Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி- ஐநாவில் முழக்கம்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி- ஐநாவில் முழக்கம்
இலங்கையில் 2019 ஏப்பிரலில் நடந்த ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி வலைத் திட்டத்தின் ஒரு பகுதிதான்.”
-இவ்வாறு ஜெனிவா அமர்வில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார் கொழும்புப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் பிரதான அரங்கில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:-
“2019 ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 14 நாடுகளைச் சேர்ந்த 47 வெளிநாட்டவர்கள், 52 குழந்தைகள் உட்பட 269 பேர் உயிரிழந்தனர். 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்தப் படுகொலைகள் சில இஸ்லாமிய தீவிரவாதிகளின் வேலையாகத்தான் இருக்கும் என்றே முதல் மனப்பதிவு ஏற்பட்டது. ஆனால், தொடர்ந்து நடைபெற்ற புலனாய்வுகள் இந்தப் படுகொலைகள் மிகப்பெரும் அரசியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்பதைச் சுட்டி நிற்கின்றன.
நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் – சிவில் அமைப்புக்கள் உண்மைகளைப் பின்பற்றிச் சென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும் – இலங்கையின் தற்போதைய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கத் தவறிவிட்டது.
தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர்ந்து, அதற்குக் காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்குப் பதிலாக நீதிக்காக குரல் எழுப்புபவர்களைத் துன்புறுத்தவும் அச்சுறுத்தவும் முயற்சிக்கப்படுகின்றது.
இதனால் இந்தக் கொடூரமான குற்றங்கள் நடந்து ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி நாம் இன்னும் அறியாமல் இருட்டில் இருக்கின்றோம்.
இது பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை கடுமையாக மீறும் விடயம் என்பதால், கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலினால் தொடங்கப்பட்ட சாட்சிய சேகரிப்பைத் தொடரவும், அதன்மூலம் ஈஸ்டர் ஞாயிறு படுகொலையின் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வருவதற்கான விசாரணை வழிமுறை ஒன்றை வகுக்கவும் ஆதரவு தருமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மற்றும் அதன் அனைத்து உறுப்பு நாடுகளையும் நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” – என்றா
இலங்கைப் பெண்கள் சமூகப் பொறுப்புடன் முன்னேறி வருகின்றனர்
இலங்கைப் பெண்கள் சமூகப் பொறுப்புடன் முன்னேறி வருகின்றனர்
வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:
வாழ்த்துச் செய்தி – 2022 மார்ச் 08
ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக மற்றும் பாட்டியாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வழிநடத்தும் துணிச்சலான பெண்களின் அர்ப்பணிப்பை
நினைவுகூரும் சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு நிலையான சமுதாயத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் கருணை, ஆளுமை ஆகியவற்றைப் பகிரும் ஒரு பெண்ணின் பெருமையை ஒரு நாளுக்கு மட்டும் வரையறுக்க முடியாது.
மனித இனத்தை மாற்றிய அனைத்து தீர்க்கதரிசிகளின் பிறப்பு முதல், மனித இருப்பை அடையும் வரை அனைத்திற்கும் பெண்தான் காரணம் என்பது இரகசியமல்ல.
இதனால்தான், பிரபல ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கோர்க்கி அவர்கள், சூரிய ஒளி மற்றும் தாய்ப்பாலில் இருந்தே உலகம் படைக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.
இந்த தைரியமான பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக நமது அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும் என்று நான் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறேன்.
“நிலையான எதிர்காலத்திற்கு இன்று பாலின சமத்துவம்” என்ற சர்வதேச எண்ணக்கருவின் கீழ் கொண்டாடப்படும் இம்முறை சர்வதேச மகளிர் தினத்தில்
உங்களுக்கு எதிரான வன்முறைகளும் பாகுபாடுகளும் இலங்கை சமூகத்திலிருந்து துடைத்தழிக்கப்படும் தினத்தை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.
“அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஊடாக நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் பெண்களின் பங்கு சரியான முறையில் பாராட்டப்படும் என நம்புகிறேன்.
கொவிட் தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் ஏற்பட்ட பல்வேறு சிரமங்களை சமாளிப்பதற்கு தொலைநோக்கு சிந்தனையுடன், சிக்கனமாகவும் பொறுமையாகவும்
செயற்படும் பெண்கள் நாட்டில் காணப்படும் சவால்களை வெற்றி கொள்வதற்கு பெற்றுக் கொடுக்கும் சிறந்த பங்களிப்பு நம் அனைவருக்குமான தைரியமாகும்.
