சேர்ந்து அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சாய்ஷா அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இந்த அமைப்புக்கு

        இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 170 சமூக சேவகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு வருடங்களில்

        இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு ‘நாக்கர்ஸ்’ வழங்கியிருக்கிறார்கள். தேவைப்படு பவர்களுக்கு வழங்குவதாகவும் சொல்கிறார்கள்.

        “மார்பகம் நீக்கம் செய்யப்பட்ட பெண்களுக்கு சிலிக்கான் நாக்கர்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும். அதற்கு செலவு செய்ய முடியாதவர்களுக்கு

        புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்கள்

        இதனை இலவசமாக வழங்குவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது” என்கிறார், வல்ச மேரி மேத்யூ. திருவனந்தபுரத்தை

        சேர்ந்த இவரும் சாய்ஷா அமைப்பின் சேவகராக பணியாற்றுகிறார்.

        “நானும், ஜெயஸ்ரீயும் சென்னையில் உள்ள பள்ளியில் ஒன்றாக படித்தோம். பள்ளிப் படிப்பை முடித்து ஐம்பது ஆண்டுகள் ஆன பின்பு கடந்த ஆண்டு முன்னாள் மாணவிகளான நாங்கள்

        அனைவரும் சென்னையில் ஒன்றுகூடினோம். அப்போதுதான் ஜெயஸ்ரீ, சாய்ஷா அமைப்பின் செயல்பாடுகள் பற்றி என்னிடம்

        சொன்னார். அப்போது நான் வங்கி மேனேஜராக பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தேன்.

        அக்ரிலிக் நூல் மூலம் வழக்கமாக குரோஷா தயார் செய்வார்கள். ஆனால் நமது நாட்டு சீதோஷ்ணநிலைக்கு காட்டன் நூலால்தான் நாக்கர்ஸ் தயார்செய்யவேண்டும். கோவா, வதோரா போன்ற

        பகுதிகளில் இருந்துதான் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் காட்டன் நூல் வினியோகிக்கிறார்கள். அதற்கான செலவுகளை வாலண்டியர்களான நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். குரோஷா,

        நிட்டிங் தெரிந்த எல்லோருமே ‘பேட்டர்ன்’ தெரிந்தால் நாக்கர்ஸ் வடிவமைக்கலாம். ஏ, பி, சி, டி போன்ற கப் சைஸ்களில் எவ்வாறு

        நாக்கர்ஸ் தயார் செய்வது என்ற விவரம் பேட்டனில் தரப்பட்டிருக்கிறது.

        நாக்கர்ஸின் உள்ளே ரெக்ரான் பைபரை வைக்கிறோம். இது ஆரோக்கியத்திற்கு எதிரானதல்ல. மட்டுமின்றி கழுவியும் பயன்படுத்தலாம். எடை மிக குறைந்தது என்பதால்

        உபயோகிக்கவும் சிரமம் ஏற்படாது. உலகின் பல பகுதிகளில் இருந்து தயார் செய்து அனுப்பப்படும் நாக்கர்ஸில் கப் சைஸ்

        அளவுக்கு ஏற்றபடி ரெக்ரான் பைபரை நிரப்பி, லேபிள் செய்யும் பணி மும்பையில் நடக்கிறது.

        ஒரு மார்பகம் மட்டும் நீக்கப்பட்டவர்களுக்கு இரண்டு நாக்கர்ஸ் வழங்குகிறோம். கழுவி, காயவைத்து பயன்படுத்துவதற்கு ஏற்ப கூடுதலாக ஒன்று வழங்குகிறோம். ஒருமுறை பெறுபவற்றை

        இரண்டு வருடங்கள் பயன்படுத்தலாம். அதன் பிறகு எங்கள் அமைப்பை தொடர்புகொண்டு புதியவற்றை

        வாங்கிக்கொள்ளலாம். இந்த சேவையில் மனநிறைவு கிடைக்கிறது. முதலில் எங்களிடம் இருந்து நாக்கர்ஸ் பெற்றவர்கள், பின்பு எங்களோடு சேர்ந்து வாலண்டியராக சேவை செய்ய

        முன்வருகிறார்கள். அதனால் எங்கள் சேவை விரிவடைந்துகொண்டிருக்கிறது” என்கிறார், ஜெயஸ்ரீ ரத்தன்.

          Posted in மருத்துவம்

          அந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்

          அந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்

          அழகாக தோன்ற விரும்பும் பெண்களும், ஆரோக்கியமாக வாழ விரும்பும் பெண்களும் அந்தரங்க சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்க

          வேண்டும். இந்த சுத்தத்தை பேணினால் பெண்கள் பல்வேறு நோய்களில் இருந்தும் தப்பித்து விடலாம்.


          பெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாக இருப்பது, சுத்தம். அதிலும் குறிப்பிடத்தக்கதாக இருப்பது அந்தரங்க சுத்தம். அதனால் அழகாக தோன்ற விரும்பும் பெண்களும்,

          ஆரோக்கியமாக வாழ விரும்பும் பெண்களும் அந்தரங்க சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். இந்த சுத்தத்தை பேணினால் பெண்கள் பல்வேறு நோய்களில் இருந்தும் தப்பித்து விடலாம்.

          அந்தரங்க சுத்தம் பற்றி குறிப்பிடும்போது பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப் படுதல் ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. வெள்ளைப்படுதல் என்பது இயற்கையானது.

          ஆரோக்கியமான கருப்பை யும், சினைப்பையும், இனப்பெருக்கத்திறனும் கொண்ட எல்லா பெண்களுக்குமே இயற்கை யாகவே உறுப்பு பகுதியில் வெள்ளைப்படுதல் தோன்றும்.

          அந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்

          அதுபோல் பெண்களின் இனப் பெருக்க உறுப்புகளில் நோய் எதிர்ப்புத்திறனை தருவதற்காக இயற்கை அணுக்களும் காணப்படும். வெள்ளைப்படுதலை தவறாக புரிந்துகொண்டு

          தேவையற்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொண்டுவிட்டால், அந்த நல்ல அணுக்கள் அழிந்துவிடும். அப்போது அந்த திரவம்

          நிறமாற்றத்துடன் வெளிப்பட்டு வாடையும் வீசும். அதுதான் நோய் பாதிப்பின் அறிகுறியாகும்.

          பாதிப்பு எதுவும் இல்லாத இயற்கையான திரவம் நிறமற்றதாக இருக்கும். முகர்ந்து பார்த்தால் அதில் இருந்து வாடை எதுவும் வீசாது. இந்த இயற்கையான வெள்ளைப் படுதல் ஏற்படும்போது சுத்தமான

          நீரால் கழுவினாலே போதுமானது. உறுப்பு பகுதியில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்கி சுத்தப்படுத்துவதும் அந்தரங்க சுத்தத்திற்கு அவசியம். கணவரோடு தாம்பத்ய தொடர்பு

          வைத்துக்கொள்ளும் பெண்கள் பாலியல் உறவுக்கு முன்பும், பின்பும் தண்ணீர் பயன்படுத்தி கழுவவேண்டும். கணவன், மனைவி இருவருமே இதை அவசியம் கடைப்பிடிக்கவேண்டும். அந்தரங்க

          சுத்தம் இல்லாத தம்பதிகளுக்கு தாம்பத்ய ஆர்வம் குறைந்துபோகும். அதனால் அவர்கள் தாய்மையடைவதும் தள்ளிப்போகும்.

          அந்தரங்க சுத்தத்திற்கு உள்ளாடை பராமரிப்பும் இன்றியமையாதது. செயற்கை நூற்களால் உருவான உள்ளாடைகள் நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்றதல்ல. கோடைகாலத்தில்

          தொடை இடுக்குப்பகுதிகளில் அதிகமாக வியர்க்கும். அந்த வியர்வை தேங்காத அளவுக்கு உறிஞ்சி எடுக்கும்

          உள்ளாடைகளையே அணிய வேண்டும். அதனை துவைத்து சூரிய ஒளிபடும் இடத்தில்தான் உலரவைக்க வேண்டும்

            Posted in மருத்துவம்

            கணவருடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாமா?

            கணவருடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாமா?

            முதல்முறையாக கர்ப்பிணியாகும் அனைத்து பெண்களுக்கும், அந்த காலகட்டத்தில் கணவருடன் தாம்பத்ய தொடர்பு வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? என்ற சந்தேகம் எழுகிறது.

