Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
அன்பை வாங்கிக்கோங்க… பிரியா பவானி
அன்பை வாங்கிக்கோங்க… பிரியா பவானி
யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மண்டேலா’. ஒரு முடிவெட்டும் தொழிலாளியை அசிங்கமாக நடத்தும் கிராமம். ஆனால், அவனுக்கு ஓட்டு இருக்கிறது என
தெரிந்தவுடன், அந்த ஒரு ஓட்டுக்காக அவனை என்னவெல்லாம் செய்கிறார்கள் என இந்திய அரசியலையே ஒரு திரைப்படத்தில் காட்டியிருந்தனர்.
இப்படத்தை மடோனா அஸ்வின் எனும் இளம் இயக்குனர் இயக்கியிருந்தார். இப்படம் திரை
விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. யோகிபாபுவின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.
பிரியா பவானி சங்கர் – யோகி பாபு
இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பக்கத்தில் ‘யோசிச்சு பார்த்தா கடந்த சில பல நாட்கள்ல என் கண்ணில் கருத்தில் பதிந்த ஒரே நல்ல விஷயம்
‘மண்டேலா’. மடோனா அஸ்வின், யோகிபாபு அண்ணா.. என் அன்பை வாங்கிக்கோங்க. அவ்ளோதான். வேற ஒன்னுமில்லை. நன்றி வணக்கம்’ என பதிவிட்டுள்ளார்.
வில்லன் நடிகரை புகழ்ந்த சேரன்
வில்லன் நடிகரை புகழ்ந்த சேரன்
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சேரன் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு.
இதில் சேரனுடன் சௌந்தரராஜா, செல்லா, முனிஸ்ராஜ், சூசன், ஜானகி, சிந்து, சுபா, மொட்டை ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
டேனியல் பாலாஜி
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சேரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில்,
ஒரு குளோஷப் ஷாட் எடுக்கப்பட எத்தனை உழைப்பு.. எவ்வளவு பேருக்கு நடுவில் ஒரு நடிகன் தன் உணர்ச்சிகளை
முகத்தில் எந்த பதட்டமுமின்றி காட்டவேண்டும். இங்கே டேனியல் பாலாஜி.. நான் ரசிக்கும் வளரும் கலைஞன்.. கூடவே நமோநாராயணன்.. என்று பதிவு செய்துள்ளார்
சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்.
சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்.
தமிழில் சூது கவ்வும் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்போது பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக
அறிமுகமாகும் அழகிய கண்ணே படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சீனு ராமசாமியின் துணை இயக்குனர் விஜயகுமார் இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கோணப்பட்டி கிராமத்தில் நடந்து வருகிறது. இதில் கிராமத்து மக்களும் கலந்து கொள்ள 100க்கும் மேற்பட்டவர்களை கொண்டு
படப்பிடிப்பு நடந்தது. மேலும் கிராம மக்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க கூடியிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொரோனா தடுப்பு குழுவினர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றனர்.
அழகிய கண்ணே
குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாததால் படப்பிடிப்பு குழுவினருக்கு தடுப்பு பிரிவினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்தவும்
அனுமதிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பை பாதியிலேயே ரத்து செய்து விட்டு படப்பிடிப்பு குழுவினர் கிளம்பிச் சென்றனர்.
ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்
ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசனின் புதிய மாஸ்க் ஸ்டைலுக்கு பாராட்டுகளையும், லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.
ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்… குவியும் லைக்குகள்
ஸ்ருதி ஹாசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர்
ஹிட்டாகியுள்ளது. தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
ஸ்ருதி ஹாசன்
நடிப்பு, இசையைத் தவிர சமூகப் பொறுப்புணர்வோடு செயல்படும் நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.
அந்தப் புகைப்படத்தில் ஒரு ஸ்டைலான மாஸ்க்கை நடிகை ஸ்ருதிஹாசன் அணிந்துள்ளார். அந்தப் புகைப்படத்தின் கேப்ஷனாக தமிழ் பொண்ணு அணிந்து இருக்கும் மாஸ்க் எனவும்
குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக்குகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறார்கள்
தாயுடன் இருக்கும் சத்யராஜ்… வைரலாகும் புகைப்படம்
தாயுடன் இருக்கும் சத்யராஜ்… வைரலாகும் புகைப்படம்
ல படங்களில் நடித்த நடிகர் சத்யராஜ் தனது தாயுடன் இருக்கும் அரிதான புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் நக்கல், நய்யாண்டி கொண்ட கதாநாயக வேடங்களில் நடிக்க சத்யராஜை விட்டால் சிறப்பான
நடிகர் வேறு யாரும் இல்லை. ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களைக் குறைத்துக்கொண்டு குணச்சித்திர வேடங்களில் நடித்து இப்போதும் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார்.
