Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கள்ள மின்சாரத்தில் தாக்குண்டு இருவர் மரணம் -சோகத்தில் கிராமம்
கள்ள மின்சாரத்தில் தாக்குண்டு இருவர் மரணம் -சோகத்தில் கிராமம்
இலங்கை இரத்தினபுரி பெல்மதுளை பகுதியில் விவசாய நிலமொன்றில் பயன்படுத்த
பட்ட சட்டவிரோத மின்சாரத்தில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்
இவர்கள் மரணம் தொடர்பில் காவல்துறையினர் தொடர் விசாரணைகளை நடத்தி
வருகின்றனர் ,அனுமதி இன்றி இவ்வாறு
மின்சாரம் பயன்படுத்தி வந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள படும் என எதிர் பார்க்க படுகிறது
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிப்பு
புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு
பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில்
ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான படகு பாதை சேவை முடக்கம்
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான படகு பாதை சேவை முடக்கம்
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான படகு பாதை போக்குவரத்துச் சேவை கடந்த மூன்று தினங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் மக்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கப்படுகின்றன.
குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்று, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
படகு பாதையின் வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளமையாலேயே சேவை நிறுத்தப்பட்டுள்ளது என காரணம் கூறப்பட்டுள்ளது.
மேற்படி படகு இது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி இடம்பெற்றது. எனினும், பின்னர் புதிய கேபிள் இணைக்கப்பட்டு அண்மைக்காலமாக தடையின்றி சேவை இடம்பெற்றது.
இரு வெளியிணைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, ஒன்று பழுதடைந்தால் மற்றையதை பயன்படுத்தும் நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், தற்போது
பொருத்தப்பட்டிருந்த ஒரு வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளது எனக் கூறி மூன்று தினங்களாக பாதை சேவையில் ஈடுபடாமல் உள்ளது.
அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் தற்காலிகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட மோட்டார் படகில் ஆபத்துக்களுக்கு மத்தியில் தினமும் பயணம் செய்கின்றனர்.
படகில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றி இறக்குவதில் பெரும் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.
வீதி அபிவிருத்தி அதிகார சபை ஒரு வெளியிணைப்பு இயந்திரத்தை மூன்று நாள்களுக்கு திருத்தம் செய்கின்றதா என படகு பாதைப் பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, படகு பாதையின் சீரான சேவைக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழில் 10 பேரை கடித்த விசர் நாய்
யாழில் 10 பேரை கடித்த விசர் நாய்
யாழ். நகர் மத்தி பகுதியில் இன்றைய தினம் கட்டாக்காலி நாய் ஒன்று வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டித்துள்ளது.
யாழ். நகர் மத்தியில் கஸ்தூரியார் வீதி , மின்சார நிலைய வீதி என்பனவற்றில் இன்று
மதியம் முதல் மாலை வரையிலான நேரத்தினுள் 10க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது.
அதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு இரண்டு கால்களிலும் நாய் கடித்துள்ளது. அதேவேளை அப்பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்களை குறித்த நாய் கடித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் , குறித்த நாயினை மாநகர சபை ஊழியர்கள் ஊடாக பிடிப்பதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் , நாய் தொடர்பிலான தகவல்கள் தெரியாமையால் நாயினை பிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
குறித்த நாய் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள் மாநகர சபைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்
சுவிசில் இருந்து இலங்கை வந்தவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
சுவிசில் இருந்து இலங்கை வந்தவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத
சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள், விலை உயர்ந்த சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். நேற்று இந்த சம்பவம் நடந்தது.
சுவிஸிலுள்ள குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில் வந்து, கோண்டாவிலிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.
அந்த வீட்டுக்காரர்களும், சுவிஸ் குடும்பமும் நேற்று காலையில் வீட்டை விட்டு புறப்பட்டு சென்றனர். இதன்போது, பெறுமதியான தங்க நகைகள், சேலைகளை
அலுமாரிக்குள் மறைத்து வைத்து விட்டு சென்றுள்ளனர். மாலையில் வீடு திரும்பினர்.
