Posted in சினிமா

ஊரடங்கில் படப்பிடிப்பு நடத்துவதா? சாந்தினி கோபம்

ஊரடங்கில் படப்பிடிப்பு நடத்துவதா? சாந்தினி கோபம்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவி நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

ஆனாலும் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் பொறுப்பற்று சுற்றுவதாக விமர்சனங்கள் கிளம்பின.

இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு 2 வாரங்கள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஆனாலும் ஊரடங்கை மீறி கார், மோட்டார் சைக்கிள், வேன் உள்ளிட்ட வாகனங்களில்

சாதாரண நாட்களைப்போல் பலர் சுற்றுவதாகவும், இதனால் ஊரடங்கு போட்டும் பயன் இல்லை என்றும் பலர் கண்டித்து வருகிறார்கள்.

சினிமா படப்பிடிப்புகளையும் தொடர்ந்து நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை சித்து

பிளஸ்-2 படத்தில் நாயகியாக அறிமுகமாகி பில்லா பாண்டி, கவண், பாம்பு சட்டை, நய்யாண்டி, வில் அம்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சாந்தினி கண்டித்து உள்ளார்.

சாந்தினி

“ஊரடங்கு என்பது முழுமையானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் அதை மீறி சென்னையில் பல படப்பிடிப்புகள் மறைமுகமாக எப்படி நடந்து வருகின்றன. மக்களின் உயிர்

முக்கியம். கொரோனா பரவலை தடுக்க வேண்டியது அவசியம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதில் கவனம் செலுத்தவும், தேவையான நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்

    Posted in சினிமா

    நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்

    நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்

    சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர்

    கே.வி.ஆனந்த் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர். 

    இந்நிலையில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ஐயப்பன் கோபி மாரடைப்பால்

    உயிரிழந்துள்ளார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி காலமானார். ஆனால் தற்போது தான் செய்திகள் வெளியாகியுள்ளது.

      Posted in சினிமா

      கமல் தோல்வியை கிண்டலடித்த கஸ்தூரி

      கமல் தோல்வியை கிண்டலடித்த கஸ்தூரி

      நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, மக்கள் நீதி

      மய்யத்தில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திடீரென கட்சியில் இருந்து விலகினர்.

      அவரை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகுவதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவர் பின்

      ஒருவராக மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அக்கட்சியை சார்ந்தவர்கள் விலகி வருவதை கலாய்க்கும் விதமாக, நடிகை கஸ்தூரி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

      கமல் கஸ்தூரி

      அதில் “மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்ட யூடியூபர் பத்மபிரியா, வேளச்சேரி தொகுதி போட்டியிட்ட சந்தோஷ் பாபு ஆகிய இருவருமே மக்கள் நீதி மய்யம் கட்சியில்,

      தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் சேர்ந்தனர். தற்போது இருவரும் விலகி விட்டனர். இது

      கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷன் போலவே தெரிகிறது அடுத்த எலிமினேஷன் யார் என்பதை பார்ப்போம் என்று பதிவு செய்திருக்கிறார்

        Posted in சினிமா

        படுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை

        படுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை

        சமூக வலைத்தளத்தில் ஒருவர் படுக்கைக்கு அழைத்த நிலையில் அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நடிகை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

        படுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை
        சௌந்தர்யா


        சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் சௌந்தர்யா. இவர் ஒரு சில படங்களிலும் சின்னத்திரை மற்றும் குறும் படங்களிலும் நடித்துள்ளார்.

        இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சௌந்தர்யாவிடம் ஒருவர் படுக்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதில் அவர் ஆபாசமாகவும் பதிவு செய்துள்ளார்.

        சவுந்தர்யாவின் பதிவு

        இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ள நடிகை செளந்தர்யா, அந்த நபரை பிளாக் செய்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

        Posted in சினிமா

        பண கஷ்டத்தில்க் தவிக்கு கமல் மகள் சுருதி

        பண கஷ்டத்தில்க் தவிக்கு கமல் மகள் சுருதி

        தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் மற்றவர்கள் போல் நானும் பொருளாதார பிரச்சினையில் இருப்பதாக பேட்டியளித்துள்ளார்.

