Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
மஞ்சு வாரியர் கொடுத்த புகாரில் பிரபல மலையாள இயக்குனர் கைது
மஞ்சு வாரியர் கொடுத்த புகாரில் பிரபல மலையாள இயக்குனர் கைது
மலையாள திரையுலகின் பிரபல நடிகைகளுள் ஒருவர் மஞ்சுவாரியர். இவர் கடந்த அக்டோபர் மாதம் 22-ந் தேதி
கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவை சந்தித்து புகார் ஒன்று கொடுத்தார்.
அதில், “என் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படும் வகையிலும், என்னை மிரட்டும் வகையிலும் இயக்குனர்
ஸ்ரீகுமார் மேனன் சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்தி பரப்பி வருகிறார்.
அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து, ஸ்ரீகுமார்
மேனனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஸ்ரீகுமார் – மஞ்சு வாரியர்
அவர், நிருபர்களிடம் கூறும்போது, “போலீஸ் விசாரணையின்போது என் தரப்பு நியாயத்தை தெரிவித்து இருக்கிறேன். அவர்கள் அதை பதிவு செய்து உள்ளனர்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்” என்றார்.
கடந்த ஆண்டில் ஸ்ரீகுமார் மேனன் இயக்கிய ‘ஒடியன்’ என்ற மலையாள படத்தில், நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்து இருக்கிறார்.
மேலும் அவர் இயக்கிய பல விளம்பர படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது – ரஜினி
மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது – ரஜினி
தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள
படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில்
நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இதில் நடிகர் ரஜினி பேசும் போது, ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ரமணா படம் எனக்கு பிடித்தது, கஜினி படம்
பார்த்து இவர் படத்தில் நடிகனும் ஆசை பட்டேன், ஆனால், காலம் அப்போது அமையவில்லை. தற்பொழுது தர்பார் படம் மூலம் அமைந்திருக்கு.
என்னுடைய பிறந்தநாள் இந்த வருடம் முக்கியமான பிறந்த நாள், ரசிகர்கள் ஆடம்பரமாக என் பிறந்த நாள் விழாவை
கொண்டாட வேண்டாம், அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவுங்கள்.
இயக்குநர் பாலசந்தர் தான் எனக்கு ரஜினி காந்த் பெயர் வைத்தார், ஒரு நல்ல நடிகனுக்கு தான் இந்த பெயர் வைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அவருடைய
நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன். ரஜினியை வைத்து படம் எடுத்தால் நஷ்டம் அடையாது என்று என் மேல்
நம்பிக்கை வைத்தவர்கள். அது போல் மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது.
ஒரு வெற்றி வேண்டும் என்றால் நேரம், காலம், சந்தர்ப்ப சூழ்நிலை அந்த நேரத்தில் இருக்கும் மனிதர்கள் இருந்தால் தான் அந்த வெற்றிக் கிடைக்கும். அதிகம்பேர்
எதிர்மறையாக பேசுகிறார்கள். ஆனால் அவர்களிடமும் நாம் அன்பாக இருப்போம், அன்பு செலுத்துவோம் என்றார்.
தைரியம் தான் பெண்களுக்கு பாதுகாப்பு – நித்யா மேனன்
தைரியம் தான் பெண்களுக்கு பாதுகாப்பு – நித்யா மேனன்
தமிழ், மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கை கதையான த அயன்லேடி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக விசேஷ பயிற்சிகள் எடுத்து வருகிறார். அவர் கூறியதாவது:- “நான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானேன். ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்தேன்.
ஆனால் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது சரியல்ல. எல்லா துறைகளிலுமே பாதுகாப்பின்மை இருக்கிறது. என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டது இல்லை. சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர். நான் விட்டு கொடுக்கவில்லை. பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று கடுமையாக சொன்னேன்.
நித்யா மேனன்
என்ன தவறு நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தலையிடுவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். நமது முடிவை கொஞ்சமும் தயங்காமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும். தைரியமாக இருந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.” இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.
மகளுக்கு பாலியல் தொல்லை – டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்
மகளுக்கு பாலியல் தொல்லை – டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்
வம்சம் டி.வி. தொடரில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ. ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருவான்மியூர் காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நடிகை ஜெயஸ்ரீ அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைபடுத்துவதாகவும், தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார்.
