வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காதலியின் சடலத்தை வீசியெறிந்த காதலன்

காதலியின் சடலத்தை வீசியெறிந்த காதலன்

தன்னுடைய காதலி மரணிக்கவில்லையென நினைத்து, அவரை தன்னுடைய நண்பனின் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு செல்கையில் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் தீர்ந்துவிட்டமையால், காதலியின் சடலத்தை காட்டுக்குள் வீசிவிட்டு சென்ற சம்பவமொன்று வேயாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.

சடலத்தை காட்டுக்குள் வீசிவிட்டு காதலன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

அத்தனகல பதில் நீதவான் சம்பத் கஸ்தூரிரத்னவின் முன்னிலையில் திங்கட்கிழமை (19) அதிகாலை இடம்பெற்ற ​அடிப்படை நீதவான் விசாரணையின் போதே இந்த சம்பவம் அம்பலமானது.

வெயாங்கொடையில் வாடகை வீடொன்றில் தனியாக இருக்கும் 20 வயதான பெண்ணின் சடலமே, காட்டுப்பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மீட்கப்பட்டுள்ளது.

வத்துப்பிட்டியவை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என்பது நீதவானின் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

காதலியின் சடலத்தை வீசியெறிந்த காதலன்

மனைவியால் கைவிட்டு செல்லப்பட்ட இளைஞனுடன் இந்த யுவதி, காதல்வயப்பட்டுள்ளார். அதுதொடர்பில் அந்த யுவதியின் வீட்டார் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அந்த இளைஞன் மீதும் அண்மையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனால் வீட்டைவிட்டு வெளியேறி சென்ற அந்த யுவதி, வெயாங்கொடையில் வாடகை அறையொன்றை எடுத்து தங்கியிருந்துள்ளார்.

வாடகை வீட்டுக்கு வரும் காதலன் மூவேளை உணவுகளையும் கொண்டு வந்து தந்துள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

அவ்வாறே, ஞாயிற்றுக்கிழமை (19) இரவு உணவை ​எடுத்துக்கொண்டு செல்வதற்கு முன்னர், காதலியின் தொலைபேசிக்கு அழைப்பை எடுத்தபோதும். அழைப்புக்கு பதிலே கிடைக்கவில்லை. எனினும், வாடகை வீட்டுக்கு வந்த காதலன் பல முறை கதவை தட்டியபோதும் எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை.

அதன்பின்னர் சந்தேகம் கொண்ட காதலன், அந்த அறையின் கூரையின் மீதேறி, கூரையை பிய்த்துக்கு​கொண்டு அறைக்குள் இறங்கியுள்ளார். அப்போதுதான் தன்னுடைய காதலி தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு தூக்கிட்டுக்கொண்டுள்ளார் என்பதை அறிந்துகொண்டுள்ளார்.

உடனடியாக நண்பருக்கு அழைப்பு ஏற்படுத்தி அவரையும் வரவழைத்துக்கொண்டு காதலியை மீட்டு, மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். எனினும், மோட்டார் சைக்கிளில் எரிபொருள் இடையிலேயே தீர்ந்துவிட்டது.

சம்பவம் தொடர்பில் அந்த இளைஞன் (காதலன்) தன்னுடைய தாய்க்கு தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார். தாயின் அறிவுரைக்கு அமைவாக சடலத்தை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, வேயாங்கொடை பொலிஸ் நிலையத்துக்கு அவ்விளைஞன் சென்றுள்ளார் என்பதும் நீதவான் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநப​ரான காதலன் வேயாங்கொடை பொலிஸ் நிலையத்துக்கு செல்கையில், வாடகை வீட்டின் உரிமையாளர் தனது மனைவியுடன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, வாடகைக்கு இருந்த யுவதியை காணவில்லையென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதனையடுத்து, சந்தேகநபரான காதலனும் அந்த வீட்டின் உரிமையாளர் அவருடை
மனைவி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுற்றுலாத் துறைக்கான சக்தி பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால்

அங்கீகரிக்கப்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (20) முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No posts found.
ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