        பொருளாதார பிரச்சினையில் ஸ்ருதி ஹாசன்
        ஸ்ருதிஹாசன்


        விஜய்சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள லாபம் படப்பிடிப்பு முடிந்து கொரோனாவால்

        திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகும் சலார் படத்திலும் நடிக்கிறார்.

        ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், ”கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது சிக்கலாக

        உள்ளது. கொரோனா தொற்று முடிவது வரை காத்திருக்கவும் முடியாது. முக கவசம் அணியாமல் படப்பிடிப்பு அரங்கில் இருப்பதும் இயலாத காரியம்.

        மற்றவர்கள் போல் எனக்கும் பொருளாதார பிரச்சினை இருப்பதால் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே படப்பிடிப்புகள் தொடங்கியதும் நான் படப்பிடிப்புக்கு செல்வேன்.

        ஸ்ருதிஹாசன்

        கடந்த 11 ஆண்டுகளாக சுயமாக சம்பாதிக்கிறேன். எனது தேவைகளை நானே பூர்த்தி செய்கிறேன். எனது செலவுகளையும் நானே கவனித்துக்கொள்கிறேன். சொந்த வாழ்க்கை மற்றும்

        தொழில் தொடர்பான முடிவுகளை நானே எடுக்கிறேன். சுயமாக செயல்படுவதில் பெருமை கொள்கிறேன்.

        கொரோனா தொற்றுக்கு முன் சொந்தமாக வீடு வாங்கி இருக்கிறேன். கடவுள் எனக்கு எப்போதும் துணையாக இருக்கிறார்

        என்று நம்புகிறேன். கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி தற்போது வீட்டில் இருக்கிறேன். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

          Posted in சினிமா

          விஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் – பிரபல நடிகை

          விஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் – பிரபல நடிகை

          உன்னை தேடி’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதன் பிறகு,

          ‘ஆனந்த பூங்காற்றே’, ‘ரோஜா வனம்’, ‘வெற்றி கொடி கட்டு’, ‘பேரழகன்’, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ மற்றும் ‘சந்திரமுகி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

          ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தில் “வாழ மீனுக்கு” என்ற ஒரே ஒரு பாடலில் தோன்றி ரசிகர்களை

          கவர்ந்தார். அதன்பின் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுமேஷ் மேனனை 2007-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

          விஜய் – மாளவிகா

          இந்நிலையில் ஒரு நேர்காணலில், தனது தமிழ் சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அப்போது விஜய்யுடன்

          குருவி படத்தில் ‘டண்டானா டர்னா’ பாடலில் நடனம் ஆடிய தருணத்தைப் பகிர்ந்துக் கொண்டார். விஜய்யுடன் டான்ஸ்

          ஆட கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்றிருந்தேன். ஆனால் அப்போது நான் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததால்

          , நன்றாக நடனம் ஆட முடியாமல் போனதில் வருத்தமுண்டு. அந்த பாடலில் எளிதாக உடலை அசைப்பது போன்ற

          ஸ்டெப் தான் இருக்கும். அது எனது கடைசிப் படமும் கூட. ஒரு வேளை கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால், மனதில் பதியும்படி, சிறந்த நடனத்தை கொடுத்திருப்பேன் என்றார் மாளவிகா

            Posted in சினிமா

            நீச்சல் உடையில் கலக்கும் நடிகை – video

            நீச்சல் உடையில் கலக்கும் நடிகை – video

            தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின்

            ‘தாம் தூம்’ படத்தின் மூலம்தான் பிரபலமானார். அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’,

            ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.

            படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி

            முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே தனது அடுத்த படத்தின் வாய்ப்புக்காக உடல் எடையை குறைத்து வருகிறார்.

