Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு தேசிய மருத்துவமனையில் குவிந்த காய மடைந்தவர்கள்

கொழும்பு தேசிய மருத்துவமனையில் குவிந்த காய மடைந்தவர்கள்

பிறந்த 2020 புத்தாண்டை சிறப்பாக கொண்டாட எண்ணி வெடிகள் கொளுத்தியவர்களும் ,அதிக போதையில் வாகனத்தைச செலுத்தி சென்றவர்களுமாக பலநூறு பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் .

விசேட மருத்துவ அணிகள் தயார் செய்யப்பட்டு உசார் நிலையில் இருந்ததினால் இவ்வாறு காயமடைந்து எடுத்து

வரப்பட்டவர்களை உடனடியாக பாதுகாக்க முடிந்ததாக மருத்துவனையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன .

எனினும் இதுவரை காயமடைந்து சிகிச்சை பெற்றவர்கள் துல்லியமான புள்ளி விபரங்கள் கிடைக்க பெறவில்லை ,விரைவில் இணைக்க படும்

Posted in இலங்கை செய்திகள்

ராசி பலன்கள் 2020 புத்தாண்டு

2020 புத்தாண்டு ராசி பலன்கள்மேஷ ராசி 2020 புத்தாண்டு பலன்கள்

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் அடங்கியது மேஷ ராசி.

2020 புத்தாண்டு உங்களுக்கு பல்வேறு யோகங்களை கொண்டு வரக் கூடிய ஆண்டாக இருக்கும். அன்பு, பாசம், நேசம் ஆகியவை கிடைக்கும். காதலில் வசப்படக் கூடிய வாய்ப்பு உண்டு. வெற்றிகள் பல கிடைக்கவும், மகா லெட்சுமி யோகம் உண்டு.

பாக்கியங்கள் அதிகம் கிடைக்க உள்ள மேஷ ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

​ரிஷப ராசி 2020 புத்தாண்டு பலன்

ரிஷபம்- ராசி நாதன்: சுக்கிரன்

கார்த்திகை (பாதம் 2,3,4) நட்சத்திர அதிபதி சூரியன்

ரோகிணி நட்சத்திர அதிபதி சந்திரன்

மிருகசீரிஷம் (பாதம் 1,2) நட்சத்திர அதிபதி செவ்வாய்

இந்த ஆண்டு செல்வ செழிப்பான ஆண்டு. பல புதிய பாதைகள், முயற்சிகள் செய்து வெற்றிகள் அடையக்கூடிய ஆண்டு. ரிஷப ராசி சுக்கிர பகவான் ராசி நாதன். இவர் ஆண்டு தொடக்கத்தில் உங்களின் பாக்கிய ஸ்தானமான மகரத்தில் அமர்ந்துள்ளார். இதனால் இந்தாண்டு உங்கள் ராசிக்கு நிறைய பாக்கியங்கள் நடைபெற உள்ளன.

ரிஷப ராசி புத்தாண்டு பலன்கள் – முன்னேற்றம் இருக்குமா?

​மிதுனம் ராசி 2020 புத்தாண்டு பலன்

மிதுனம் ராசி 2020 வருட பலன்: மிதுன ராசிக்கு குரு 7ல் இருந்தாலும், அஷ்டம சனியாக இருப்பதால் உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் நடக்கும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்,…

மிதுன ராசி

மிதுன ராசியில் உள்ள நட்சத்திரங்கள்

மிருகஷிரீடம் 3,4 பாதம்

திருவாதிரை

புனர்பூசம் 1,2,3

ராசி பலன்கள் 2020 புத்தாண்டு

மிதுன ராசியைப் பொருத்த வரை குரு பகவான் 2020ல் ஆண்டு கோள் எனும் குரு பகவான் திருக்கணிதப் படி, உங்கள் ராசிக்கு 20/11/2020 வரை 7ஆம் இடமான சம சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இந்த ஆண்டு மிதுன ராசி நினைத்த காரியங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