நீங்கள் “அவளுக்கு” பெருமை சேர்ப்பதற்கு இருமுறை சிந்திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மஹிந்த ராஜபக்க்ஷ
24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு
24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான 13 வாகன விபத்துகளில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிரிபாவ, இங்கிரிய, புவரசங்குளம், அநுராதபுரம், பொரளை, பதியத்தலாவ மற்றும்
ஹபரணை ஆகிய பகுதிகளில் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், ஆனமடுவ, நவகுருதுவத்தை, இரத்தினபுரி, அங்குனகொலபெலஸ்ஸ, கிளிநொச்சி மற்றும் வெலிக்கடை ஆகிய இடங்களில் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
உயிரிழந்தவர்கள் 12 வயதுக்கும் 78 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும்
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த எண்ணெய் விலை
13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த எண்ணெய் விலை
ரஷ்யா – யுக்ரைன் போர் நெருக்கடி நிலையை அடுத்து, கடந்த 13 வருடங்களுக்குப்
பின்னர் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலராக உயர்வடைந்துள்ளது.
இதனால் மசகு எண்ணெய் இறக்குமதியாளர்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்
மைத்திரி அதிரடி: மொட்டிலிருந்து விலக முடிவு
மைத்திரி அதிரடி: மொட்டிலிருந்து விலக முடிவு
தற்போதைய அரசாங்கத்தில் இருந்து முழுமையாக விலகுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தீர்மானம், கட்சியின் தொகுதி அமைப்பாளர்களால் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில்
கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடனான விசேட சந்திப்பிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
“தற்போதை அரசியல் பிரச்சினைக்கு மத்தியில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை என்ன?” என இந்தக் கூட்டத்தின் போது மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள், அரசாங்கத்தில் இருந்து விலகவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், “அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு இது சரியான தருணம் அல்ல, சரியான சந்தர்ப்பத்தில் விலகுவோம்” என மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளார்.
இந்நிலையிலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை
பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நாளை (08) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம்
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம்.சர்வதேச குளுக்கோமா வாரம் இன்று ஆரம்பமாகின்றது.
இதற்கமைவாக நாட்டில் உள்ள மக்களுக்கு குளுக்கோமா தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக நாடு முழுவதிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்த வாரத்தல் முன்னெடுக்கப்படுவதாக தேசிய கண் வைத்தியசாலையின் விஷேட கண் வைத்தியர் பிரதிபா கே ஸ்ரீவர்தன தெரிவித்துள்ளார்.
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்ட அவர் 40 வயதுக்கு மேற்பட்டோர் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இதேவேளை நாட்டில் உள்ள குளுக்கோமா நோயாளர்களை கண்டறிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய கண் வைத்தியசாலை விஷேட கண் வைத்தியர் மேலும் தெரிவித்தார்
இந்த குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் நிலையில் பெருமளவான மக்கள் அபா யா அந்நிலையில் உள்ளனர்
நவீன தொழில் நுடபத்திற்குள் நுழைந்துள்ள மக்கள் கண் பார்வை இழக்கும் அதிகம் கணனிகள் கைபேசிகள் என்பனவற்றை பத்துக்கு மேற்பட்ட அநித்தியாலங்கள் தொடர்ச்சியாக பாரவியிட்ட வண்ணம் உள்ளனர்
இதனால் கண்ணில் பாயும் கதிர்வீச்சு தாக்குதல் குளுக்கோமா நோயினால் அதிகம் ஏற்படுத்தி விடுகிறது ,
இந்த நோயின் குளுக்கோமா தாக்குதல் அதிகரிப்பு மக்களுக்கு தெரியாமலே மிக நுணுக்கமாக மேற்கொள்ள படுகிறது அதற்கு நாம் இதற்கு எதிராக செயல் படும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்
அந்த உணவுகள் என்ன என்பதை கண் பார்வை இழக்கும் அபாயம் வைத்தியரிடம் கேட்டு தொடர்பு கொள்ளவும்
ஆரையம்பதியில் சர்வதேச மகளிர் தினம்
.ஆரையம்பதியில் சர்வதேச மகளிர் தினம்
மார்ச் 08ஆந் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர்
தினத்தின நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஆரையம்பதி சிறுவர் பூங்காவிற்கு அருகில் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தின்
தலைமையில் (06) திகதி ஆரம்பமானதுடன் இதில் குடும்ப வன்முறை தொடர்பான வீதியோர நாடகம் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் உதவி பிரதேசசெயலாளர் திருமதி.வி. லோகினி, கிராமசேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , ஆரையம்பதி கிழக்கு
மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சிறுவர் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
ஜனாதிபதி,பிரதமர் தலைமையில் பாரிய சீமேந்துத் தொழிற்டசாலை திறப்பு
ஜனாதிபதி,பிரதமர் தலைமையில் பாரிய சீமேந்துத் தொழிற்டசாலை திறப்பு
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்பட்ட அதிநவீன வசதிகளைக் கொண்ட பாரிய சீமெந்துத் தொழிற்சாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் தலைமையில் இன்று (07) திறக்கப்படவுள்ளது.
மாகம்புர லங்வா தொழிற்சாலையானது 63 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இது அந்த வலயத்தின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலையாகும்.
முதற்கட்டமாக வருடாந்தம் இரண்டு தசம் எட்டு மில்லியன் மெற்றிக்தொன் சீமெந்து உற்பத்தி செய்யப்படும். ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கொழும்புத் துறைமுக நகர் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்டு முன்னணி நிர்மாண வேலைத்திட்டங்களுக்குத் தேவையான சீமெந்து வழங்கலை இந்தத் தொழிற்சாலையே மேற்கொள்ளும் என நிறுவனத்தின் தலைவர் நந்தன லொக்குவிதான தெரிவித்தார்.