பணத்துக்காக உடல் உறுப்புகளை விற்கும் அவல நிலை

பணத்துக்காக உடல் உறுப்புகளை விற்கும் அவல நிலை

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளால் தங்களிடம் பணம் இல்லாததால், உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், மின் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் வீதிக்கு இறங்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாட்டை சீரழித்த, வக்குரோத்தாக்கிய மொட்டுத் தரப்பினர் திருட்டு யானையுடன் இணைந்து நாட்டை மீட்டெடுக்கப்போவதாக கூறுவதாகவும்,

இதன் ஊடாக அவர்கள் மீண்டும் எழ முயற்சிப்தாகவும், இது பெரும் நகைச்சுவை எனவும், இதற்கு மக்கள் இடமளிப்பீர்களா எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

பணத்துக்காக உடல் உறுப்புகளை விற்கும் அவல நிலை

தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுக்காக பெற்றோர் தமது முழுமாத சம்பளத்தையும் செலவழிக்க நேரிட்டுள்ளதாகவும், மருத்துவ தேவைகளுக்காக கூடிய தொகை செலவாகுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படும் பட்சத்தில் பேரணியூடாக கொழும்புக்கு வந்து பேராட வேண்டி வரும் எனவும் தெரிவித்தார்.

மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் போது ஜனாதிபதி நாட்டை விற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், எமது தாய் நாட்டை மொட்டு விற்பனை நிலையமாக மாற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ரம்புக்கன தேர்தல் தொகுதிக் கூட்டம் நேற்று முன்தினம் (18) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம் பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ரம்புக்கன தேர்தல் தொகுதி அமைப்பாளர் அஜித் செனவிரத்ன அவர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்ததோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பிரத்தியேக பணியாளர் குழாமின் பிரதானியுமாக
செயப்பட்ட W.N.P.விஜயகோன் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

No posts found.
கடற்பரப்பில் தத்தளித்து 104 பேர் யாழ் சிறையில்
Posted in இலங்கை செய்திகள்

கடற்பரப்பில் தத்தளித்து 104 பேர் யாழ் சிறையில்

கடற்பரப்பில் தத்தளித்து 104 பேர் யாழ் சிறையில்

யாழ்ப்பாணம், மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் நேற்று (19) இரவு 8 மணி அளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டனர்.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் இரண்டு பேருந்துகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம்

இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோதே நடுக்கடலில் படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர்.

கடற்பரப்பில் தத்தளித்து 104 பேர் யாழ் சிறையில்

இவ்வாறு தத்தளித்தவர்கள் டிசம்பர் 17 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு டிசம்பர் 18 ஆம் திகதி

கடற்படையினரின் படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே 104 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

மேலும், யாழ்ப்பாணம், மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம்

(UNHCR) பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்ட
மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அகதிகள் அனைவரையும் மீரிகாண தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டது.

No posts found.
காட்டு தாவரங்களைப் பயன்படுத்தி கடதாசி உற்பத்தி
Posted in இலங்கை செய்திகள்

காட்டு தாவரங்களைப் பயன்படுத்தி கடதாசி
உற்பத்தி

இறப்பர் செய்கையுடன் தொடர்புடைய காட்டு தாவரங்களைப் பயன்படுத்தி கடதாசி
உற்பத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டமாக, கேகாலை மாவட்டத்தை அடிப்படையாக
கொண்டு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் ஆலோசனை சேவை பணிப்பாளர் சஞ்சீவ குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.ன்படுத்தி கடதாசி உற்பத்தி.

No posts found.
தீயில் எரிந்த
Posted in இலங்கை செய்திகள்

ஆடை தொழிற்சாலையில் தீ

ஆடை தொழிற்சாலையில் தீ

வாத்துவ மொரந்துடுவ வீதியில் கந்தவுடவத்த பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் காட்சியறையில் தீ பரவியுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ, மூன்றாவது மற்றும் முதல் தளங்களுக்கும் பரவியதுடன், மின்சாதனங்கள் மற்றும் ஜவுளிகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயை கட்டுப்படுத்த களுத்துறை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

No posts found.
புலிகளை அழித்தவருடன் பிரபாகரனை கொலைகாரன் என்றவர் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

புலிகளை அழித்தவருடன் பிரபாகரனை கொலைகாரன் என்றவர் பேச்சு

புலிகளை அழித்தவருடன் பிரபாகரனை கொலைகாரன் என்றவர் பேச்சு

தமிழீழ விடுதலை புலிகளை அழித்தவருடன் பிரபாகரன் கொலைகாரன் என்று பேசிய முன்னாள் ஒட்டு குழு உறுப்பினரும் ,இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் ,சிங்கள அடிகழுவியாக விளங்கும் ,சம்பந்தன் ,மற்றும் எட்டப்பன் சுமந்திரன் ஆகியோர் பேச்சில் ஈடுபட்டனர் .