மிதுன ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள் – அஷ்டமத்து சனி, 7ல் குரு இருப்பதால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கடக ராசி 2020 புத்தாண்டு பலன்

கடக ராசி 2020 வருட பலன்: கடக ராசிக்கு பல கஷ்டம், சங்கடங்களுடன் 2020 ஆண்டு கடந்து போக உள்ளது. நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அதனால் எப்படிப்பட்ட பலன்களைப் பெறலாம் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்,…

கடகம் – ராசி நாதன்: சந்திரன்

புனர்பூசம் (பாதம் 4)நட்சத்திர அதிபதி குரு (வியாழன்)

பூசம் நட்சத்திர அதிபதி சனி

ஆயில்யம் நட்சத்திர அதிபதி புதன்

கடக ராசி 2020 ஆண்டு பலன்கள் – பல சவால்களை சமாளிக்க தயாராகுங்கள்…

​சிம்ம ராசி 2020 புத்தாண்டு பலன்

2020 ஆண்டு பலன் வருட கோள்களின் பெயர்ச்சியையும், கோச்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரத்தை அடிப்படையாக வைத்து இந்த வருட பலன் கணிக்கப்பட்டுள்ளது.

சிம்ம ராசி 2020 வருட பலன்: சிம்ம ராசிக்கு எல்லா கிரகங்களும் சாதகமாக இருப்பதால் ராஜ யோகம் அடிக்க உள்ளது. சிம்ம ராசி சூரிய பகவான் அதிபதியாக இருக்கக் கூடியவர்.

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் நட்சத்திரங்கள் அடங்கியது.

சிம்ம ராசிக்கு 2020ல் ராஜ யோகம் அடிக்குது… ஆண்டு பலன்கள் இதோ

​கன்னி ராசி 2020 வருட பலன்

கன்னி ராசி 2020 வருட பலன்: கன்னி ராசிக்கு குரு 4ல் இருப்பதாலும், சனி 5ல் இருக்கின்றது. கன்னி ராசியில் உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2 பாதம் அடங்கிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான 2020 புத்தாண்டு பலன்கள். புதன் ராசி அதிபதியாக உள்ளார். 2020 கன்னி ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் நடக்கும் என்பதை லிங்க் கிளிக் செய்து அறிந்துகொள்ளுங்கள்.

கன்னி ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

​துலாம் ராசி 2020 புத்தாண்டு பலன்

துலாம் ராசியினர் சுகம் மற்றும் ஆடம்பர பிரியராக, சொகுசு வாழ்க்கையை விரும்பும் காரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்டவர்கள்.

துலாம் ராசி

சித்திரை 3,4

சுவாதி

விசாகம் 1,2,3 ஆகிய நட்சத்திரங்கள் அடங்கியது. இவர்களுக்கு வருடக் கோள்களான குரு, சனி, ராகு-கேது கிரகங்கள் கொடுக்கும் பலன்களின் அடிப்படையில் 2020 புத்தாண்டு ராசி பலன் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

ராசி பலன்கள் 2020 புத்தாண்டு

துலாம் 2020 புத்தாண்டு பலன்கள் – ஆட்டம் காட்டப்போகும் ஆண்டு

விருச்சிக ராசி 2020 புத்தாண்டு பலன்

விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த விருச்சிக ராசியிருக்கான 2020 புத்தாண்டு பலன்கள் எப்படி இருக்கும்?, ஏழரை சனி முடிந்து, மிக நல்ல பலன்களைப் பெற உள்ளீர்கள்.

ஏழரை ஆண்டுகள் சனியின் பிடியில் பல துன்பங்களை அனுபவித்த விருச்சிக ராசியினருக்கு 2020ல் மிகப்பெரிய விடுதலையாக இருக்கும், வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு முன்னேறுவீர்கள் என்றால் மிகையாகாது.

