Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
காம வெறி பிடித்த மிருகத்திடம் சிக்கிய மதுவந்தி
காம வெறி பிடித்த மிருகத்திடம் சிக்கிய மதுவந்தி
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த 10ம் திகதி இரவு 9.30 மணியளவில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொலையைச் செய்தாரா என்பதை உறுதிப்படுத்த அவரது DNA மாதிரிகள் மற்றும் இறந்த பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காம வெறி பிடித்த மிருகத்திடம் சிக்கிய மதுவந்தி
பொலிஸ் மோப்ப நாய் ´ஏகர்´ மூலம் அவரது வீடு அடையாளம் காணப்பட்டதை அடுத்து சந்தேகத்திற்குரிய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டார்.
இராணுவ சிப்பாயின் விரல் நகங்கள் மற்றும் சாரத்தில் சேறு படிந்திருந்த நிலையில் அவர் மீதான சந்தேகம் வலுப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சந்தேகநபரான இராணுவ சிப்பாய் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீ ரங்கா கைது
ஶ்ரீ ரங்கா கைது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது
ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது
வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்களுடன் கடற்றொழல் அமைச்சர் நேற்று (17) கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
நேற்று மாலை வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் மாலை 3:30 மணியளவில் வடமராட்சி வடக்கு கடற்றொழலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், மீனவர்களது பிரசினை தொடர்பில் ஆராய்ந்தார். இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
முதற்கட்டமாக இத்திய மீனவர்களது இழுவைப் படகு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன் போது இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக இராஜாங்க அமைச்சர் திரு முருகன், இத்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் பஜாக தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோரிடமும் இராஜ தந்திர ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என.
இனி இந்திய கடல் எல்லையில் படகுகளில் சென்று ஆர்ப்பாட்டம் நடாத்தித் தான் எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டியுள்ளது.
அப்போது இந்திய ஊடகவியலாளர்களும், இலங்கை ஊடகவியலாளர்களும் நேரில் வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளை அவதானித்துச் செல்லட்டும். அப்போது தான் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
அன்று காலை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இதில் அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது
3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது
எல்பிட்டிய, அவிட்டாவ பிரதேசத்தில் மூன்று பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்தமை மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த வழக்குகள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யகிரல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, திருடப்பட்ட தங்க நெக்லஸ், 03 ஜோடி காதணிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபருக்கு எதிராக மத்துகம, களுத்துறை மற்றும் அல்பிட்டி நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது
பணத்தை மோசடி செய்த இருவர் கைது
பணத்தை மோசடி செய்த இருவர் கைது
வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குவைட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பல்லம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர், கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருக்கு குவைட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 4 இலட்சத்து 50,000 ரூபா பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக 197 நாடுகள் வாக்களிப்பு
இலங்கைக்கு எதிராக 197 நாடுகள் வாக்களிப்பு
இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன.
ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
208 நாடுகள் கலந்து கொண்ட இந்த பொதுச் சபையில் இலங்கைக்கு சர்வதேச கால்பந்து தடை விதிக்க 197 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன.
விளையாட்டு அமைச்சின் முறையற்ற செல்வாக்கு, விளையாட்டு சுதந்திரத்தை மீறுதல், தன்னிச்சையாக புதிய விதிமுறைகளை விதித்தல் போன்ற காரணங்களால் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளன.
பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன்
பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன்
36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி சிபாரிசு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஓய்வு பெற்றதன் பின்னர், தேஷபந்து தென்னகோன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன எதிர்வரும் 25 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.
மைத்திரியின் மனு தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு
மைத்திரியின் மனு தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாட்டை வலுவிழக்கச் செய்யக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட்
மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய திகதிகளில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மைத்திரியின் மனு தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலுக்கு ஆளான ஒருவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த தனிப்பட்ட முறைப்பாடை தாக்கல் செய்திருந்தனர்.
முறைப்பாட்டை பரிசீலித்த கோட்டை நீதவான், முறைப்பாட்டில் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தார்.
கோட்டை நீதவான் விடுத்த அழைப்பாணை சட்டத்திற்கு முரணானது எனவும், தம்மை நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து விடுக்கப்பட்ட அழைப்பாணை செல்லுபடியாகாது என உத்தரவு பிறப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனுவில் கோரியிருந்தார்.
பிரபாகரன் வருவாறு வெளியான புதிய குத்து பாடல் வீடியோ
பிரபாகரன் வருவாறு வெளியான புதிய குத்து பாடல் வீடியோ
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்
பிரபாகரன் வருவார் என தெரிவித்து சரவெடி பாடல் காரன் ஒருவர் சரவெடியாக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அந்த பிரபாகரன் பாடலை இதோ பார்த்து ரசிங்க .
தாயை காப்பாற்ற தந்தையை கொலை செய்த மகன்
தாயை காப்பாற்ற தந்தையை கொலை செய்த மகன்
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஒருவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் நேற்று (15) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 14ம் திகதி இரவு, சம்பந்தப்பட்ட நபர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது அவர் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்க முயன்றார்.