            முதல்முறையாக கர்ப்பம்… கணவருடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாமா?
            தாம்பத்தியம்


            பெண்கள் தாய்மையடையும்போது இயற்கை அவர்களது உடலில் மிகப்பெரிய அற்புதம் ஒன்றை நிகழ்த்துகிறது. அதாவது கருவுறும் தொடக்க காலத்திலே, பிறக்கப்போகும் குழந்தையின் உணவுக்காக

            தாயின் மார்பகங்கள் பால் உற்பத்திக்கான ஆயத்தங்களை மேற்கொண்டுவிடும். அத்தகைய மாற்றங்கள் தாய்மையடைந்த

            ஆறாவது வாரத்திலேயே மார்பகங்களில் தென்படும். அப்போது மார்பகங்களுக்கு வரும் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து ரத்த நாளங்கள் புடைத்து எழுவதால் வலியும் தோன்றும்.

            முழு சுரப்பியின் பரிமாணமும் அதன் வெளிப்புற நுண்ணறைகளில்தான் முதலில் வெளிப்படும். அப்போது மார்பகங்கள் கெட்டியாகவும், மேடான முனைப்புகளுடனும்

            காணப்படும். மெதுவாகத் தொட்டாலே வலிக்கும். இந்த நிலை கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தின் இறுதியில் தொடங்கி, குறிப்பிட்ட காலம் வரை இருந்துகொண்டிருக்கும்.

            மார்பகத்தின் வெளிப்புறத்தை மெதுவாக அழுத்தினால் மார்பகக் காம்பு வழியாக தெளிந்த கசிவு கொஞ்சமாக வெளிப்படும். சிலருக்கு தாமாகவேகூட வெளிப்படும். அது முதலில் மெல்லிய

            வைக்கோல் நிறத் திரவம் போலவும், பிறகு கெட்டியாகி அடர் மஞ்சள்நிறமாகவும் தோன்றும். 14-வது வாரத்தில் மார்பகக் காம்பு

            மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நிறம்மாறும். கர்ப்பகாலத்தில் பெண்களின் மார்பகங்களில் பலவிதமான மாற்றங்கள் தோன்றும். அவை இயற்கையானவைதான்.

            முதல்முறையாக கர்ப்பிணியாகும் அனைத்து பெண்களுக்கும், அந்த காலகட்டத்தில் கணவருடன் தாம்பத்ய தொடர்பு வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? என்ற சந்தேகம் எழுகிறது.

            இயல்பான கர்ப்பமாக இருந்தால், உடலுறவைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. தாம்பத்யம் கொள்வதால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கருப்பைக் கழுத்தின் தசைகளும், கர்ப்பத்தின்போது உருவாகும் சளித் தொகுப்பும் கருப்பையை முற்றிலுமாக மூடி பாதுகாப்பாக வைத்திருக்கும். அதனால் பொருத்தமான முறையில் உடலுறவு கொள்ளலாம்.

            இருந்தாலும், இதற்கு முன்பு கருச்சிதைவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கர்ப்பமான முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை தாம்பத்யத்தை தவிர்ப்பது நல்லது. சிறிது ரத்தக்கசிவு இருப்பது

            தெரியவந்தாலோ, பிறப்புறுப்பு அல்லது அடிவயிற்று வலி இருந்தாலோ, தாம்பத்யத்தை தவிர்த்து முழுமையாக ஓய்வெடுக்கவேண்டும். கர்ப்பகாலத்தில் எப்போதுமே

            கர்ப்பிணியின் மனநிலை, உடல்நிலை அறிந்து நடந்துகொள்ளவேண்டும். கர்ப்பிணி விரும்பும்பட்சத்தில் பாதுகாப்பான ‘பொஷிஷனில்’ தாம்பத்யத்தை அமைத்துக்கொள்ளலாம்.

            முதல்முறையாக கர்ப்பம்தரிக்கும் பெண்களுக்கு கர்ப்பகால பராமரிப்பு பற்றி நிறைய சந்தேகங்கள் எழும். அனைத்து சந்தேகங்களுக்கும் அவர்கள் மகப்பேறு டாக்டரிடம் விளக்கம்

            கேட்டு விடைதேடிக்கொள்ளவேண்டும். அப்போது கர்ப்பகால தாம்பத்யம் குறித்தும் கூடுதல் தகவல்களை கேட்டுத்தெரிந்துகொள்வது அவசியம்.

            தற்போது குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனால் பெரும்பாலான பெண்கள் திருமணமானதும், ‘தமக்கும் குழந்தையில்லாத நிலை

            ஏற்பட்டுவிடுமோ!’ என்று பயம்கொள்கிறார்கள். எந்த கருத்தடை முறையையும் கடைப்பிடிக்காமல் இயல்பாக தாம்பத்ய உறவு மேற்கொண்டு குறைந்தது ஆறு மாதம் வரையில்

            கருத்தரிக்காவிட்டாலும் கவலைப்பட வேண்டாம். முப்பது வயதுக்குள் உள்ள பெண்கள், திருமணமாகி இரண்டாண்டு வரை கருத்தரிப்புக்காகக் காத்திருக்கலாம். முப்பது வயதுக்குமேல் ஆகி,

            கருத்தரிக்கக் காலதாமதமானால் விரைந்து குழந்தையின்மை சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

            பொதுவாக திருமணமாகி ஒவ்வொரு வயது அதிகரிக்கும்போதும், பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பில் அதிக சிக்கல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். 30 முதல் 35 வயதுக்கு இடையே கருத்தரிக்கும் வாய்ப்பு, அதற்கு முன் கருத்தரிப்பதில் இருந்த

            வாய்ப்பைவிட பெருமளவு குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு விஷயம் என்னவென்றால், புகையிலையில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுத் தன்மை உள்ள பொருள்கள் உள்ளன. இவற்றில் சுமார் நாற்பதுக்கும்

            மேற்பட்டவை, புற்றுநோயைத் தூண்டக்கூடியவை. அவற்றுள் பல மலட்டுத்தன்மையையும் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

            பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு தரமான சினைமுட்டையும், ஆற்றல்மிகுந்த உயிரணுவும் தேவையாக இருக்கிறது. சினைமுட்டை முதிர்ந்து வெடித்து மாதந்தோறும் சினைப்பையில் இருந்து

            வெளியேறும். முட்டையானது சினைப்பையில் இருந்து வெளியான பிறகு 24 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். கருத்தரிப்பு நடைபெற, இந்த 24 மணி நேரத்தில் அது உயிரணுவோடு சேர்ந்துவிட

            வேண்டும். அவ்வாறே, உயிரணுவானது 48 முதல் 72 மணி நேரம்வரை உயிருடன் இருக்கும். ஆகவே கருத்தரிக்க சிறந்த நேரம், முட்டை வெளியான காலத்தை சார்ந்தே இருக்கிறது.

            Posted in மருத்துவம்

            பகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா?

            பகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா?

            இரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

            பகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா?
            தாம்பத்தியம்
            தாம்பத்தியம்… திருமணமான தம்பதியரின் வாழ்வில் ஓர் அங்கம்தான் என்றாலும் அது இருமனமொத்து நடக்க வேண்டிய

            ஒன்று. அதேவேளையில் இரவில், இருள் சூழ்ந்த இடத்தில் நடப்பதே சரி. பெண்களும்கூட இதைத்தான் விரும்புவார்கள்.

            சாஸ்திரங்களில்கூட பகல் நேர தாம்பத்தியம் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது.

            உடலுறவு நடக்கும் இடத்தில் வெளிச்சம் இருக்கக்கூடாது. உடலுறவின்போது அங்க அழகை பார்த்து ரசிப்பது பாவம் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் பகல் நேரத்தி உறவு

            கொண்டால் உடலில் சூடு அதிகரித்து ஆண்களுக்கு விந்து நீர்த்துப்போதல், விந்து முந்துதல் உள்ளிட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு இருப்பதால் முழுமையாக இன்பம் அனுபவிக்க முடியாது.

            இவற்றை அடிப்படையாகக்கொண்டே குளிர்ச்சியான சூழல் உள்ள இரவில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது நல்லது.

            பொதுவாக இரவு அல்லது அதிகாலை 4 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் உறவு வைத்துக் கொள்வது ஏதுவான சூழலாகும். வயிற்றில் உணவு இருக்கும் நேரத்தில் உறவு வைத்துக்கொண்டால்

            உணவு செரிமானமாகாமல் போவதுடன் வேறு சில பிரச்சினைகள் எழும். குறிப்பாக, சாப்பிட்டதும் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால்

            மூலக்கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இரவில் படுக்கைக்குச் சென்றதும் சில மணி நேரம் கழித்து உறவு கொள்வதே சரி.

            இரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. குறிப்பாக, பல ஆண்கள் பகல் வேளையில் கண்டுகொள்ளாத தம்

            மனைவியரை இரவில் படுக்கைக்கு மட்டும் அழைப்பதால் பலர் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு உறவுக்கு மறுப்பார்கள். ஆகவே

            , மனைவியாக இருந்தாலும் அவரது ஆசாபாசங்களுக்கு மதிப்பளித்து நடந்தால்தான் உறவுக்கு சம்மதிப்பார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

            உடலுறவு என்பது மனிதன் உள்பட அனைத்து உயிரினங்கள் மத்தியில் இயல்பாக நடக்கும் ஒரு விஷயம். இதில் மனித இனத்தில் மட்டுமே பெண்களைவிட ஆண்களே முதலில் தயாராகின்றனர்.

            நேரம், காலம் பார்க்காமல் உறவு கொள்வதில் ஆண்களே ஆர்வம் காட்டுகின்றனர். பகலில் உறவு கொள்வதைவிட இரவில்

            உறவுகொள்வதே நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

            உடலுறுப்பு பகுதிக்கு ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் கிடைக்க வேண்டியது அவசியம். அது ஆழ்ந்த உறக்கத்தில்தான் கிடைக்கும். இரவில் எத்தனைமுறை உறவு கொண்டாலும் ஆழ்ந்த உறக்கம்

            வந்துவிடும். இதன்மூலம் உடலுறுப்புக்குத் தேவையான அளவு ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் கிடைத்துவிடும் என்பதால் இரவில்

            தாம்பத்தியம் வைத்துகொள்வதே உடல்நலத்துக்கும் நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

            சிலர் இரவு முழுவதும் உறவு வைத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை உறவு கொண்டபிறகு ஆழ்ந்து உறங்கினால் ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் நடக்கும். இதனால்

            மீண்டும் மீண்டும் வைத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை. அதுவே பகல் நேரமாக இருந்தால் உடல் சோர்வடைவதுடன் வேறு

            சில உடல் உபாதைகளையும் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் பகலில் உடலுறவு பரிந்துரைக்கப்படுவதில்லை

            Posted in மருத்துவம்

            தாம்பத்தியத்திற்கு பின்னர் கட்டாயம் இதை செய்யாதீங்க

            தாம்பத்தியத்திற்கு பின்னர் கட்டாயம் இதை செய்யாதீங்க

            கணவன் மனைவி படுக்கையில் உறவை தொடங்கும் முன்பு ஒரு சில முன் விளையாட்டு வேலைகளை செய்யவேண்டுமோ

            அதேபோல, உறவுக்கு பிறகும் ஒரு சில வேலைகளை நாம் கட்டாயம் செய்யக்கூடாது.

            திருமணம் என்பதும் தாம்பத்திய உறவு என்பதும் மிகவும் புனிதமான ஓன்று. உயிரினங்கள் அனைத்தும் தங்களது

            இனப்பெருக்கத்திற்காக உறவில் ஈடுபடுகின்றன. மனிதனை தவிர மற்ற உயிரினங்கள் குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே உறவில் ஈடுபட்டு இனத்தை பெருக்குகின்றன. ஆனால்,

            மனிதர்களாகிய நமக்குத்தான் இதன் விசயத்திற்கு நேரம் காலம் பார்ப்பது இல்லை. பொதுவாக, படுக்கையில் உறவை தொடங்கும்

            முன்பு ஒரு சில முன் விளையாட்டு வேலைகளை செய்ய வேண்டுமோ அதேபோல, உறவுக்கு பிறகும் ஒரு சில வேலைகளை

            நாம் செய்யவேண்டும். ஆனால், சோர்வு காரணமாகவும், களைப்பு காரணமாகவும் பலரும் இதனை பின்பற்ற தவறுகிறார்கள்.

            கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று வாங்க பாக்கலாம்.

            1. உடனே எழுந்திருப்பது கூடாது

            உறவுக்குப்பின் படுக்கையில் இருந்து உடனே எழுந்து போவதை தவிர்க்க வேண்டும். சுத்தம் செய்கிறேன் பேர்வழி என அடுத்த கணமே படுக்கையில் இருந்து எழுந்து செல்வது சில ஆண்களின்

            வழக்கம். இப்படி செய்வதால் தம்பதியினரிடம் நெருக்கம் நீடிக்காது. இதற்க்காக மட்டும் தான் நான் இருகிறேன என்ற எண்ணம் மனைவி

            மனதில் தோன்ற வாய்ப்புண்டு. எனவே உறவுக்கு பின் சிறிது நேரம் துணையுடன் விளையாடவேண்டும்.

            1. குளிப்பது

            உறவு முடிந்த உடனே குளிக்க செல்வது ஆண், பெண் இருவரிடமும் உள்ள பழக்கம். இதனை முதலில் குறைத்துக்கொள்ள வேண்டும்.

            உறவுக்கு பிறகு சிறிது நேரம் மனைவி அல்லது துணையுடன் தலையை கோதி மனம் விட்டு பேசி பேச வேண்டும். இதனால் உறவில் மகிழ்ச்சி நீடிக்கும்.

            1. வீட்டைவிட்டு வெளியேறுவது

            உறவு முடிந்து சிலமணி நேரம் துணையுடன் வீட்டில் நேரம் செலவிட வேண்டும். அதேபோல் வீட்டில் இருந்து வெளியேறும் பட்சத்தில் கட்டாயம் குளித்துவிட்டுதான் செல்ல வேண்டும்.

            1. உணவு மற்றும் மருந்து மாத்திரை

            உறவுக்கு முடித்த பிறகு வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. அதே போல, உறவுக்கு முன்பும் வயிறு முட்டசாப்பிடக்கூடாது. பால் அளவாக

            குடிக்கலாம். உடனடியாக மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலுக்கு கடுமையான வேலை செய்வதைதவிர்த்து விட வேண்டும்.

            Posted in மருத்துவம்

            திருமணத்திற்கு பின்பு பெண்கள் எடை கூடுவைத்து ஏன் தெரியுமா ..?

            திருமணத்திற்கு பின்பு பெண்கள் எடை கூடுவைத்து ஏன் தெரியுமா ..?

            திருமணத்திற்கு பிறகு ஆண்-பெண் இருபாலருக்கும் உடல் எடை அதிகரிப்பது

            பொதுவானது என்றாலும் பெண்கள்தான் உடல் பருமன் சார்ந்த பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்கிறார்கள்.

            திருமணத்திற்கு பின்பு எடைகூடும் பெண்கள்
            திருமணத்திற்கு பிறகு ஆண்-பெண் இருபாலருக்கும் உடல் எடை

            அதிகரிப்பது பொதுவானது. இருப்பினும் பெண்கள்தான் உடல் பருமன் சார்ந்த பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்கிறார்கள்.

            திருமணத்திற்கு பிந்தைய எடை அதிகரிப்புக்கு பின்னால் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

            உணவுப் பழக்கம்:

            புதுமண தம்பதியர் தங்கள் புதிய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தை அனுபவிக்க விரும்புவார்கள். பெரும்பாலான வீடுகளில் திருமணமான புதிதில் புதுப்பெண்ணை வீட்டு வேலைகள்

            செய்வதற்கு அனுமதிக்கமாட்டார்கள். அப்படியே செய்தாலும் சமையலை தவிர வேறு எந்த வீட்டு வேலையையும் செய்ய

            விடமாட்டார்கள். வெளி இடங்களில் சாப்பிடுவது, உறவினர் வீட்டு விருந்துகளில் கலந்து கொள்வது என பிசியாக இருப்பார்கள்.

            அந்த சமயங்களில் பெரும்பாலான புதுமண தம்பதியர் சாப்பிடும் விஷயத்தை பற்றி கவலைப்படுவதில்லை. அதாவது உணவு

            கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில்லை. அதுவே ஆரம்ப ஆண்டுகளில் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

            மகிழ்ச்சி:

            திருமணமான புதிதில் தங்கள் வாழ்நாளில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.

            ஆரம்ப நாட்களில் மகிழ்ச்சிதான் பிரதான அங்கம் வகிக்கும். அப்போது தங்களுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை விரும்பி ருசித்துக்கொண்டே உரையாடலை தொடர்வார்கள்.