இந்தத் தொழிற்சாலையின் உற்பத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து நாட்டின் சீமெந்துத் தட்டுப்பாடு இல்லாமல் போகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
78 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தடை
78 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தடை
சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு மூலம் 78 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக பணம் சம்பாதித்த 1,100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்
விபத்தில் தந்தை , மகன் பலி – பேரூந்தினை அடித்து நொருக்கிய மக்கள்
விபத்தில் தந்தை , மகன் பலி – பேரூந்தினை அடித்து நொருக்கிய மக்கள்
வவுனியா – குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலியாகினர்.
இதனையடுத்து கோபமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டமையால் குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
வவுனியா – குருக்கள்புதுக்குளம் பகுதியில் மன்னார் பறயநாலங்குளம் பிரதான வீதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.
மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து குருக்கள் புதுக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, உள் வீதியில் இருந்து பிரதான வீதிக்கு வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளைத் செலுத்திச்சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகியதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.
விபத்தினையடைந்து ஆத்திரமடைந்த கிராமமக்கள் பேருந்தினை தாக்கியமையால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த பூவரசங்குளம் பொலிசார் நிலமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். எனினும் அது பலனளிக்காத நிலையில் விசேட அதிரடிப்படையினர் களத்திற்கு அழைக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சம்பவத்தில் குருக்கள்புதுக்குளம் பகுதியை சேர்ந்த பு.சிறிதரன் வயது 46மற்றும் அவரது 14 வயது மகனான டினோகாந் ஆகிய இருவரே மரணமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே- ஐநா கேள்வி
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே- ஐநா கேள்வி
முக்கிய அரசு நிறுவனங்களில் இன-மத தேசியவாதம் மேலும் வெளிப்படையாக தெரிகிறது; இதனால், சிறுபான்மை இனத்தவர் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதும்,
அஞ்சுவதும் அதிகரித்து, நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது என்று ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர் மிச்சல் பேச்சலெட்.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 49 வது கூட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை (2022 மார்ச் 4) நடைபெற்ற ‘இலங்கை குறித்த பங்கேற்பு உரையாடல்’ என்ற நிகழ்வில் பேசிய அவர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில்
பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அரசாங்கம் விரைவாக அங்கீகரிக்கவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே என்பதை விரைவாக முடிவு செய்து,
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையும் விரைவாக வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பேற்பதற்கான நீதிமுறையை உருவாக்காத இலங்கை அரசு அதோடு, போர்க்குற்றங்கள் தொடர்புடைய ராணுவ அதிகாரிகளை அரசாங்க உயர் பொறுப்புகளிலும் அமர்த்தியுள்ளதால்,
சர்வதேச அளவில் பொறுப்பேற்பை மேம்படுத்த மாற்று உத்திகளை மனித உரிமை கவுன்சில் கையாளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது உரை
இலங்கை தொடர்பாக பெப்ரவரி 25ம் திகதி அனுப்பிய எழுத்துப்பூர்வமான அறிக்கையை பேரவை உறுப்பினர்கள் பெற்றிருப்பார்கள். 2021 பெப்ரவரியில் வெளியிடப்பட்ட முந்தைய அறிக்கைக்குப் பிறகான செயல்பாடுகளைப் பற்றியே இந்த
அறிக்கை கவனம் செலுத்துகிறது. இந்த விஷயத்தை மனித உரிமை பேரவை தொடர்ந்து கண்காணிப்பதற்கான இன்றியமையாத தேவையை இந்த அறிக்கை காட்டுகிறது.
ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர் அலுவலகத்துடன் இலங்கை அரசாங்கம் இணைந்து பணியாற்றுவது சமீப காலத்தில் அதிகரித்திருப்பதற்கும், சீர்திருத்தங்களை தொடங்குவதற்குமான அறிகுறிகள் தெரிகின்றன.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை திருத்துவதற்கும், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்குமான முன்மொழிவுகள் வரவேற்கத் தகுந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகள்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பான அடிப்படையான பிரச்னைகளை பரிசீலனை செய்ய மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசாங்கத்தை ஊக்குவிக்கிறேன்.
தவறிழைத்தவர்கள் தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவர, கடந்த கால அத்துமீறல்கள் மீண்டும் நிகழ்வதைத் தடுக்க ஆழமான சட்ட, நிறுவன, பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்.
ஆனால், பொறுப்பேற்கும் விஷயத்தில் கடந்த ஆண்டும் மிகப்பரிய தடைகளும், பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ளன என்பது வருந்தத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்ந்து உண்மையும் நீதியும் மறுக்கப்படுகிறது.