அலுமாரியில் பொருட்கள் கிளறியிருந்ததை அவதானித்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை தேடிய போது, அவை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தடம் புரண்ட ரயில் – பல சேவைகள் பாதிப்பு
தடம் புரண்ட ரயில் – பல சேவைகள் பாதிப்பு
இலங்கை கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயில் ஒன்று
தடம் புரண்டதில் மலையக ரயில் சேவைகள் பாதிக்க பட்டுள்ளன
விரைவில் மீட்பு பணிகள் சீர் படுத்த பட்டு சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என
தெரிவிக்க படுகிறது
இராணுவ பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை
இராணுவ பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை
இலங்கை மோதர பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர்
இணைந்து நடத்திய தேடுதலின் பொழுது பாதாள உலக குழுவை சேர்ந்த நபர் ஒருவர்
சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
இவர் பல கடத்தல் ,கொலை மற்றும் போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடையவர் என
தெரிவிக்க பட்டுள்ளது
விபத்தில் சிக்கி ஆறுபேர் மரணம்
விபத்தில் சிக்கி ஆறுபேர் மரணம்
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்னல – கிரியுல்ல வீதியின் தலமெஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) கிரியுல்லயிலிருந்து பன்னல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த பஸ்ஸைக் கடக்கும்போது எதிர்திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சந்தலங்காவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர் போபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிரியன்கல்லிய – அதியாகம வீதியில் அக்கரவெல்லிய கறுப்புப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 52 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) பிற்பகல் துவிச்சக்கர வண்டியுடன் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் முந்தலம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பத்துலுஓயா பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை நேற்று காலை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 78 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுங்கேணி நகரிலிருந்து புளியங்குளம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அத்துடன் நாரம்மலயிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது மோதியதில் மஹவிலச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பெரகல – ஹாலிஎல வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 65 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கல்நேவ – தம்புத்தேகம வீதியில் புல்னேவ சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 41 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
கொரியா பறந்த மைத்திரி
கொரியா பறந்த மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.
தென் கொரியாவில் நடைபெறும் மாநாட்டு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே அவர் சென்றார்.
முன்னாள் ஜனாதிபதியுடன் மேலும் இருவர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்..
விளையாட்டு துப்பாக்கி தூக்கியவர் பதவியை இராஜினாமா செய்தார் .
விளையாட்டு துப்பாக்கி தூக்கியவர் பதவியை இராஜினாமா செய்தார் .
ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இவர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த குழுவொன்று, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச
விமான நிலையத்தை 2014 ஆம் ஆண்டு பார்வையிட சென்றிருந்த வேளையில்,
கைத்துப்பாக்கியை காண்பித்து அக்குழுவினர் அச்சுறுத்தியிருந்தார்.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் ஏந்திவந்தது கைத்துப்பாக்கி அல்ல, விளையாட்டுத் துப்பாகியென அவர் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிக்கும் சிங்கள இராணுவம்
யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிக்கும் சிங்கள இராணுவம்
சுகதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கமைவாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது கஜபா
படையணியின் படையினர் 30 ஜனவரி 2022 முதல் 2022 பெப்ரவரி 03 வரையான காலப்பகுதியில் யாழ். நகரப்குதியை உள்ளடக்கிய பகுதிகளில் பொலிஸார் மற்றும்
சுகாதார வைத்திய பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு தொடர்பில் வழிப்புணர்வூட்டுவதற்கான பிரசாரங்களை மேற்கொண்டனர்.
இத்திட்டம் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய
512 வது பிரிகேட் தளபதி கேணல் தனூஜ கொடேவத்த அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது.
குற்றவியல் சட்டத்தில் திருத்தம்
குற்றவியல் சட்டத்தில் திருத்தம்
குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன் விசாரணை முறையை ( Justice Ministry is planning to introduce a
pre-trial method which would limit delays in law.) அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) நீதித் துறையுடன் தொடர்புபட்ட குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் சட்ட சுயாதீனத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் சட்டம் தொடர்பில் மக்களுக்குள்ள நம்பிக்கையை வலுப்படும் வகையிலும் நீதித்துறையில் சில திருத்தங்களை கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாகவும் கூறினார்.