            அத்துடன் கணவருக்கு பிடித்தமான உணவு பட்டியலை கேட்டு தெரிந்து கொண்டு அவற்றை சமைத்து கொடுப்பதற்கும் மனைவி

            ஆர்வம் காட்டுவார். கணவர் மற்றும் குடும்பத்தினரை ஈர்ப்பதற்கு புதிய சமையல் குறிப்புகளையும் கையாளுவார். அதுவும் உடல்

            எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். சுவையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் உடல் ஆரோக்கியத்தை பேணும் விதத்தில் சமையலை செய்வது நல்லது.

            மன நிம்மதி:

            திருமணமான புதிதில் நிம்மதியான வாழ்க்கை சூழலை அனுபவிப்பார்கள். திருமணத்திற்கு முன்பு எதிர்கொண்ட

            பிரச்சினைகள், மன வருத்தங்கள், துயரங்களுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்துவிடுவார்கள். ஒருவருக்கொருவர் ஆறுதலாக

            இருப்பார்கள். அதிக நேரம் ஓய்வும் எடுப்பார்கள். அதுவும் திருமணத்திற்கு பிறகு எடை அதிகரிப்பதற்கு மற்றொரு பொதுவான காரணமாகும்.

            வீட்டில் அதிக நேரம் செலவிடுவது:

            திருமணத்திற்கு முன்பு வீட்டில் இருக்கும் நேரத்தைவிட வெளியில் செலவிடும் நேரம் அதிகமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பிறகு வீட்டில்தான் அதிக நேரம் செலவிடுவார்கள்.

            மலைவாசஸ்தலங்களுக்கு சென்று அங்கு நேரத்தை செலவிட விரும்புவார்கள். தேனிலவு காலம் உடல் பருமன் பிரச்சினைக்கு

            அடித்தளம் அமைத்துவிடக்கூடியது. ஏனெனில் அன்றாட செயல்பாடுகளை சில காலம் விலக்கி வைக்க வைத்துவிடும்.

            தேனிலவுக்கு செல்லும்போது உடல் ரீதியாக சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமானது. கடற்கரையில் நடந்தபடி பேசுவது, காலை, மாலை வேளையில் நடைப்பயிற்சி அல்லது

            உடற்பயிற்சி செய்வது, ஜாக்கிங் செய்வது என உடல் இயக்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏனெனில் உடல் எடையை

            அதிகரிக்க வைப்பது எளிது. குறைப்பதுதான் கடினம். அலட்சியமாக இருந்தால் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியதாகிவிடும்.

            கர்ப்ப காலம்:

            திருமணமான உடனேயே தம்பதியர் குழந்தை பெற திட்டமிட்டால், பெண்ணின் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள்

            இருக்கிறது. கர்ப்ப காலத்தில் காரமான, எண்ணெய்யில் தயாரான உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதற்கு விரும்புவார்கள். அத்துடன்

            உணவு கட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் விதவிதமான உணவுகளையும் சாப்பிடுவார்கள். அதுவும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடும். ஆதலால் திருமணமா

            ன புதிதில் எடை அதிகரிப்பதற்கான காரணங்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

            Posted in மருத்துவம்

            இஞ்சி உண்பதால் உடலுக்கு பல்வேறு நன்மை

            இஞ்சி உண்பதால் உடலுக்கு பல்வேறு நன்மை

            இஞ்சி நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் என தெரியுமா? நம் உடலில் இஞ்சி எப்படி எல்லாம் மருந்தாகிறது என தொடர்ந்து பார்ப்போம்.

            சிறிய இஞ்சி துண்டில் இத்தனை நன்மைகளா?
            இஞ்சி


            உணவில் இஞ்சியை சேர்த்து கொண்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என எல்லோரும் கேள்விப்பட்டு இருப்போம். இஞ்சியை சில உணவுகளில் சரியான விகிதத்தில் சேர்த்து

            கொண்டால், குறிப்பிட்ட உணவின் ருசி அலாதியாகும் என்றும் அனைவருக்கும் தெரியும்.

            இவற்றை தாண்டி இஞ்சி நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் என தெரியுமா? நம் உடலில் இஞ்சி எப்படி எல்லாம் மருந்தாகிறது என தொடர்ந்து பார்ப்போம்.

            மற்ற உணவு வகைகளை விட இஞ்சியில் அதிகளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் சர்க்கரை நோய்,

            பக்கவாதம் மற்றும் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். இது 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது.

            அழற்சியை நீக்கும் தன்மை இஞ்சியில் ஏராளம். இது மாரடைப்பு மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்றவை ஏற்படுவதை தடுக்க உதவும்.

            அதிகளவு முட்டி வலி கொண்டவர்கள் ஆறு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை இஞ்சி சாறு குடித்ததால், வலி குறைந்ததாக 2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

            குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்துவதில் இஞ்சியை வேறு எந்த உணவும் மிஞ்ச முடியாது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு குமட்டல் ஏற்படும் போது மிகவும் பாதுகாப்பான உணவு இது.

            தினமும் 250 மில்லி கிராம் இஞ்சி மாத்திரைகளை உட்கொண்டவர்களுக்கு குமட்டல் குறைந்ததாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

            மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைப்பதில் இஞ்சி சிறப்பாக வேலை செய்யும். இதில் உள்ள ரசாயனங்கள் வலி

            நிவாரணியாக செயல்படும். மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த இஞ்சி சரியான உணவு ஆகும்.

            இஞ்சியை அன்றாட உணவில் எப்படி சேர்த்து கொள்வது

            • மசாலா டீயுடன் இஞ்சியை கலந்து பருகலாம்
            • பொறியல் மற்றும் குழம்புகளில் சிறிது சிறிதாக நறுக்கிய
            • இஞ்சியை சேர்க்கலாம்
            • மோரில் இஞ்சி பொடியை சேர்த்து கொள்ளலாம்
            • சூடான தண்ணீரில் இஞ்சியை சேர்த்து குடிக்கலாம்.

            Posted in மருத்துவம்

            ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா?

            ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா?

            உண்மையிலேயே ஆப்பிளின் தோல் விஷத்தன்மை கொண்டதா..? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகளை தெரிந்துகொள்ள இந்த பதிவை பார்க்கலாம்.

            ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
            ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகு


            ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதில் விஷத்தன்மை உள்ளது என்கிற கூற்று உலா வருகிறது. இதனாலேயே சிலர் தோலை சீவிவிட்டு சாப்பிடுகின்றனர்.

            உண்மையிலேயே ஆப்பிளின் தோல் விஷத்தன்மை கொண்டதா..? ஆப்பிளை எப்படித்தான் சாப்பிடுவது? தெரிந்துகொள்ள மேலும் படிக்க…

            தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனையையே மறந்துவிடலாம் என்பார்கள். அப்படி பலவகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது ஆப்பிள்.

            அதன் சதைப்பகுதி மட்டுமல்ல அதன் தோலிலும் பல வகையான நன்மைகள் உள்ளன. ஆப்பிளின் சத்து அதன் தோலுடன் சேர்ந்தேதான் உள்ளது. ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவதால்

            நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பசியின்மையை போக்கும். விட்டமின் சி, பொட்டாசியம், பாலிபினால்கள், ஃபிளேவனாய்டுகள் நிறைந்துள்ளன. அதோடு தோலில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால்

            செரிமானப் பிரச்னை இருக்காது. அதேசமயம் மலச்சிக்கல் பிரச்னையும் வராது. கொழுப்பு அளவு குறைந்து உடல் எடை சீராக இருக்கும். தசைகளின் ஆரோக்கியமும் உறுதியாக இருக்கும்.

            ஆப்பிளில் இத்தகைய எண்ணற்ற ஆரோக்கியங்களை கொண்டுள்ளதால் சந்தையில் அதற்கான டிமாண்ட் அதிகம்.

            இதனால் கெமிக்கல் முறையில் பழுக்க வைத்தல், அதோடு அதன் தோலை பளபளக்க வைக்க மெழுகு தேய்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

            இந்த மெழுகானது வயிற்றுக்குள் சென்றால் பலவகையான உடல்நலக் கேடுகளை உண்டாக்கும் என்பதாலேயே தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும் என்கிறனர். அதாவது வயிற்றுப்

            போக்கு, வாயுத்தொல்லையை உண்டாக்கும். மேலும் மெழுகு செரிமானமாகாமல் உணவுக்குழாயில் படிந்து நோயை உண்டாக்கும். புற்றுநோய் , குடல் அழற்சி போன்றவையும் வர

            வாய்ப்புண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.இருப்பினும் அவ்வாறு மெழுகு தேய்க்கப்பட்ட ஆப்பிளை எளிதில் கண்டறிய சில டிப்ஸுகளும் உண்டு.