2020 புத்தாண்டில் ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் விருச்சிக ராசி

​தனுசு ராசி 2020 புத்தாண்டு பலன்

தனுசு ராசியில் இருக்கும் மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் கொண்ட நட்சத்தினருக்கு இந்த 2020 புத்தாண்டு பலன்கள் பொருந்தும். இவை அனைத்தும் கோச்சார ரீதியான பொதுப் பலனே. உங்கள் சுய ஜாதகத்தின் அடிப்படையில் தான் மிகச் சரியான பலன்கள் அமையும்.

குரு தன் சொந்த வீடான தனுசுவில் 2020 நவம்பர் இறுதி வரை சஞ்சரிப்பதால், கடந்த காலத்தில் இருந்த வீண் விரயங்கள் படிப்படியாக குறைந்து, முன்னேற்றம் ஏற்படும். அதோடு இதுவரை உடல் ஆரோக்கிய குறைபாட்டால் மருந்து எடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தருவார்.

தனுசு ராசிக்கு ஜென்ம குரு, 2ல் சனி என பல சங்கடங்களுடன் செல்ல உள்ள 2020 புத்தாண்டு பலன்கள்

மகர ராசி 2020 புத்தாண்டு பலன்

உத்திராடம் 2ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 2ஆம் பாதம் வரை அடங்கிய சனி அதிபதியாக இருக்கும் மகர ராசியினருக்கான 2020 புத்தாண்டு பலன் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

தன்காரகன் என சொல்லக் கூடிய குரு பகவான் 02/11/2020 வரை ராசிக்கு 12ஆம் இடத்தில் ஆட்சி பெற்று விரய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி உங்கள் ராசிக்கு ராசி நாதன் சனி பகவான் ஜனவரி 24ஆம் தேதி சொந்தவீட்டில் அமர உள்ளார் என்பதால் எதிலும் சற்று கவனமாக செயல்படுவது அவசியம்.

ஜென்ம சனி ஆரம்பிக்கும் மகரம் ராசிக்கு 2020 புத்தாண்டு பலன் எப்படி இருக்கும்?

கும்பம் ராசி 2020 புத்தாண்டு பலன்

புதிய ராசி பலன்கள் 2020 புத்தாண்டு

கும்பம் ராசி 2020 வருட பலன்: கும்பம் ராசிக்கு ஏழரை சனி தொடங்கினாலும், குரு 2ல் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பல்வேறு யோகங்களை தர உள்ளார். கும்ப ராசிக்கு 2020 எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்…

குரு லாப ஸ்தானத்தில் இருப்பதால் சிறப்பு பலனாக 5 ,7ஆம் இடங்களைப் பார்ப்பதால் திருமணத்திற்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் விரைவாக நடக்க யோகம் உண்டு.

ஏழரை சனி தொடங்கும் கும்பம் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

​மீன ராசி 2020 புத்தாண்டு பலன்

மீன ராசி 2020 வருட பலன்: மீன ராசிக்கு எல்லா கிரகங்களும் சாதகமாக இருப்பதால் ராஜ யோகம் அடிக்க உள்ளது.

மீன ராசி

பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் அடங்கியது மீன ராசி.

நவகிரகங்களில் முழு சுமாரான குரு பகவான் அதிபதியாக இருக்கிறார் video

Posted in இலங்கை செய்திகள்

ரிச்சார்ட் பதியுதீனுக்கு 300 வருட சிறை

இலங்கையில் -ரிச்சார்ட் பதியுதீனுக்கு 300 வருட சிறை

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு பட்டதாக தெரிவிக்க படும் முஸ்லீம் தீவிரவாத

அமைச்சர் ,ரிச்சர்டு பதியுதீன் உடனடியாக கைது செய்ய பட்டு நீதியின் முன் நிறுத்த பட வேண்டும் .

