Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கையில் பரவும் கொரனோ – 115 பேர் பாதிப்பு
இலங்கையில் பரவும் கொரனோ – 115 பேர் பாதிப்பு
நேற்றைய தினம் மினுவாங்கொட கொத்தனியில் அடையாளம் காணப்பட்ட 115 தொற்றாளர்களும் நாட்டின் 13
பிரதேசங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனரென,
கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காண்பட்டவர்களுள் 32 பேர்
மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 30 பேர் கட்டுநாயக்க
பிரதேசத்தையும் 24 பேர் திவுலப்பிட்டிய, 11 பேர் பிங்கிரிய, 10 பேர் கம்பஹா
பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மத்தகம, ராகம, காலி, குளியாப்பிட்டிய, நிட்டம்புவ, கொடிகாவத்த,
கராப்பிட்டிய, கஹத்துட்டுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு
ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு
ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு
ரூ.5,000 கொடுப்பனவு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக, 400 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு
அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
“இந்த கொடுப்பனவை செவ்வாய்க்கிழமை முதல் வழங்குவதற்கு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.
கண்முன்னே எரிந்த கடை – கதறிய முதலாளி
கண்முன்னே எரிந்த கடை – கதறிய முதலாளி
தலவாக்கலை நகரில் இலங்கை வங்கிக்கு அருகில் உள்ள சில்லறை கடை
ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தீ விபத்து இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
தலவாக்கலை பொலிஸார், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார்
ஒரு மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதேவேளை குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உறவினர்கள்
கடையில் இல்லாத போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும்,
தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில்
தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு நகரத்தில் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பிசிஆர் பரிசோதனை
கொழும்பு நகரத்தில் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பிசிஆர் பரிசோதனை
கொழும்பு மாவட்ட மக்களை கொவிட் 19 வைரசு தொற்றின் பிடியில் இருந்து
மீட்டெடுப்பதற்காக பல வேலைத்திட்டங்கள் தற்சமயம்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரத்தில் குடிசைவாழ் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று
பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பலநடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய பஸ் தரிப்பு நிலையம், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் நபர்கள்
தெரிவு செய்யப்பட்டு அவர்களிடம் பிசிஆர் பரிசோதனைகள்
செய்யப்படுவதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை – கனடாவுக்கு லட்டு கொடுத்த டக்ளஸ்!
20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை – கனடாவுக்கு லட்டு கொடுத்த டக்ளஸ்!
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தினை குறைப்பதற்கு கனேடிய அரசாங்கத்தின்
அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு (16.10.2020) வருகை தந்த கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட்
மைக்கினன் உடனான கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இலங்கையில் கடற்றொழிலாளர்களினால் அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவுகளில் சுமார் 35 வீதத்திற்கு
மேற்பட்டவை விற்பனைக்கு தரமற்றவை என்ற அடிப்படையில் வீசப்படுகின்றன.
ஆனால், கனடா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் குறித்த இழப்பு வீதம் மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகிறது.
இந்நிலையிலேயே கனேடிய உயர் ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கனேடிய உயர் ஸ்தானிகர், அதுதொடர்பாக சாதகமாக பரசீலிப்பதாக தெரிவித்ததுடன்
இலங்கையின் சமுத்திர பல்கலைக் கழகத்துடன் இணைந்து கனேடிய கடல்சார் கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகின்ற
செயற்பாடுகளினால் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.