தனது நகைகள், 30 லட்சம் ரூபாய் பணத்தையும் அபகரித்துக் கொண்டு ஏமாற்றி விட்டார். குழந்தையுடன் தவித்து வருகிறேன் என்றும் புகாரில் தெரிவித்திருந்தார். ஜெயஸ்ரீ புகார் மீது வழக்கு பதிவு செய்து ஈஸ்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈஸ்வர் – ஜெயஸ்ரீ
இந்த நிலையில் ஜெயஸ்ரீ இன்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து கணவர் ஈஸ்வர் மீது புதிய புகார் ஒன்றை அளித்தார். கணவர் கைது செய்யப்பட்ட பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஈஸ்வர் எனது மகளுக்கு நீண்ட காலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவருக்கு திருமணத்துக்கு பிறகு குடி பழக்கம் அதிகரித்தது. கஞ்சா பயன்படுத்தும் பழக்கமும் இருந்தது. சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்தார். இதனால் கடன் தொல்லையும் ஏற்பட்டது. குடித்துவிட்டு வந்து என்னை தாக்குவதுடன் மகளிடமும் தவறாக நடந்துகொள்வார்.
டி.வி. நடிகை ஒருவருடன் சேர்ந்து இருக்கும்போது வீடியோ கால் செய்து பேசுவார். இதுபோன்ற செய்கைகளால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என்னிடம் இருந்து ஈஸ்வர் அபகரித்த நகை, பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நான் செய்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை – மீனா
நான் செய்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை – மீனா
1990களில் கலக்கிய மீனா திருமணத்துக்கு பின்னர் தமிழில் அதிகம் நடிக்காமல் இருந்தார். விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் கரோலின் காமாட்சி என்ற இணைய தொடரில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். சிபிஐ ஆபிசராக நடித்துள்ள மீனா அளித்த பேட்டி:
கரோலின் காமாட்சி தோற்றம் வித்தியாசமாக இருக்கிறதே?
சினிமாவில் பிசியாக இருக்கும்போது டிவி பக்கம் செல்லவேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் துணிந்து நடித்தேன். இப்போது இணைய தொடர்கள் பிரபலமானதும் அதற்குள்ளும் வந்து இருக்கிறேன். இந்த கதாபாத்திரம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன். இதுவரை பார்க்காத மீனாவாக இருக்கவேண்டும் என்று விவேக் ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறை எடுத்து பார்த்துக்கொண்டார். கிளைமாக்சில் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. பொதுவாக ஹீரோக்கள் தான் என்னை படங்களில் காப்பாற்றுவார்கள். இதில் என்னை நானே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலை. எனவே சண்டையிடுகிறேன்.
உங்கள் மகள் நைனிகா இந்த தோற்றம் பற்றி என்ன சொன்னார்?
நான் முடியை குறைத்து பாப் கட் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை.
மீனா
சினிமாவில் இருக்கும் உங்கள் நண்பர்கள் என்ன சொன்னார்கள்?
அவர்களுக்கு ஆச்சர்யம். இதை பற்றி நிறைய கேட்டு தெரிந்துகொண்டார்கள். எனக்கு சினிமாவுக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
இணைய தொடருக்கு சென்சார் இல்லை என்பதால் பயம் இருந்ததா?
இல்லை. அதனால் தான் முன் கூட்டியே கதை, கதாபாத்திரம் விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி கேட்டுக்கொண்டேன். இதில் ஆபாசம் துளிகூட இருக்காது.
தொடர்ந்து படங்களா? இணைய தொடர்களா?
கதை தான் முக்கியம். நல்ல கதையும் கதாபாத்திரமும் கிடைத்தால் தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் நடிப்பேன்.
ஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் – காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்
ஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் – காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்
ஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் – காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் அஞ்சலி அமீர். தமிழில் பேரன்பு படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார். திருநங்கையான இவர் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பங்கேற்றார். இந்நிலையில் அவர் தனது முகநூலில் நேரடியாக கண்ணீருடன் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- என்னை காதலன் டார்ச்சர் செய்து வந்தார். இதனால் அவருடன் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தேன். அதனால் அவர் என்னை, ஆசிட் ஊற்றி எரிக்க போவதாக மிரட்டுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கண்ணீர்விட்டு கதறி அழுதபடி பேசிய அஞ்சலி அமீர் காதலன் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
தன்னுடைய சேமிப்பில் இருந்து இரண்டு ஆண்டு களில் சுமார் 4 லட்சம் வரை அவர் பறித்துகொண்ட தாகவும் கூறியிருக்கிறார். அந்த வீடியோ முடிவில் அஞ்சலி தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை தாங்க முடியவில்லை என்றும், தற்கொலை செய்யும் மன நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இந்த பேஸ்புக் லைவ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அஞ்சலி அமீர்
தனக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை, பெற்றோரும் உடன் இல்லை என்பதால், இந்த பிரச்சினையை தீர்க்க போலீஸ் அதிகாரிகளை அணுக திட்டமிட்டுள்ளார். நாட்டின் முதல் திருநங்கை நடிகையான அஞ்சலி அமீர் தனது பயோகிராபி படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். 2020-ம் ஆண்டு மே மாதம் இதற்கான வேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளார். தன்னை சித்ரவதை செய்த காதலனின் பெயரை அவர் கடைசி வரை சொல்லவில்லை.
தர்பாரில் திருநங்கைகளை பாடவைத்த அனிருத்
தர்பாரில் திருநங்கைகளை பாடவைத்த அனிருத்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடல் யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 7-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

திருநங்கைகளுடன் அனிருத், விவேக்
இந்நிலையில், தர்பார் படத்தில் இடம்பெற்றும் ஒரு சிறப்பு பாடலை திருநங்கைகள் மூன்று பேர் பாடியுள்ளனர். படத்தில் இந்த பாடலுக்கு திருநங்கைகள் நடனமாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐதராபாத்தை சேர்ந்த சந்திரமுகி, ரச்சனா, பிரியா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். இவர்கள் ஸ்பைஸ் கேர்ள்ஸ் எனும் இசை குழுவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டுல மேடை ஏறி பேசவே பயமா இருக்கு – மம்மூட்டி
தமிழ்நாட்டுல மேடை ஏறி பேசவே பயமா இருக்கு – மம்மூட்டி
மம்மூட்டி, இனியா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமங்கம். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பேசியதாவது: தமிழ்நாட்டில் மேடையில் பேச பயமாக இருக்கிறது. ஏனென்றால், சினிமாவில் சரியாக தமிழ் பேசி விடுவேன். ஆனால் மேடையில் தப்புதப்பாக தான் பேசுவேன். வரலாற்று படத்தில் நடிக்கும்போது மட்டும், அதை ஒரு பணியாக எடுத்துச் செய்வேன். அப்படி இந்த படத்தில் ஒரு அங்கமாக இருப்பதே சந்தோஷம்தான்.
100 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளம் என்ற மொழியே கிடையாது. மலபார் தான் இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் போனவுடன்தான் அனைத்தையும் பிரித்துச் சரி பண்ணினோம். இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என மொழிகள் உள்ளன. இப்படி மொழியைத் தாண்டி கலையை ரசிப்பதே பெரிய விஷயம்.
மம்மூட்டி
மொழியைத் தாண்டி பல படங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் பேசும் மொழியை தாண்டி உணர்வுபூர்வமான காட்சிகள்தான் ஒன்றிணைய வைக்கும். அந்த காட்சிகளுக்கு எல்லாம் மொழியே கிடையாது. இந்த படம் சாதாரணமான ஒரு பழிவாங்கும் கதை கிடையாது. இந்த படத்தின் தமிழ் வசனங்களை நான் கேட்டேன் என்பதற்காக இயக்குநர் ராம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
நான் பேசுவது எல்லாமே ராம் பேசுவது போலத்தான் இருக்கும். இந்தப் படத்தில் என்னை சரியான முறையில் தமிழ் பேச வைக்க ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டார். இதை விட ‘பேரன்பு’ எளிதான படமாக இருந்தது. தமிழ்ப் படமாக இருக்க வேண்டும் என்பதாலேயே ராமை உள்ளே கொண்டு வந்தேன். ரொம்ப சந்தோஷமாகவே பண்ணிக் கொடுத்தார்’.
இவ்வாறு அவர் பேசினார்.