தாயுடன் சத்யராஜ்
சத்யராஜ் எப்போதுமே தனது குடும்பத்தினரை தனது புகழ் வெளிச்சத்துக்கு கொண்டுவர விரும்பமாட்டார்.
இந்நிலையில் இப்போது அவர் தனது 90 வயது அம்மாவுடன் இருக்கும் மிகவும் அரிதான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
பெற்றோருக்கு கொரோனா… உதவி கேட்கும் நடிகை
பெற்றோருக்கு கொரோனா… உதவி கேட்கும் நடிகை
பிரபல தமிழ் நடிகை ஒருவரின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தனது சமூக வலைதளம் மூலம் உதவி கேட்டுள்ளார்.
பெற்றோருக்கு கொரோனா… உதவி கேட்கும் நடிகை
சம்யுக்தா ஹெக்டே
ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ படத்தில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவருடைய பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தனது சமூக வலைத்தளத்தில்
தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைத்தள பக்கத்தில் தனது தந்தைக்கு ரெம்டிசிவிர் மருந்து
தேவை என்றும் தனக்கு தொடர்பு உள்ளவர்களிடம் அந்த மருந்தை கேட்டுள்ளதாகவும் அந்த மருந்தை கிடைக்க உதவி செய்யவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சம்யுக்தா
தனது பெற்றோரை வீட்டில் வைத்து சிகிச்சை செய்து வருகிறோம். இருவரையும் தான் கவனித்துக்
கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தயவு செய்து தனக்கு ரெம்டிசிவிர் மருந்து கிடைக்க உதவி செய்யவும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரைசாவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் பெண் நிபுணர்.
ரைசாவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் பெண் நிபுணர்.
தமிழ் சினிமாவின் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான ரைசாவிடம் பெண் நிபுணர் இழப்பீடாக 5 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்.
ரைசாவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் பெண் நிபுணர்
ரைசா – பைரவி செந்தில்
நடிகை ரைசா வில்சன் கடந்த வாரம் தன்னுடைய சமூக வலைதளங்களில் முகம் வீங்கி இருப்பது போன்ற ஒரு படத்தை பதிவு செய்து மருத்துவர் பைரவி செந்திலிடம் எடுக்கப்பட்ட சிகிச்சையால்
தனது முகம் வீங்கி விட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவர் பைரவி
செந்தில், ரைசா மூன்று நாட்களில் இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது மானநஷ்ட வழக்கை சந்திக்க நேரிடும் என்று நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதற்கு மற்றொரு நோட்டீஸ் மூலம் பதில் அளித்திருந்த ரைஸா, தனது முகத்திற்கு பைரவியின் சிகிச்சையால் தான் இப்படி ஆனது என்றும் அதற்கு ஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்
என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது மருத்துவர் பைரவி செந்தில் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி இருக்கிறார்.
ரைஸா
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ’ரைசா இதே சிகிச்சையை இதற்கு முன் எங்களிடம் மூன்று முறை எடுத்திருக்கிறார். முகத்தில் அழகு சேர்க்கும் சிகிச்சையை ரைசா எடுத்துக் கொண்டார்.
அவருடைய ஒப்புதலின் பேரில் தான் இந்த சிகிச்சையை கொடுக்கப்பட்டது. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்ட பின் மூன்று நாட்களுக்கு அனைவருக்குமே முகத்தில் வீக்கம் இருக்கும் என்றும்
சிகிச்சைக்கு முன்னும் பின்னும் செய்யப்பட வேண்டிய சில விஷயங்களை ரைசாவிற்கு எடுத்துரைத்தோம். அதை செயல்படுத்தாமல் மீறினால் பக்க விளைவுகள் வரும் என்றும் எச்சரித்துவிட்டு தான் சிகிச்சையை தொடங்கினோம்.
எங்களுடைய மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் உள்நோக்கத்துடன்
ரைசா செயல்பட்டு இருப்பதால் நஷ்டஈடாக அவர் 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறோம்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? கோவை சரளா விளக்கம்
திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? கோவை சரளா விளக்கம்
250 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்து வரும் நடிகை கோவை சரளா, சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமணம் பற்றி பேசி இருக்கிறார்.