வழக்குகள் பல வருட கால தாமதமாவதால் அதனைத் தடுப்பதற்கு மாற்று வழிகள் அவசியமென்றும் தெரிவித்த அவர் மக்கள் சட்டத்தில் மூலம் நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்கின்றனர் இதன் காரணமாக வழக்குகளில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.
சிறுவர் பாலியல் முறைகேடு தொடர்பான வழக்கு ஒன்றை சுட்டிக்காட்டிய அமைச்சர் இந்த வழக்கு 20 வருட காலம் நடைபெற்றது. அதன் பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டது.பாதிக்கப்பட்டவர் இளம் வயதை எட்டியபோதே தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறான தாமதங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
சில வழக்குகள் பரம்பரை பரம்பரையாக தொடர்கின்றன. சில வழக்குகள் 50 வருடங்களுக்கு மேல் தொடர்கின்றன இதற்கு மாற்று வழி அவசியம்.இந்தத் திருத்தங்களை முன்வைப்பதற்கு முன்பாக நான் சட்டத்தரணிகளுடன்
கலந்துரையாடினேன்.சபையிலும் அனைவரும் இதற்கான ஒத்துழைப்பை வழங்குவார்களென்ற நம்பிக்கை உண்டு. சில சட்டத்தரணிகள் வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு விருப்பமில்லாமல் உள்ளார்கள் என்ற தவறான கருத்துக்களும் சமூகத்தில்
நிலவுகின்றன. அவ்வாறு விரைவுபடுத்தினால் அவர்களுக்கான தொழில் இருக்காதென்றும் தெரிவிக்கப்படுகிறது. அது தவறானது என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்
யாழில் பி.சி.ஆர் பரிசோதனைகள் திடீரென இடைநிறுத்தம்
யாழில் பி.சி.ஆர் பரிசோதனைகள் திடீரென இடைநிறுத்தம்
வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் இதை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர்
பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதால் மறு அறிவித்தல் வரை அவை இடைநிறுத்தப்படுகிறது என்றார்.
கடற்பரப்புகளில் பலத்த காற்று-மக்களுக்கு எச்சரிக்கை
கடற்பரப்புகளில் பலத்த காற்று-மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலைமற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2022 பெப்ரவரி 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாககாலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாககொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு அவ்வப்போது 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்
இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்
இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினர்.
தமிழகத்தில் அமைந்துள்ள இந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது.
முன்பதாக
இழுவைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று(07) நடைபெற்றது.
மயிலிட்டி மீ்ன்பிடித் துறை முகத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சின் முன்பாக தென்னிலங்கை கடற்றொழிலாளர்களினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களை நேரடியாக சென்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
துவக்கு வெடித்ததில் ஒருவர் பலி
துவக்கு வெடித்ததில் ஒருவர் பலி
புத்தளம் – பல்லம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடுவா பகுதியில் நேற்று (8) இரவு கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் ஆண்டிகம பெரியமடு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரால் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கில் புதிய அமைச்சர்கள் நியமனம்
கிழக்கில் புதிய அமைச்சர்கள் நியமனம்
பைஷல் இஸ்மாயில் –
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு அமைவாக (07) மாகாண
அமைச்சுக்களின் செயலாளர்கள் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக திருமதி ஜே.ஜே.முரளிதரன் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர், அமைச்சின் கீழுள்ள
திணைக்களங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய
கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக், சிறுவர் நன்நடத்தை திணைக்கள மாகாணப் ஆணையாளர்
(திருமதி) ஆர்.றிஸ்வானி, சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் என்.மதிவண்ணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சின் செயலாளராக (திருமதி) கலாமதி பத்மராஜா தனது அலுவலகத்தில் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள்,தி ணைக்களங்களின் பணிப்பாளர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண (ஆளணி மற்றும் பயிற்சி) பிரதி பிரதம செயலாளராக (திருமதி) ஆர்.யூ.ஜலீல் தமது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
பிரதி பிரதம செயலாளராக (நிர்வாகம்) சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான ஏ.மன்சூர் தமது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்கா சர்வ மத சமய அனுஷ்டானங்களுடன் தமது அமைச்சில் கடமைகளை சுபநேரத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஏ.எச்.எம்.அன்ஸார் மற்றும் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக எம்.கோபாலரத்தினம் ஆகியோர்களும் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர். இதில் அமைச்சின் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், திணைக்களங்களின் மாகாண ஆணையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய
சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான, ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுடன், தனிப்பட்ட விமானமொன்றில் கடந்தவருடம் இந்தியா திருப்பதிக்குச் சென்றிருந்தார்.