மேலும் இவருக்கு 300 ஆண்டு சிறை தண்டனை வழங்க வேண்டும் என சிங்கள இனவாத ராவய கட்சி அறிவித்துள்ளது

கோட்டா அதிகாரத்தில் இருந்தாலே காவிகள் கூச்சல் நாட்டில் உச்சம் பெறுவது வழமை ,இவர்களை தூண்டி

விட்டு கோட்டா மவுனம் காப்பார் ,அதுவே இப்பொழுது இடம்பெற்று கொண்டுள்ளதை காண முடிகிறது

Posted in இலங்கை செய்திகள்

சுவிஸ் பெண் விடுதலையை வரவேற்றுள்ள சுவிஸ்

இலங்கை -சுவிஸ் பெண் விடுதலையை வரவேற்றுள்ள சுவிஸ்

இலங்கை – சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்த சிங்கள பெண் குற்ற தடுப்பு பிரிவினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டு சிறையில் வைக்க பட்டார் .

தற்பொழுது பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அதனை வரவேற்று சுவிஸ் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது

நீதி விசாரணைக்கு உட்படுத்தாது சிகிச்சைக்கு தமது நாடு வருவதற்கு நானுமதி அளிக்கும் படி வேண்டி கொண்ட

நிலையில் அதனை தட்டி கழித்த இலங்கை அரசு சிறையில் அடைத்த நிலையில் தற்பொழுது சுவிஸ் அரசு இந்த வரவேற்பு அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

300 பல்கலைக்கழக கல்லூரிகளை அமைக்கும் கோட்டா அரசு

இலங்கையில் -300 பல்கலைக்கழக கல்லூரிகளை அமைக்கும் கோட்டா அரசு

இலங்கை ஆளும் அரசு 300 பல்கலைக்கழக கல்லூரிகளை அமைக்கும் திட்டத்தை நடைமுறை படுத்தவுள்ளது , இங்கு அரசு பல்கலைக்கழகங்களில் நுழைய முடியாத

மாணவர்கள் இங்கு இணைந்து உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி பெறலாம் என்று உயர் கல்வி அமைச்சர் பண்டுலா குணவர்தன தெரிவித்தார்.

இந்த ஆண்டு மட்டும் சுமார் 181,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தகுதிகளைப் பெறும் மேம்பட்ட நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எவ்வாறாயினும், வரி செலுத்துவோர் நிதியளிக்கும் பல்கலைக்கழகங்களில் சுமார் 30,000 இடங்கள் மட்டுமே

உள்ளன, இதனால் 150,000 உயர் மற்றும் வறண்ட நிலையில் உள்ளது, என்றார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தனது பதவிக்காலம் முடிவதற்குள் நுழைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்

அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி வாய்ப்புகளை வழங்க தீவிரமாக உறுதியளித்துள்ளார், என அவர் தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

தாய் இரு மகள்களுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை

இலங்கை -தாய் இரு மக்களுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை

இலங்கை -பட்டுயாய பகுதியில் 35 வயதுடைய இளம் தாய் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன்
கிணற்றில் பாய்ந்து தற்கொலை புரிந்துள்ளார் .

இரண்டு வயது மற்றும் எழுவது பெண் பிள்ளகைங்களை கிணற்றில் வீசி விட்டு தானும் குதித்து தற்கொலை புரிந்துள்ளார்

இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
புத்தாண்டு பிறக்கின்ற முன்தின வேளையில் இந்த தற்கொலை இடம்பெற்றுள்ளது

குறித்த மரணம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் video

Posted in இலங்கை செய்திகள்

உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் world live

உலகளாவிய -உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிறந்துள்ள புத்தம் புதிய ஆண்டு எல்லோருக்கும் நல் சிறந்த ஆண்டாக மலர எதிரி இணையத்தின் வாழ்த்துக்கள் .

2020 என்ற சொல்லுக்குள் நசிய போகும் அடுத்து வரும் பத்து ஆண்டுகளில் பலத்த மாற்றங்கள் உலகில் ஏற்படும் பெரும் ஆண்டாக உறவுகளுக்கு இது இடம் பிடிக்கும் .

இருபது இருபது என அழைக்க படவுள்ள இந்த சொல்லுக்குள் பலத்த அர்த்தங்கள் ஒளிந்துள்ளன
சமூக வலைத்தளங்களில் இதற்கு அர்த்தங்கள் நீண்டு விரிந்து செல்கின்றன .


