Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கொழும்பு மற்றும் அருகில் உள்ள சில நகரங்களில் தானியங்கி வீதி சமிக்ஞைகள்
கொழும்பு மற்றும் அருகில் உள்ள சில நகரங்களில் தானியங்கி வீதி சமிக்ஞைகள்
கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரங்கள் சிலவற்றில் தெரிவு செய்யப்பட்ட வீதிகளில் தானியங்கி வீதி சமிக்ஞை முறை இன்று
காலை 6.00 மணி தொடக்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான உத்தேச திட்டமாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார்.
இந்த வீதிகளில் இதற்கு முன்னர் வாகன சமிக்ஞை நடவடிக்கைகளை பொலிஸாரே கையாண்டனர்.
தானியங்கி வீதி சமிக்ஞை செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட வீதி வாகன நடவடிக்கைளுக்கு பொலிஸாரின் பங்களிப்பு இருக்க
மாட்டாது. இந்த உத்தேச திட்ட நடைமுறை தொடர்பான விடயங்களை பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரனோ தொற்று – திடீர் அதிகரிப்பு
இலங்கையில் கொரனோ தொற்று – திடீர் அதிகரிப்பு
இன்று (13) நண்பகல் வரையில் திவுலப்பிட்டிய COVID 19 கொவிட்
கொத்தணியில் பதிவாகியுள்ள தொற்றுக்குள்ளானோரின்
எண்ணிக்கை 1446 என்று தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று புதிதாக 49 பேர் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-10-13 13:46:11
4893
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
1552
சிகிச்சை பெறும் நோயாளிகள்
49
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
3328
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
13
இறப்பு எண்ணிக்கை.
பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ,அத்தியாவசிய பொருட்களின் வரி நீக்கம்
பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ,அத்தியாவசிய பொருட்களின் வரி நீக்கம்
தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் கூடிய கஷ்டங்களை கவனத்திற் கொண்டு
அரசாங்கத்தினால் பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.
வரி நீக்கப்பட்டுள்ள காரணத்தினால் இன்று இரவு முதல் டின் மீன் (பெரியது) 200 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100
ரூபாவுக்கும் சீனி ஒரு கிலோ 85 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முடியும்.
இந்த அத்தியாவசிய பொருட்கள் உட்பட 500 ரூபாவுக்கு மேல் பெறுமதியான பொருட்களை சதொச நிறுவனத்தில் கொள்வனவு
செய்யும் போது ஒரு கிலோ பருப்பை 150 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தெங்கு அபிவிருத்தி சபை, குருணாகல் பெருந்தோட்ட கம்பனி மற்றும் சிலாபம் பெருந்தோட்ட கம்பனி என்பன கொழும்பு
நகரத்திற்கான தேங்காய் வழங்களை அதிகரித்துள்ளன. எனவே நுகர்வோருக்கு சதோச விற்பனை நிலையங்களில் நியாயமான
விலைக்கு தேங்காய்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
கொரனோ நோயாளர்கள் வருகை -பொரளையில் 6 கடைகள் அடித்து பூட்டு
கொரனோ நோயாளர்கள் வருகை -பொரளையில் 6 கடைகள்
அடித்து பூட்டு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்கள் சிலர்
வந்துசென்றமையால் பொரளையில் உள்ள 06 வர்த்தக
நிலையங்கள் தற்காலிகமான பூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்-கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மூடப்படாது’
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்-கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மூடப்படாது’
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமைகள் காணப்பட்டாலும், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மூடப்படாதென,
தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள தொழிற்சாலைகள் மூன்றில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும், இந்தத் தொழிற்சாலைகளில்
ஒரு கொரோனா தொற்றாளர் மாத்திரம் இனங்காணப்பட்ட தொழிற்சாலை, இன்று மீள திறக்கப்படுமெனத் தெரிவித்த அவர்,
ஏனைய இரு தொழிற்சாலைகளும், இன்னும் சில தினங்களுக்குள் மீளத் திறக்கப்படுமெனத் தெரிவித்தார்.
சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள 87 தொழிற்சாலைகளில், 36 ஆயிரம் ஊழியர்கள் பணிப்புரிவதாகவும் நாட்டில் ஏற்பட்டிருக்கும்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்கள் காரணமாக, தற்போது வெறும் 8 ஆயிரம் ஊழியர்களே அங்கு வருகை தருவதாகவும் அவர் கூறினார்.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களுக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான ஊழியர்கள்,
சேவைக்கு வரமுடியாமல் இருப்பதாகவும் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி, தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய உயர் ஸ்தானிகர் நீர் வழங்கல் அமைச்சருடன் சந்திப்பு
இந்திய உயர் ஸ்தானிகர் நீர் வழங்கல் அமைச்சருடன் சந்திப்பு
இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
இந்திய உயர் ஸ்தானிகராலயம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சகல
துறைகளிலும் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம்
கொடுத்திருப்பதாக உயர் ஸ்தானிகர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளினதும் பிரதமர்களுக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின்போது இந்த விடயம்
தொடர்பாக வலியுறுத்தப்பட்டிருந்ததாக உயர் ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
- நீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களின் முக்கியத்துவம் தொடர்பாக இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியிருந்த உயர்
- ஸ்தானிகர், தேசிய இலக்குகளின் அடிப்படையில் கடந்த ஆறு வருடங்களில் இந்திய அரசாங்கத்தின் அனுபவங்கள் மற்றும் சாதனைகளையும் குறிப்பிட்டிருந்தார்.
சமூக ரீதியிலான பங்களிப்புடன் இந்தியாவில் நீர் அடிப்படையிலான நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தேசிய அளவிலான சுகாதார திட்டங்கள் ஆகியவற்றின் கருத்தாக்கம்
மற்றும் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாகவும் அமைச்சருக்கு உயர் ஸ்தானிகர் பரந்தளவிலான தகவல்களை இந்த சந்தர்ப்பத்தில் வழங்கியிருந்தார்.
- இதேவேளை நீர் பற்றாக்குறை காணப்படும் பிரதேசங்கள் மற்றும் பாடசாலைகளில் நீர் தேவைகள் தொடர்பாக இலங்கை
- அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ள விடயங்கள் குறித்து அமைச்சர் இந்த சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.
ஆளுமை விருத்தி மற்றும் சமூக உட்கட்டமைப்பு ஆகியவற்றினை ஸ்தாபித்தல் உள்ளிட்ட கருதுகோள்கள் குறித்து இந்தியாவுடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை அமைச்சர் வரவேற்றிருந்தார்.
4.சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய இந்த விடயங்களில் இலங்கையின் தேவைக்கேற்ப ஒத்துழைப்பு வழங்கி
செயற்படுவதற்கு இந்தியா தயார் நிலையில் இருப்பதாக உயர் ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்
முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும்
சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்று வெகுஜன
ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட காட்டுப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்கள்
தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானங்களை
அறிவிக்கும் ஊடகவிலயாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.jkjl
இதற்கு பதிலளித்த அமைச்சர் இது தொடர்பான அறிக்கையை நாம் கோரியுள்ளோம்.
அறிக்கை கிடைத்த பின்னர் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு
இன்று (13.10.2020) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம்
மட்டக்களப்பில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நிகழ்ந்துள்ளது.
இவ்வருடத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்றாவது மரணமாக இது பதிவாகியுள்ளது. கடந்த
செப்டம்பர் 26 ஆந் திகதி தொடக்கம் ஒக்டோபர் 02 ஆந் திகதி வரையும் 16 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 நோயாளர்களும்,
வாழைச்சேனை, மட்டக்களப்பு மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 02 டெங்கு நோயாளர்களும்,
கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருநோயாளருமாக மொத்தம் 16 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்;டுள்ளனர்.