தாக்குதலில் இருந்து தாயை காப்பாற்ற இறந்தவரின் மகனும் மகளும் குறுக்கிட்டுள்ளனர், அப்போது மகன் இரும்பு கம்பியை பிடித்து தந்தையின் தலையில் தாக்கியுள்ளார்.
காயமடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்த 16 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 17 பேர் கைது
வீடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 17 பேர் கைது
மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்து வந்த ஒருவர் உட்பட 17 பேரை நேற்று (15) இரவு மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ்கிராமத்திலுள்ள வீடு ஒன்றை சம்பவ தினமான நேற்று இரவு 7 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலாக பொலிஸ் குழுவினர் சுற்றிவளைத்தனர்.
இதன் போது சட்டவிரோத ஆள் கடத்தல் மாபியாவைச் சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 16 பேரிடம் பணத்தை வாங்கி கொண்டு மட்டக்களப்பு கடலில் இருந்து படகு மூலம் அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக
தெரிவித்து அவர்களை அழைத்து வந்து மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று அங்கு கடந்த ஒரு மாதகாலமாக தங்க வைத்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 17 பேர் கைது
இதில் 3 சிறுவர்கள் 3 கர்ப்பிணி பெண்கள் உட்பட 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு வீடு வாடகைக்கு பெற்றுக் கொடுத்து உதவி புரிந்து வந்த ஒருவர் உட்பட 15 பேரை கைது செய்ததுடன் படகு மூலம் செல்வதற்காக
கொள்வனவு செய்யப்பட்டு வைத்திருந்த சமபோசா, பிஸ்கற் பக்கற்கள் சீனி போன்ற பொருட்கள் மற்றும் ஆடைகளையும் மீட்டு ஒப்படைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இவர்களை இன்று (16) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குறற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
விவசாயிகளுக்கு இலவசமாக டீசல் விநியோகம்
விவசாயிகளுக்கு இலவசமாக டீசல் விநியோகம்
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் இன்று அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
புத்தூர் கமநல சேவை பிரிவின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லீற்றர் டீசல் விகிதம் வழங்கப்பட்டன.
இதன்போது 630 விவசாயிகளுக்கு டீசல் வழங்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், வழங்கப்பட்ட டீசல் விவசாயிகளுக்கு போதவில்லை எனவும் மேலதிகமாக டீசல் வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
கோர விபத்து – இருவர் பலி
கோர விபத்து – இருவர் பலி
கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், கொக்க பகுதியில் கார் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணிக்க முற்பட்ட கார் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் பின்னர் காருக்குள் 2 பேர் சிக்கிக் கொண்டதையடுத்து, அவர்களைக் காப்பாற்ற அப்பகுதி மக்கள் கடுமையான பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தனர்.
எவ்வாறாயினும், குறித்த இருவரும் காரின் உள்ளேயே உயிரிழந்திருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம்
தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம்
பல தொழிற்சங்கங்களால், புதன்கிழமை (15) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களை நிறுத்துவதற்கு அராங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே திங்கட்கிழமை (14) இரவு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில், அரசாங்கத்தினால் எந்தவொரு தீர்வும் வழங்கப்படாமையால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களை நடத்துவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
வரிகளைக் குறைத்தல் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரிகளை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.
தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம்
அதன்போது, பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்படும் என்றும், அதற்கான பதிலுடன் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்ததாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தற்போதைய மற்றும் இன்று (14) புதன்கிழமையன்று முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தையும் கைவிடத் தயாராக இல்லை என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை முதல் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ள அதேவேளை, ரயில்வே ஊழியர்கள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
துறைமுகங்கள், பெற்றோலியம், கல்வி மற்றும் மின்சார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்களும் இன்று காலை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன
நாமல் ஒரு ப்ரொய்லர் கோழி திட்டித்தீர்த்தார் விமல்
நாமல் ஒரு ப்ரொய்லர் கோழி திட்டித்தீர்த்தார் விமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஒரு ப்ரொய்லர் கோழி போன்றவர் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பொது வெளியில் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
”மக்கள் துன்பத்தில் இருக்கும் போது சில பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து நாமல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
நாமலுக்கு எந்தவித அனுபவமும் அரசியல் அறிவும் இல்லை.
அவரும் ரணில் போன்றவர் தான். இன்றுவரை அவர் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. மக்கள் ஆத்திரமடைவதில் ஒரு நியாயம் இருக்கிறது. அவர் எப்போதும் கற்றுக் கொள்ளப் போவதில்லை. அவர் முன்கூட்டியே வளர்ந்த ஒரு ப்ரொய்லர் கோழி.
நாமல் ஒரு ப்ரொய்லர் கோழி திட்டித்தீர்த்தார் விமல்
தகுதி இல்லாதவர்களும் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆட்சிப்பீடம் ஏறியது தான் இந்த நாட்டினதும் ராஜபக்ஷ குடும்பத்தினதும் வீழ்ச்சிக்குக் காரணமாகும்.