அறிய முடியாத பல புதிர்கள் இந்த இருபது இருபது என்பதற்குள் புதைந்து கிடக்கிறது

வண்ண அழகிய இராய தந்திரம் மிக்க இந்த எண்ணுக்குள் ஒளிந்திருக்கும் அந்த உற்சாக வசந்த காலம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் .japapn live

எதிரி இணையமும் புதிய ஆண்டில் புதிய பொருளாதார மேம்பாட்டு சிந்தனையை வாசர்களுக்கு விதைக்க முற்படுகிறது ,அதற்கான வாசலை திறக்கவுள்ளது .

விடயங்கள் கூடி வந்தால் இந்த இணையத்தின் ஊடாகவே நீங்கள் பணம் உழைக்க முடியும் ,விடயங்கள் முற்று பெற்றதும் விபரமாக அறிய தருகிறோம்

அதுவரை அன்புடன் விடை பெற்று கொள்ள்கிறோம்
உங்களில் ஒருவன் live video
எதிரி . com

மேலும் உலகம் தழுவிய நிலையில் இடம்பெற்ற புத்தாண்டு வரவேற்பு நிகழ்வுகள் இங்கே இணைக்க பட்டுள்ளது

விஷேட இணைப்புகள் வாயிலாக அதில் அழுத்தி நீங்கள் பார்க்க முடியும் .ஒரே பக்கத்தில் முக்கியமான உலக நாடுகளது புத்தான்டு வரவேற்பு பட்டாசு வான வேடிக்கையை இங்கே இணைக்க படுகிறது

உலகத்தில் இடம்பெற்ற புத்தாண்டு வரவேற்பு நிகழ்வில் எந்த நாடு இம்முறை முதலாவதாக இடம் பிடிக்க போகிறது என்பதை இன்னும் சில மணித்துளிகளில் தெரிந்து கொள்ள முடியும்

பிறக்கின்ற ஓவொரு ஆண்டும் ஒவ்வொரு தனி மனித வாழ்வில் புதிய வரலாறாகவே கடந்து செல்கிறது

இன்பம் ,துன்பம் என்ற இரண்டு சாலைகளில் நடந்து சென்ற வாழ்வு பயணத்தின் முடிவு தெரிந்து கொள்ளும் நாளாக இது மற்றம் பெறுகிறது

முடிதலும் தொடங்குதலும் இயல்பாக கழிகிறது ,நாம் தான் அந்த காலத்தில் எதனை சாதித்தோம் என்ற தேடலுக்குள் செல்ல வேண்டும்

அப்பொழுதே அந்த ஆண்டு அர்த்தமுள்ள ஆண்டாக மலரும் என்பதே அறிவார்ந்த பதிலாக அமைகிறது .

Posted in இலங்கை செய்திகள்

வறுமையில் வாடிய 70 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணம் வழங்கிய லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயம்

யாழ் மாவட்டத்தை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட்ட வறுமையில் வாடிய கோட்டுக்குட்பட்ட 70

பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் 31.12.2019 இன்று வழங்கி குழந்தைகளின் புன்னகையில் அக மகிழ்ந்த தருணங்களில்

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா


இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

கனக துர்க்கை அம்மன் அருளாளே
பாடசாலை தொடங்க இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் கற்றல் உபகரணங்கள் வாங்க முடியாமல்

தவித்த தாய்மாரின் நெஞ்சிலே நிம்மதியையும் பிள்ளைகளின் முகத்தில் சந்தோசத்தை யும் உண்டாக்கிய. கனகதுர்க்கை அம்மன் ஆலய

நிர்வாகத்தினருக்கும்,நம்பிக்கை சபை உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

உலகாளும் தாயின் அருளோடு உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

வறுமையில்
வறுமையில்
வறுமையில்
வறுமையில்
வறுமையில்
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் 12,000 வெடிகள் -புத்தாண்டில் வெடிக்க உள்ளது

பிரிட்டன் -லண்டனில் 12,000 வெடிகள் -புத்தாண்டில் வெடிக்க உள்ளது

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டை மிகவும் கோலாகலமாக வரவேற்க லண்டன் தயாராகி விட்டது ,அதற்கு ஏற்பட்ட பலத்த பொலிஸ் ,இராணுவ பாதுகாப்புடன் இந்த வான வேடிக்கைகள் காண்பிக்கும் நிகழ்வுகள் தீவிரம் பெற்றுள்ளன .