இந்த தனிப்பட்ட விஜயம் தொடர்பில், மேற்படி ஆணைக்குழுவுக்கு 2021.12.31 ஆம்
திகதியன்று செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது
இறுதிக்கட்ட மோதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ‘தமிழ் இனப்படுகொலை’ குற்றஞ்சாட்டு மறுப்பு
இலங்கையில் இறுதிக்கட்ட மோதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ‘தமிழ் இனப்படுகொலை’ குற்றஞ்சாட்டு மறுப்பு
மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இனப்படுகொலை என்ற சொல், ஒரு தேசிய, சாதி, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட செயல்களை உள்ளடக்கியது. எனவே, 2009 இல் முடிவடைந்த இலங்கையின் இறுதிக்கட்ட மோதலை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான ‘இனப்படுகொலை’யாக சித்தரிக்க கனடாவில் உள்ள சில தரப்பினர் முயற்சிப்பதை கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கவலையுடன் குறிப்பிடுகின்றது.
கனடாவில் உள்ள இலங்கை சமூகம் பல இனங்கள் மற்றும் பல மதங்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரம்’ தொடர்பான தனியார் உறுப்பினர் சட்டமூலம் 104, ஒரு சமூகத்திற்கு எதிரான தவறான கதையைச் சித்தரிப்பதன் மூலம் இலங்கை சமூகத்தினரிடையே சமூக உறவுகளில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கனேடிய அரசாங்கத்தின் இலங்கைத் தமிழ் கனேடியர்களுக்கான பல்வேறு திட்டங்களைப் பாராட்டும் அதே வேளையில், 2022 ஜனவரி 31ஆந் திகதி இடம்பெற்ற மனநலம் மற்றும் ஆரோக்கியத் திட்டங்கள் மற்றும் வளங்களைக் கொண்ட தமிழ் மாணவர்களுக்கான நிதியுதவியை அறிவிக்கும் நிகழ்வில், ஒன்ராறியோவின் கல்வி அமைச்சர் திரு. ஸ்டீபன் லெஸ் ‘அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற ஒரு இனப்படுகொலையை நாங்கள் அங்கீகரிக்கின்றோம்’ மற்றும் ‘கொழும்பில் ஆட்சியின் கைகளில் 140,000 அப்பாவிகள் கொல்லப்பட்ட ஒரு இனப்படுகொலை’ என்பன உள்ளிட்ட கருத்துக்களைக் குறிப்பிட்டிருந்தமை தொடர்பில் நாங்கள் ஏமாற்றம் அடைகின்றோம். இந் நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்கார்பரோ – ரூஜ் பார்க் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய்தணிகாசலம் அவர்களும் தனது கருத்துக்களில் ‘தமிழ் இனப்படுகொலை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
2021 ஏப்ரல் 07ஆந் திகதியிட்ட இராஜதந்திரக் குறிப்பில், கனடாவின் வெளியுறவு, வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம் ‘இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கனடாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிவிவகார, வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது, இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கனடா அரசாங்கம் கண்டறியவில்லை என்பதை திணைக்களம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியும்’ எனக் குறிப்பிட்டுள்ள தெளிவுபடுத்தலை நாங்கள் பாராட்டுகின்றோம். மேலும், கனடா அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக தடை செய்துள்ளது.
இந்தப் பின்னணியில், ‘தமிழ் இனப்படுகொலை’ என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவது, ஒன்ராறியோவில் வசிக்கும் இலங்கைக் கனேடியர்களின் பிள்ளைகள் மற்றும் சமூகத்தினரிடையே கருத்து வேறுபாடுகளையும் தப்பான அபிப்பிராயத்தையும் உருவாக்குகின்றது. எனவே, சமூக நல்லிணக்கத்தை கருத்திற்கொண்டு சர்வதேச சமூகத்தில் இலங்கை பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்க வேண்டும்.
இலங்கையில் இறுதிக்கட்ட மோதலின் போது, உலகம் கண்ட மிகக் கொடூரமான பயங்கரவாதக் குழுக்களில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவை அரசாங்கப் படைகள் எதிர்கொண்டன. இலங்கையை இன ரீதியாகப் பிரித்து தனிநாடு அமைப்பதே விடுதலைப் புலிகளின் நோக்கமாக இருந்தது. இந்த நோக்கத்துடன், அவர்கள் மூன்று தசாப்த கால பயங்கரவாதப் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்ததுடன், அது அனைத்து சமூகங்களுக்கும் மிகுந்த துன்பத்தையும் அழிவையும் ஏற்படுத்தியிருந்தது.
2009 இல் இராணுவ மோதலின் இறுதிக் கட்டங்களில், விடுதலைப் புலிகள் தவிர்க்க முடியாத தோல்வியை எதிர்கொண்ட போது, தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்ததுடன், மோதல் பிரதேசங்களிலிருந்து பொதுமக்களை நகர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மறுத்திருந்தனர். பொதுமக்கள் உயிரிழப்புக்கள் குறித்த குற்றச்சாட்டு மற்றும் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் கூறுவதானது, அரசாங்கத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக வெளிநாட்டுத் தலையீட்டை வலுக்கட்டாயப்படுத்த புலிகள் முயன்ற வழிமுறையாகும்.
இருந்தபோதிலும், அரசாங்கப் படைகள் சுமார் 290,000 தமிழ் பொதுமக்களை விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மீட்டு, அவர்களைக் பராமரித்து, அவர்களை மீள் குடியேற்றியிருந்தது. மேலும், 12,000 க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதுடன், இதன் மூலம் எதிரிப் போராளிகள் மத்தியிலும் தேவையற்ற மரணங்களை ஏற்படுத்துவதை இலங்கை அரசாங்கம் தவிர்த்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, விடுதலைப் புலிகளுடனான இராணுவ ஈடுபாட்டின் போது ‘இனப்படுகொலை’ என்ற போலியான குற்றச்சாட்டுக்களின் செயல் மற்றும் / அல்லது உள்நோக்கம் இருந்ததாகக் கூறுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ‘இனப்படுகொலையை’ பரிந்துரைக்கும் நிகழ்வுகளின் வடிவமும் இல்லை. இராணுவ மோதலின் கடைசிக் கட்டத்தில் நிலைமையைக் கருத்தில் கொண்டு, தந்திரோபாயத் தெரிவுகள் நியாயமானவையும், விகிதாசாரமானவையுமாகும் என இராணுவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய குழுக்கள் மற்றும் அனுதாபிகள் உட்பட சில தரப்பினர், இறுதிக்கட்ட இராணுவ மோதலின் போது இலங்கையில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுவதற்கு, ஐ.நா. வினால் நியமிக்கப்பட்ட சில குறைபாடுள்ள அறிக்கைகளில் உள்ள குடிமக்கள் உயிரிழப்புக்களின் கற்பனையான புள்ளிவிவரங்களை பின்பற்றுகின்றனர். எவ்வாறாயினும், மிகவும் சர்ச்சைக்குரிய ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழு அறிக்கை கூட இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ‘இனப்படுகொலை’ குற்றச்சாட்டைக் கொண்டிருக்கவில்லை. 