மனைவியை தாக்கிய சீரியல் நடிகர் கைது
மனைவியை தாக்கிய சீரியல் நடிகர் கைது
தமிழ் நடிகையை மணம் முடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே
தமிழ் நடிகையை மணம் முடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே. இவர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்றிரவு நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில் கர்நாடகா 1 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் மணிஷ் பாண்டே 45 பந்தில் 60 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
நேற்றிரவு போட்டியில் ஜொலித்த அவர், இன்று காலை மும்பையில் தமிழ் நடிகையான அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார். அவர் இடம்பிடித்துள்ள ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் திருமண வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.
பாஜகவில் இணைந்தார் நடிகை நமீதா
பாஜகவில் இணைந்தார் நடிகை நமீதா
பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை சென்னை வந்தார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அப்போது, ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பா.ஜ.க.வில் இன்று தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நடிகை நமீதா தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.
ரஜினிக்கு இன்னும் சம்பள பாக்கி வைத்துள்ளேன் – பாரதிராஜா
ரஜினிக்கு இன்னும் சம்பள பாக்கி வைத்துள்ளேன் – பாரதிராஜா
வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்தின் 70- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உள்பட பலர் பங்கேற்று 70 பயனாளிகளுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, ”ரஜினி மிகவும் எளிமையானவர். 16 வயதினிலே படத்திற்காக முதலில் 5 ஆயிரம் சம்பளம் கேட்டார் ரஜினி. இது சின்ன பட்ஜெட் படம் தான், அவ்வளவு தொகை சாத்தியமில்லை என்றேன். இதையடுத்து படிப்படியாக குறைத்து 3 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.
பாரதிராஜா, ரஜினி
அந்த சம்பளத்தில், இன்னும் அவருக்கு 500 ரூபாய் பாக்கி வைத்துள்ளேன். இன்றும் ரஜினி என்னிடம், அண்ணே அந்த 500 ரூபாய், என்று விளையாட்டாக கேட்பார். ரஜினியின் அரசியல் பயணம் குறித்து பேச விரும்பவில்லை. கடவுள்களுக்கு உள்ளது போல் அனைவரையும் ஈர்க்கும் சக்தி ரஜினியிடம் உள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் படங்களை நான் ஏணியாக பயன்படுத்த வில்லை – டாப்சி
தமிழ் படங்களை நான் ஏணியாக பயன்படுத்த வில்லை – டாப்சி
ஆடுகளம் படத்தில் நடித்த டாப்சி அடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தார். தமிழில் பெரிதாக பட வாய்ப்பு அமையாத நிலையில் இந்தி படங்களில் நடிக்க சென்றார். கோலிவுட்டை விட பாலிவுட் அவருக்கு கை கொடுத்தது.
இதுவரை 15 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இடையில் தமிழ் பக்கம் தலைகாட்டவில்லை. தமிழ் படத்துக்கு முழுக்கு போட்டு விட்டீர்களா என்று அவரிடம் கேட்டபோது பதில் அளித்தார்.
அப்போது டாப்சி கூறியதாவது, ‘தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. ஒரு கட்டத்தில் பாலிவுட்டில் இந்தி படங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். தமிழ் திரையுலகம்தான் கேமரா, நடிப்பு போன்ற எல்லா அடிப்படையையும் கற்றுத்தந்தது.
டாப்சி
இப்போது தமிழ் பேசவும் கற்றுக் கொண்டிருக்கிறேன். மார்க்கெட் உள்ள ஒரு தென்னிந்திய திரையுலகுக்கு நான் முழுக்கு போட நினைத்தால் அது முட்டாள்தனம் ஆகிவிடும். பாலிவுட்டிற்கு வருவதற்காக தமிழ் படங்களை நான் ஒரு ஏணியாக பயன்படுத்த வில்லை.
பாலிவுட்டை பொறுத்தமட்டில் இதுவரை 15 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனாலும் இன்னும் ஒரு புதுநடிகையை போலத்தான் என்னை டிரீட் செய்கிறார்கள். என்னை பற்றி தென்னிந்திய திரையுலகில் அதிர்ஷ்டம் இல்லா தவர் என்று கூறுகிறார்கள். நான் நடித்த 4 படங்கள் சரியாக போகாததால் அப்படி கூற ஆரம்பித்தார்கள். மரத்தை சுற்றி நான்கு பாட்டு பாடுவதும் மேற்கொண்டு சில சீன்களில் மட்டுமே நடிப்பதுபோன்று எனது கதாபாத்திரங்கள் இருந்தது. திரும்ப திரும்ப ஒரே பாணியிலான படங்கள் உருவானதால் அவை தொடர் தோல்வியானது’ என்றார்.
