Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தமிழர்கள் மீது தாக்குதல் நடந்த பகுதிக்கு விரைந்த -ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள்
தமிழர்கள் மீது தாக்குதல் நடந்த பகுதிக்கு விரைந்த – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கேகாலை மாவட்டம் யட்டியன்தொட்ட கனேபொல தோட்டம் மேற்பிரிவு லயன் குடியிருப்பினுள் நுழைந்த சிலர் தோட்ட மக்கள் மீது (18) தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தின் உண்மையை தெரிந்துக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு நேரடி விஜயம் ஒன்னினை இன்று (21) மேற்க் கொண்டு மக்களிடம் நிலமையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றினை பெற்றுச் சென்றுள்ளனர்
அணைத்து வழக்குகளில் இருந்து கோட்டபாய விடுதலை
இலங்கையை கோட்டபாய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள நிலையில் அவர் மீது சுமத்த ப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுதலை செய்ய பட்டுளளார் .மைத்திரி ,ரணில் ஆட்சியில் இவர்கள் மீது தொடராக வழக்குகள் பதிவிட பட்டன ,அதில் இருந்து தற்போது இவர்கள் விடுதலை செய்ய பட்டுள்ளனர்
காலி கடற்கரை கரை ஒதுங்கிய -கடல் நாய்கள்
தென்னிலங்கை சிங்களவர்கள் அதிகம்வசிக்கும் காலி கடல்பகுதியில் கடல் நாய்கள் கரை ஒதுங்கிய சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .இந்த கடல் வாழ் உயிரினங்கள் எவ்வாறு இங்கு கரை சேர்ந்தன என்பது தொடர்பில் தெரியவரவில்லை
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ
இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
6 ஆளுனர்கள் பதவி ஏற்பு
6 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி 6 மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விபரம் பின்வருமாறு,
மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொல
மத்திய மாகாணம் – லலித் யு கமகே
ஊவா மாகாணம் – ராஜா கொல்லூரே
தென் மாகாணம் – டொக்டர் வில்லி கமகே
வடமேல் மாகாண – ஏ.ஜே.எம் முஸம்மில்
சப்ரகமுவ மாகாணம் – டிகிரி கொப்பேகடுவ
திறக்க படும் சிறை கதவுகள் – வெளியே வரும் குற்றவாளிகள்
திறக்க படும் சிறை கதவுகள் – வெளியே வரும் குற்றவாளிகள்
இலங்கையில் மகிந்த ஆட்சியின் பொழுது பல் வேறு பட்ட மோசடிகள் மற்றும் கொலை வழக்குகளில் கைது செய்ய பட்டு சிறை அடைக்க பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிகள் உள்ளிட்ட,தமிழின துரோகி கூட்டங்கள் தற்போது வெளியில் வர தயாராகின்றன .
,அடுத்து வரும் சில தினங்களில் இந்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதுடன் அதி உயர் பதவிகளிலும் அங்கம் வகிப்பார்கள் என உள்ளிருந்து வரும் கசிவுகள் தெரிவிக்கின்றன .