15 நிமிடம் தொடராக வெடிக்க உள்ள இந்த வான வேடிக்ககையில் இம்முறை 12,000
பட்டாசுகள் பொருத்த பட்டுள்ளன .
அதில் லண்டன் ஐயில் மட்டும் சுமார் இரண்டாயிரம் பொருத்த பட்டுள்ளது .

இந்த வான வேடிக்கையை பார்த்து மகிழ இதுவரை உள் நுழையும் டிக்கட் விற்பனை சுமார் எட்டு லட்ஷம் பவுண்டுகளை எட்டி பிடித்துள்ளதாம் .

மேலும் தொடர்ந்து உள் நுழையும் டிக்கட் விற்பனை செய்ய பட்ட வண்ணமே உள்ளன .
வரலாறு காணாத அளவு இம்முறை இந்த வான வேடிக்கை இருக்கும் என செய்திகள் வெளியாகி வருகின்றன

இதனை நேரடி ஒளிபரப்பு செய்திட பல முக்கிய தொலைக் காட்சிகள் போட்டி போட்ட வண்னம் உள்ளன .
இன்று இரவு இந்த வான வேடிக்கை லண்டனை அதிர வைக்க போகிறது

மக்களே நீங்கள் ரெடியா …? ஆம் இதே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் பாதுகாப்பு இரட்டிப்பாக பல படுத்த பட்டுள்ளதாம்

லண்டனில் 12,000 வெடிகள் -புத்தாண்டில் வெடிக்க உள்ளது

வழமையாக செல்லும் பெருமளவான கூட்டம் சற்று இம்முறை குறைந்து காணப்படும் என எதிர்பார்க்க படுகிறது

இன்று வழமைக்கு மாறாக லண்டனில் பலத்த உறைபனி குளிர் நிலவுகிறது ,இந்த சீரற்ற கடும் குளிருக்குள் நனைந்தவாறு மக்கள் இந்த காட்சிகளை கண்டு கழிக்க போகின்றனர்

புத்தாண்டு தினத்தில் பிரிட்டனில் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுவதில்லை

டாக்சிகள் இன்று பலத்த வருமானத்தை பெற்று கொள்ளும் என எதிர்பார்க்க படுகிறது

இந்த ஆண்டு எந்த நாடு முதல் இடத்தை தட்டில் செல்ல போகின்றன என்பதை இன்று இரவு தெரிய வரும்

லண்டனில் நாங்கள் தொலைக்காட்சியில் குந்தியவாறு இதனை பார்த்து மகிழும் வாய்ப்பு கிட்டும் பெரும் பாக்கியமாக அமையும் அனைவருக்கும்

லண்டனில்
Posted in இலங்கை செய்திகள்

பொம்மை ஆளுநர் வடக்கிற்கு நியமிப்பு

இலங்கையில் -பொம்மை ஆளுநர் வடக்கிற்கு நியமிப்பு

இலங்கை பாரம்பரிய தமிழர்களின் புனித பூமியாம் வடக்கு பகுதிக்கு தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் இட்ட ஆளும் இரத்தக் கறை படிந்த

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட கோட்ட பாயவினால் திருமதி சாள்ஸ் ஆளுநராக நியமிக்க பட்டுள்ளார் .