            அதாவது முதலில் அதன் தோலை வாங்கும்போது சுரண்டிப் பாருங்கள். வீட்டிலும் கத்தியால் மேலோட்டமாக சுரண்டினால்

            மெழுகு மட்டும் தனியே வரும். இந்த மெழுகானது கழுவினால் போகாது. அப்படியில்லை எனில் சாப்பிடும் முன் ஆப்பிளை சுடு

            தண்ணீரில் சில நிமிடங்கள் போட்டுவிட்டு பார்த்தால் ஆப்பிள் மீதுள்ள மெழுகு படிவம் நன்றாகத் தெரியும். பின் கத்தியால் தோலை சுரண்ட மெழுகு எளிதில் வந்துவிடும்.

            Posted in மருத்துவம்

            35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடு

            35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடு

            முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை

            மேம்படுத்துவதற்கும், சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது.

            35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்


            35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்


            முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள்

            ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கும்

            ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது. அத்தகைய ஊட்டச்சத்துக்கள் குறித்து பார்ப்போம்.

            இரும்பு சத்து: கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து அதிகம் தேவைப்படும். கோழி இறைச்சி, மீன், கீரை, பீன்ஸ், பச்சை இலை காய்கறிகள், பயறு, தானியங்கள் உள்ளிட்டவற்றில் இரும்பு சத்து அதிகம்

            நிறைந்திருக்கும். மேலும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். ஏனெனில் இது உடலில் முழுமையாக இரும்பு சத்து உறிஞ்சப்படுவதற்கு உதவும்.

            அயோடின்: இந்த தாது அறிவாற்றல் வளர்ச்சிக்கு உதவும். குழந்தைகளுக்கு தேவையான அயோடின் தாய்மார்களிடம் இருந்து கிடைக்கும். அதனால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும்

            தாய்மார்கள் போதுமான அளவு அயோடின் உட்கொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி தைராய்டு சுரப்பியின் சீரான செயல்பாட்டிற்கு அயோடின் முக்கியமானது. அதனால் கடல்

            உணவுகள், முட்டை, பால், தானியங்கள் என அயோடின் நிறைந்திருக்கும் உணவு பொருட்களை தவறாமல் சாப்பிட வேண்டும்.

            புரதம்: தசைகளின் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியம். வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடைய தொடங்கும். அதனை தவிர்ப்பதற்கு கோழி, மீன், பீன்ஸ், பயறு, குறைந்த கொழுப்புள்ள

            தயிர், பால், பாலாடைக்கட்டிகள், நட்ஸ்கள், கொட்டைகள், முட்டை போன்றவற்றை சாப்பிடலாம். இவற்றில் புரதம் அதிகம் இருக்கிறது.

            வைட்டமின் பி 12 : நரம்பு திசுகள், மூளையின் செயல்பாடு மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு வைட்டமின் பி 12 அவசியமானது. அவை அதிகம் நிறைந்த மீன், இறைச்சி, முட்டை,

            பால், பால் பொருட்களை தவறாமல் சாப்பிட வேண்டும். இவை 35 வயதுக்கு பிறகு ஏற்படும் ரத்தசோகை போன்ற சிக்கல்களை போக்கவும் உதவும்.

            கால்சியம் மற்றும் வைட்டமின் டி : எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி உட்கொள்வது நல்லது. குறைந்த கொழுப்புள்ள பால், தயிர், பாலாடைக்கட்டி,

            கொழுப்பு நிறைந்த மத்தி மீன் போன்றவை கால்சியம் நிறைந்த உணவு பொருட்கள். கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு வைட்டமின் டி முக்கியமானது. நேரடி சூரிய ஒளி மூலமும் பெறலாம்.

            ஒமேகா 3 கொழுப்பு அமிலம்: இதயம், எலும்பு மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு ஒமேகா 3 அவசியம். மேலும் இவை மனம், கண்கள், சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். கடல்

            உணவுகள், நட்ஸ்கள், ஆளி விதை, சோயா பீன் எண்ணெய், முட்டை, தயிர், ஜூஸ், பால், சோயா பானங்கள் போன்றவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. கர்ப்பிணி பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

            நார்ச்சத்து: பழங்கள், காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அவற்றை தினமும் சாப்பிட வேண்டும். வயது அதிகரிக்கும்போது ஊட்டச்சத்தின் தேவையும் அதிகரிக்கும் என்பதால் உணவு

            அட்டவணை தயாரித்து அதற்கேற்ப உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றி வரலாம். அதன் மூலம் உண்ணும் உணவில் இருந்து அதிக

            ஊட்டச்சத்துக்களை பெற முடியும். ஆரோக்கியமாகவும் வாழ முடியும்.

            Posted in மருத்துவம்

            சாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க

            சாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க

            பலருக்கு தண்ணீர் குடிப்பதிலும் சந்தேகங்கள் எழும். உதாரணமாக, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது சரியா என்று தோன்றும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

            நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நாம் மேற்கொள்ளும் உணவுப் பழக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம்

            எடுத்துக்கொள்ளும் உணவுகளில் அனைத்து வகையான சத்துகளும் சீராக இருப்பதுபோல அமைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

            குழந்தைகளுக்கு எனில், அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உணவுகளை சமைக்க வேண்டும். முதியவர்கள் எனில், அவர்களின்

            செரிமானம் மற்றும் தேவைப்படும் சத்துகள் உள்ள உணவுகள் தயார் செய்து தர வேண்டும்.

            என்ன வகையான உணவு உணவு சாப்பிட்டாலும், தண்ணீர் குடிப்பது தவிர்க்க முடியாதது. பலர் ஏசி அறைகளில் வேலைப் பார்ப்பதால்

            தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கின்றனர். எப்போதாவது தோன்றும்போது தண்ணீர் குடிக்கின்றனர். இது சரியான பழக்கம் அல்ல.

            இயல்பான மனிதர் ஒருவர் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். பலர் வேலை மும்முரத்தில் தண்ணீர் குடிப்பதை மறந்துவிடுகின்றனர். பெண்கள் வெளியில்

            செல்லும்போது கழிவறை தேடி அலைய முடியாது என தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. சராசரி உடலில் தண்ணீரின் அளவு சீராக இருக்க வேண்டும்.

            பலருக்கு தண்ணீர் குடிப்பதிலும் சந்தேகங்கள் எழும். உதாரணமாக, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது சரியா என்று தோன்றும்.

            பெரும்பாலான மருத்துவர்கள் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க சொல்கிறார்கள். அப்படிக் குடிக்கும்பட்சத்தில் உணவின் அளவு குறைந்துவிடும்.

            உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் சிலர் அதிகம் சாப்பிட்டு விடக்கூடாது என்பதாக, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர்

            குடிப்பார்கள். ஆனாலும் இதை ஒரு மருத்துவரின் அறிவுரை கேட்டபிறகே முடிவெடுக்க வேண்டும். தானாக இந்தப் பயிற்சியை மேற்கொள்ள கூடாது.

            அதேபோல, சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கலாமா என்ற கேள்வியும் பலருக்கு உண்டு. இதையும் தவிர்க்கவே மருத்துவர்கள்

            கூறுகிறார்கள். அப்படிக் குடித்தால் செரிமான பிரச்னைகள் ஏற்படும்.

            உணவை உமிழ்நீரோடு நன்கு மென்று சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் தேவை வராது. அதற்காக விக்கிக்கொண்டிருக்க

            வேண்டியதில்லை. அப்படியான நேரங்களில் மிகக் குறைவான அளவு தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்.

            அதேபோல சாப்பிட்டு முடித்தவுடனே கடகட என்று தண்ணீரைக் குடிக்காது, 15 – 20 நிமிடங்கள் கழித்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

            அதாவது சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பும், சாப்பிட்ட பிறகு அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.

            மற்ற நேரங்களில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் தண்ணீர் குடிப்பதைப் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வேலை நேரத்தில் எழுந்து செல்ல முடியாது என்பவர்கள்.