சஜித் புதிய கட்சி ஆரம்பிக்கிறார் – உடைகிறது யானை கட்சி
சஜித் புதிய கட்சி ஆரம்பிக்கிறார் – உடைகிறது யானை கட்சி
இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் தனது கட்சி நபரை வெல்ல விடாது சகுனி வேலை பார்த்த ரணில் குள்ள நரித்தனத்தால் அந்த கட்சி இரண்டாக உடையும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது
,தலைவர் பதவியில் இருந்து ரணில் விலக மறுத்து வரும் நிலையில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் நகர்வில் சஜித் பிரேமதாசா களத்தில் குதித்துள்ளார் ,
இதனால் யானை கட்சி தனது பலத்தை இழந்து காணமல் போகும் நிலை உருவாகியுள்ளதாக அவரது சகாக்கள் தடாலடியாக தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்
அடித்து பொழியும் மழை – வெள்ளத்தில் மூழ்க தயாராகும் சிங்கள பகுதிகள்
அடித்து பொழியும் மழை – வெள்ளத்தில் மூழ்க தயாராகும் சிங்கள பகுதிகள்
இலங்கை- வடக்கு – வடமத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக மலை வீழ்ச்சி இடம்பெற்றுள்ளது ,இதனால் தென் இலங்கை இனவாத சிங்கள பகுதிகள் கடும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது ,குளத்து நீர் மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் வெள்ள பெருக்கெடுக்கும் அபாயம் எழுந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
இலங்கையில் -அண்ணன் பிரதமர் ,தம்பி ஜனாதிபதி –
இலங்கையில் -அண்ணன் பிரதமர் ,தம்பி ஜனாதிபதி –
இலங்கையில் ஹிட்லர் குடும்பம் ஆட்சியில் உள்ளது கண்டு தமிழர் சமூகம் பீதியில் உறைந்துள்ளது ,மகிந்த பிரதமராகவும் ,தம்பி கோட்டபாய ஜனாதிபதியாகவும் ஆளும் சரச்வதிகார ஆட்சி இலங்கை வரலாற்றில் கரு நாளாக படிந்துளளது
காலியில் – பற்றி எரிந்த மருத்துவமனை
காலியில் – பற்றி எரிந்த மருத்துவமனை
தென்னிலங்கை சிங்களவர்கள் அதிகமாக வசிக்கும் காலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் ஐந்தாவது மாடி கட்டிடத்தில் திடீரென தீப்பற்றி கொண்டதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது ,இந்த தீ பற்றலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
வீதியின் நடுவே தோன்றிய பெருங்குழி – தப்பிய கார்கள்
வீதியின் நடுவே தோன்றிய பெருங்குழி – தப்பிய கார்கள்
தெற்கு ரசியாவின் city of Tyumen பகுதியில் திடீரென வாகன நெரிசல் கொண்ட வீதியின் நடுவே பெரும் குழி தோன்றியது ,இது அங்கிருந்த நீர் குழாய் வெடித்து ஏற்பட்ட குழி என கண்டறிய பட்டுள்ளது .எனினும் அந்த சாலை வழியாக சென்றா கார்களுக்கு சேதங்கள் ஏற்படவிலை
உலங்குவானூர்தி பயணத்திற்கு மகிந்த -கோட்டபாய பணம் செலுத்தினர் – விமான படை
உலங்குவானூர்தி பயணத்திற்கு மகிந்த -கோட்டபாய பணம் செலுத்தினர் – விமான படை
இலங்கையில் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவான கோட்டாபய தனது பதவியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் அனுராதபுரம் சென்றார் ,அந்த பயணத்திற்கு உலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டன ,மேற்படி உலங்குவானூர்தி பயணத்திற்கு மகிந்த -கோட்டபாய பணம் செலுத்தினர் -என விமான படை அதிரடியாக அறிவித்துள்ளது , கடந்த ஆட்சியின் பொழுது விமான பயணங்களுக்கு பணம் செலுதாது சென்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பிரகாரம் சட்ட சிக்கலில் இவர்கள் சிக்கி தவித்தமை குறிப்பிடத்தக்கது
உலகிற்கு தமிழர்கள் தமது பெரும் பலத்தை காட்டியுள்ளனர் – சிறிதரன் உருக்கம்
உலகிற்கு தமிழர்கள் தமது பெரும் பலத்தை காட்டியுள்ளனர் – சிறிதரன் உருக்கம்
இலங்கையில் இனவாத சிங்களவர்களை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்றது ,இதில் தமிழர்களி கொன்று குவித்த கோட்டாபய ஜனாதிபதியாக தெரிவானார் ,இந்த தேர்தலில் யானை கட்சிக்கு ஒட்டு மொத்த தமிழர் தேசம் பெரும்பான்மை வாக்குகளை அழித்தது ,ஆனாலும் அது தாண்டி சிங்களளவர்களின் அதிக வாக்குகளினால் கோட்டபாய தனி பெரும் வெற்றியை தட்டி சென்றார் .இதில் இருந்து தமிழர்கள் உலகிற்கு ஒன்று பட்டு இருப்பதையும் தாம் தமது இலக்கு நோக்கி நடைபயில்வதையும் தெளிவாக கணப்பித்துள்ளது என மனம் உருகி பேசியுள்ளார் .இதே கோத்தபாயாவினால் ஸ்ரீதரன் கொலை செய்ய முயற்சிகள் இடம்பெற்றமை குறிப்பிட தக்கது
இனவாத சிங்களவர் வீடுகளை அடித்து நொறுக்கிய புயல் – 20 வீடுகள் சேதம்
இனவாத சிங்களவர் வீடுகளை அடித்து நொறுக்கிய புயல் – 20 வீடுகள் சேதம்
இலங்கையில் இனவாத சிங்களவர்கள் வசித்து வரும் 20 வீடுகள் , சேதமடைந்துள்ளன ,மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு ஓட்டமும் பிடித்துள்ளனர் ,பாதிக்க பட்டவர்களுக்கும் உதவிட அனர்த்த முகாமைத்துவ அமைச்சு களப்பணியில் ஈடுபட்டுளள்து
3 வயது சிசுவை கழுத்து நெரித்து கொன்று உரைப்பையில் கட்டி வைத்த இளம் பெண்
3 வயது சிசுவை கழுத்து நெரித்து கொன்று உரைப்பையில் கட்டி வைத்த இளம் பெண்
தன்னுடைய பாட்டியுடன் இருந்த குழந்தை காணாமல் போனதாக நேற்று (19) கல்னேவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.