இவர் முன்னர் வகித்த பதவி நிலைகளில் பலத்த ஊழல்கள் ,மோசடிகள் மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளிலும் ஈடுபட்டு இருந்தார்


அவ்வாறான ஒருவர் மீளவும் ஆளுநராக நியமிக்க பட்டுள்ளது ஒரு பொம்மை ஆட்சியில் அமர்த்தி அதற்கு அழகு பார்ப்பது போன்ற நியமன இதுவாகும் .

கொழும்பு சொல்லும் கட்டளைக்கு தலையாட்டி செல்லும் பெட்டி பாம்பாக அம்மணி உருவாக்கம் பெற்றுளளர் .


புரையோடி போயுள்ள தமிழர்களின் இறைமையுள்ள அரசியல் நோக்கி இவரால் நகர முடியுமா .? என்றால் பதில் நிச்சயமாக இலை என்றே வீழ்ந்து மறையும் .

சிங்கள ஆளும் பவுத்த வெறி பிடித்த இவர்களது ஆட்சியில் அற்ப பதவிகளுக்கு விலைபோயுள்ள இவர்கள் போன்றவர்கள் ,

பொம்மை ஆளுநர் வடக்கிற்கு நியமிப்பு

மக்கள் மத்தியில் காத்திரமான சேவை மனப்பான்மையுடன் தொடர்ந்து சென்று இருந்தால் கூட போற்றுதலுக்கு உள்ளாகி இருப்பார்கள் .

ஆளுநர் செயல் பாட்டு தன்மைகளை புரியாத ஒருவர் அதனை முழுமையாக இராய தந்திர ரீதியில் தெரியாத ஒருவரே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளது சர்வதேச அளவில் நயப்புக்கு இடமாக மாற்றம் பெற்றுள்ளது .

தமிழர் மனங்களை இவர்களை வைத்து வென்று விடலாம் என கோட்டா ,மகிந்த கனவு காண்பது புதைகுழி வெட்டி அதற்குள் அவர்களே வீழ்ந்து உறங்குவதற்கு சமன் ஆகும்

நடப்பாண்டின் நிகழ்வுகள் எல்லாம் கோட்டா அரசு விரைவில் மொத்த இலங்கை மக்களினால் காணமல் போகும் நிலையான நிலைமையை உருவாக்கும் திசை நோக்கி பயணிக்கிறது .

இது மிக பெரும் ஆபத்தான ஒன்றானதும் ,அதனை புரிந்து கொண்டு செயல் பட ஆளும் அதிகாரம் மறந்தால் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியில் ஏற்றிய அதே

சிங்களவர்கள் இவர்களை எட்டி உதையும் நாள் இவர்கள் செயல்முறை படுத்தும் நகர்வின் ஊடாக இலங்கை வரலாற்றில் கறை படிந்த வரலாறாக எழுத பட போவதை இப்போதே அடித்து கூறலாம்

  • வன்னி மைந்தன் –
Posted in இலங்கை செய்திகள்

பாலத்துக்குள் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

இலங்கை – இராணுவ முகாம் அருகில் உள்ள பாலத்துக்குள் இருந்து பெருமளவு ஆயுதங்கள்மீட்பு என இராணுவம் அறிவிப்பு இதனை அடுத்து மேலும் இராணுவம் தேடுதல் முடுக்கிவிட பட்டுள்ளது

அடுத்து என்ன ..? ரங்கவல கைவிட ப்பட்ட நிலையில் பெரும் தொகை ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளன .


குறி பார்த்த்து சுடப்படும் சினைப்பர் துப்பாககிகள் ,மற்றும் அதற்குரிய மகசீன்கள் ,தோட்டக்கள் .ரீ 56 துப்பாக்கிகள் உள்ளிட்டவை இதில் இருந்து மீட்க பட்டுள்ளன

சாலவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியங்கள் வெடித்து சிதறின ,அதில் இருந்து வெடித்து பறந்த ஆயுதங்களாக இவை இருக்கலாம் எனவும் இதனை சேகரித்த நபர்கள்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலை அடுத்து நடத்த பட்ட சுற்றி வளைப்பில் இருந்து தப்பித்து கொள்ள இவை கைவிட பட்டிருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