இருப்பினும் வாகரை, செங்கலடி, ஏறாவூர், வவுனதீவு, காத்தான்குடி, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி மற்றும் கிரான்
ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
மேலும் கடந்த 09 மாதங்களில் இம்மாவட்டத்தில் 2,248 போர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை எதிர்வரும் மழைகாலத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும்
நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சூழலை
துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
யாழ் மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளுடன் உயர்தரப் பரீட்சை
யாழ் மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளுடன் உயர்தரப் பரீட்சை
யாழ் மாவட்டத்தில் இன்று ஆரம்பமாகிய கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு 10,940 மாணவர்கள் சுகாதார
நடைமுறையினை பேணி தேற்றியுள்ளனர் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
86 பரீட்சை நிலையங்கள் மற்றும் 18 பரீட்சை இணைப்பு நிலையங்களில் யாழ் மாவட்ட மாணவர்கள் சுகாதார
நடைமுறைகளுடன் சமூக இடைவெளியினை பேணி பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுள் புங்குடுதீவு பிரதேசத்தில் இரண்டு மாணவர்கள் உயர்தர
பரீட்சாத்திகளாவர். இவர்கள் இருவருக்கும் வேலணை மத்திய கல்லூரி பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதுவதற்குரிய
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, குறித்த இரண்டு மாணவர்களும் தனித்தனி வகுப்பறைகளில் தமது பரீட்சையினை எழுதுவதற்கான
ஏற்பாடுகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவர்கள் இருவரும் வேலணை மத்திய கல்லூரி மாணவர் விடுதியில் தனியான இடத்தில் தங்க வைக்கப்பட்டு பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை உயர்தரப் பரீட்சையிலே வடக்கு மாகாணத்தில் 166 பரீட்சை நிலையங்களில் இருந்து 20,325 மாணவர்கள்
தோற்றவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு
யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 375 மாணவர்கள் (71 ஆண் 304 பெண்) தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியானது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்படவு ள்ளதன் காரணமாக மாணவர்களை தமது
வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையினை இன்றைய தினம் பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
அதனடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு உரியவர்கள் தனித்தனியான பேருந்து வண்டிகளில் ஏற்றப்பட்டு அவர்களது
சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையினை கல்லூரி நிர்வாகம் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.
சுமார் எட்டு பேருந்துகளில் மாணவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
அத்தோடு குறித்த கல்லூரியானது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றும் முகமாக ராணுவத்தினரால் முன்னேற்பாட்டு
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நேற்றைய தினம் வவுனியா
தேசிய கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டமையம் குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் 2 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிப்பு
மன்னார் மாவட்டத்தில் 2 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிப்பு
மன்னார் மாட்டத்தில் 2 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்கள்
மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட கிராமமாக பெரிடப்பட்டிருப்பதாக
Covid19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின்
பிரதானியும் படை அதிகாரிகளின் பதில் தலைமை அதிகாரியும்
இராணுவத் தளபதியுமான லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொரனோ மேலும் அதிகரிக்கலாம் – இராணுவ தளபதி எச்சரிக்கை
பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் எதிர்வரும் 5 நாட்களுக்குள் கொரோனா தொற்றாளர்கள், அடையாளம் காணப்படலாம் என
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று காலை தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்கள்
பலர், நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளதாகவும், இதன்மூலம்
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிரதேசங்களில்
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால்,
இன்னும் 2,3 நாட்களில் அந்த பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவை நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குண்டு வெடித்தது எப்படி – மைத்திரியிடம் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில்
விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (05) ஆஜராகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில்
விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த 05ஆம் திகதி முன்னிலையாகினார்.
அன்றைய தினம் வாக்குமூலமளிக்க வருமாறு அவருக்கு கடந்த மாதம் 22ஆம் திகதி ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவரிடம் 7 மணித்தியாலம் வாக்குமூலம் பெற்றுக்
கொள்ளப்பட்டுள்ளதுடன், இன்று (12) மீண்டும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை, குறித்த ஆணைக்குழுவில் கடந்த 06ஆம் திகதி ஆஜரான
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒன்றரை மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கினார்..