குறித்த குழந்தையின் பெற்றோர் வேலைக்கு சென்றதன் பின்னர் குழந்தை பாட்டியுடன் இருப்பதாகவும் அந்த நேரத்தில் ஒவ்வொரு நாளும் அயல் வீட்டில் இருக்கும் வீட்டிற்கு குறித்த குழந்தையை எடுத்து செல்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த வீட்டை பொலிஸார் சோதனையிட்ட போது உரைப்பை ஒன்றை போடப்பட்டு குறித்த வீட்டின் கிணற்றிற்கு அருகில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
3 வயதும் 4 மாதங்களுமான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
அயல் வீட்டில் வசிக்கும் 22 வயதுடைய பெண் குறித்த குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தமிழ் தளபதி இரத்தம் குடித்த – சிங்களத்தி
தமிழ் தளபதி இரத்தம் குடித்த – சிங்களத்தி
துட்டகைமுனு எனும் கோட்டாபய ஆகிய நான்…!
ருவான் வெலிசாய…! ஒட்டுமொத்த இலங்கையின் – இலங்கையரின் கவனத்தையும் நேற்று முன்தினம் தன்பக்கம் ஈர்த்துக் கொண்ட இடம். ஆம்…! இங்குதான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம்மிக்க ஏழாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்த இடம்.
ஜனாதிபதியாகப் பதவியேற்பவர் தனக்குப் பிடித்தமான இடத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், கோட்டாபய ராஜபக்ச ருவான் வெலிசாயவில் பதவி ஏற்றுக்கொண்டதற்குப் பின்னால், ஓர் ஆழமான வரலாற்றுக் காரணம் உள்ளது. இதை அவருடைய முதல் பேச்சும் ஆழமாக உணர்த்திச் சென்றுள்ளது.
அவரின் இந்த வியாக்கியானங்களை நாம் விளங்கிக் கொள்ள – கோட்டாபய சொல்லும் வரலாற்றுச் செய்தியை உணர நாம் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும்.
நம் கண்முன்,
ஒரு சிறுவன் பஞ்சணையில் படுத்திருக்கிறான். ராஜ களை ததும்பும் அவன் முகம் சோகத்திலும் கோபத்திலும் சிவந்து கிடக்கிறது. கைகளையும் கால்களையும் குறுக்கிக் கிடக்கிறான். அவனின் தாய் அவனைத் தேற்றிக் கொண்டே கேட்கிறாள்.
“காமினி ஏன் இவ்வாறு கஷ்டப்பட்டுப் படுத்திருக்கிறாய்…! கை, கால்களை நீட்டித் தாராளமாகப் படுத்துக் கொள்”, என்கிறாள் தாய்.
கோபத்தில் எள்ளும்கொள்ளுமாய் வெடித்த மகன் சொல்கிறான், “மகா கங்கைக்கு அப்பால் (வடக்கே) தமிழர்கள். கீழே (தெற்கே) சமுத்திரம். கை, கால்களை நீட்டி தாராளமாக நான் படுப்பது எங்ஙனம்…?”