வெளி நாடுகளில் கூழ்முட்டை அடிவாங்கி தப்பி ஓடிய சுமந்திரனும் , கட்சிக்குள் சர்ச்சையில் சிக்கியுள்ளவரும் ,அரசியல் வியாபாரியாக விளங்கும் ,சுமந்திரனும் பேச்சில் ஈடுபட்டுள்ளனர் .

இந்த பேச்சுக்களில் பேச பட்ட விடயங்கள் தெரிவிக்கப்படவில்லை .

No posts found.
இலங்கைக்கு பாடசாலை உடைகளை இலவசமாக வழங்கிய சீனா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு பாடசாலை உடைகளை இலவசமாக வழங்கிய சீனா

இலங்கைக்கு பாடசாலை உடைகளை இலவசமாக வழங்கிய சீனா

இலங்கையில் எதிர்வரும் ஆண்டின் 75 வீதமான மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில், ஐந்து பில்லியன் இலங்கை ,ரூபாய்களுக்கு சீனா அரசு இலவசமாக பாடசாலை சீருடைகளை வழங்கியுள்ளது .

மிக பெரும் தொகையில் இலங்கைக்கு சீனா நாடு வழஙகியுள்ள இந்த சீருடைகள் பின்னால் ,மிக பெரும் அரசியல் வியாபாரம் உள்ளதை எடுத்து காட்டுகிறது .

சீனா இலவசமாக ஒன்றை வழங்குகிறது என்றால் ,அதன் பின்னால் மிக பெரும் ஆபத்து உள்ளது என்பதை, பட்டவர்கள் கூறி கடந்து செல்கின்றனர் .

சீனாக்காரானா சும்மாவா ..?

No posts found.
ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
Posted in இலங்கை செய்திகள்

பிக்குகள் தலிபான்கள் போன்றவர்கள் வெடித்த குண்டு

பிக்குகள் தலிபான்கள் போன்றவர்கள் வெடித்த குண்டு

இலங்கையில் பல்கலைக்கழங்கங்களில் உள்ள பிக்குகள் தாலிபான்களை போன்றவர்கள் என ,மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதான பீடாதிபதி வலஹகுணவெவ தம்மரதன தெரிவித்துள்ளார் .

இவரது இந்த பகிரங்க அறிவிப்பு மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட ,தாலிபான்களை இலங்கை அரச மகாநாயக்க சபையின் முக்கிய நபர் ,இவ்விதம் தெரிவித்துள்ள கருத்தியல் ,மதவாதத்தை இலங்கை பவுத்த பீடம் முன்னிலையாக நகர்த்துவதாக காட்டி நிற்கிறது .

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது

கம்பளை நகரில் இருக்கும் பிரபல பாடசாலைக்குள் கஞ்சா சுருட்டை பிடித்த நால்வர் கம்பளை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை(16) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த பாடசாலையின் இரவு நேர காவல் தொழிலில் ஈடுபடும் காவலாளியின்

உதவியுடன் சந்தேகநபர்கள் நால்வரும் பாடசாலைக்குள் இச்செயலில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது

குறித்த பாடசாலை வளாகத்தில் இரவு நேரங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, கம்பளை

பொலிஸாரால் பாடசாலை சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை, கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது,
தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

No posts found.
உணவாக உரிமையாளர் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

உணவாக உரிமையாளர் சுட்டு கொலை

உணவாக உரிமையாளர் சுட்டு கொலை

இலங்கை ஹங்வெல்ல பகுதியில் உள்ள உணவாக உரிமையாள சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளார் .

குறித்த உணவகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்கள் அவர்மீது திடீர் துப்பாககி சூட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர் .

உந்துருளி ஒன்றியி பயணித்த நபர்களே இந்த சூட்டு தாக்குதலை நடத்தினர் .