            ஒரு பாட்டிலில் தண்ணீரை அருகில் வைத்துக்கொள்வது நல்லது. அது பிளாஸ்டிக் பாட்டிலாக இல்லாமல் எவர்சில்வர் பாட்டிலாக இருப்பது நல்லது.

            முடிந்தளவு உடலில் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் குடிப்பது என்கிற நிலைமைக்கு கொண்டு செல்லாதீர்கள். போதுமான அளவு

            தண்ணீர் குடிக்காவிட்டால் மலச்சிக்கல், சிறுநீரகக் கல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

            குடிப்பது நல்ல தண்ணீராக என்று செக் பண்ணிக்கொள்வது நல்லது. சில இடங்களில் தண்ணீர் மஞ்சள் மற்றும் கறுப்பு நிறங்களில் வரக்கூடும்.

            அவர்கள் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளை வாங்கிக்கொள்வது நல்லது. அக்கருவி வடிகட்டி சுத்தப்படுத்தி தரும் நீரைக் குடிக்கலாம்.

            சிலருக்கு மருத்துவர்கள் தண்ணீர் குடிப்பதில் சில வழிகாட்டல்களைச் சொல்லியிருப்பார்கள். அவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் அறிவுரைப்படி நடப்பதே நல்லது.

            Posted in மருத்துவம்

            ஆரோக்கியமற்ற உணவு உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு

            ஆரோக்கியமற்ற உணவு உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு

            ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது பல வகையான நோய் பாதிப்புகளை உண்டாக்கும். சாப்பிடும் உணவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

            ஆரோக்கியமில்ல உணவை உட்கொள்வது பல வகையான நோய் பாதிப்புகளை உண்டாக்கும். சாப்பிடும் உணவு சுத்தமாகவும்

            சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். சிலருக்கு வெளி உணவுகளை உட்கொள்ளும்போது வாந்தி,

            குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் தோன்றும். அவை உணவு கெட்டுப்போய் அதில் நச்சுத்தன்மை கலந்திருப்பதற்கான அறிகுறிகளாகும்.

            உணவில் நச்சுதன்மை இருந்தால் வயிற்று வலி, பசி இன்மை, காய்ச்சல் போன்று உடலில் வெப்பநிலை அதிகரிப்பது, தசை வலி போன்ற அறிகுறிகளும் தோன்றும். பாக்டீரியாக்கள், வைரஸ்கள்

            போன்ற தொற்று கிருமிகள் வயிற்றுக்குள் செல்வதால் இந்த பிரச்சினை உண்டாகிறது. பழைய உணவுகள், சுத்தமாக தயாரிக்கப்படாத உணவுகள்தான் பெரும்பாலும் விஷமாக

            ஆரோக்கியமற்ற உணவு உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு

            மாறுகின்றன. என்டமொபா, ஜியார்டியா, காம்பிலோபாக்டர், ஷிகெல்லா, சால்மோனெல்லா, லிஸ்டீரியா மற்றும் நோரோ

            வைரஸ் போன்ற பொதுவான நுண்ணுயிரிகள் உணவு நச்சுத்தன்மை அடைவதற்கு காரணமாக இருக்கின்றன.

            அடிக்கடி விஷத்தன்மை கொண்ட உணவை உட்கொண்டால் வயிற்றுப்போக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும். அதனால் உடலில் நீரிழப்பு பிரச்சினை உண்டாகும். உடலில் உள்ள சோடியம் மற்றும்

            பொட்டாசியம் போன்றவற்றின் சமநிலை பாதிப்புக்குள்ளாகும். பிற அத்தியாவசியமான செயல்பாடுகளும் பாதிக்கப்படும். நீரிழப்பு பிரச்சினைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால்

            கடுமையான பாதிப்புகள் நேரும். உணவு நச்சுத்தன்மை அடைவதை கவனமாக கையாளாவிட்டால் பேசுவதில் சிரமம், இரட்டை பார்வை, தசை பலவீனம், அதிகப்படியான வியர்வை, நடுக்கம், பிரமை,

            சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல், நாக்கு மற்றும் வாயில் வீக்கம், கை, கால்களில் நடுக்கம், இதயம் வேகமாக துடிப்பது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள

            வேண்டியிருக்கும். உணவு விஷத்தன்மை அடைவதை தடுக்க சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

            • காய்கறிகளை சமைப்பதற்கு முன்பு உப்புநீரில் கழுவ வேண்டும். அதுபோல் பழங்களையும் கழுவி சாப்பிட வேண்டும். சமைப்பதற்கு முன்பு இறைச்சியையும் நன்கு சுத்தம் செய்வதும் முக்கியம்.
            • சமையலறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கத்திகள் மற்றும் காய்கறிகளை நறுக்கும் பலகைகளை தினமும் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
            • குளிர்சாதன பெட்டியை வாரம் ஒரு முறை சோப்பு நீரை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சமைத்த உணவுகளை குளிர்சாதன பெட்டியில் அதிக நேரம் வைக்க வேண்டாம். பால் பொருட்களையும் சேமித்து வைக்கக்கூடாது.
            • சுத்தமான தண்ணீரை பருக வேண்டும். நன்கு காய்ச்சி குடிப்பது நல்லது.
            • எந்த வேலையாக இருந்தாலும் அதனை முடித்ததும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
            • வீட்டை சுத்தம் செய்யும் போது கையுறைகளை அணிவது நல்லது.
            • சாப்பிட்ட உணவு நச்சுத்தன்மை அடைந்திருந்து அவதிப்பட்டால் தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.
            • வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தால், திரவ உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
            • மென்று சாப்பிடும் உணவு வகைகளை தவிர்த்துவிடலாம்.
            • வயிற்றுப்போக்கு, வாந்தி தொடர்ந்து கொண்டிருந்தால் நீர்ச்சத்துடன் பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட பிற தாதுக்களும் உடலில் குறைந்துபோய்விடும்.
            • அத்தகைய சூழலில் தண்ணீருடன் உப்பு அல்லது சர்க்கரையை கலந்து பருகுவது நன்மை பயக்கும்.
            • சரியான நேரத்தில் உணவை உண்ண வேண்டும். மதியம் மற்றும் இரவு உணவுக்கு பிறகு இஞ்சி டீ பருகுவது நல்லது.
            • ஆப்பிள் சிடேர் வினிகரையும் உபயோகிக்கலாம். அது உணவில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவும்.
            • ஒரு கப் சூடான நீரில் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகர் கலந்து பருகி வரலாம்.
            • தேனுடன் லவங்கப்பட்டை தூள் கலந்து சாப்பிடுவதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சினைகளை களையலாம்.
            • வெந்தயமும் வயிற்றுக்கு இதமளிக்கும். அதனுடன் தயிர் சேர்த்து சாப்பிடலாம்.
              Posted in மருத்துவம்

              இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா

              இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா

              வாழைப்பழம் உடலுக்கு நிறைய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ஆனால் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

              தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம். வாழைப்பழம் உடலுக்கு நிறைய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதில் இருக்கும் இரும்பு சத்து ரத்தசோகையை

              எதிர்த்து போராட உதவும். உடல் எடையை சீராக வைத்திருக்கும் திறனும் வாழைப்பழத்திற்கு உண்டு. இதயம் மற்றும் கண்களையும் பாதுகாக்க துணைபுரியும். ஆனாலும் இரவில் வாழைப்பழம்

              சாப்பிடுவது நல்லதல்ல. அந்த சமயத்தில் சாப்பிடுவது சளியை அதிகரிக்கச்செய்துவிடும் என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.

              வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சோர்வான தசைகளை வலுவாக்க உதவும். அதனால் மாலை வேளையில் ஒன்று அல்லது

              இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது இரவில் நன்றாக தூங்குவதற்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்து நிபுணர்கள், “ஒரு வாழைப்பழத்தில் 487

              மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. அது நமது உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களில் 10 சதவீதத்தை வழங்குகிறது” என்கிறார்கள்.

              ஒரு வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளன. ஒருவேளைக்கு 500 கலோரிகளுக்கும் குறைவாக சாப்பிட விரும்பினால், இரண்டு வாழைப்பழங்கள் மற்றும் ஒரு கப் பால் பருகலாம். இரவில்

              காரமான உணவை சாப்பிடுபவர்கள் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்புண்ணை குணப்படுத்த உதவும். இனிப்பு பலகாரங்களை சாப்பிட

              விரும்பினால் அதற்கு பதிலாக வாழைப்பழம் சாப்பிடலாம். அதில் இருக்கும் வைட்டமின்களும், நார்ச்சத்துக்களும் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். வாழைப்பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை,

              மேலும் நல்ல தூக்கத்தையும் தரும். அதே நேரத்தில் ஆஸ்துமா, சைனஸ், சளி தொந்தரவு இருப்பவர்கள் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடலாம்.