விமர்சனங்கள் மீதான அரசாங்கத்தின் பதில் நடவடிக்கை ஜனநாயக, குடிமை செயல்பாடுகளுக்கான வெளியை சுருக்குவதாக உள்ளது. குறிப்பாக மனித உரிமை நடவடிக்கைகளுக்கான வெளி சுருங்குகிறது
குறிப்பிட்ட சில போக்குகள் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பது 2021 பிப்ரவரி அறிக்கையில் அடையாளம் காணப்பட்டது. இந்த போக்குகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன.
அரசாங்கத்தின் குடிமை செயல்பாடுகள் ராணுவ மயமாவது தொடர்ந்து ஆழமடைந்துவருகிறது என்று தெரிவித்துள்ளார் மிச்சல் பேச்சலெட்.
குடிமை பதவிகள் ராணுவ அதிகாரிகள் கையில் குவிவது குறித்து நான் ஆழமாக கவலை கொண்டிருக்கிறேன். அந்தப் பதவிகள் தரப்படுகிற சிலர் சில மோசமான மனித உரிமை மீறல்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.
2020 இறுதியில் இருந்து புத்தமத மரபு பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு தொடர்பில் நிலம் தொடர்பான தகராறுகள் அதிகரித்துள்ளன. இதனால், சிறுபான்மை சமூகங்களின் குறைகள் தீவிரமைடந்துள்ளன. புதிய பதற்றங்களை இது தோற்றுவிக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின் (யாப்பு) 20வது திருத்தத்துக்குப் பிறகு இலங்கை மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட நாட்டின் சில ஆணையங்கள், நிறுவனங்களின் சுதந்திரத் தன்மை செல்லரித்துப் போவது கண்டு வருத்தம் கொள்கிறேன்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல பத்தாயிரம் பேர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் மீது பாதிக்கப்பட்டோருக்கு போதிய நம்பிக்கை இல்லை.
வரவிருக்கிற அரசமைப்புச் சட்ட மறு வரைவு நடவடிக்கை முக்கிய நிறுவனங்களின் சுதந்திரம் காக்கப்படுமா என்பதற்கான முக்கியச் சோதனையாக இருக்கும். இந்த மறுவரைவு நடவடிக்கை, அதிகாரப் பகிர்வுக்கும், மனித உரிமைக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.
உள்நாட்டிலேயே வடிவமைத்து செயல்படுத்தப்படும், எல்லோரையும் உள்ளடக்கும் நல்லிணக்க மற்றும் பொறுப்பு ஏற்பு செயல்முறை தொடர்பாக இந்த கவுன்சிலில் வாக்குறுதி அளித்து இரண்டாண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் பொறுப்பேற்பதற்கும், நல்லிணக்கத்துக்கும் இட்டுச் செல்வதற்கான நீதிமுறை ஒன்றுக்கான நம்பத்தகுந்த செயல்திட்டம் எதையும் அரசாங்கம் வழங்கவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோர் விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பங்கள் ஆகியோரின் தொடர் வேதனைகளையும், மன உளைச்சலையும் கண்டு கவலை கொண்டுள்ளேன்.
அவர்களது உரிமைகளை அரசு அங்கீகரிக்கவேண்டும். அவர்களுக்கு என்ன நேர்ந்தது அல்லது எங்கே இருக்கிறார்கள் என்பதை அவசரமாக உறுதி செய்யவேண்டும். தவறிழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும், மத தலைவர்களும் தொடர்ந்து நீதிக்காக, நிவாரணத்துக்காக, எப்படி அந்த தாக்குதல் நடந்தது என்ற உண்மையைக் கேட்டு குரல் கொடுக்கிறார்கள். குறிப்பாக பாதுகாப்பு அமைப்பின் பங்கு அதில் என்ன என்பதை அவர்கள் கேட்கிறார்கள்.
குடிமை அமைப்புகள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் கண்காணிப்புக்கும், தொந்தரவுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாவதாக தொடர்ந்து வரும் செய்திகளால் ஆழமான கவலை கொள்கிறேன். தொடரும் காவல் மரணங்கள், போலீஸ் என்கவுன்டர்கள் திரும்பத் திரும்ப நிகழ்வது எச்சரிப்பதாக உள்ளது. போலீஸ், ராணுவம் மோசமாக நடத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றன. பாதுகாப்புத் துறை சீர்திருத்தம் வேண்டும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
இலங்கையில் நடந்த சர்வதேசக் குற்றங்கள், மோசமான மனித உரிமை மீறல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில், நீதிமுறையை கடைபிடிப்பதில் அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டன என்பதை கவுன்சிலில் சமர்ப்பித்த முந்தைய அறிக்கைகள் விவரிக்கின்றன.
தற்போதைய அரசாங்கம், பொறுப்பேற்கும் நிலையை உருவாக்க விரும்பாதது மட்டுமல்ல போர்க்குற்றங்கள் தொடர்புடைய ராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் உயர் பதவிகளிலும் அமர்த்தியுள்ளது. இது தண்டனை குறித்து கவலை தேவையில்லை என்ற நிலையை இது மேலும் மோசமாக்குகிறது.