            இதையடுத்து பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

            அந்தவகையில் தற்போது பின்க் நிற பிகினி அணிந்து ஒரு கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

            clcik here video

            https://www.instagram.com/reel/COwo0BinECu/?utm_source=ig_embed
              Posted in சினிமா

              சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங்

              சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங்

              பிரபல பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கும் புதிய பாலிவுட் படத்தில் ரகுல் பிரீத் சிங் நடிக்க

              ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மராத்தி இயக்குனர் தேஜஸ் தியோஸ்கர் இயக்கும் இந்த படம்

              காமெடி கலந்த சமூக படமாக தயாராகிறது. இதில் ரகுல் பிரீத் சிங் காண்டம் பரிசோதனையாளராக நடிக்கிறார்.

              ரகுல் பிரீத் சிங்

              இந்த கேரக்டரில் நடிக்க அனன்யா பாண்டே, சாரா அலிகான் இருவரையும் தான் முதலில் அணுகினார்கள்.

              ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். ரகுல் பிரீத் சிங் கதையையும், படத்தில் வரும் காட்சிகளையும் கேட்டுவிட்டு

              நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது

              Posted in சினிமா

              குண்டான அனுஷ்கா… வைரலாகும் புகைப்படம்

              குண்டான அனுஷ்கா… வைரலாகும் புகைப்படம்

              ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது

              ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அனுஷ்கா திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டு இருக்கிறது.

              சமீபத்தில் துபாய் தொழில் அதிபர் ஒருவருடன் அனுஷ்காவுக்கு திருமணம் நிச்சயமாகி

              உள்ளதாகவும், அந்த தொழில் அதிபர் அனுஷ்காவை விட வயதில் இளையவர் என்றும் செய்திகள் வெளியானது.

              அனுஷ்கா

              இந்நிலையில் அனுஷ்காவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அனுஷ்கா

              மிகவும் குண்டான தோற்றத்தில் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டாக இருந்த

              அனுஷ்கா, உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது மீண்டும் குண்டானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

              Posted in சினிமா

              ரஜினியுடன் செல்பி எடுத்த பிரபல நடிகரின் மகள்

              ரஜினியுடன் செல்பி எடுத்த பிரபல நடிகரின் மகள்

              ரஜினி நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் உருவாகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா,

              கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

              நேற்றுடன் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளை நிறைவு செய்த நடிகர் ரஜினி இன்று சென்னை திரும்பினார்.

              ரஜினி – லட்சுமி மஞ்சு

              இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற போது ரஜினியுடன் தெலுங்கு நடிகர் மோகன்

              பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை

              லட்சுமி மஞ்சு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

                Posted in சினிமா

                கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய சிவகுமார் குடும்பத்தினர்

                கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய சிவகுமார் குடும்பத்தினர்

                தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல்

                தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

                கார்த்தி சூர்யா

                இந்நிலையில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில்

                சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கி இருக்கிறார்கள்.

                மேலும், தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் முதல் அமைச்சர் சந்திப்பிற்கு பின் பேட்டி அளித்துள்ளார்..

                  Posted in சினிமா

                  நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம்


                  நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம்

                  தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் முக்கிய கதாபாத்திரத்திலும்

                  நடித்தவர் நெல்லை சிவா. இவர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

                  நெல்லை சிவா

                  இந்நிலையில் நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 60. இன்று மாலை 6 மணி

                  அளவில் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் மரணமடைந்துள்ளார். இவரது மறைவிற்கு பிரபலங்கள்

                  பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவரது இறுதி சடங்கு நாளை நண்பகல் நடக்க இருக்கிறது.

                    Posted in சினிமா

                    நடிகையை திட்டிய அஜித்


                    நடிகையை திட்டிய அஜித்

                    பிரபல நடிகையை படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித் திட்டியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை கூறியுள்ளார்.

                    அஜித்திடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை
                    அஜித்


                    அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் உன்னை தேடி. இந்த படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்திருந்தார்.