இதனையடுத்து, நாளை (13) ஆணைக்குழுவில் மீண்டும்ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்துகள் வீடுகளுக்கு
அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்துகள் வீடுகளுக்கு
அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சைகளை மேற்கொள்ளும்
நோயாளர்களுக்கான மருந்து வகைகளை அவர்களது வீடுகளுக்கே வழங்கும் வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் தற்பொழுது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கவனத்தில் கொண்டு கிளினிக் மருந்துகளை நாளை
முதல் வீடுகளுக்கு விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டமாக
இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதுடன், பின்னர் இதனை விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வைத்தியசாலைகளுக்கு
சிகிச்சைக்காக வருவது பொருத்தமானது அல்ல என்று சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சையை பெறுவதில் எதிர்நோக்கப்படும் நெருக்கடி காரமணமாக நோயாளர்களுக்கு
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகம் என்றும் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
அஞ்சல், தொலைபேசி ஊடாக ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்புகொள்ள சந்தர்ப்பம்
அஞ்சல், தொலைபேசி ஊடாக ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்புகொள்ள சந்தர்ப்பம்
கொவிட் 19 நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக சுகாதாரத் துறை வழங்கியுள்ள
பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு ஏற்ப பொது மக்களுக்கு ஜனாதிபதி
அலுவலகத்திற்கு வருகைதருதல் மற்றும் அலுவலகத்தில் குறைந்தளவான
அலுவலர்கள் சேவையை வழங்குதல் என்பவற்றின் மூலம் ஏற்படும் அசௌகரியங்களை
கவனத்திற் கொண்டு, அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக முன்வைக்கப்படும்
பொது மக்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல்
பிரிவு, ஒம்புட்ஸ்மன் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி நிதியத்துடன் பின்வரும் இலக்கங்களின் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.
ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு – 0114354550/0112354550
தொலைநகல் 0112348855
ஒம்புட்ஸ்மன் அலுலவகம் – 0112338073
ஜனாதிபதி நிதியம் – 0112354354
கிளை எண் (4800/4814/4815/4818)
தொலைநகல் – 0112331243
சுகாதார பாதுகாப்புகளுடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை
சுகாதார பாதுகாப்புகளுடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை
சுகாதார பாதுகாப்பிற்கு மத்தியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (11) சற்று நேரத்தில் ஆரம்பதாகவுள்ளது..
இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து 36 மத்திய நிலையங்களில் இந்த பரீட்சை
நடைபெறவிருக்கிறது. 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 பேர் பரீட்சைக்கு தோற்றவிருக்கிறார்கள். தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள்
தமது அனுமதி அட்டையினை ஊரடங்கு சட்டத்துக்கான அனுமதி அட்டையாக பயன்படுத்த முடியும். அதன் புகைப்பட பிரதி ஒன்றை
மாணவர்கள் தம்வசம் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
பரீட்சை இன்று 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பதாகவுள்ளது. பகுதி 1 மு.ப. 09.30 – 10.30 மணிவரையும், பகுதி 2 11.00 – 12.15மணி வரையும் இடம்பெறும்.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு சிங்கள மொழிமூலம் 248,072 மாணவர்கள், தமிழ் மொழிமூலம் 83,622 மாணவர்கள்
தோற்றுகின்றனர்.கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு
தேர்வுக்கு அமர தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.
சகல பரீட்சை நிலையங்களிலும் கொவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும்இ நடமாடும் சேவைக்கான ஏற்பாடுகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறினார். சகல பரீட்சார்த்திகளும்
பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
தமிழர் பகுதியில் 4 கொரோனா வைத்தியசாலைகள்
தமிழர் பகுதியில் 4 கொரோனா வைத்தியசாலைகள்
கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் உள்ள நான்கு
வைத்தியசாலைகள் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பில் சுகாதார அமைச்சுப் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சுகாதாரப்
பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன், மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தும்
திட்டத்திற்கு அமையவே இவ்வாறுப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை,
கல்முனை உள்ளிட்டச் சுகாதாரப் பிரிவுகளில் உள்ள வைத்தியசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.
ஆடை தொழிற்சாலையின் 119 பேரை தேடும் பொலிஸ்
ஆடை தொழிற்சாலையின் 119 பேரை தேடும் பொலிஸ்
பிரன்டிக்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்த மேலும் 119 பேர் தொடர்பில் விசேடமாக
தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கம்பஹா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் கொவிட் 19 நிலைமை தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினத்தில் (09) குறித்த எண்ணிக்கை சுமார் 250 ஆக
காணப்பட்ட நிலையில் அதனை குறைத்துக் கொள்ள கூடியதாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
குறித்த நபர்களை தேடுவதற்காக பாதுகாப்பு பிரிவினால் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த நபர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தல் அல்லது சுகாதார
நிலையங்களுக்கு அனுப்பி வைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில்
கம்பஹா மாவட்டத்தினுள் கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த கூடியதாக இருக்கும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகர், கெப்டன் விகாஷ் சூட், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று (ஒக்டோபர்,09) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் இருதரப்பு
உறவுகளை சுட்டிக்காட்டிய கெப்டன் விகாஷ், அண்மையில் நீயூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு “ஒபெரேசன்ஸ்
சாகர் ஆரக்ஷா” நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக நிறைவுசெய்தமைக்கு தனது பாராட்டினையும் தெரிவித்தார்.