                Posted in மருத்துவம்

                அதிக உறைப்பான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்

                அதிக உறைப்பான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்

                காரமான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? சமையலில் மிளகாயை அதிகம் சேர்த்து காரமாக சாப்பிடுவது இந்த

                பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

                காரமான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? சமையலில் மிளகாயை அதிகம் சேர்த்து காரமாக சாப்பிடுவது மன

                நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாகவே இந்திய உணவு வகைகளில் காரத்தின் தன்மை சற்று அதிகமாகவே இருக்கும்.

                பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மிளகாய்தூள், கருப்பு மிளகு உள்பட காரமான மசாலா பொருட்களை கொண்டுதான் இந்திய உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன. அவை உணவுக்கு ருசி

                சேர்த்தாலும் மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கிறது அந்த ஆய்வு. தொடர்ந்து உணவில் காரத்தின் தன்மை அதிகரிக்கும்போது

                நினைவுத்திறன் பாதிப்பு, சிந்தனை திறன் குறைதல், அல்சைமர் நோய் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அதிலும் வயதானவர் களுக்கு பாதிப்பின் தன்மை அதிகமாக இருக்கும்.

                இந்த ஆய்வுக்கு 55 வயதுக்கு மேற்பட்ட சீனர்கள் 4582 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் 50 கிராமுக்கு அதிகமாக உணவில் காரம் சேர்ப்பவர்கள். அவர்களின் அறிவாற்றல் திறன்

                படிப்படியாக குறைந்து வருவதும் ஆய்வின்போது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அதிக எடை கொண்டவர்களை விட மெலிந்த

                உடல்வாகு கொண்டவர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

                மிளகாயில் உள்ளடங்கி இருக்கும் கேப்சைசின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தும் தன்மை கொண்டது. கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. எனினும் அதிகம் பயன்படுத்தக்கூடாது

                என்பதை ஆய்வு முடிவு சுட்டிக்காட்டுகிறது. இதுபற்றி கத்தார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜுமின் ஷி, ‘‘எங்கள் முந்தைய

                ஆய்வுகளில் உடல் எடை, ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மிளகாய் நன்மை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு

                வயதானவர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுபற்றி தீவிரமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது’’ என்கிறார்.

                கார உணவுகளை குறைந்த அளவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

                Posted in மருத்துவம்

                அதிகம் பசிக்க – இதை சாப்பிடுங்க

                இந்த ரசம் குமட்டல், வாந்தி, சோர்வு, மயக்கத்தைப் போக்கும். பசியைத்

                தூண்டும். உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

                பசியைத் தூண்டும் வேப்பம்பூ பருப்பு ரசம்
                வேப்பம்பூ பருப்பு ரசம்
                தேவையான பொருட்கள் :

                வேப்பம்பூ – 2 டேபிள்ஸ்பூன்,

                காய்ந்த மிளகாய் – 4,
                புளி, துவரம் பருப்பு – தலா 100 கிராம்,


                கடுகு, மஞ்சள் தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
                எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

                செய்முறை:

                துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.

                புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

                கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

                ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

                மஞ்சள்தூள் மற்றும் வேப்பம்பூவைச் சேர்த்து வறுக்கவும்.

                இதில், கரைத்த புளியை ஊற்றி, கொதிக்கவிடவும்.

                வேகவைத்த துவரம்பருப்பில், தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும்.

                பொங்கி வரும்போது, பெருங்காயத்தூளைச் சேர்த்து இறக்கவும்.

                கடைசியில், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவவும்.

                சூப்பரான வேப்பம்பூ பருப்பு ரசம் ரெடி.

                Posted in மருத்துவம்

                சளி, இருமலை குணமாக்க- இதை பண்ணுங்க

                சளி, இருமலை குணமாக்க- இதை பண்ணுங்க

                சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் அதிமதுரம் சுக்கு சூப் செய்து பருகலாம். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

                சளி, இருமலை குணமாக்கும் அதிமதுரம் சுக்கு சூப்
                அதிமதுரம் சுக்கு சூப்
                தேவையான பொருட்கள் :

                அதிமதுரம் தூள் – அரை டீஸ்பூன்

                சுக்குப் பொடி – அரை டீஸ்பூன்
                திப்பிலி பொடி – கால் டீஸ்பூன்
                பாதாம் – 6
                தண்ணீர் – 2 கப்

                செய்முறை:

                அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

                நன்கு கொதித்ததும் பாத்திரத்தை கீழே இறக்கிவிட வேண்டும். சுடு நீரில் அதிமதுரம் பொடி, சுக்குப்பொடி, திப்பிலி பொடி

                ஆகியவற்றை கொட்டி இரண்டு நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.

                நீராவியில் பொடிகள் அனைத்தும் வெந்ததும், நன்றாக கலக்கி சூட்டோடு பருகலாம்.

                பருகும் போதே பாதாமை மென்று சாப்பிட்டால் கசப்பு தெரியாமல் இருக்கும்.

                Posted in மருத்துவம்

                கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி?

                கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி?

                உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது. வைரஸ் நோய்கள் தாக்காமல் இருக்க

                எடுக்கவேண்டிய பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்வென்று அறிந்து கொள்ளலாம்.

                கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி?
                கொரோனா தாக்காமல் இருக்க எடுக்கவேண்டிய பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


                சாதாரண நோய் அறிகுறிகள் தென்பட்டாலே பயமடைந்துவிடுவது பொதுவாக மனிதர்களின் இயல்பு. அந்த பயம் எல்லைமீறி மனக்குழப்பம் உருவாகும்போது அது பீதியாக மாறிவிடும்.

                மனிதர்களுக்கு பீதி உருவாகிவிட்டால் அவர்கள் பதற்றமடைந்து நிலைதடுமாறிவிடுவார்கள். இல்லாததை எல்லாம் தனக்கு இருப்பதாக கருதிக்கொண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய்

                விடுவார்கள். அதன் மூலம் அவர்கள் மனநலமும், உடல்நலமும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகிவிடும். அப்படிப்பட்ட

                பீதியான சூழ்நிலையை உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

                இந்த வைரஸ் வரலாற்றை ஆராய்ந்தால் அதன் தாக்குதல் உலகில் ஏதாவது ஒருபகுதியில் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. நாம் நவீன மருத்துவத்தின் மூலம் அவைகளை

                கட்டு்ப்படு்த்தியிருக்கவே செய்கிறோம். இன்னொருபுறம் பார்த்தால் சாதாரண சளிக்காய்ச்சலுக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பாதிக்கப் படுகிறார்கள். அதில் மூன்று லட்சம் முதல் 6

                லட்சம் பேர் ஆண்டுக்கு மரணமடைகிறார்கள். மட்டுமின்றி புற்றுநோய், இதயநோய், சர்க்கரை நோயாலும் பெருமளவு மரணம் ஏற்படத்தான் செய்கிறது.

                இ்ந்த நிலையில் கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி? என்ற கேள்வி எழுகிறது. உலக சுகாதார அமைப்பு, ‘சர்வதேச அவசர நிலையாக’ இதனை அறிவித்தது இதில் சுட்டிக்காட்டப்படுகிறது.

                ‘இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதி இல்லாத நாடுகளுக்கு அந்த வசதியை அளிப்பதற்காகத்தான்’ இந்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதனால் அதை நினைத்து

                பீதியடைய வேண்டியதில்லை. அதே நேரத்தில் காய்ச்சல், ஜலதோஷம், நிமோனியா போன்றவை சில நாட்களுக்கு மேல்

                நீடித்து மூச்சுத்திணறலாக மாறினால் மட்டும்தான் உடனே கவனிக்கவேண்டும். நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் தொற்றாகும்.

                வைரஸ் நோய்கள் சுவாச உறுப்புகள் தொடர்புடையதாக இருப்பதால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றாமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும். நாம் பேசும்போது உமிழ்நீர்

                பிசிறுகள் வெளிப்படும். அதனை டிராப்லெட் (droplet) என்போம். ஒருவர் மூலம் இன்னொருவருக்கு ‘டிராப்லெட் இன்பெக்‌ஷன்’ ஏற்படாமல் இருக்க மூக்கு, வாய் பாதுகாப்பு அவசியம்.