                    இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் மாளவிகாவை திட்டி விட்டாராம். மாளவிகா மற்றும் அஜித் இருவரும்

                    நடனமாடும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது மாளவிகாவுக்கு சரியாக நடனம் ஆட வரவில்லை.

                    இந்நிலையில் மாஸ்டர் சொல்லிக் கொடுத்தபடி ஆடாமல் மாளவிகா இஷ்டத்திற்கு ஆடியதால் அஜித் கடுப்பாகி விட்டாராம்.

                    அஜித் மாளவிகா

                    ஒழுங்காக மாஸ்டர் சொல்வதை கவனித்துப் பார்த்து தெளிவாக ஆடுங்கள் என மாளவிகாவை திட்டி விட்டதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் மாளவிகா இதைப்பற்றி தெரிவித்துள்ளார்

                      .

                      Posted in சினிமா

                      எச்சரிக்கையுடன் இருந்தும் பாதிக்கப்பட்டேன்… சுனைனா .

                      எச்சரிக்கையுடன் இருந்தும் பாதிக்கப்பட்டேன்… சுனைனா .

                      கொரோனா 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தொற்றுப் பரவலைக்

                      கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. பல மாநிலங்கள் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளன.

                      இந்த தொற்றால் சினிமா நடிகர், நடிகைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை

                      சுனைனாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழில், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர்.

                      சுனைனா

                      கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து சுனைனா டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

                      ‘பலத்த எச்சரிக்கையுடன் இருந்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டின் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்

                      குடும்பத்தினர் தவிர வேறு யாருடன் தொடர்பு கொள்ள வில்லை என்பதால் அவர்களும்

                      தனிமையில் உள்ளனர். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். அனைவருக்கும் என் பிரார்த்தனைகள்’எனக் கூறியுள்ளார்

                        Posted in சினிமா

                        தமிழுக்கு வரும் பிரபல நடிகை

                        தமிழுக்கு வரும் பிரபல நடிகை

                        சண்டை இயக்குனர் ஸ்டண்ட் சில்வா ஒரு புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

                        அந்தப் படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

                        சாய் பல்லவியின் தங்கை இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப்

                        படத்திற்கு இயக்குனர் விஜய் கதை எழுதியுள்ளார். தற்போது இந்தப் படத்தில் மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

                        ரீமா கல்லிங்கல்

                        ரீமா 2011 ஆம் ஆண்டில் ஜி.என்.ஆர் குமாரவேலனின் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான

                        ‘யுவன் யுவதி’ படத்தின் நடித்திருந்தார். தற்போது ஸ்டண்ட் சில்வா இயக்கும் இந்தப் படத்தின் மூலம் ரீமா 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார்

                          Posted in சினிமா

                          வாய்ப்பு கிடைக்காமல் புலம்பும் நடிகை

                          வாய்ப்பு கிடைக்காமல் புலம்பும் நடிகை

                          பிரபல நடிகை ஒருவர் பல ஆட்களை தெரிந்து வைத்தும் பட வாய்ப்பில்லை என்று மற்றவர்களிடம் புலம்பி வருகிறாராம்.

                          வாய்ப்பு கிடைக்காமல் புலம்பும் நடிகை
                          கிசுகிசு


                          தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர், தொடர்ந்து தெலுங்கில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தாராம். அதன் பிறகு நடிகைக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம்.

                          ஊரடங்கில் பல நல்ல விஷயங்கள் செய்து வந்தாராம். இதை கவனித்த பலரும் நடிகையை பாராட்டினார்களாம்.

                          மகிழ்ச்சி அடைந்த நடிகை தனக்கு வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால் இதுவரை எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லையாம்.

                          இதனால் நடிகையை நல்லது செய்தும் வாய்ப்பில்லை என்று புலம்பி வருகிறாராம். மேலும் நடிகை ரூட்டை மாற்றி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறாராம்.