கடந்த பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் யோஷித்த ராஜபக்ஷவை களமிறக்க அவர்கள் திட்டமிட்டனர். டலஸ் அழகப்பெரும தான் கோட்டாபய ராஜபக்ஷவிடம் அதை தடுத்து நிறுத்தும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டார்” என ஹம்பாந்தோட்டையில்
நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மாணவர்கள் மீது வன்முறை; அதிபருடன் அறுவர் கைது
மாணவர்கள் மீது வன்முறை; அதிபருடன் அறுவர் கைது
கண்டி பொக்கவெல பகுதியில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனியார் பாடசாலையில் கல்வி கற்கும் 15 இலிருந்து 17 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் பாடசாலை விடுதிக்குள் வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபரால் ஒழுக்கக் கேடு காரணமாக இரக்கமின்றி தாக்கப்பட்டதையடுத்து கண்டிப் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஐந்து மாணவர்கள் இரகசியமாக பாடசாலையின் பெண்கள் விடுதிக்குள் நுழைந்ததனால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் பட்டதாக விசாரணைகளில் தெரிய வருகிறது. ஐந்து
மாணவிகளை சந்திக்க அவர்களின் சம்மதத்துடன் குறித்த மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
மாணவர்கள் மீது வன்முறை; அதிபருடன் அறுவர் கைது
சம்பந்தப்பட்ட மாணவர்கள் கடுமையான தாக்குதலுக்கும் கொடுமைக்கும் ஆளாகியிருப்பதுடன் அவர்களின் தலைமுடியும் வெட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்களுள் விடுதி காப்பாளர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப் பட்ட பின்னர் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரையில் பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக கண்டி சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
சுற்றுலாப் பயணிகள் அவதி
சுற்றுலாப் பயணிகள் அவதி
வேலை நிறுத்தத்தினால் சுற்றுலாப் பயணிகளும் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் இன்றையதினம் நுவரெலியாவுக்கு வருகைதந்தனர்.
பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவில் இருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணிகளுடன் அவர்களை வழிநடத்தும் இலங்கையைச் சேர்ந்த வழிநடத்துனர்கள் சிலரும் இருந்தனர்.
பஸ்களில் நுவரெலியாவுக்கு செவ்வாய்க்கிழமை (14) வருகைதந்த அவர்கள், நுவரெலியாவில் பழைய தபால் காரியாலயத்தை பார்வையிட்டதன் பின்னர், நானுஓயாவில் இருந்து எல்லைக்கு ரயிலில் செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர்.
எனினும், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், தாங்கள் திட்டமிட்டிருந்ததன் பிரகாரம், சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளமுடியவில்லை என மனம் நொந்துகொண்டனர் என்றம் வழிகாட்டியினர் தெரிவித்தனர்.
ரஷ்ய முக்கிய அதிகாரி கார் குண்டுவெடிப்பில் படுகொலை
ரஷ்ய முக்கிய அதிகாரி கார் குண்டுவெடிப்பில் படுகொலை
ரஸ்யாவினள ஆக்கிரமிக்க பட்ட ,
உக்கிரைன் மெலிடோபோல் நகரின் மையத்தில்
ரஸ்ய உயர் அதிகாரி ஒருவர் பயணித்த கார் ஒன்று வெடித்து சிதறியது .
இவரது காருக்குள் மறைத்து வைக்க பட்ட ,
குண்டு திடீரென வெடித்து சிதறியதால் அவர் சம்பவ இடத்தில பலியானார் .
ரஸ்ய முக்கிய அதிகாரிகள் ,மாற்று புட்டீன் மிக நெருங்கிய,
சகாக்களை அமெரிக்கா ,இஸ்ரேல் இணைந்து
போட்டு தள்ளிய வண்னம் உள்ளன .
அவ்வாறான தொடர்ச்சியாகவே இந்த தாக்குதலும் பார்க்க படுகிறது .
இவ்வாறான நேர்த்தியான தாக்குதலை வெளிநாடுகளில் நடத்துவதில்,
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவுத்துறையினர் கைதேந்தவர்கள் ,
அவர்கள் மூலமே இந்த தாக்குதல்நடத்த பட்டுள்ளதாக,
ரஸ்ய ஆதரவுய் ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன .
யாழில் நகைக்கடை உரிமையாளரும் யுவதியும் உயிரிழப்பு
யாழில் நகைக்கடை உரிமையாளரும் யுவதியும் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகரும் நகைக்கடை உரிமையாளருமான நகைக்கடை உரிமையாளரான நடராசா கஜேந்திரன் (வயது 44) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவி கொழும்பில் வசித்து வரும் நிலையில் இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து துக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் உயிரிழந்த அதே நேரம் குறித்த நகைக்கடையில் பணிபுரிந்த 21 வயது யுவதியும் அவரது வீட்டில் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் நகைக்கடை உரிமையாளரும் யுவதியும் உயிரிழப்பு
உயிரிழந்த பெண மண்பிட்டி நாவந்துறை பகுதியைச் சேர்ந்த செல்வராசா நிலக்சனா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரது சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவர்களது மரணம் தொடர்பில் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

