இந்த காரணங்களாலும், பாதிக்கப்பட்டவர்கள் குறையை ஏதோ ஒரு வகையில் தீர்ப்பதற்கும், சர்வதேச அளவில் பொறுப்பேற்கும் நிலையை மேம்படுத்துவதற்காக மாற்று உத்திகளை கையாள வேண்டும் என்று கவுன்சிலை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
46/1வது தீர்மானத்தின் பொறுப்பேற்பு குறித்த அம்சங்களை செயல்படுத்துவது தொடர்பாக தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
குற்றங்களுக்கு நீதி வழங்கல் என்ற பார்வையில், மேற்கொண்டு தகவல் திரட்டுவதில் உள்ள ஓட்டைகளை, முன்னுரிமைகளை கண்டறிவது என்ற நோக்கத்தில், பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய அணுகுமுறையில் ஆதாரக் களஞ்சியத்தில் உள்ள தகவல்களை எங்கள் குழு ஆராயும்.
இதற்கு என் அலுவலகம் குறிப்பிடத்தக்க அளவு வேலை செய்யவேண்டும். இதற்கு நேரம், போதிய மனித, நிதி வளம், அரசுகளின் ஒத்துழைப்பு ஆகியவை தேவை. இலங்கையில் சர்வதேசக் குற்றங்களுக்கு உதவியாக இருந்த அனைத்துத் தரப்பையும் விசாரணைக்கு உட்படுத்தி, நீதி முறையில், உரிய எல்லையில், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒத்துழைப்பு இதில் அடங்கும்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட, பிராந்தியம் கடந்த, உலகளாவிய நீதியெல்லை என்ற கோட்பாட்டின் கீழ் இந்த நடவடிக்கை அமைய வேண்டும்.
மோசமான சர்வதேசக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்பேற்பை உறுதி செய்ய தீர்மான எண் 46/1-ன் கீழ் வழங்கப்பட்ட உரிமை ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இது இன்றியமையாத பணி. தண்டனை பற்றிய கவலை இல்லாத நிலை நீடிக்கும் வரையில் இலங்கை உண்மையான நல்லிணக்கத்தையோ, நீடித்த அமைதியையோ அடையாது.
மனித உரிமைகள் பேரவை 49 ஆவது அமர்வு- இலங்கை அறிக்கை
மனித உரிமைகள் பேரவை 49 ஆவது அமர்வு- இலங்கை அறிக்கை
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான இலங்கையின் நிரந்தர பணியகம் மனித உரிமைகள் கழகம் 49 ஆவது வழமையான
அமர்வு இலங்கை குறித்த மனித உரிமை உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கை மீதான ஊடாடும் பேச்சுவார்த்தைகள் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ. பேரா. ஜி.எல். பீரிஸ் அவர்களின் அறிக்கை
(ஜெனீவா, 04 மார்ச் 2022)
தலைவர் அவர்களே,
இலங்கை மீதான 46/1 தீர்மானமானது இக்கழகத்தின் பிரிக்கப்பட்ட வாக்குகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தீர்மானத்தின் ஆழமான குறைபாடுள்ள நடைமுறை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத உள்ளடக்கம், குறிப்பாக ஆதாரங்கள் சேகரிக்கும்
பொறிமுறை என்று அழைக்கப்படும் OP பந்தி 6 ஆகியவற்றுடன், இத்தீர்மானத்தின் அடிப்படையுடன் உடன்பாடின்றி, இலங்கையும் பிற நாடுகளும் எதிர்த்தன. இத்தீர்மானமானது, இக்கழகத்தின் நிறுவன கொள்கைகளான; பாரபட்சமற்ற தன்மை,
தற்சார்பற்ற குறிக்கோள் மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை ஆகியவற்றிற்கு நேர் எதிராகவுள்ளது. இது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானம் 60/251 மூலம் உறுப்பு நாடுகள் வழங்கிய ஆணையை மீறிச் சென்றது. நான் இவ்விடயம் தொடர்பான
இலங்கையின் கருத்துக்களை மார்ச் 01 ஆம் திகதி இச்சபையில் தெரிவித்துள்ளேன். உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பான எமது கருத்துக்களையும் உரிய நேரத்தில் சமர்ப்பித்தோம். இதை செயலகம், உயர் ஸ்தானிகரின் எழுத்துப்பூர்வ புதுப்பித்தலுடன் ஒரே நேரத்தில் வெளியிடத் தவறியதை நாம் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றோம்.
நாம் இத்தீர்மானத்தினை நிராகரித்தபோதிலும், தொடர்ந்தும் மனித உரிமைகள் குறித்த சர்வதேச பணிப்பொறுப்புக்களை தன்னார்வத்துடன் நிறைவேற்றுவதுடன், இக்கழகம் உள்ளிட்ட ஐக்கிய நாடுகளுடனும் தொடர்பில் இருப்போம். 18 ஜனவரி 2022
அன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நமது பாராளுமன்றத்தில் கூறியது போல், “நாம் சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளை மதிக்கும் ஒரு தேசம்”. நாம் எமது
முன்னேற்றங்கள் மற்றும் சவால்களை சீரான முறையில், இக்கழகத்துடனும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிற சம்பந்தப்பட்ட நிறுவங்களுடனும் நேர்மையான முறையிலும் வெளிப்படையாகவும் பகிர்ந்துள்ளோம்.