59 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? கோவை சரளா விளக்கம்
கோவை சரளா
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் கோவை சரளா. 15 வயதில் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது 59 வயது ஆகியும் தொடர்ந்து பல காமெடி வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
இதுவரை 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தற்போது வரை திருமணம் செய்து
கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். இதற்கான காரணம் என்ன என்பதை கோவை சரளா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கோவை சரளா
4 தங்கை மற்றும் ஒரு தம்பியுடன் பிறந்தவர் கோவை சரளா. அவர்களுக்கு திருமணம் செய்துவைத்து தற்போது அவர்களே பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறார்.
மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். தன்னுடைய வாழ்க்கையை
தன்னுடைய சகோதரன் சகோதரிக்காக அர்ப்பணித்து விட்டதால் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்
மீண்டும் வீழ்த்திய கொரோனா… வருத்தத்தில் அஞ்சலி
மீண்டும் வீழ்த்திய கொரோனா… வருத்தத்தில் அஞ்சலி
தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள அஞ்சலி, சமீபத்தில் அளித்த பேட்டியில் கொரோனா முன் எச்சரிக்கைகள் பற்றி கூறி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள அஞ்சலி, கொரோனா முன் எச்சரிக்கைகள் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
‘‘மக்கள் அனைவரும் கொரோனா முன் எச்சரிக்கையை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. முக கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் கைகளை அடிக்கடி
கழுவுங்கள். கொரோனா தொடர்ந்து நம்மை வேதனைப்படுத்தி வருகிறது. பலர் நெருங்கியவர்களை இழந்து நிற்கிறார்கள். இதை மனதில் வைத்து எச்சரிக்கையாக இருங்கள்.
கொரோனா விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். நானும் கொரோனா காலத்தில் படப்பிடிப்புகளில் பங்கேற்கிறேன். ஆனால் அனைத்து முன் எச்சரிக்கையையும்
எடுத்துக்கொள்கிறேன். என் அருகில் இருக்கும் உதவியாளர்களும் ஜாக்கிரதையாக உள்ளனர். படப்பிடிப்பு அரங்கில் எல்லோரும் முக கவசம் அணிகிறார்கள். சமூக இடைவெளி கடைப்பிடிக்கிறார்கள்.
அஞ்சலி
எல்லோரும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உணவை சாப்பிடுங்கள். சாப்பிடுவது, தூங்குவது என்று இல்லாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். கொரோனாவால் எல்லா துறையும் நஷ்டம்
ஆகி விட்டது. சினிமா உயிர்த்தெழுந்த நேரத்தில் இரண்டாவது அலை வந்து வீழ்த்தி இருக்கிறது. நோய் தொற்றோடு சேர்ந்து நாம் பயணம் செய்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.”
இவ்வாறு அஞ்சலி வருத்தத்தோடு கூறினார்.
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை
- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
4000 பேருடன் பிரமாண்டமாக நடக்கும் இசை விருது விழா.
கொரோனாவுக்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த இசை விருது விழா நடைபெற உள்ளதாம்.
மாஸ்க்… சமூக இடைவெளி தேவையில்லை – 4000 பேருடன் பிரமாண்டமாக நடக்கும் இசை விருது விழா
பிரிட் விருது விழா
லண்டன்:
இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’, வருகிற மே 11-ந் தேதி நடைபெற உள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ‘ஓ2’ அரேனாவில் நடத்தப்பட உள்ளது. இதில் 4,000 பேர் கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த விருது விழா நடைபெற உள்ளதாம். மேலும் இதில் கலந்து கொள்ள உள்ள 4,000 பேரில் 2,500 பேர் முன்களப் பணியாளர்கள் மற்றும் 1,500 பேர் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்களாவர்.
பிரிட் விருது விழா
நிகழ்ச்சிக்கு முன்னதாக 4000 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை என்று வந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுமாம். ஏதெனும் தொற்றுக்கான அறிகுறி உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக நிகழ்ச்சிக்கு பின் சோதனை செய்யப்பட உள்ளதாம்.
நடிகை மீது பொறாமை படும் நடிகைகள்
நடிகை மீது பொறாமை படும் நடிகைகள்
பிரபல நடிகையாக இருப்பவரின் சம்பளத்தை கேட்டு மற்ற நடிகைகள் பொறாமை பட்டு வருகிறார்களாம்.