இவ்வாறு கேட்பவனுக்கு என்ன பதில் சொல்வது? தேற்றுவதுதான் எப்படி? ஏனெனில் அவனுள் இந்தக் குரோதமும் விரோதமும் வளரக் காரணமானவள் அவளல்லவா…? தன் மசக்கை ஆசைகளில் ஒன்றாக “தமிழ் (எல்லாளனின்) தளபதி ஒருவனின் தலையை வெட்டிய – குருதி படிந்த வாளைக் கழுவி, அந்த இரத்த நீரை குடிக்கக் கேட்டவள் அல்லவா அவள்…? அவளுக்குப் பிறந்தவளின் – அவள் அதைக் குடிக்கும்போது கருவில் இருந்த பிள்ளைக்கு தமிழனை விரோதிக்கவும் – பகைக்கவும் சொல்லித்தான் கொடுக்க வேண்டுமா… என்ன?
நீங்கள் நினைப்பது சரிதான்… அந்தச் சிறுவன் வேறு யாருமல்லன். மகாவம்சம் கூறும் இலங்கை வரலாற்றின கதாநாயகன் – சிங்கள – பௌத்தர்கள் இன்றும் – என்றும் போற்றிப் புகழும் வீரநாயகன் துட்ட கைமுனு அல்லது துட்ட காமினி என அறியப்பட்ட “காமினி அபய”தான். நீதிநெறி வழுவாத மன்னவன் – எதிரிகளும் எதிர்நிற்க அஞ்சும் வீரனான எல்லாளனை சூழ்ச்சியால் வெற்றி கொன்றானே அதே வீர(?)நாயகன் துட்ட கைமுனுதான். பல இட்டுக்கட்டிய கதைகளைச் சொல்லும் – தமிழர்களுக்கும் – சிங்களவர்களுக்கும் இனவாதத் தீயை முதலில் பற்ற வைத்த மகாவம்சம் நூலின் நாயகன்தான்.
அந்தத் துட்ட கைமுனு, சூழ்ச்சியால் எல்லாளனை போரில் வென்ற பின்னர், தனது வெற்றியைப் பறைசாற்றவும் பௌத்த மதத்தின் மீது தான் கொண்ட பற்றை வெளிப்படுத்தவும் அமைத்ததுதான் ருவான் வெலிசாய.
இந்த விகாரையை துட்டகைமுனு கட்டியபோது, நவரத்தினங்களையும் தங்கக் கட்டிகளையும், வெள்ளிக்கட்டிகளையும் கொட்டிக் கட்டினான் என்கிறது மகாவம்சம். ஆனால், சூழ்ச்சியாலும் சதியாலும் வென்ற போரில் சூறையாடப்பட்ட தமிழர்களின் சொத்துக்களையும், அவர்களைக் கசக்கிப் பிழிந்து பெற்ற வரிகளை வசூலித்தும், போர் கைதிகளாக பிடிபட்ட தமிழர்களை அடிமைகளாக்கி அவர்களை துன்புறுத்தி – வருத்தி அவர்கள் சிந்திய இரத்தத்திலும் – வியர்வையிலும் கட்டப்பட்டதுதான் இந்த விகாரை.
தமிழர்களை வெற்றி கொண்டதன் அடையாளச் சின்னமாக – அன்றைய போரில் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பல ஆயிரம் தமிழர்களின் நினைவுச் சின்னமாக – பல்வேறு துன்பங்களையும் – சித்ரவதைகளையும் – அடக்குமுறைகளையும் தமிழர்கள் எதிர்கொண்டதற்கான சாட்சியமாகவும் நிமிர்ந்து நின்றதுதான் இந்த ருவான் வெலிசாய. இவ்வாறு தமிழின அழிப்பின் – தமிழர்கள் மீதான அடக்குமுறையின் அடையாளமாக நிற்கும் ருவான் வெலிசாயவில்தான் கோட்டாபயவின் அரசியல் பயணம் தொடங்கியது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனவழிப்பு உலகமே வர்ணிக்கும் “முள்ளிவாய்க்கால் இனவழிப்பை” வழிநடத்தியவர்களில் ஒருவர்தான் இந்த கோட்டாபய ராஜபக்ச. 2005 இல் தமிழ் மக்கள் வாக்களிப்பை புறக்கணித்தபோது – சிங்கள -பௌத்த தீவிர சக்திகளின் தெரிவாக இருந்தவர் இவருடைய மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ச. இவர், பதவியேற்றதும் இலங்கை வந்த முன்னாள் இராணுவத்தினனான கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவியேற்றார். தமிழர்களுக்கு எதிரான போரை – தனது சகோதரனின் நிறைவேற்று அதிகார ஆசியுடன் முன்னின்று நடத்தினார். இராணுவத் தளபதிகள் குற்றங்கள் இழைக்கவும் – அவர்கள் கட்டுக்கடங்காத போர் மீறல்களை மேற்கொள்ளவும் – சர்வதேச போர் விதிகளை காலில் போட்டு மிதித்து தமிழர்களுக்கு எதிராக அழிப்பைக் கட்டவிழ்த்து விட்டார்.