                            Posted in சினிமா

                            கொரோனா பயம்… படப்பிடிப்புக்கு செல்ல மறுத்த நடிகை

                            கொரோனா பயம்… படப்பிடிப்புக்கு செல்ல மறுத்த நடிகை
                            .
                            தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’,

                            ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன. இவர் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

                            நடிகை சமந்தா, இம்மாதம் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக ‘கால்ஷீட்’ கொடுத்து இருந்தார்.

                            அதன்படி, அந்தப் படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் செய்து வந்தார்.

                            சமந்தா

                            இந்நிலையில், சமந்தா அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. கொரோனா பயம் காரணமாக அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து விட்டாராம்.

                            இதனால் அந்த தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உள்ளனர்.

                            Posted in சினிமா

                            திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை – சிம்பு பட நடிகை

                            திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை – சிம்பு பட நடிகை

                            தமிழில் ‘காதல் அழிவதில்லை’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சார்மி. இதையடுத்து ‘லாடம்’ ‘பத்து எண்றதுக்குள்ள’ போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கிலும்

                            முன்னணி கதாநாயகியாக இருந்தார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக வந்தார்.

                            தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் தயாரிப்பாளராக மாறி இருக்கும் சார்மி, தற்போது பட தயாரிப்பில் இறங்கி உள்ளார். இவர் தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும்

                            ‘லிகர்’ படத்தை தயாரித்து வருகிறார். கடந்த சில நாட்களாக, நடிகை சார்மி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி பரவியது.

                            சார்மி

                            இதுகுறித்து நடிகை சார்மி கூறியதாவது: “தற்போது எனது வேலையில் சிறந்த ஒரு கால கட்டத்தில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான

                            முடிவை எனது வாழ்க்கையில் எப்போதும் எடுக்க மாட்டேன். போலியாக எழுதுபவர்கள், வதந்திகள்

                            ஆகியவற்றுக்கு குட் பை, சுவாரஸ்யமான கதைகளை உருவாக்குவதில் நீங்கள் சிறந்தவர்கள்,” என தெரிவித்துள்ளார்

                              Posted in சினிமா

                              என்னைத் தவிர வீட்டில் அனைவருக்கும் கொரோனா… பிரபல நடிகை

                              என்னைத் தவிர வீட்டில் அனைவருக்கும் கொரோனா… பிரபல நடிகை

                              இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால்

                              பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா

                              ஷெட்டியின் குடும்பத்தினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.

                              இதுகுறித்து ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது: என்னுடைய

                              பெற்றோர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் என்னுடைய கணவர்

                              உள்பட எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது.

                              அதுமட்டுமின்றி எங்கள் வீட்டில் பணிபுரியும் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

                              ஷில்பா ஷெட்டி

                              ஆனால் அதே நேரத்தில் கடவுளின் அருளால் எனக்கு மட்டும் கொரோனா வைரஸ் நெகட்டிவ் என

                              ரிசல்ட் வந்துள்ளது. எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கொரோனா விதிமுறைகளை

                              கடைப்பிடித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அனைவரும் மருத்துவர்களின் அறிவுரையின்படி சிகிச்சை பெற்று குணமாகி வருகின்றனர் என்று ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

                                Posted in சினிமா

                                விஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகை

                                விஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகை

                                தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்துள்ளார்.

                                ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

                                எனிமி படத்துக்கு பிறகு விஷாலின் 31-வது படத்தை, புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்க இருக்கிறார்.

                                இவர் குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் பட இயக்குனர் கணேஷ் விநாயக் ஆகியோரிடம்

                                உதவி இயக்குனராக பணியாற்றியவர். எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தையும் இயக்கி பல விருதுகளை பெற்றார்.

                                தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக

                                டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். தற்போது பிரபல டப்பிங் கலைஞரும், நடிகையுமான ரவீனா ரவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

                                ரவீனா ரவி

                                சமீபத்தில் வெளியான காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் ரவீனா ரவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

                                மேலும், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகாவிற்கு பின்னணி குரல் கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.