                பேசும்போதும், தும்மும்போதும் கவனம் தேவை. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் செல்வதையும் தவிர்க்கலாம்.

                பொதுவாக வைரஸ் கிருமிகள் உடலில் புகுந்தால், உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி அதை எதிர்க்கும். அதையும் மீறி அந்த வைரஸ் கிருமிகள் உடலை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை

                அறிய முன்பெல்லாம் சில நாட்கள் காத்திருந்து பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. இப்போது அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. ‘பி.சி.ஆர்’ என்ற நவீன பரிசோதனைமுறை

                எல்லா இடங்களிலும் உள்ளது. அதன் மூலம் உடனே கொரோனா போன்ற வைரஸ் பாதிப்புகளை கண்டறிந்துவிடலாம். கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக கண்டுபிடித்தால்கூட அது 100-ல் 2

                பேருக்குதான் அதிக பாதிப்பை உருவாக்கும். இதன் தாக்குதலை முறியடிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.

                வைரஸ் நோய்கள் தாக்காமல் இருக்க எடுக்கவேண்டிய பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

                வைரஸ் நோய்கள் தொற்றாமல் இருக்க மூக்கையும், வாயையும் மூடிக்கொள்ளும் மாஸ்க் அணிவது வழக்கத்தில் உள்ளது. இதில் கவனிக்கத் தகுந்த விஷயம் என்னவென்றால், மூன்று அடுக்குகளை

                கொண்ட மாஸ்க்குகள் மட்டுமே முழுமையான பாதுகாப்பு அளிக்கும். எல்லாவித மாஸ்க்குகளும் முழுபாதுகாப்பு அளிப்பதில்லை என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.

                நோயாளி மட்டும் மாஸ்க் அணிந்தால் போதாது. அவரை பராமரிப்பவரும், அவரை சந்திக்க செல்பவர்களும் மாஸ்க் அணிவது அவசியம்.

                வீட்டில் வைரஸ் தாக்கிய நோயாளிகள் இருந்தால் அவர்கள் பயன்படுத்திய டவல், டிஸ்யூ, பாத்திரங்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் பயன்படுத்திய பொருட்களை

                பொது இடங்களில் போடக்கூடாது. பாதுகாப்பானமுறையில் அப்புறப்படுத்தவேண்டும். நோயாளிகளை பராமரிப்பவர்கள் அதன் பின்பு கைகளை நன்றாக சோப்பிட்டு கழுவவேண்டும்.

                லேசான சுடுநீரில் உப்புகலந்து அவ்வப்போது வாயை கொப்பளிப்பது வைரஸ் உடலுக்குள் பரவுவதை ஓரளவு தடுக்கும்.

                உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், காய்கறிகளை சுத்தமாக கழுவி சாப்பிடவேண்டும். உணவில் உப்பை குறைப்பது சுவாசப் பகுதியில் ஏற்படும் நெருக்கடிகளை

                குறைக்கும். ஊறுகாய், உப்பில் ஊறவைத்த இதர உணவுப் பொருட்கள், டின்னில் அடைத்துவைத்திருக்கும் பதப்படுத்திய உணவுகளையும் தவிர்த்திடுங்கள்.

                பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்றவைகளை தவிர்த்திடவேண்டும்.

                மனிதர்கள் எச்சில் துப்பும்போது அதில் 10 முதல் 12 மணி நேரம் வரை வைரஸ்கள் உயிரோடு இருக்கும். நோயாளிகள் இருக்கும்

                அறையில் உள்ள உலோகங்களிலும் வைரஸ் காணப்படும். அதனால் அவைகளை தொட்டாலும் உடனே கைகளை நன்றாக கழுவவேண்டும்.

                மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை அத்தியாவசியம் இருந்தால் மட்டும் சந்திக்கசெல்லுங்கள். நோயாளி களிடம் இருந்து நோய் பரவுவதை அதன் மூலம் தடுக்கமுடியும்.

                அதுமட்டுமின்றி நோயாளிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களையும் அதன் மூலம் தடுக்கலாம்.

                உணவு சாப்பிடுவதற்கு முன்பும்- பின்பும் கைகளை நன்றாக கழுவுவதோடு, கைகளில் ஈரத்தன்மை இல்லாத அளவுக்கு உடனே

                துடைப்பதும் அவசியம். அதுபோல் கழிவறைக்கு போகும் முன்பும்- பின்பும் கைகளை சோப்பிட்டு கழுவி நன்றாக துடைத்திடவேண்டும்.

                வளர்ப்பு பிராணிகளிடம் கவனமாக இருங்கள். நெருங்கிப்பழகவேண்டாம். அதுபோல் பொதுவாகனங்களில் செல்லும்போதும், பொது இடங்களில் செல்லும்போதும் கவனம் தேவை.

                பாதுகாப்பான, சூடான உணவுகளை மட்டும் உண்ணுங்கள். அசைவ உணவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்ப்பது நல்லது. முடிந்த

                அளவு வீட்டில் உணவு தயாரித்து சாப்பிடுங்கள். உங்கள் வாழ்விடப் பகுதிகளையும் சுத்தமாக வைத்திருங்கள்.

                வைரஸ் நோய்களை பற்றிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பெருமளவு பரவுகின்றன. அவைகளை அப்படியே நம்பி பீதி அடையவேண்டாம். அதே நேரத்தில் உங்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதை அலட்சியம்

                செய்யவேண்டாம். டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். மாறாக சுய மருத்துவம் மேற்கொள்ளும் எண்ணத்தில் மருந்துகடைகளில் (டாக்டரின் பரிந்துரையின்றி) மருந்துகளை வாங்கி சாப்பிடாதீர்கள்.

                எந்த வைரஸ் நோயும் தாக்காத அளவுக்கு உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள முடியும். அந்த பாதுகாப்பு நடைமுறைகளை

                கடைப்பிடியுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். அதே நேரத்தில் எப்போதும் விழிப்புடன் செயல்படுங்கள்.

                Posted in மருத்துவம்

                கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

                கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

                கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும்

                என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

                கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

                கொரோனா வைரஸ் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிப்படைய செய்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

                முதலில் நுரையீரலில் நுழையும் கொரோனா வைரஸ் இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இந்த அறிகுறிகளுக்கு

                பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை மோசமான நிலைக்கு சென்று விடும்.

                கொரோனா பற்றிய ஆய்வுகளில் அந்த வைரஸ் நுரையீரலை தவிர இதயம், நரம்பு மண்டலம் உள்ளிட்ட உறுப்புகளையும் பாதிப்படைய செய்கிறது என்பது தெரிய வந்தது.

                மேலும் தலைவலி, குழப்பமான மனநிலை, வாந்தி போன்றவையும் கொரோனா

                வைரசின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளின் அடுத்தடுத்த ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.

                கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

                இந்தநிலையில் கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

                இதுதொடர்பாக அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஆய்வில் கூறி இருப்பதாவது:-

                கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு தலைவலி, குழப்பம் மற்றும் மயக்கம் ஏற்படுகின்றன. இது

                கொரோனா வைரஸ் மூளைக்கு நேரடியாக செல்வதன் விளைவாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

                நோய் எதிர்ப்பு நிபுணர் அகிகோ இவாசாகி தலைமையிலான ஆய்வறிக்கையில், “வைரஸ் மூளைக்குள் கொந்தளிக்க முடிகிறது

                என்றும், மூளைக்கு அருகே ஆக்சிஜன் செல்களை பாதிக்கிறது என்றும்

                தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இதன் பாதிப்பு இன்னும் தெளிவாக தெரியவில்லை” என்று கூறப்பட்டு இருக்கிறது போதுமாம் இது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

                இந்த ஆராயச்சி பூர்வாங்க கட்டத்தில்தான் இன்னும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

                சான்பிரான்சிஸ்கோவில் கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் துறை தலைவர் ஆண்ட்ரூ ஜோசப்சன் கூறும்போது,

                “மூளையில் வைரஸ் நேரடி ஈடுபாடு உள்ளதா, இல்லையா என்பதை புரிந்து கொள்வது அசாதாரணமானது. ஆனாலும் அந்த

                ஆய்வறிக்கை மதிப்பாய்வுக்கு வரும்வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.