உயர்ஸ்தானிகரால் இச்சபையில் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் பாரிய முரண்பாடுகளும் பலவீனங்களும் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதிலுள்ள அடிப்படைக் குறைபாடு என்னவெனில், அதன் சகிக்க முடியாத ஊடுருவும்
தன்மையாகும். இது, தொடர்ந்து மூன்று தேர்தல்களில் நம் நாட்டு மக்களால் பெரும்பான்மையாக ஆணையிடப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் முக்கிய செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில்
பாகுபாட்டினை தெளிவாக கண்டறியக்கூடிய ஒரு அம்சம் உள்ளது, அதாவது, மற்ற உறுப்பு நாடுகளைப் பொறுத்தமட்டில் இதேபோன்ற விசாரணை நடைமுறையை மேற்கொள்வதை இக்கழகம் நிச்சயமாக எடுத்துக் கொள்ளாது என்பதேயாகும். இது
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அடித்தளத்தின் வேரையே தாக்குகிறது. உறுப்பு நாடுகளின் அளவு மற்றும் செல்வாக்கு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், உயர் ஸ்தானிகரால் பயன்படுத்தப்படும் தரநிலைகளின் சீரான தன்மை மற்றும்
நிலைத்தன்மை, ஆகியவையும் ஐக்கிய நாடுகளின் சகோதரத்துவத்தின் அனைத்து உறுப்பினர்களின் இறையாண்மை சமத்துவம் தொடர்பான அத்தியாவசியக் கொள்கையுடன் உறுதியான இணக்கமும் இந்த அறிக்கையிலுள்ள பல பகுதிகளில் குறைகண்டுபிடிக்கும் தன்மையில் அத்துமீறப்பட்டுள்ளன.
இக்கழகத்தின் மனோபாவங்களுக்கு அடித்தளமாக இருக்கும் தார்மீகம் மற்றும் ஒழுக்கத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தின் பரவலான மதிப்பீட்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின், குறிப்பாக மனித உரிமைகள்
பேரவையின் பலமும் கௌரவமும் பெறப்பட்டதால், இது எமக்கு கவலையளிக்கிறது. குறிப்பாக, இக்கழகத்தின் முன்னோடியான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவிதியைக் கருத்தில் கொண்டு, இந்த நம்பிக்கையை குறையாமல்
தக்கவைத்துக்கொள்வது இன்றியமையாதது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் உண்மையாக நடந்தவற்றின் சிக்கலான தன்மையை உணராமல், மேலெழுந்தவாரியான முடிவுகள் பல இந்த அறிக்கையில்
இடம் பெற்றிருப்பது ஆழ்ந்த வருத்தத்திற்குரிய விடயமாகும். எங்கள் எழுத்துப்பூர்வ பதிலில் இவை பற்றி விரிவாக விளக்கியுள்ளோம்.
வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்திலிருந்து உருவாக்கப்பட்டதும், திறமையான சட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியை உருவாக்கும் கடுமையான மீளாய்வுச் செயன்முறைகளுக்குட்பட்ட இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்ட
அமைப்பின் கீழ் இயங்கும் நமது நாட்டின் செல்வாக்குள்ள நிறுவனங்கள் மீதான உயர் ஸ்தானிகரின் தேவையற்ற தாக்குதலால் நாங்கள் கலக்கமடைந்துள்ளோம்.
முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியான நேரத்தில், மனிதகுலம் அனைத்திற்கும் உகந்த பலனை அடையும் வகையில் கடுமையாக வரையறுக்கப்பட்ட வளங்களைப் பயன்படுத்துவது பற்றிய ஒரு கேள்வியும் உள்ளது. ஒரு பாகுபாடான மற்றும் குறிப்பாக
இலங்கை மீது இலக்கு வைக்கும் நோக்கத்திற்காக மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவிடுதலானது, இந்த வெளிப்படையான கட்டாயத்துடன் ஒத்துப்போகவில்லை. இந்த நேரத்தில் மிக முக்கியமானதாக இருக்கும் என்று பரந்த
அளவிலான நாடுகளுக்குத் தோன்றும் இந்தக் கருத்தாய்வுகளில், இந்த அறிக்கை குறைவான அக்கறை காட்டுவது எங்களுக்கு பெரும் பரிதாபமாகத் தோன்றுகிறது.
எமது மக்களுக்காக நாம் மீட்டெடுத்த பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், சமமான முறையில் நிலையான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் உறுதியாக உள்ளது. வரவிருக்கும்
சவால்களை எதிர்கொள்ள சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் எங்களுடன் பங்குதாரர்களாக சேர வேண்டும் என்ற நேர்மையான அறிவுரையுடன் எனது நாடு சர்வதேச சமூகத்தை அணுகுகிறது.
நன்றி தலைவர் அவர்களே.