மேலும், இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கனேடிய உயர் ஸ்தானிருடன் கருத்துக்களை பகிர்ந்து
கொண்ட அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்டத்தை உருவாக்கி வருவதாகவும், உயர்
நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசியலமைப்பில் குறித்த திருத்தச் சட்டம் உள்வாங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், 20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது எனவும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்
சட்டத்தினை சரியாக கையாள்வதே தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக் கொள்வதற்கான ஆரம்பம் என்பதை தான் நம்புவதாகவும் தெரிவிததார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கம் தென்னிலங்கை மக்களின் ஆதரவினால் தெரிவு செய்யப்பட்ட போதிலும், தற்போது முழுநாட்டு மக்களினதும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும்
வகையில் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்களின் மத நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில்
நவராத்திரி விழாவை கொண்டாடுவதற்கு அண்மையில் அரசாங்கத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டுள்மையையும் கனேடிய உயர் ஸ்தானிகருக்கு சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
110 பேருக்கு ஒரே நாளில் கொரனோ – இலங்கையில் கோர தாண்டவம்
110 பேருக்கு ஒரே நாளில் கொரனோ – இலங்கையில் கோர தாண்டவம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 110 பேர் பாதிக்க பட்டுள்ளதாக
இலங்கை சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன
மேலும் இதன் பாதிப்பு அதிகரித்து செல்கிறது ,இந்த நோயின்
தாக்குதலை தடுக்க பல நகரங்கள் தனிமை படுத்தல் சட்டத்திற்கு
உள்ளாக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
குண்டு வெடித்தது எப்படி – மைத்திரியிடம் இன்றும் விசாரணை
குண்டு வெடித்தது எப்படி – மைத்திரியிடம் இன்றும் விசாரணை
இலங்கையின் முன்னாள் நல்லாட்சி மைந்தர் என அழைக்க பட்ட
மைத்திரி ஆட்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில்
மைத்திரியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்துகிறது
இன்றும் அவர் மீது இந்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளனவாம்
யாழ். கோண்டாவில் பகுதியில் -மோட்டார் சைக்கிள்களில் வந்து வாள்வெட்டு தாக்குதல்
யாழ். கோண்டாவில் பகுதியில் -மோட்டார் சைக்கிள்களில் வந்து வாள்வெட்டு தாக்குதல்
யாழ். கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றின்
மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று (16) இரவு 8.30 மணி அளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை
மறைத்தவாறு வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டு கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
தாக்குதலில் வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்
ஒன்றும், வீட்டின் கதவு, ஐன்னல்களும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக-நிஷாந்த த சொய்சா நியமனம்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக-நிஷாந்த த சொய்சா நியமனம்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த த சொய்சா
நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொரனோ நெருக்கடி- பாதிக்கப்பட்ட வர்த்தகர்ளுக்கு 133 பில்லியன் ரூபா நிதி உதவி
கொரனோ நெருக்கடி- பாதிக்கப்பட்ட வர்த்தகர்ளுக்கு 133 பில்லியன் ரூபா நிதி உதவி
இலங்கை மத்திய வங்கி, சௌபாக்யா கொவிட் – 19 புத்துயிரளித்தல் வசதியினூடாக ரூ.178 பில்லியன் தொகையான 61,907 கடன்களுக்கு ஒப்புதலளித்துள்ளது
இலங்கை மத்திய வங்கியானது 2020 ஒத்தோபர் 15ஆம் திகதி வரையில் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற 61,907 கடன்
விண்ணப்பங்களுக்கு ஒப்புதலளித்தது. இந்த விண்ணப்பங்கள் மொத்தமாக ரூ.177,954 மில்லியனை வகைகூறுவதுடன் சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் வசதியின் மூன்று
கட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது வரையில், உரிமம்பெற்ற வங்கிகள் நாடுமுழுவதும் பாதிக்கப்பட்ட 45,582
வியாபாரங்களுக்கிடையில் ரூ.133,192 மில்லியன் கடன்களை விடுவித்துள்ளது. (தகவல்களுக்கு அட்டவணை 01 இனைப் பார்க்கவும்)
கடன் திட்டத்தின் முதற்கட்டம் 2020 ஏப்பிறல் 01 இலிருந்து அமுலுக்குவரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. கடன் திட்டத்தின் கட்டம் II மற்றும் கட்டம் III ஆகிய இரண்டும் 2020 யூலை
01இல் இருந்து அமுலுக்குவரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த திட்டங்களின் நோக்கமானது ஆண்டிற்கு 4 சதவீத வட்டிவீதத்தில் மொத்தமாக ரூ.150 பில்லியனை தொழிற்படு
மூலதனக் கடன்களாக வழங்குவதாகும். இந்த கடன்கள் 6 மாத சலுகைக்காலம் உள்ளடங்கலாக 24 மாதங்கள் மீளச்செலுத்தும்
காலத்தினை வழங்குகின்றது. கொவிட்-19 வெளித்தாக்கத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சுயதொழில் மற்றும் தனிநபர்கள்
உள்ளடங்கலான வியாபாரங்கள் இதன் பயன்பெறுநர்களாகக் காணப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட வியாபாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற அதிக எண்ணிக்கையிலான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு,
இலங்கை மத்திய வங்கியானது முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட ரூ.150 பில்லியன் வரையறையினைக் கருத்திற்கொள்ளாது விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தீர்மானித்தது.