நடிகை மீது பொறாமை படும் நடிகைகள்
தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை, தற்போது தமிழிலும் நடித்து
இருக்கிறாராம். பாலிவுட் படத்திலும் நடித்துள்ள நடிகைக்கு, அங்கு அடுத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.
அதற்காக அவருக்கான சம்பளம் 6 கோடி என்று கூறுகிறார்களாம். இன்னும் முதல் படம் அங்கு
ரிலீஸ் ஆகாத நிலையில் அவர், இப்போதுகூட அறிமுக நடிகைதான். அவருக்கு இவ்வளவு சம்பளம்
ஓவராக இருக்கே? என்று மற்ற நடிகைகள் பொறாமை பட்டு வருகிறார்களாம்.
பெயர் மாற்றமா? – நடிகை திரிஷா விளக்கம்
பெயர் மாற்றமா? – நடிகை திரிஷா விளக்கம்
நடிகை திரிஷா பெயர் மாற்றம் செய்து கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பெயர் மாற்றமா? – நடிகை திரிஷா விளக்கம்
திரிஷா
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவர் கைவசம் கர்ஜனை,
சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகை திரிஷா நடித்துள்ள ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடி-யில் வெளியானது. அந்தப் படத்தின் டைட்டில் கார்டில் திரிஷா என்பதற்கு பதிலாக ‘த்ர்ஷா’ என்று
போட்டு இருந்தார்கள். இதை வைத்து நடிகை திரிஷா பெயர் மாற்றம் செய்து கொண்டதாக பேசப்பட்டது.
திரிஷா
இதுபற்றி நடிகை திரிஷாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: ‘‘நான் பெயர் மாற்றம் செய்யவில்லை. அதற்கு அவசியமில்லை. ‘திரிஷா’ என்ற அழகான பெயர் இருக்கும்போது, அந்த
பெயரை ஏன் மாற்ற வேண்டும்? வதந்திகளை என் ரசிகர்கள் நம்ப மாட்டார்கள்’’ என்று அவர் கூறினார்.
பட வாய்ப்பு இல்லையென்றாலும் விதவிதமாக போட்டோ ஷூட் எடுக்கும் நடிகை
பட வாய்ப்பு இல்லையென்றாலும் விதவிதமாக போட்டோ ஷூட் எடுக்கும் நடிகை
தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை, பட வாய்ப்புக்காக எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் கிடைக்காததால் போட்டோ ஷூட் மட்டுமே எடுத்து வருகிறாராம்.
பட வாய்ப்பு இல்லையென்றாலும் விதவிதமாக போட்டோ ஷூட் எடுக்கும் நடிகை
கிசுகிசு
தமிழில் கண் கட்டிய படம் மூலம் அறிமுகமான நடிதமிழில்கை, முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடித்திருந்தாராம். அவர்களுடன் நடித்ததால் தான் ஒரு பெரிய நடிகை என்று நினைக்க ஆரம்பித்து
விட்டாராம். சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகம் சேர்ந்ததால் முன்னணி நடிகையாகி விட்டோம் என்று நினைத்து பல சின்ன படங்களை நடிக்க மறுத்து வருகிறாராம்.
ஆனால், நடிகை எதிர்பார்த்த பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். இதனால் போட்டோஷூட் எடுக்க ஆரம்பித்தாராம். இதை
நடிகர்கள், இயக்குனர்களுக்கு தூது என பல முயற்சிகளில் இறங்கினாராம். ஆனால், எதுவும் நடிகைக்கு கைகொடுக்கவில்லையாம். இருப்பினும் நடிகை போட்டோ ஷூட் எடுப்பதை கைவிடவில்லையாம்.
ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதுல்யா
ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதுல்யா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூகவலைதளங்களில் போலிக்கணக்கு உருவாக்குவது என்பது மிகச் சாதாரணம் ஆகிவிட்டது. கையில் இன்டர்நெட் இருந்தாலே போதும். பிரபலங்களின் பெயரில் போலிக்கணக்கு துவங்கி
அந்தக் கணக்குகளைத் தவறான வழிகளில் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக அந்த பிரபலத்தின் பெயருக்குத் தான் கலங்கம் ஏற்படுகிறது. இதனாலேயே பிரபலங்கள் தங்கள்
பெயரில் போலிக்கணக்குகள் இருப்பது தெரிய வந்தால், உடனே ரசிகர்களை எச்சரித்து விடுகின்றனர்.