தமிழரின் தாயகத்தை – தமிழருக்கே உரித்தான அரசை மீளக் கேட்ட – அமைக்க முயன்ற விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனிக்கச் செய்யப்பட்டது. சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். அங்கு பல இன்னல்களையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டார்கள் தமிழ் மக்கள். இவ்வாறு தமிழர்களை வெற்றிகொண்ட ராஜபக்ச சகோதரர்களில் ஆட்சியாளரான மஹிந்த ராஜபக்ச 2010 தேர்தலில் போட்டியிட்டபோது, இலங்கையை முதன்முதலில் ஒருங்கிணைத்த – தமிழர்களை அழித்து – அடக்கிய – துட்டகைமுனு மன்னனுக்கு நிகராகக் கொண்டாடப்பட்டார் – போற்றப்பட்டார்.
2015 ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிக்கு தடை ஏற்பட்டது. எனவே 2019 தேர்தலில் அவர்களுக்குப் பெருவெற்றி ஒன்று தேவைப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையைப் பறிகொடுத்த அவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கினார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அப்போதைய தலைவர் பண்டாரநாயக்க என்ன நோக்கில் தொடங்கினாரோ அதே இலட்சியப் பாதையில் – அதே சிந்தனையை முன்வைத்தே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தொடங்கப்பட்டது. சிங்கள – பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் ஆட்சிப்பீடம் ஏற அவர்களின் ஆசி மட்டுமே போதும் என்பதை மீண்டும் பறை சாற்றியது கோட்டாபயவின் வெற்றி.
துட்டகைமுனுவின் ஊரான திஸ்ஸமகரகமவை (அம்பாந்தோட்டை) சேர்ந்த கோட்டாபயவும், தனது அண்ணன் வழியிலேயே, சிங்கள – பௌத்தர்கள் போற்றும் நவீன துட்டகைமுனுவான கோட்டாபய ராஜபக்ச, துட்டகைமுனு மன்னன் தமிழர்களை வெற்றி கொண்டு அவர்களிடம் இருந்து கைப்பற்றிய செல்வங்களைக் கொண்டு கட்டிய விகாரையான ருவான் வெலிசாயவில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து. அங்கேயே பதவிப் பிரமாணத்தையும் செய்து சிங்கள – பௌத்தன் என்ற பெருமிதத்துடன் நவீன துட்டகைமுனுவாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈராயிரம் வருடங்களுக்கு முன்னர் வகைதொகையின்றி தமிழர்கள் அழிக்கப்பட்ட – தமிழர்களை அழித்தும் – வருத்தியும் பெறப்பட்ட செல்வங்களைக் கொண்டு கட்டப்பட்ட ருவான் வெலிசாயவில், “கோட்டாபய எனும் நான் இந்த நாட்டின் சகல மக்களையும் இன, மத, சாதி பேதமின்றி அனைவருக்கும் சேவையாற்றுவேன் என உறுதி ஏற்றிருக்கிறார்.
இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்து விட்டேனே என துட்டகைமுனு கலங்கியபோது, “நமது மார்க்கத்தை நம்பாதவர்கள் தீய வாழ்வை மேற்கொண்டவர்கள் – மிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக்கூடாதவர்கள்”, என உபதேசமளித்தனர் பிக்குகள். இதனால் துட்டகைமுனு மனம் மாறினான் என்கிறது மகாவம்சம்.