அறிவிக்கப்பட்ட முடிவுத்திகதி வரையில் கிடைக்கப்பெற்ற பாதிக்கப்பட்ட வியாபாரங்களின் அனைத்து விண்ணப்பங்களும் இந்தக்கடன் திட்டத்தினூடாக சேவையாற்றப்படுகின்றது.
20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான விவாதம் குறித்து கட்சி தலைவர்களிடையே கலந்துரையாடல்
20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான விவாதம் குறித்து
கட்சி தலைவர்களிடையே கலந்துரையாடல்
20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ள சரத்துக்கள் அரசியல் யாப்பிற்கு
அனுகூலமானதா இல்லையா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள
முடிவு சபாநாயகரினால் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான விவாதம் நடத்தப்படும் நாட்கள் குறித்து கட்சி தலைவர்களிடையே
கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கட்சி
தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெறவுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 147 பேர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 147 பேர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில்
19 பொலிஸ் வலையங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை
நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் இன்று காலை 8.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரையில் திறந்திருக்கும்.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல்
ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒக்டோபர்
மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன். 60 வாகனங்கள் பொறுப்பேற்க்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவற்றுள் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளாகும்.
பிரதமர் மகிந்தா அலுவலகத்தின் பிரதானியாக மகன் யோஷித நியமனம்
பிரதமர் மகிந்தா அலுவலகத்தின் பிரதானியாக மகன் யோஷித நியமனம்
பிரதமர் அலுவலகத்தின் பிரதானியாக யோஷித ராஜபக்ஷ
நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அண்மையில் யோஷித ராஜபக்ஷவை சந்தித்த இலங்கைக்கான
பதில் சீன தூதுவர் ஹுவெய், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய டுவிட்டர்
உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய டுவிட்டர்
டுவிட்டர் சிறிது நேரம் முடங்கியதில் பாதுகாப்பு மீறலோ அல்லது ஹேக் செய்யப்பட்டதற்கான ஆதாரமோ இல்லை என டுவிட்டர் நிறுவனம் கூறி உள்ளது.
உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய டுவிட்டர் -நெட்டிசன்கள் டென்ஷன்
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நேற்று பிற்பகல் முடங்கியது. பயனர்கள் டுவிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஏற்கனவே வந்த தகவல்களையும் பார்க்க முடியவில்லை. திரும்பத் திரும்ப டுவிட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டும் பலன் அளிக்கவில்லை. இதனால் நெட்டிசன்கள் டென்ஷன் அடைந்தனர்.
ஹேக்கர்கள் டுவிட்டரை முடக்கியிருக்கலாம் என பலரும் கருத்து பதிவிட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு டுவிட்டர் செயல்பட தொடங்கியது.
இதுபற்றி டுவிட்டர் நிறுவனம் கூறுகையில், ‘பயனர்களில் பலருக்கு டுவிட்டர் செயல் இழந்திருக்கும். எங்கள் உள் அமைப்புகளில்
நாங்கள் செய்த கவனக்குறைவான மாற்றம் காரணமாக சிக்கல் ஏற்பட்டது. தற்போது பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்டது.
இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது. பாதுகாப்பு மீறல் அல்லது ஹேக் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என டுவிட்டர் விளக்கம் அளித்துள்ளது.