தற்போது நடிகை அதுல்யாவும் இந்த பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். அதுல்யா பெயரில் பேஸ்புக்கில் போலிக்கணக்கு துவங்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதுகுறித்து தெரிய வந்த அதுல்யா, உடனே அந்தப் போலிக்கணக்கு குறித்து தன்னுடைய ரசிகர்களை எச்சரித்துள்ளார்.
அதுல்யா ரவி
“பேஸ்புக்கில் யாரோ ஒரு போலி ஐடியை உருவாக்கி, திரைப்படத் துறையில் எனக்குத் தெரிந்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்புவது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.
இது மிகவும் மோசமானது. ஏற்கனவே அது குறித்து புகாரளித்துள்ளேன். நான் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இல்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். தயவு செய்து இந்த ஐடி-யை ரிப்போர்ட் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சை காட்சிகள்… ஜி.வி.பிரகாஷ்
சர்ச்சை காட்சிகள்… ஜி.வி.பிரகாஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதால் தணிக்கை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சர்ச்சை காட்சிகள்… ஜி.வி.பிரகாஷ் படத்தில் 10 நிமிட காட்சி நீக்கம்
ஜிவி பிரகாஷ்
ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சுரபி ஜோடியாக நடித்துள்ள அடங்காதே
படத்தை சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர்
நடிகர் ரஜினி கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஷயங்களை விமர்சிப்பது போன்ற சர்ச்சை காட்சிகள் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரஜினி தரப்பில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்ததாக கூறப்பட்ட கட்சி பெயரையும் படத்தில்
குறிப்பிட்டு இருந்ததாக அதிருப்தி வெளியிட்டனர். படத்துக்கு சான்றிதழ் அளிக்கவும் மறுத்தனர்.
பின்னர் அடங்காதே படக்குழுவினர் மறு தணிக்கைக்கு படத்தை கொண்டு சென்றனர். அங்கும் ரஜினிகாந்த் அரசியலை
கேலி செய்வது போன்ற காட்சிகள் படத்தில் இருப்பதாகவும், அதனை நீக்க வேண்டும் என்றும் தணிக்கை குழுவினர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஜிவி பிரகாஷ்
ரஜினிகாந்த் பதிவு செய்ததாக சொல்லப்படுவதற்கு முன்பே அகில இந்திய பாரத் பீப்பிள் சேவா
பார்ட்டி பெயரை பயன்படுத்தி படம் எடுத்து விட்டோம். குறிப்பிட்ட யாரையும் படத்தில் விமர்சிக்கவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
தணிக்கை குழுவினர் ஏற்காமல் கட்சி பெயரை படத்தில் இருந்து நீக்கினர். இதுபோல் 10
நிமிடங்களுக்கு மேல் ஓடும் 100-க்கும் மேற்பட்ட சர்ச்சை காட்சிகளை வெட்டி நீக்கி விட்டு, யூ-ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
ஆண்கள் ஹாஸ்டலில் பிரியா பவானி சங்கர்
ஆண்கள் ஹாஸ்டலில் பிரியா பவானி சங்கர்
பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான ஆர்.ரவீந்திரன் தனது
தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக தயாரித்துள்ள புதிய படத்திற்கு “ஹாஸ்டல்” எனப் பெயரிட்டுள்ளனர்.
சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் நாசர், சதீஷ், கிரிஷ் குமார்,
முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடந்ததை அடுத்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளனர்.
ஹாஸ்டல்
தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் நான்கு
ஆண்களுக்கு நடுவில் பிரியா பவானி சங்கர் உட்கார்ந்து இருக்கிறார். தற்போது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்
பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், கடைக்குட்டி சிங்கம்,
மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே
போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும்
இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யின் 33-வது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
பிரியா பவானி சங்கர் – சதீஷ்
இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை நடிகர் சதீஷ் கிண்டல் செய்து பதிவு செய்திருந்தார். த
ற்போது சதீஷின் புகைப்படத்தை வைத்து பிரியா பவானி சங்கர் கிண்டல் செய்து இருக்கிறார். சன்னிலியோனுடன்
சதீஷ் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு, இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு என்று கிண்டல் செய்து பதிவு செய்திருக்கிறார்.