நவீன துட்டகைமுனுவான கோட்டபய ராஜபக்சவும் இதைப் பின்பற்றி துட்டகைமுனுவாகவே வாழ்வாரா? அல்லது கோட்டாபய என்ற “சிங்கள – பௌத்த ஆதிக்கராக சிறுபான்மை மக்களின் மனதில் இருக்கும் விம்பத்தை அழித்து முன்மாதிரியான தலைவராக மாறுவாரா? என்பதை இனிவரும் காலங்கள்தான் பதில் சொல்லும்.
-செங்கையான்
கழுத்து வெட்டுவேன் என்ற இராணுவ பிரிகேடியரை கைதுசெய்ய கோரி =-லண்டனில் தமிழர்கள் போராட்டம்
கழுத்து வெட்டுவேன் என்ற இராணுவ பிரிகேடியரை கைதுசெய்ய கோரி =-லண்டனில் தமிழர்கள் போராட்டம்
-பிரித்தானிய லண்டன் -இலங்கை தூதரகத்தில் பணியாற்றிய இராணுவ பிரிகேடியர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் கழுத்தை வெட்டுவேன் என சாமிகை மூலம்காண்பித்தார் ,இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைமேற்கொள்ள பட்ட நிலையில் லண்டனை விட்டு கைது பயத்தில் தப்பி ஓடினார் , தப்பி ஓடியவரை கைதுசெய்ய கோரி இன்று 19-11-2019 லண்டன் வெஸ்ட்மினிஸ்ட்டர் நீதிமன்றம் முன்பாக தமிழர்கள் போராட்டத்தை நடத்தினர் . இதன் பொழுது அங்கு வருகை தந்த மக்கள் இலங்கை புலனாய்வு படையினரால் இரகசியமாக படம் பிடிக்க பட்டுள்ளதாக அங்கு கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கப்படுகிறது ,மேலும் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்களை சிங்கள அரசு கைது செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது , அதே படைகளினால் இன்னல்களுக்கு ஆளாகி உயிர் தப்பி இங்கு வருகை தந்த அப்பாவி மக்களை தொடர்ந்து துன்புறுத்தும் நிகழ்வில் சிங்கள அரச ,மற்றும் அதன் உளவுத்துறை ஈடுபட்டு வருகின்றனை குறிப்பிடத்தக்கது

பிரான்சில் – தமிழர்கள் கைது – மேலும் பலர் கைதாகலாம் என்பதால் – பரபரப்பு
பிரான்சில் – தமிழர்கள் கைது – மேலும் பலர் கைதாகலாம் என்பதால் – பரபரப்பு
பிரான்ஸ் நாட்டில் காவல்துறையினரால் போலீசாரை சாரதி அனுமதி பத்திரசம் தயாரித்து வழங்க பட்டு வந்த நிறுவனம் முற்றுகையில் சிக்கியது ,இதன் பொது தற்பொழுதுவரை பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
மேலும் பலர் சிக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது . இவ்வாறு போலியாக சாரதி அனுமதி பாத்திரம் பெற்றவர்களில் கணிசமான தமிழர்களா உள்ளனர் எனவும் அவர்களும் கைது செய்யப்படலாம் என்பதால் பரபரப்பு நிலவுகிறது ,
நான்காயிரம் யூரோக்கள் வழங்கி இந்த லைசன்ஸ் பெற்றுக்கொள்ள பட்டுள்ளது ,பல மாதங்களாக உளவுத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு இந்த கைது வேட்டை இடம்பெற்றுளளது
இலங்கை வந்தடைந்த ரஷியா -போர் கப்பல்
இலங்கை வந்தடைந்த ரஷியா -போர் கப்பல்
இலங்கைக்கு இருபதாயிரம் கடல் மைல் கடந்து ரஷியாவின் போர் கப்பல் ஒன்று வருகை தந்துள்ளது ,இலங்கை கம்பத்தோட்ட கடல்பகுதியில் இது கூட்டு பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாம் ,மூன்று நாள் உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு வந்துள்ள இந்த கப்பல் கோட்டபாய பதவி ஏற்று முதல் கப்பலாக வருகை தந்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது










