Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
நோர்வே இலங்கை தூதருடன் – மகிந்தா சந்திப்பு
நோர்வே இலங்கை தூதருடன் – மகிந்தா சந்திப்பு
இலங்கையில் உள்ள நோர்வே தூதரக அதிகாரி ஆளும் பிரதமர் மகிந்த ராஜ்பக்ஸ்சாவை சந்தித்து பேச்சுக்களை நடத்தினர் ,
இரு நாட்டுடனான வர்த்தகம் ,அபிவிருத்தி ,ஒத்துழைப்பு மற்றும் முக்கிய விடயங்கள் தொடர்பாக இதில் பேச பட்டதாம் ,
இதே நோர்வே தான் நடு நிலையாளராக வருகை தந்து புலிகளை முற்றாக அழித்து சென்றமை இங்கே குறிப்பிட தக்கது

இலங்கையில் சொகுசு பேரூந்துகள் சேவைக்கு வருகிறது -அதிரடி அறிவிப்பு
இலங்கையில் சொகுசு பேரூந்துகள் சேவைக்கு வருகிறது -அதிரடி அறிவிப்பு
இலங்கையில் புதிய ஆட்சியில் பல வேலை திட்டங்கள் வேகமாக முன்னெடுக்க படுகின்றன ,
அவ்விதம் தற்போது சொகுசு பேரூந்துகள் சேவையில் அமர்த்த படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர்
அறிவித்துள்ளார் .செமி சொகுசு பேரூந்துகள் இவ்விதம் மக்கள் பாவனைக்கு விடப்படுகிறதாம் ,

32 அமைச்சின் செயலாளர்கள் கோட்டாவினால் நியமனம்- விபரம் உள்ளே
32 அமைச்சின் செயலாளர்கள் கோட்டாவினால் நியமனம்
இலங்கையில் புதிய அதிகார தலைமை பீடத்தினால் அமைச்சுகளுக்கான செயலர்கள் நியமிக்க பட்டுள்ளனர்
,இவ்வாறு 32 செயலர்கள் கோத்தபாயாவின் கீழ் இன்று உறுதி எடுத்து தமது பதவிகளில் அமர்ந்து கொண்டனர்
,இவ்விதம் அறிவிக்க பட்டவர்களில் வடக்கு அரச அதிபரும் உள்ளடங்குகிறார் ,தமிழர்களை இலக்கு வைத்து அவர்கள்
வாக்குகளை பெற கோட்டா இவ்விதம் சிலரை நியமித்துள்ளதை காண முடிகிறது

ஒரே பிரசவத்தின் நான்கு – ஆண் சிசுக்களை பெற்ற தாய்
ஒரே பிரசவத்தின் நான்கு – ஆண் சிசுக்களை பெற்ற தாய்
ஒரே பிரசவத்தின் நான்கு – ஆண் சிசுக்களை பெற்ற தாய்
இலங்கை அக்குறணை பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் நான்கு ஆண் சிசுவை பெற்றுளளர் ,
இவர் பரதெனியா அரசினர் மருத்துவமனையில் தொடர்ந்து நிலை பெற்றுளளர் ,தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