2015இல் இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விசாரணைக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முக்கிய கண்டுபிடிப்புக்கள் இலங்கையின் ‘போர்க்குற்றங்கள்’, ‘இனப்படுகொலை’ என்று கூட பரிந்துரைக்கவில்லை. இனப்படுகொலையின் கூற்றை ஆதரிக்கும் குழுக்கள், மோதலின் இறுதி மாதங்களில் ‘40,000 பொதுமக்கள் இறந்திருக்கலாம்’ என நிபுணர்கள் குழு அறிக்கையில் எந்த ஆதாரமும் இல்லாமல் செய்யப்பட்ட கூற்றை பின்பற்றுகின்றனர். இலங்கை இராணுவத்தால் இறுதியாக மீட்கப்பட்ட மக்களின் உண்மையான எண்ணிக்கையை வைத்து 40,000 பொதுமக்கள் மரணங்கள் இடம்பெற்றன என்ற கற்பனையான புள்ளிவிவரத்துடன் நிபுணர்கள் குழு அறிக்கை வெளிவந்ததுடன், 330,000 என்ற அனுமான எண்ணிக்கைக்கு எதிராக இது அண்ணளவாக 290,000 ஆகும். இது அந்தப் பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்னர் (வன்னி) இருந்த பொதுமக்களின் எண்ணிக்கையாக அவர்கள் கருதினர். நிபுணர்கள் குழுவால் பயன்படுத்தப்படும் 330,000 பொதுமக்கள் என்ற கற்பனையான எண்ணிக்கை முற்றிலும் தன்னிச்சையான கட்டமைப்பாகும். 2009ஆம் ஆண்டு குறித்த மாதங்களில் விடுதலைப் புலிகள் எத்தனை பொதுமக்களை சிறைபிடித்து வைத்திருந்தார்கள் என்பது இலங்கையிலோ அல்லது வெளியிலோ எவருக்கும் சரியாகத் தெரியாது.
மேலும், நிபுணர்கள் குழு அறிக்கை இலங்கையில் ஐக்கிய நாடுகளின் நாட்டுக் குழுவால் அறிவிக்கப்பட்ட 7,721 இறப்புக்கள் (13 மே 2009 வரை) என்று குறிப்பிடுகின்றது. எவ்வாறாயினும், 40,000 என்ற எண்ணிக்கை சரியானதாகவும், துல்லியமானதாகவும் இருந்தால், மோதல் முடிவுக்கு வரும் 2009 மே 18 வரை இறுதி நாட்களில் 30,000 க்கும் அதிகமானோர் எப்படி கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை விளக்காமல் இந்த எண்ணிக்கை பின்னர் நிபுணர்கள் குழு அறிக்கையால் மறுக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம், வடக்கு மாகாணத்தில் இலங்கையின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் வடமாகாணத்தில் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, இயற்கை காரணங்கள் தவிர மற்ற காரணங்களால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது கண்டறியப்பட்டது 9,283 என்பது குறிப்பிடத்தக்கது. 1981ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் பின்னர் நாட்டின் அந்தப் பகுதியில் இது போன்ற முதல் கணக்கெடுப்புத் திட்டத்திற்குத் தேவையான களத் தரவு சேகரிப்பானது, வட மாகாணத்தில் பணியாற்றும் பெரும்பான்மை இனமான தமிழ் அரசாங்க ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஜூலை 2006 முதல் மே 2009 வரை விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது இலங்கை ராணுவத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,876 ஆகும். 2008 மற்றும் 2009 இல் இயற்கை அல்லாத காரணங்களால் வடக்கு மாகாணத்தில் இறந்ததாகக் கூறப்படும் (9,283) இலங்கையின் ஆயுதப் படைகளை விட விடுதலைப் புலிகள் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைச் சந்தித்திருப்பார்கள் என்று கருதுவது தர்க்க ரீதியானதாக இருக்கும் என்பதுடன், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் விடுதலைப் புலிகள் அல்லது நேரடியாகப் போரில் ஈடுபட்டவர்களாக இருந்திருப்பார்கள்.