நாமல் ராஜபக்ஷவிற்கு பிரதமர் வழங்கிய ஆலோசனை
.நாமல் ராஜபக்ஷவிற்கு பிரதமர் வழங்கிய ஆலோசனை
இல.462, புத்தளம் வீதி, யந்தம்பலாவ, குருநாகல் எனும் விலாசத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள குருநாகல் பிரதமர் ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு நேற்று (05
) முற்பகல் விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலுவலக செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்தார்.
இதன்போது பிரதமரின் தலைமையில் குருநாகல் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. சந்திப்பில் குருநாகல் மாவட்டத்தை
பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
குருநாகல் மாவட்டத்தில் தற்போது செயற்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், கிராமத்திற்கு தொடர்பாடல்
வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகலில் நிர்மாணிக்கப்படும் 48 தொடர்பாடல் கோபுரங்கள் குறித்தும் இதன்போது மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த செயற்பாடுகளை மேலும் செயற்திறன் மிக்கதாக்குவது தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், இக்கலந்துரையாடலின் போது விடயத்திற்கு பொறுப்பான
அமைச்சரான நாமல் ராஜபக்ஷவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோபுரங்களை நிர்மாணிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான சமன்பிரிய ஹேரத், சுமித் உடுகும்புர, சரித்த ஹேரத், பிரேமநாத் சீ தொலவத்த, மஞ்சுளா திஸாநாயக்க, அசங்க நவரத்ன, பீ.வை.ஜீ.ரத்னசேகர உள்ளிட்ட குருநாகல் மாவட்ட பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்
இலங்கையில் எகிறும் மின் கட்டணம் ,எரிபொருள் விலை
இலங்கையில் எகிறும் மின் கட்டணம் ,எரிபொருள் விலை
இலங்கையில் ஆளும் ஆட்சியில் இடம்பெற்று வரும் பலத்த மோசடிகள் மத்தியில் நாடு பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது.
தற்போது எரிபொருள் மற்றும் மின் கட்டங்கள் விலையினை அதிகரிக்கும் படி மதியவங்கி ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் நிலவும் நிலவரங்களை கட்டு படுத்த எரிபொருள் விலையினை ஈடு செய்யும் வகையிலாவைத்து விலை ஏற்றத்தினை செயல் ப்படுத்தும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் தலைகளில் ஏற்ற படும் இந்த சுமைகள் ஆளும் அரசை விரைவில் கவிழ்த்து விடும் என்பது தெளிவாகிறது.
அமெரிக்கா மகிந்தவுக்கு இடையில் பேச்சு
அமெரிக்கா மகிந்தவுக்கு இடையில் பேச்சு
இலங்கையின் புதிய அமெரிக்கா அத்தூதுவர் (Julie J. Chung க்கும் பிரதமர் மகிந்தாவுக்கும் ,இடையில் அலரி மாளிகையில், சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவரது முதலாவது சந்திப்பு இதுவாக அமைய பெற்றுள்ளது .இலங்கையின் அபிவிருத்தி ,பொருளாதாரத்தில் உதவுவதாக தெரிவித்துள்ள அவர் ,தமிழ் இன படுகொலை தொடர்பில் பேசாவில்லை என்பது குறிப்பிட தக்கது.
அரச வங்கிகளுக்கு கோட்டா அதிரடி உத்தரவு
அரச வங்கிகளுக்கு கோட்டா அதிரடி உத்தரவு
நெல் கையிருப்பை பிணையாக வைத்து, நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்தார்.
போட்டித் தன்மையுடன் நெல்லைக் கொள்வனவு செய்து, அரசாங்கத்திடம் போதியளவு நெல் கையிருப்பைப் பேணுவதை இலக்காகக் கொண்டு, இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு 02, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை அலுவலகத்தை இன்று (04) முற்பகல் பார்வையிட்ட போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பெரும் போகத்தில் நெல்லைக் கொள்வனவு செய்தல், களஞ்சியப்படுத்தல், விற்பனை மற்றும் தட்டுப்பாடின்றி சந்தையில் நிலவுகின்ற அரிசிக்கான தேவையை தொடர்ந்து
பேணுவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை ஆராய்வதே ஜனாதிபதி அவர்களின் இந்த திடீர் விஜயத்தின் நோக்கமாகும்.
1971ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட நெல் சந்தைப்படுத்தல் சபையின் நோக்கு, “நெல் மற்றும் அரிசி கொள்வனவு,
களஞ்சியப்படுத்தல், பதப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகியவற்றில் முன்னணி அரச இடைத்தரகராகச் செயற்படுதல்” போன்றவையாகும். நெல் விவசாயிக்கு
இடைத்தரகர்கள் இன்றி நியாயமான விலையை பெற்றுக்கொடுத்தல் மற்றும் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் போது நெல் கையிருப்புக்களை வழங்குவதும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் முதன்மையான பணிகளாகும்.
கடந்த அரசாங்கத்தில் 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஒரு நெல்லைக்கூட கொள்வனவு செய்யப்படாததாலும், பயன்படுத்தக்கூடிய நெல் கையிருப்புக்களை கால்நடை தீவனமாகக் கருதி தனியார்த்துறை வியாபாரிகள் ஒரு சிலருக்கு மிகக்
குறைந்த விலைக்கு வழங்கியதாலும் நிறுவனத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்காமை, இடைத்தரகர்களுக்கு கமிஷன் வழங்குவது, நெல் கொள்வனவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்,
களஞ்சியசாலைகளை உரிய முறையில் பராமரிக்காமை போன்ற காரணங்களால் விவசாயிக்கும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கும் இடையிலான உறவு தூரமாக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் நிலவிய 35 ரூபாவிற்கும் குறைவாக இருந்த கட்டுப்பாட்டு விலையை 2020ஆம் ஆண்டு பெரும் போகத்தில் குறைந்தபட்சம் 55 ரூபாவாக கொண்டு வருவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
2022ஆம் ஆண்டு பெரும் போகத்தில், ஒரு கிலோ நெல்லின் விலை 95 ரூபாவாக உயர்வடைந்துள்ளதால், அதிகமாக நெல்லைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்த
முடிந்ததாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தவிசாளர் துமிந்த பிரியதர்ஷன அவர்கள் தெரிவித்தார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையானது 315,000 மெற்றிக் தொன் கையிருப்பை பேணுவதற்குரிய இயலுமையைக் கொண்டுள்ளது. அதனை 04 இலட்சம் வரை
அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் 315 களஞ்சியசாலைகள் புனரமைக்கப்பட்டன. எஞ்சிய 35 களஞ்சியசாலைகளும் விரைவில் புனரமைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நெல் கொள்வனவை துரிதப்படுத்துவதற்காக 40 பட்டதாரிகள் உதவிப் பிரதேச முகாமையாளர்களாகவும், 200 பல்நோக்கு உத்தியோகத்தர்களை களஞ்சிய நடவடிக்கைகளுக்காகவும் உடனடியாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.
நெற் களஞ்சியசாலைகளை பாதுகாக்க யானை வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக கட்டியெழுப்புவதோடு, எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்
உல்லாச பயணிகளுக்காக விசேட ரயில்சேவைகள் ஆரம்பம்
உல்லாச பயணிகளுக்காக விசேட ரயில்சேவைகள் ஆரம்பம்
இலங்கை வருகை தந்துள்ள உல்லாச பயணிகள் போக்குவரத்தை கவனத்தில் கொண்டு, தற்பொழுது Kandy to Ella பகுதிக்கான ,ரயில்வே போக்குவரத்து ஒன்று விசேடமாக ஆரம்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
நாட்டின் முக்கிய வளர்ச்சியில் ,உல்லாச பயணிகளின் வருகையே வருமானத்தை பெற்று கொடுக்கின்றது .
அதனால் இந்த அதிரடி நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது ,இங்கே குறிப்பிட தக்கது.
யாழில் புகையிரதத்தில் மோதுண்டு வாலிபர் மரணம்
யாழில் புகையிரதத்தில் மோதுண்டு வாலிபர் மரணம்
இன்று மதியம் 1.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கோவில் வீதி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்து குறித்த நபர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக அததெரண செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழில் அரசியல்வாதி வீட்டில் ரவுடிகள் அட்டகாசம்
யாழில் அரசியல்வாதி வீட்டில் ரவுடிகள் அட்டகாசம்
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்குள் மதுபோதையில் புகுந்த நபர்
ஒருவர் வெருடைய தந்தையை தாக்க முற்பட்டதுடன், வீட்டின் வேலிகளை சேதப்படுத்திச் சென்றுள்ளார்.
மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் உறுப்பினரான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ என்பவரின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பண்டத்தரிப்பில் உள்ள அவரது வீட்டினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த வேளை மதுபோதையில் நுழைந்த நபர் ஒருவர்,
பாராளுமன்றில் ஆளும் கட்சியை சேர்ந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பெயரை கூறி, அவரின் ஆதரவாளர் தான் என கூறி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன் போது , பிரதேச சபை உறுப்பினரின் தந்தையார் அதனை தடுக்க முற்பட்ட
வேளை அவரை தள்ளி விழுத்திய பின்னர் வீட்டின் கேற்றை சேதப்படுத்தியதுடன் , வேலி தகரங்களையும் சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினரால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
இலங்கையில் நாளை 14 மணி நேரம் நீர் வெட்டு
இலங்கையில் நாளை 14 மணி நேரம் நீர் வெட்டு –
இலங்கையில் ஆளும் கோட்டா அரசினால் மக்கள் நாள்தோறும் பெரும் சுமைகளை சுமந்த வண்ணம் உள்ளனர் ,
நாளை கொழும்பின் பல பகுதிகள் 14 மணி நேரம் நீர் வீட்டுக்கு உள்ளாகும் என
அறிவிக்க பட்டுள்ளதால் மக்கள் அவதியில் சிக்கியுள்ளனர்