நிசாந்த டி சில்வா சுவிஸ் சென்றது தொடர்பில் விசரணைகளை முடக்கும் சிங்கள அரசு..!
சிஐடி நிசாந்த சில்வா நாட்டை விட்டு சட்டவிரோதமாக சென்றமை தொடர்பில் முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி
அபேசேகர மற்றும் சிஐடி ஏஎஸ்பி திஸ்ஸேராவிடம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவு வாக்குமூலம் பெற்றுள்ளது.
யாழில் இரண்டுமாத சிசுவை கொன்று கிணற்றில் வீசிய கோரம்- தாயும் தந்தையும் கைது
யாழில் இரண்டுமாத சிசுவை கொன்று கிணற்றில் வீசிய கோரம்- தாயும் தந்தையும் கைது…!
வடமராட்சி – துன்னாலை பகுதியில் இரண்டரை மாதக் குழந்தை ஒன்று கிணற்றில் வீசி கொல்லப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் துன்னாலை – குடவத்தை பகுதியில் நேற்று (08) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வீட்டில் குழந்தையுடன் தாய் தூங்கிக் கொண்டிருந்த போது தாயின் கைகளை யாரோ அழுத்துவது போல் தோன்றிய
சமயத்தில் தயார் எழுந்து பார்த்துள்ளார். இதன்போது போது அருகில் குழந்தை இல்லை என்பதை கண்டுள்ளார்.
இதனையடுத்து குழந்தையை தேடிய தாய், குழந்தை கிணற்றில் வீசப்பட்டதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தந்தை வீட்டில் இல்லாத சமயத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை
அஜந்தராசா அஸ்வின் என்ற குறித்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தில் தாய் (வயது-20) மற்றும் தந்தையை (வயது-21) கைது செய்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
கழுத்து வெட்டி இராணுவ தளபதிக்கு வழங்கப்பட்ட தீர்பபை – ஏற்க மறுக்கும் இலங்கை
கழுத்து வெட்டி இராணுவ தளபதிக்கு வழங்கப்பட்ட தீர்பபை – ஏற்க மறுக்கும் இலங்கை
இலங்கை – லண்டன் தூதரகத்தில் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ போராட்டத்தில்
ஈடுபட்ட மக்களை பார்த்து கழுத்து வெட்டுவேன் என சமிக்கை மூலம் காண்பித்தார் ,
இவரது இந்த செயலுக்கு எதிராக தமிழர்களினால் தொடர பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்பளித்துள்ளது .
எனினும் தமக்கு இதுவரை அது தொடர்பில் உத்தியோக பூர்வமாக அறிவிக்க படவில்லை என இலங்கை இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
பால்மா விலை அதிரடி குறைப்பு -15 ரூபா – குஷியில் மக்கள்
பால்மா விலை அதிரடி குறைப்பு -15 ரூபா – குஷியில் மக்கள்
இலங்கையில் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டபாய பதவி ஏற்றதன் பின்னர் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்க பட்டு வருகின்றன
,இதற்க்கு அமைவாக 40 ரூபாவாக விற்க பட்ட பால்மா தற்போது 15 ரூபாவாக குறைக்க பட்டுள்ளது
.இதனால் மக்கள் குஷியில் உறைந்துள்ளனர்

இலங்கை கடல் படை உருவாக்கு பட்டு 69 ஆண்டுகள் – கோலாகல கொண்டாட்டம்
இலங்கை கடல் படை உருவாக்கு பட்டு 69 ஆண்டுகள் – கோலாகல கொண்டாட்டம்
இலங்கை கடல் படை ஆரம்பிக்கு பட்டு இன்றுடன் 69 ஆண்டுகளாகின்றன ,அந்த மகிழ்ச்சியான நாளினை சிங்கள கடற்படை குதூகலமாக கொண்டாடி வருகிறது
,இந்த கடல்[படையின் சேவை நாட்டின் இறைமை மற்றும் பாதுகாப்பை உறுதி படுத்தியது என கடற்படை தளபதி முழங்கியுள்ளார்

சுவிசுக்கு செல்ல இலங்கை தூதரக பெண்ணுக்கு தடை
சுவிசுக்கு செல்ல இலங்கை தூதரக பெண்ணுக்கு தடை
இலங்கை சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய சிங்கள பெண் ஒருவர் வெல்ல வானில் கடத்த பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த ஓட்ட பின்னர் விடுதலை செய்ய பட்டார்
அவ்வாறான பெண் குடும்பத்தை சுவிஸுக்கு அழைத்து செல்ல சுவிஸ் தூதரகம் இலங்கையிடம் அனுமதி கேட்ட பொழுதும் அதனை இலங்கை வழங்கவில்லை ,
இந்த நிலையில் தற்போது நீதிமன்றம் வெளிநாடு செல்வதற்கு குறித்த பெண்ணுக்கு தொடர்ந்து இடைக்கால தடை ஒன்றை விதித்து தீர்ப்பளித்துள்ளது
முற்றிலும் இலவசமான கொரியன் அக்யுபஞ்சர் வைத்திய சிகிச்சை
முற்றிலும் இலவசமான கொரியன் அக்யுபஞ்சர் வைத்திய சிகிச்சை
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதரின் வழிகாட்டலின் கீழ் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத
வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எம்.பி.முஹம்மது ரஜீஸ் தலைமையில் இலவச வைத்திய விழிப்புணர்வும்,
கொரியன் முறை அக்யுபஞ்சர் வைத்திய சேவையும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில்
நேற்று (05)
இடம்பெற்றது.