தவறான சிகிச்சையால் முகவீக்கம்… ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ்
தவறான சிகிச்சையால் முகவீக்கம்… ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக வீக்கத்துடன் ஒரு படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
தவறான சிகிச்சையால் முகவீக்கம்… ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ்
ரைசா வில்சன்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரைசா வில்சன். அதன்பிறகு ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரையுலகில் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து நடித்து வருகிறார். ரைசா சமீபத்தில் முக வீக்கத்துடன் ஒரு படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
அவர் கூறியிருந்ததாவது: “முகப் பொலிவு செய்வதற்காக அழகியல் மருத்துவரிடம் சென்றேன். அப்போது தேவையற்ற சில விஷயங்களை செய்து எனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி விட்டது. இவ்வாறு அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
ரைசா வில்சன்
இந்த நிலையில் தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே ரூ. 1 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் கேட்டு ரைசாவின் வக்கீல், சம்பந்தப்பட்ட அழகியல் மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது: “ரூ.1.27 லட்சம் ரூபாய் செலுத்தி சிகிச்சை எடுத்தும் முகம் பொலிவுபெறாமல்
ரத்தக்கசிவும் வீக்கமும் தான் ஏற்பட்டது. உதவி மருத்துவர் அளித்த சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாத நிலையில்,
பைரவி அளித்த சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டது. 15 நாட்களில் ஒரு கோடி இழப்பீடு தராவிட்டால்
சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்”. இவ்வாறு அந்த நோட்டீசில் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

வீட்டிலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன் – நடிகை பிரியா வாரியர்
வீட்டிலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன் – நடிகை பிரியா வாரியர்
மலையாளத்தில் ஒரு அடார் லவ் படத்தில் கண் அடித்து பிரபலமான பிரியா வாரியர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:
“எனது அப்பா, அம்மா, பாட்டி, தம்பி எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறோம். வீட்டில் 60 வயதை தாண்டியவர்கள் இருக்கிறார்கள். எனவே கொரோனா காலத்தில் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.
கொரோனாவில் இருந்து தப்பிக்க படப்பிடிப்பில் தினமும் ஆவி பிடிக்கிறேன். வெந்நீரில் மஞ்சள் கலந்து குடிக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வேறு நகரங்களில் இருந்து வீட்டுக்கு போகும்போது 2
நாட்கள் யாருடனும் சேராமல் தனியாக இருப்பேன். சாப்பாட்டை எனது அறைக்கு அனுப்ப சொல்வேன்.
பிரியா வாரியர்
முக்கியமாக எனது தாத்தா, பாட்டி அருகில் நான் போகவே மாட்டேன். வீட்டில் எங்கு சுற்றினாலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன். 2 நாட்கள் எந்த அறிகுறியும் இல்லை என்று தெரிந்த
பிறகுதான் குடும்பத்தினரோடு சேர்ந்து இருப்பேன. சிறுவயதிலேயே நடிப்பில் ஆர்வம் இருந்தது. கண் அடிக்கும் காட்சியால் பிரபலமான பிறகு படிப்பை விட்டு விட்டேன்.
இப்போது அம்மா எம்.பி.ஏ. படிக்க சொல்கிறார். எனக்கு வேலைக்கு போக விருப்பம் இல்லை. நடிப்புதான் முக்கியம்.
நிறைய பேர் டாக்டருக்கு படித்து விட்டு நடிக்க வந்து இருக்கிறார்கள். அதை சொல்லி அம்மாவை சமாதானப்படுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கிழிந்த ஜீன்ஸ் -கிண்டல் செய்த பிக்பாஸ் பிரபலம்
கிழிந்த ஜீன்ஸ் -கிண்டல் செய்த பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா. இவர் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டு வெளியேறினார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கேப்ரில்லா அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.
இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிழிந்த ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்த புகைப்படத்தை கேப்ரில்லா பதிவு செய்துள்ளார்.
ரியோ
இந்த புகைப்படத்தை பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களில் ஒருவரான ரியோ ராஜ் ’இருந்தாலும்
ரொம்ப கிழிஞ்சு இருக்கு’ என்று கிண்டலடித்துள்ளார். மற்றொரு இன்ஸ்டாகிராம் பயனாளி ‘எடுத்துட்டு போன 5 லட்சத்திற்கு நல்ல பேண்ட் வாங்கி இருக்கலாம்ல்ல’ என்று பதிவு செய்துள்ளார்.