இதேபோல் கடந்த பிப்ரவரி மாதமும் டுவிட்டர் சில மணி நேரம் முடங்கி, பின்னர் செயல்படத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் பெரும்பாலான அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் முதல்
சாமானிய மக்கள் வரை அனைத்து தரப்பினரும் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். அரசியல் தலைவர்கள தங்கள்
கருத்துக்களை இப்போது பெரும்பாலும் டுவிட்டர் மூலமாகவே கூறுகின்றனர். தகவல் வேகமாக உலகம் முழுவதும்
சென்றடைவதால் பலரும் டுவிட்டரை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்ற CID
சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்ற CID
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் வாக்குமூலம்
பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர், எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் தொலைபேசி
உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் திறப்பு
தனிமைப்படுத்தல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் திறப்பு
தற்பொழுது தனிமைப்படுத்தல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள
அனைத்து பிரதேசங்களிலும் உணவுப் பொருட்களை விற்பனை
செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் (16) காலை 8 மணி தொடக்கம் இரவு
10 மணி வரை திறந்திருக்கும் என்று COVID 19 வைரசு பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
காணி அபகரிப்புகளை தடுக்க சட்ட நடவடிக்கை
காணி அபகரிப்புகளை தடுக்க சட்ட நடவடிக்கை
எதிர்காலத்தில் நாட்டில் காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும், சட்டவிரோத நடவடிக்கைகளில்
ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான சட்டவிரோதச் செயல்களுக்கு வாய்ப்பு உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்கள் தொடர்பில் மாவட்ட
செயலாளர்கள் ஃ அரசாங்க அதிபர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல், ‘நில விவகாரத்தில், தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பாதுகாப்பு செயலர் வலியுறுத்தினார்.
எமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பொய்யான பரப்புரைகளை
பொருட்படுத்தாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக எமது பணிகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்லவுள்ளோம் என மேஜர் ஜெனரல் குணரத்ன மீண்டும் வலியுறுத்தினார்.
நாரெஹென்பிட்டவில் உள்ள உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் நேற்று (ஒக்,15) நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள்,
அரசாங்க அதிபர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக கருத்துவெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், ‘கம்பஹா மாவட்டத்தில் கொரோனா
வைரஸ் பரவும் நிலைமை தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டு வந்ததன் விளைவாக, உரிய அதிகாரிகளுடன் எங்களால்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக ஒருங்கிணைக்க முடிந்தது’ என தெரிவித்தார்.
பாதுகாப்பு படைகள், சுகாதாரத் திணைக்களம் மற்றும் அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாட்டில்
காணப்பட்ட முன்னைய கொரோனா வைரஸ் மூன்று அலைகளையும் எம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முகக்கவசம் அணிவதால் ஏற்படும் பயன்குறித்து விளக்கம்
முகக்கவசம் அணிவதால் ஏற்படும் பயன்குறித்து விளக்கம்
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு முகக்கவசத்தை அணிவதன் மூலம் சுமார் 70 சதவீதத்தைக்
கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயரூபன் பண்டார கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடக
சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இந்த தொற்று சமூகத்தின் மத்தியில் பரவில்லை என்றும் கூறினார்.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகிரிக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட
தானியங்கி பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களில் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்படவுள்ளது. இது தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.
நாட்டில் இம்முறை கொரோனா வைரஸ் பரவல் முன்னரிலும் பார்க்க
அதிகமாக காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஜயரூபன் பண்டார மேலும் தெரிவித்தார்.
மீசாலையில் பெண்ணை மோதி தள்ளிய பேரூந்து – படம் உள்ளே
மீசாலையில் பெண்ணை மோதி தள்ளிய பேரூந்து – படம் உள்ளே
இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் மீசாலை புதூர் சாந்தி பகுதியில்
மிதிவண்டியில் பயணித்த பெண் ஒருவரை அவ்வழியே பயணித்த அரச பேரூந்து மோதி தள்ளியது
அதில் அந்த பெண் பலத்த காயமடைந்துள்ளார் ,உயிருக்கு ஆபத்தான
நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,சாரதிகள் அலட்சிய போக்கே
இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது ,தொடர்ந்து
போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு- இராணுவம் பொலிஸ் குவிப்பு
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு- இராணுவம் பொலிஸ் குவிப்பு
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில்
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்குச் சட்டம் காலை 5.00 மணிக்கு அமுலுக்கு வந்ததாக
கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் தலைவரும்
இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலானபோதிலும்,
கட்டுநாயக்க சுதந்திர வலயத்திலுள்ள தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கும்.
இவற்றின் பணியாளர்கள் தமது நிறுவன அடையாள அட்டையை
ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியுமென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.