இந்த வைத்திய விழிப்புணர்வு நிகழ்வையும், இலவச வைத்திய சிகிச்சையினையும் கல்முனை ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும்
கிழக்கு மாகாணத்தில் கொரியன் அக்யுபஞ்சர் வைத்திய முறையில் சிறப்பு தேர்ச்சிபெற்ற வைத்தியருமான எம்.வை.இஸ்ஹாகினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த வைத்திய சேவையை பெற்றுக்கொள்வதற்காக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில்,
நிந்தவூர் போன்ற பிரதேசத்திலிருந்து பலர் வருகைதந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் – நாம் தமிழர் கட்சி
சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் – நாம் தமிழர் கட்சி
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெற்ற மனித
உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கில் மாநிலம் முழுவதிலுமிருந்து மனித உரிமை ஆர்வளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து மனித உரிமை ஆர்வளரும், டெல்லி உச்சநீதிமன்ற
வழக்கறிஞருமான திரு.பாரிவேந்தன் அவர்கள் கலந்துரையாடினார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான திரு.ராஜீவ்காந்தி அவர்கள் இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் குறித்த விவரித்தார்.
கல்வி உரிமைச் சட்டம் மற்றும் புதிய கல்விக்கொள்கை குறித்து கல்வியாளர் பேராசிரியர் திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் எடுத்துரைத்தார்.
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையின் சார்பில் டிசம்பர் 8 2019
ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மனித உரிமை ஆர்வளர்களும், நாம் தமிழர் கட்சியினரும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
அப்பாசறையின் பொறுப்பாளர்களான திரு.மதுசூதனன், திருமதி. சிவசங்கரி ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினக் கருத்தரங்கின் இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


மலையகத்திற்கு இன்னும் ஒரு சர்வதேச தங்க பதக்கம்
மலையகத்திற்கு இன்னும் ஒரு சர்வதேச தங்க பதக்கம்
உடபுஸ்ஸல்லாவ மைந்தன் மணிவேல் சத்தியசீலன் சர்வதேச
தடை தாண்டலில் தங்க பதக்கம் வென்றார்
நுவரெலியா மாவட்டம் உடபுஸ்ஸல்லாவ எமஸ்டன் தோட்டத்தை சேர்ந்த மணிவேல் சத்தியசீலன் தற்போது மலேசியா கூச்சிங் சேவாக் விளையாட்டு அரங்கில்
நடைபெற்று வரும் 21 வது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் கலந்துக் கொண்டு வேகநடை போட்டியில்
முதலாம் இடத்தை பெற்று தங்க பதக்கம் பெற்று இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளார்.
மலேசியாவில் நடைபெற்று வரும் 21 வது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில். 30 நாடுகளை சேர்ந்த 3000 க்கு
மலையகத்திற்கு இன்னும் ஒரு சர்வதேச தங்க பதக்கம்
மேற்பட்ட வீர வீரங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர். இதன் மத்தியிலேயே மணிவேல் சத்தியசீலன் இந்த சாதனையை தனதாக்கி கொண்டுள்ளார்
அன்மை காலமாக மலையகத்தில் இவ்வாறு பல இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் இலங்கைக்கும்
மலையகத்திற்கு சர்வதேச ரீதியல் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்து வருகின்றனர்.
அவற்றில் ஹட்னை சேர்ந்த குமார் சன்மமுகேஷ்வரன் கொத்மலை லபுக்கலை தோட்டம் மாதவன் ராஜ்குமார் ஆகியோரை குறிப்பிட முடியும்.
இதே 21 வது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பூண்டுலோயாவை சேர்ந்த துரைசாமி விஜிந்த் என்ற வீரரரும் கலந்துக் கொண்டு இருப்பதும் குறிப்பிடதக்கது
மணிவேல் சத்தியசீலன் சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வம் உடையவர். 2017ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற 20
வது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் கலந்து வேகநடை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.
அதேபோல் ஏனைய மூன்று போட்டிகளில் கலந்து வெள்ளிப் பதக்கங்களும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவரின் அம்மா வி.விஜயலட்சுமி தந்தை எம.மணிவேல் தோட்ட தொழிலாளிகள் தற்போது ஒய்வு பெற்று வீட்டில் இருக்கின்றனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவரின் மனைவி திருமதி ச.தேவபிரியா மலையக மக்கள் முன்னணியின் வலப்பனை பிரதேச சபை உறுப்பினராக இருக்கின்றார்.
மணிவேல் சத்தியசீலன் சுதொழிலாக மரக்கரி செய்கையிலும் மரக்கரி விற்பனையிலும் ஈடுப்பட்டு
வருகின்றார். இவரின் இந்த இலக்கை அடைவதற்கு இவர் பல்வேறு முயற்சிகளை மேற்க் கொண்டு உள்ளார்.
மலையகத்திற்கு இன்னும் ஒரு சர்வதேச தங்க பதக்கம்
இவரின் இந்த பயணத்திற்கு பல்வேறுப்பட்டவர்களிடம் உதவிகள் கோரியும் கிடைக்கவில்லை. இருந்தும் எடுத்த முயற்சியில் வெற்றி அடைய வேண்டும் என்ற நோக்கில்
தனது விவசாயத்தின் மூலம் கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேமித்தும் சிலரிடன் கடன் பெற்றும் வட்டிக்கு பணம்
பெற்றும் பெரும் செலவில் தனது சொந்த பணத்தில் மலேசியா சென்று இந்த வெற்றியை பெற்று உள்ளார்.
இவரின் இந்த வெற்றி இவரின் கனவின் நனவாக இருந்தாலும் மலையத்தை பொருத்த வரையில் சாதனையே
. மலையத்தில் அனைத்து துறைகளிலும் திறமை உள்ளவர்கள் பலர் இருக்கின்றனர்.
அதனை வெளிக்காட்ட வருமை ஒரு காரணமாக இருக்கின்றது. இவ்வாறான நிலையில் அன்மை காலமாக இவர் போன்றவர்களுக்கு உதவி கரம் நீட்டி உலகளாவிய
ரீதியில் மிளர செய்வதற்கு மலையக சொந்தங்கள் பலர் மும்முறமாக செயற்பட்டு வருகின்றனர்.
அதன் பயனையும் பெற்று உள்ளனர். இந்த கரங்கள் இவரையும் எதிர்காலத்தில் அனைக்க வேண்டும்.
உண்மையாகவே இவரின் திறமையை 2017 ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற 20 வது ஆசிய மெய்வல்லுனர்
போட்டியில் கலந்து வேகநடை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற போதே உலகரிய செய்து இருக்க வேண்டும்.
இவரும் பதக்கம் வென்று தனக்கு அங்கிகாரம் கிடைக்கவில்லை என்று ஒழிந்து இருக்கவில்லை தொடர் முயற்சியில் 2019 ஆம் ஆண்டு 21 வது ஆசிய மெய்வல்லுனர்
போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனையை நிலைநாட்டி உள்ளார். இவரின் திறமைக்கு வாழ்த்துக்கள்

மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் தடை
மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் தடை
நான்கு பேருக்கு மரணத் தண்டனையை நிறைவேற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
மேற்கொண்ட தீர்மானமொன்றை செயற்படுத்துவதை தடுத்து விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை,
எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்க உயர்நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ,
எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன் போது, குறித்த விடயம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் எதிர்வரும்
மார்ச் மாதம் 17,18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பரிசீலிக்கப்படும் என நீதிபதி குழாம உத்தரவிட்டுள்ளது.
வெள்ளைவானில் கடத்த பட்ட பெண்ணிடம் – ஐந்து மணித்தியாலம் விசாரணை
வெள்ளைவானில் கடத்த பட்ட பெண்ணிடம் – ஐந்து மணித்தியாலம் விசாரணை
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி வாக்குமூலம் ஒன்றை வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
அவர் நேற்று மாலை (08) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அவருடன் சுவிஸ் தூதரக உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சட்டத்தரணிகளும் வருகை தந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய குறித்த சுவிஸ் தூதரக அதிகாரியிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரை வாக்குமூலம்
பெறப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமைச்சர்களுக்கு ஆப்பு வைத்த கோத்தா
அமைச்சர்களுக்கு ஆப்பு வைத்த கோத்தா
இலங்கையின் ஏழாவது நிறைவேறு ஜனாதிபதியாக ஆட்சியில் அமர்ந்துள்ள தமிழின கொலையாளியும் போர்குற்றவாளியுமான கோட்டபாய
தனது சர்வதிகார ஆட்சியில் அமைச்சர்கள் ,மற்றும் அரச அதிகாரிகளுக்கு புதிதாக கொள்வனவு செய்யப்படும் வாகன உரிமங்களை இரத்து செய்துள்ளார் ,
இதனால் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் மீத படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
தமிழ் பெண்கள் பொட்டு வைக்க தடை – கோட்டா அடாவடி ஆரம்பம்
தமிழ் பெண்கள் பொட்டு வைக்க தடை – கோட்டா அடாவடி ஆரம்பம்
இலங்கையில் புதிதாக கடவுசீட்டு ( பாஸ்போர்ட் ( விண்ணப்பிக்கும் தமிழ் பெண்கள் அவர் தம் நெற்றில் பொட்டு வைக்க தடை விதிக்க பட்டுள்ளது ,
அவ்வாறு பொட்டு வைத்த படங்களுடன் விண்ணம் செய்ய பட்டால் அவை நிராகரிக்க படும் எனவும் இது புது குடிவரவு
,குடியகழ்வு விதிக்குள் உட்படுவதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது ,
ஜே ஆர் வழியில் நகரும் கோட்டபாய தான் ஒரு சிங்கள இனவாதி என்பதனையும் தமிழர்கள் தாக்கி ஒடுக்க
பாடுவார்கள் என்பதனை மேற்படி விடயம் எடுத்துரைக்கிறது .
இலங்கை ஒரு பவுத்த சிங்கள நாடு இதற்குள் இவர்களே முன்னுரியவர்கள் என்ற நிலையில் பயணிக்கும் கோத்தா
சிந்தனை இலங்கை தீவில் இரு நாடுகள் பிறக்க போவதற்கு இந்த விடயங்கள் தாராள வழி வகுத்து கொடுக்கின்றன
லண்டன் நீதிமன்றம் முன் பறந்த புலிக்கொடி – கொதிக்கும் இலங்கை
லண்டன் நீதிமன்றம் முன் பறந்த புலிக்கொடி – கொதிக்கும் இலங்கை
பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ,தடைசெய்யப்பட்ட பயங்கரவாத
அமைப்பண புலிகளின் கொடிகளை பிரிட்டிஷ் நீதிமன்றம்
முன்அங்கு கலந்து கொண்ட புலிகள் ஆதரவாளர்கள் தாங்கி பிடித்துள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது
,நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு இலங்கைக்கு முதல் சடட ரீதியாக வீழ்ந்துள்ள அடியாகும் ,எந்த ஒரு
வெளிநாடுகளுக்கும் கழுத்து வெட்டி இராணுவ தளபதி செல்ல முடியாத தடை வீழ்ந்துள்ளது ,
சர்வதேச போலீசார் எவ்வேளையும் இவரை கைது செய்யலாம் என்ற நிலை உள்ளது, இதுவே இலங்கை
அரசுக்கு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ள விடயமாக மாறியுள்ளது ,
இந்த வழக்கின் பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய சட்டத்தரணிகளை இலங்கை அரசு குறிவைத்து நகர்கிறது
இரணைமடு குளத்தை பார்வையிட சென்ற மூவர் – விபத்தில் சிக்கி காயம் – உயிர் ஊசல்
இரணைமடு குளத்தை பார்வையிட சென்ற மூவர் – விபத்தில் சிக்கி காயம் – உயிர் ஊசல்
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அதனை பார்வையிட வந்த மூன்று மோட்டார்
சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கிளிநொச்சி பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நேற்று மாலை 07 மணியளவில் இரணைமடு குளத்திற்கு செல்லும் வீதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,
காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்-வண்ணான் குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலமாக மீட்பு
யாழ்-வண்ணான் குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலமாக மீட்பு
வண்ணான் குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்பு பகுதியை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் என தெரிவிக்கப்படுகிறது.