சம்பளத்தை கேட்டு வாங்கும் நிலைமை இல்லை – பிரியாமணி
சம்பளத்தை கேட்டு வாங்கும் நிலைமை இல்லை – பிரியாமணி
பருத்தி வீரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் இடைவெளியிட்டு மீண்டும் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த மாதிரி பட வாய்ப்புகள் அவருக்கு இல்லை. இதனால் வருத்தத்தில் இருக்கும் பிரியாமணி சொல்கிறார்:-
“தென்னிந்தியாவில் திறமைக்கு ஏற்ற மாதிரி நடிகைகளுக்கு சம்பளம் கிடைப்பது இல்லை. தென்னிந்திய மொழி படங்களில் நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா ஆகிய 3 பேர் மட்டுமே சம்பளம் இவ்வளவு தர வேண்டும் என்று நிர்ப்பந்தித்து கேட்டு வாங்குகிறார்கள். அவர்கள் கேட்டதை கொடுத்தால்தான் நடிப்போம் என்று கறாராக சொல்லும் நிலை இருக்கிறது.
பிரியாமணி
மற்ற கதாநாயகிகள் பலர் நடிப்பு ரீதியாக முன்னிலையில் இருந்தாலும் கூட அவர்களுக்கு சம்பளத்தை கேட்டு வாங்கும் நிலைமை இல்லை. கதாநாயகனை விட குறைவான சம்பளம் என்பது ஒரு நிலையில் இருந்தாலும் இவ்வளவு பணம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று கேட்கும் நிலையில் அந்த கதாநாயகிகள் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்”.
இவ்வாறு பிரியாமணி கூறினார்.
அரசியலற்ற நடிகை நான் – ஓவியா
அரசியலற்ற நடிகை நான் – ஓவியா
சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. சினிமாவில் இருக்கும் பலருக்கும் அரசியல் ஆசை இருக்கிறது. அதே சமயம் அரசியல் என்றாலே தூரமாக ஓடிப் போகும் நட்சத்திரங்களும் இருக்கிறார்கள். அப்படியான அரசியலற்ற
நடிகை தான் நான் என பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா கூறியுள்ளார்.
ஓவியா
“அரசியல் எண்ணமற்ற நட்சத்திரங்களிடம் அரசியல் சார்ந்த கேள்விகளைக் கேட்காமல் இருக்க மீடியாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்காக கேள்விகளைக் கேட்கிறோம் என்பதை, உங்களை வேறு ஒரு விதத்தில் காட்டும் என நினைக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்’’.
நாயகனுக்கு திடீர் முத்தம் கொடுத்த லீமா
நாயகனுக்கு திடீர் முத்தம் கொடுத்த லீமா
மதராச பட்டிணம் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் லீமா. உதய் என்ற படம் மூலம் கதாநாயகி ஆகிறார். உதய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்துக்கு உதய் என்றே பெயர் வைத்துள்ளனர்.
கிடா விருந்து என்ற படத்தை இயக்கிய தமிழ் செல்வன் இயக்கியுள்ளார். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:-
லீமாபாபு
தான் வரைந்த ஓவியம் போல மனைவி அமைய நாயகன் ஆசைப்படுகிறான். அப்படி ஒரு பெண்ணை அவன் பார்த்ததும் காதலை சொல்கிறான். அந்த காதல் நிறைவேறியதா? என்பதே படம். இந்த படத்தில் முத்த காட்சியில் நாயகன் நடிக்க தயங்கி நிற்க, நாயகி லீமா திடீரென அவரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து விட்டார். அந்த காட்சி நன்றாக வந்து விட்டது’. இவ்வாறு அவர் கூறினார்.
அர்ஜுன் பட வாய்ப்புகளை மறுத்த இலியானா
அர்ஜுன் பட வாய்ப்புகளை மறுத்த இலியானா
பத்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தவர் நடிகை இலியானா. இளம் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து வந்த இவர் ஒருகட்டத்தில் பாலிவுட்டில் இருந்து வாய்ப்பு தேடி வந்ததால் தெலுங்கு சினிமா வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டு பாலிவுட்டில் செட்டிலானார்.
கடந்த ஆறு வருடங்களில் கிட்டத்தட்ட இந்தியில் எட்டு படங்களில் மட்டுமே நடித்தார். இலியானாவால் அங்கே பெரிதாக சாதிக்க முடியவில்லை.
இந்த நிலையில் கடந்த வருடம் அமர் அக்பர் அந்தோனி என்கிற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என எதிர்பார்த்தவருக்கு தற்போது மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுன் படங்களில் வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் கதாநாயகியாக அல்ல, ஒரு பாடலுக்கு மட்டுமே ஆடுவதற்கு வாய்ப்பு வந்துள்ளது.
இலியானா
இதனால் அதிர்ச்சியான இலியானா, தனது நிலைமை இன்னும் அந்த அளவுக்கு கீழே போகவில்லை என்று கூறி, தேடி வந்தவர்களை திருப்பி அனுப்பிவிட்டாராம். மேலும் கதாநாயகியாக வரும் வாய்ப்புகளை மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்பதில் உறுதியாகவும் இருக்கிறாராம்.
நடிகை மீது காதல் வயப்பட்ட -நடிகர்
நடிகை மீது காதல் வயப்பட்ட -நடிகர்
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அந்த படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், டாக்சிவாலா, நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார். சமீபத்தில் பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்ட பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய், தனக்கு இரண்டு நடிகைகள் மீது அளவுக்கடந்த ஈர்ப்பு இருப்பதாக கூறினார்.
தீபிகாபடுகோனே – ஆலியா பட்
அது வேறு யாருமில்லை நடிகை தீபிகா படுகோனே மற்றும் ஆலியா பட் என கூறி இதில் தீபிகாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என வருத்தத்துடன் கூறினார். உடனே அதை கேட்ட தீபிகா படுகோனே, ஆலியாவிற்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது என கூறி கிண்டல் அடித்தார்.
அவர்கள் எனக்கு கடவுள் மாதிரி – தமன்னா
அவர்கள் எனக்கு கடவுள் மாதிரி – தமன்னா
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் தமன்னா, திருச்சியில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருக்கிறார். அங்கு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,
13 ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருந்து வருகிறேன். இந்த ஆண்டு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியான ஆண்டு என்றே கருதுகிறேன். நான் கதாநாயகியாக நடித்த கண்ணே கலைமானே, சைரா, ஆக்ஷன், பெட்ரோமாக்ஸ் உள்ளிட்ட 7 படங்கள் வெளியாகி உள்ளது. அவற்றில் தெலுங்கில் ஒரு படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. புதுப்புது கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதாலும், தொடர்ந்து ரசிகர்கள் எனக்கு தரும் ஆதரவும் தான் என்னை நிலைத்து நிற்க செய்துள்ளது.
ரஜினி – தமன்னா – கமல்
ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறீர்கள். அவர்களுடன் நடிக்க தயாராக உள்ளீர்களா? என்ற கேள்விக்கு, ‘அவர்களது படங்களை நான் ஒரு ரசிகையாக ரசித்து பார்த்திருக்கிறேன். இருவரையும் நான் சின்ன வயதில் இருந்து கடவுள் மாதிரி பார்த்து வருகிறேன். எனவே, அவர்களுடன் நடிக்க யார்தான் மாட்டேன் என்பார்கள். ரஜினி, கமலுக்கு ஏற்ற கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருந்தால் நிச்சயம் இருவருடனும் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்’ என்றார்.
ரைசாவிடம் போன் நம்பர் கேட்கும் ரசிகர்கள்
ரைசாவிடம் போன் நம்பர் கேட்கும் ரசிகர்கள்
விஐபி 2 உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்த ‘நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த ’பியார் பிரேமா காதல்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கல்லுாரியில் படிக்கும் போதே, ‘மாடலிங்’ துறையில் ஈடுபட்டவர்.
இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் என்னுடைய லேன்ட்லைன் நம்பருக்கு போன் செய்யுங்கள் என்று போனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், உங்களுடைய போன் நம்பர் கொடுங்கள், நாங்கள் போன் செய்கிறோம் என்று பலரும் அவரிடம் கேட்டு வருகிறார்கள்.