பலத்தகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் பொழுது மரணமாகியுள்ளார் .

மீன் வியாபாரி வீதியில் விழுந்து மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கனடாவுக்கு சட்டவிரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் ஒப்படைப்பு

கனடாவுக்கு சட்டவிரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் ஒப்படைப்பு

கனடாவுக்கு படகின் மூலம் சட்ட விரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், நவம்பர் மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

இவ்வாறு வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இருவர், தங்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டாமென தெரிவித்து நவம்பர் மாதம் 18 ஆம் திகதி தற்கொலைக்கு முயற்சித்தனர்.

கனடாவுக்கு சட்டவிரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் ஒப்படைப்பு

இருவரும் வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் உயிரிழந்தார்.

உயிரிழந்த சாவகச்சேரி, கல்வயல் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம், உறவினர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (18) ஒப்படைக்கப்பட்டது.

அவரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் திங்கட்கிழமை (19)
இடம் பெற்று சாவகச்சேரி கண்ணாடிப்பெட்டி மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

24ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரிய நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

24ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரிய நியமனம்

24ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரிய நியமனம்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பரீட்சையில் சித்திபெறும் இருபத்தாறாயிரம் புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த புதிய ஆசிரியர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

இக்குழுவுக்கு மேலதிகமாக விஞ்ஞான பீடங்களில் சித்தியடைந்த மேலும் ஆறாயிரம் பேருக்கு
நியமனங்கள் வழங்கப்பட உள்ளன என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களுக்கு அமைச்சர் சொன்ன ஆலோசனை
Posted in இலங்கை செய்திகள்

போராட்டக்காரர்களுக்கு அமைச்சர் சொன்ன ஆலோசனை

போராட்டக்காரர்களுக்கு அமைச்சர் சொன்ன ஆலோசனை

போராட்டத்தினால் நாடு பின்னோக்கிச் சென்றதாகவும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே போராட்டமாக இருக்க வேண்டுமே தவிர நாட்டை அழிப்பதற்காக அல்ல எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

போராட்டம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் சதித்திட்டங்களினால் நாட்டின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மினுவாங்கொடை புதிய வர்த்தக நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் வருகை தந்த போராட்டக்காரர்களுடனான கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த வர்த்தக நிலையத்தின் திறப்பு விழா நேற்று (18) மினுவாங்கொடையில் இடம்பெற்றது. நகர அபிவிருத்தி அதிகாரசபையானது 395 மில்லியன் ரூபாவை செலவழித்து இந்த புதிய மூன்று மாடி வர்த்தக நிலையத்தை நிர்மாணித்துள்ளது.

போராட்டக்காரர்களுக்கு அமைச்சர் சொன்ன ஆலோசனை

இந்த திறப்பு விழாவில் அண்மைக்கால போராட்டங்களில் கலந்து கொண்ட இளைஞர்கள் குழுவும் கலந்து கொண்டதுடன், தமது தேவை ஒன்றை நிறைவேற்றுவதற்காக அமைச்சரை சந்தித்தனர்.

இந்த சூழ்நிலையிலேயே அந்த உரையாடல் நடைபெற்றது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தானம் செய்வதும், ஐஸ் போதைப் பொருள் குடிப்பதும் சரியல்ல. ஐஸ் போதைப் பொருள் பாவிப்பவர்கள் தான் இந்த போராட்டத்தை நடத்தினார்கள். இதன் பின்னர் அந்த விஷயங்கள் நடக்க முடியாது. நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள்.

போராடுபவர்கள், ஐயா, நாங்கள் தவறு செய்தோம். அந்த மாதிரி வேலைக்கு இனி போக மாட்டோம்.

சரியாக வேலை செய்யுங்கள். உங்களை வழிநடத்தியவர்கள் இருந்தால், எங்களைப் போராட்டத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் இவர்கள்தான் என்று
அவர்களின் பெயரை காவல்துறையிடம் கொடுங்கள். இந்த விஷயங்களில் வந்து வேலை செய்யுங்கள் என குறிப்பிட்டார்.