நிபுணர்கள் குழு அறிக்கையின் பலவீனமான சர்ச்சைக்குரிய நபரின் பயன்பாடு, அது ஏற்றுக்கொண்டதாகக் கூறும் ஆதாரத்தின் தரத்தால் மோசமாகின்றது என்பதை சட்ட வல்லுநர்கள் அடையாளம் கண்டுள்ளனர். சட்டப்பூர்வமற்ற பகுப்பாய்வு (‘நான் உறுதியாக உணர்ந்தேன்’, நான் நியாயமான நம்பிக்கையுடன் உணர்ந்தேன்’, நான் முற்றிலும் உறுதியாக இருந்தேன்’, ‘எனக்கு சந்தேகம் இருந்தது’ போன்றவை) ஒரு பெரிய அளவிலான குற்றச் செயல்களைக் கையாளும் ஆவணத்தில் பயன்படுத்தப்படுவதுடன், இது பொறுப்பானவர்கள் மற்றும் மேலும் நீதித்துறை மற்றும் ஏனைய செயன்முறைகளுக்குத் தகுதியானவர்களைப் பெயரிடுகின்றது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைகளில் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்காக சர்வதேச நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் இந்த வகையான அறிக்கைகளின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
2009 இல் மோதல் முடிவுக்கு வந்ததில் இருந்து, இலங்கை மறுசீரமைப்பு, இழப்பீடு, மறு ஒருங்கிணைப்பு, புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் கொள்கையை மறுசீரமைப்பு நீதியின் ஒட்டுமொத்த கருத்தாக்கத்தில் பின்பற்றி வருகின்றது. இலங்கை இந்த செயன்முறைகளை முன்னெடுத்துச் செல்லும் நேரத்தில், விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் எச்சங்கள் உட்பட சில குழுக்கள், ‘தமிழ் இனப்படுகொலை’ போன்ற நிகழ்ச்சி நிரல்களை முன்வைத்து, இலங்கை மேற்கொண்ட முயற்சிகளை மதிப்பிழக்கச் செய்யவும், சீர்குலைக்கவும் முயற்சித்து வருகின்றன.
140,000 இறப்புக்களை மேற்கோள் காட்டிய திரு. ஸ்டீபன் லெஸ்ஸின் கருத்துக்களில் காணப்படுவது போல், சரிபார்க்கப்படாத அறிக்கைகளின் உள்ளடக்கங்கள் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்துவதிலும், கருத்தை உருவாக்குவோர் மற்றும் முடிவெடுப்பவர்களிடம் செல்வாக்குச் செலுத்துவதிலும் வெற்றி பெற்றுள்ளன. காலப்போக்கில், ஐ.நா. அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஆதாரங்களின் சந்தேகத்திற்கிடமான தன்மை மறக்கப்பட்டால், உண்மையில் நிரூபிக்கப்படாத அவர்களது குற்றச்சாட்டுக்கள், மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் வலிமையானக மாறலாம்.
ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றுடன் நீண்டகால ஒத்துழைப்பில் ஈடுபட்டு, உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான தனது அர்ப்பணிப்பை வழங்கும் நேரத்தில், இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் உறவுகளை பாதிக்கின்றது.
எனவே, இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகர் இந்த விடயம் தொடர்பில் தன்னைப் பார்வையிடவும், சந்திக்கவும், உரையாடவும் ஒரு திறந்த அழைப்பை விடுக்கின்றார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
ஒட்டாவா
5000 ரூபா விசேட கொடுப்பனவு ஓய்வூதியம் பெறுவோருக்கு இம்மாத ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்
5000 ரூபா விசேட கொடுப்பனவு ஓய்வூதியம் பெறுவோருக்கு இம்மாத ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்
நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியம்
பெறுவோருக்குமான ஐந்து ஆயிரம் ரூபா (5000) விசேட கொடுப்பனவு ஓய்வூதியம் பெறுவோருக்கு இம்மாத ஓய்வூதியத்தில் சேர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
ஜனவரி மாதத்திற்கான விசேட கொடுப்பனவு நிலுவை பெப்ரவரி மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் ஓய்வூதிய
திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தில் ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரினதும்
ஓய்வூதிய பற்றுச்சீட்டில் தற்போது இதனை பார்வையிட முடியும் என்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி.டயஸ் அறிவித்துள்ளார்.
புலம்பெயர் ஓய்வூதியம் பெறுவோர் தவிர அனைத்து அரச ஓய்வூதியம் பெறுவோரும் இக் கொடுப்பனவை பெற உரித்துடையவர்களாவர்.
இந்த கொடுப்பனவின் மூலம் சுமார் ஆறு இலட்சம் ஓய்வூதியம் பெறுவோர் நன்மை அடைவர் என்றும் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி.டயஸ் மேலும் தெரிவித்தார்.