குறித்த பணியினை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லும் வகையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய அரசுக்கு நன்றி
தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், இரு நாடுகளுக்கிடையேயான துரித செயற்பாடு மற்றும் தீவிர நடவடிக்கை காரணமாக கடல்சார்
கூட்டுறவின் முக்கியத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடல் வளங்கள், கடல்வாழ் இனங்கள், சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடி வளங்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட
கடற்படை ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேஜர் ஜெனரல் குணரத்ன இதன்போது பாராட்டினார்.
இதேவேளை, மாற்றுத்திரனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்தியாவின் ஜெய்பூர் செயற்கை கால்கள் தயாரிப்பு
தொடர்பாக இலங்கைக்கு அறிமுகம் செய்வது தொடர்பில் கெப்டன் விகாஷ் இதன்போது கலந்துரையாடினார்.
மேலும் இங்கு இடம்பெற்ற சினேகபூர்வமான கலந்துரையாடலில், இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர செயற்பாடுகள் குறித்து
இரு உயர்மட்ட அதிகாரிகளினாளும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் மீது பொலிசார் தாக்குதல் video
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் மீது பொலிசார் தாக்குதல் video
இலங்கைத் தமிழரகசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஜெயக்குமார் மீது
பொலிஸ் உப பரிசோதகரும் கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான
ஜெசிந்தன் கிளிநொச்சி பொதுச் சந்தை வளாகத்தில் வைத்து நேற்றைய தினம்
தாக்குதல் மேற்கொண்டுள்ளார்
ஜெயக்குமார் ஒரு முன்னாள் போராளி ,மாற்றுத்திறனாளி என்பதுடன் அவர் ஒரு
சந்தை வர்த்தகரும் கூட
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
நேற்றைய தினம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தந்து மரக்கறி வாணிபத்தில்
வியாபாரம் செய்து கொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு
உறுப்பினர் ஜெயக்குமார் மீது சிவில் உடையில் இருந்த பொலிஸ் உப
பரிசோதகரும் கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான ஜெசிந்தன்
இழுத்து விழுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்
நேற்றைய தினம் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு விஜயம் மேற்கொண்ட ஜெசிந்தன்
தலமையிலான பொலிஸ் குழுவினர் சந்தை வர்த்தகர்களிடம் முகக்கவசம் அணியுமாறு
அறிவுறுத்திச் சென்றிருந்தனர் மீண்டும் 5 நிமிடத்தில் வந்த அவர்கள்
ஜெயக்குமாரிடம் ஏன் முகக்கவசம் அணியவில்லை என கேட்டுள்ளார்கள்
நண்பகல் என்பதால் நுகர்வோர் அதிகமாக இருக்கிறார்கள் கடையை இப்படியே
விட்டு செல்ல முடியாது அதனை விட ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி எனது
உதவியாளர் வருகைக்காக காத்திறுக்கின்றேன் என பதிலளித்துள்ளார்
உனக்கு கடைக்கு போய் வாங்குவதற்கு என்ன என்று கேட்டவாறூ சிவில் உடையில்
இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாற்றுத்திறனாளியான ஜெயக்குமா ரை இழுத்து
வீழ்த்தி தாக்கியுள்ளார்
தாக்குதலுக்குள்ளான தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுஉறுப்பினரும் சந்தை
வர்த்தகருமான ஜெயக்குமார் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபர்
காரியாலயத்திலும் மனித உரிமை ஆணைக் குழுவிலும் தனது முறைப்பாட்டை பதிவு
செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தாக்குதல் காணொளி இணைக்கப்பட்டுள்ளது