No posts found.
பாதாள உலக குழுவில் இணைந்து செயல் பட்ட இராணுவ அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது

இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்றைய தினம் (18) தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் பேசாலை, வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த 5 பேரும் விசாரணைகளின் பின்னர் நேற்று (18) மாலை தலைமன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது 18 வயதிற்கு மேற்பட்ட 4 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு, 16 வயது சிறுமியை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை கடலில் அகதிகள் படகு கடற்படை சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடலில் அகதிகள் படகு கடற்படை சுற்றிவளைப்பு

இலங்கை கடலில் அகதிகள் படகு கடற்படை சுற்றிவளைப்பு

இலங்கை கட்டைக்காடு கடற்பரப்பில் அகதிகள் கப்பல் ஒன்று தத்தளித்து கொண்டிருந்த பொழுது ,இலங்கை கடல்படையினரால் சுற்றிவளைக்க பட்டுள்ளது .

இந்த கப்பலில் உள்ளவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவரவில்லை .,

கப்பல் முற்றாக கரைக்கு வந்த பின்னரே அதில் பயணித்தவர்கள் யார் என்கின்ற விடயம் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .

No posts found.
பாதாள உலக குழுவில் இணைந்து செயல் பட்ட இராணுவ அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

போதை பாட்டி 30 பேர் கைது

போதை பாட்டி 30 பேர் கைது

தனியார் விருந்தில் போதைப்பொருள் பாவித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​பெந்தோட்டை பொலிஸ் பிரிவில் போடியொலுவ பிரதேசத்தில், விடுமுறை இல்லத்தில் இந்த தனியார் விருந்து சனிக்கிழமை (17) அன்று நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ​தேடுதலின் போது, 1 கிராம் 535 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதை பாட்டி 30 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள் 21 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், அவர்கள, வத்தளை, கொழும்பு-12, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, மட்டக்குளிய மற்றும் வலஸ்முல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்களை பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த பெந்தோட்டை பொலிஸார்,
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

No posts found.
சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் குறைப்பு

சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் குறைப்பு

இலங்கையில் உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் குறைக்க படுகிறது .

இந்த அறிவிப்பை சிற்றுண்டி சாலைகளின் சங்கம் அறிவித்துள்ளது

சமீப காலங்களாக பொருட்களின் விலைகளில் குறைப்பு ஏற்படுவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது
Posted in இலங்கை செய்திகள்

கடற்றொழிலாளர்களுக்கு விசேட அறிவிப்பு

கடற்றொழிலாளர்களுக்கு விசேட அறிவிப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அந்தப் பிராந்தியத்திற்கு மேலாக தொடர்ந்து நிலைகொண்டுள்ளது.அது மேற்குத் திசையில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஆழம்கூடிய தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் ஆழம் கூடிய தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் காற்றின்

வேகமானதுஅவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே, மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

கடற்றொழிலாளர்களுக்கு விசேட அறிவிப்பு

மழை நிலைமை

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புமற்றும்பொத்துவில்ஊடாகஹம்பாந்தோட்டைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில்அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோமழை பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

காற்று

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானதுவடகிழக்குதிசையிலிருந்துவீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புமற்றும்பொத்துவில்ஊடாகஹம்பாந்தோட்டைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காங்கேசந்துறையிலிருந்து மன்னார், மற்றும்புத்தளம்ஊடாக கொழும்புவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும்காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

கடல் நிலை

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புமற்றும்பொத்துவில்ஊடாகஹம்பாந்தோட்டைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் காங்கேசந்துறையிலிருந்துமன்னார், மற்றும்புத்தளம்ஊடாக கொழும்புவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான
காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

No posts found.
தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ரயில் மோதி ஜோடிகள் பலி

ரயில் மோதி ஜோடிகள் பலி

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (17) காலை ரெயிலில் மோதுண்ட இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளனர்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட வந்த பன்னிரெண்டு பேர் கொண்ட குழுவில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த திலினி லக்ஷானி என்ற யுவதியும் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ரொஷான் ரந்திக என்ற இளைஞனும் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை ரெயில் நிலையத்தை அண்மித்த கடற்கரைக்கு சென்ற அவர்கள் புகையிரத
பாதையை கடக்க முயன்ற போது மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரெயிலில் மோதி விபத்துக்குள்ளானார்கள்.

No posts found.