எனினும் பொலிஸாரால் மீட்கப்பட்ட இந்த வெடிபொருட்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பாலத்துக்குள் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

எனினும் இந்த ஆயுதங்களை சேகரித்தவர்கள் யார் அவர்கள் நோக்கம் என்ன என்பது தொடர்பாக குற்ற தடுப்பு பிரிவினர் தீவிர புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

கோட்டபாய ஆட்சியில் மீளவும் பாலத்துக்குள் இருந்து ஆயுதங்கள் மீட்க படுவது கைது வேட்டையின் தொடர்ச்சியாக அமைய உள்ளதை இவை காண்பிக்கிறது .

மகிந்த ஆட்சியில் அமர்ந்த வேளை இராணுவத்தால் தமிழீழ விடுதலை புலிககளின் ஆயுதங்கள் என மீட்க பட்டு சிங்கள மக்கள் மத்தியில் புலி பீதி ஏற்படுத்த பட்டது .

அதன் தொடர்ச்சியாக இந்த ஆயுத மீட்பு சம்பவங்கள் அமைய கூடும் என நோக்க முடிகிறது .

பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து கோத்தபாயவின் இராணுவ பிரிவால் இந்த ஆயுத மீட்பு சம்பவங்கள் திசை திருப்பும் ,

வெற்றி பெறும் நோக்கிலான செயல் பாடாக இருக்கலாம் என கருத முடிகிறது .

தாம் வெற்றி பெற குண்டுகளை வைத்தது போல ,இதுவும் ஒரு திசை திருப்பலி நாடகமாக பார்க்க முடிகிறது ,

ஆட்சியில் அமர தன் மக்களையே கொல்ல சிங்கள ஆளும் அரசு தயங்காது என்பதற்கு இவை சிறந்த உதாரணம்

அப்படி என்றால் விரைவில் நாடு தழுவிய ரீதியில் பாரிய கைது வேட்டைகள் ஆரம்பிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

பாலத்துக்குள் இருந்து

Posted in இலங்கை செய்திகள்

நான்கு விமானப் படையினர் விபத்தில் பலி

நான்கு விமானப் படையினர் விபத்தில் பலி

இலங்கை இராணுவ வான்படையை சேர்ந்த நான்கு இராணுவ சிப்பாய்கள்
சென்ற வாகனம் ஆட்டோவுடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த நல்லவர் பலியாகியுள்ளனர் .

சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது ,
இந்த விபத்து தொடர்பில் தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .

இது திட்டமிடப்பட்ட சதியா என தெரியவரவிலை .

Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு

கிளிநொச்சியில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு ,

இலங்கை – கிளிநொச்சி ஐயன்குளத்தின் அணைக்கட்டு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பலத்த வாள்வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்க பட்டுளளார் .

சடலத்தை கண்ணுற்ற மக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடைப்படையில் மேற்படி சடலம் மீட்க பட்டுள்ளது .

இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைங்களை முன்னெடுத்து வருகின்றனர் .

வாள்வெட்டு குழுக்களை அழிப்பேன் என ஜனாதிபதி கோட்டபாய அறிவித்த நிலையில் இவ்வாறான மனித சடலங்கள் வாள்வெட்டு காயங்களுடன் தொடராக மீட்க படுகின்றமை குறிப்பிடத்தக்கது

கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL
Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாய -வெளி நாட்டை காப்பி அடி

இலங்கை –கோட்டபாய -வெளி நாட்டை காப்பி அடி

தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம், குடி வரவு மற்றும் குடியகழ்வு பத்திரம், பிறப்புச் சான்றிதழ்,

மரண சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து தனிநபர் தகவல்களையும் ஒரு தரவு மையத்தின் கீழ் சேகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

அவ்வாறு செய்வதன் மூலம் நேரம், உழைப்பு மற்றும் பணம் வீண்விரயமாவதை தடுக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தரவுகள் மற்றும் தொடர்பாடல் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளை ஜனாதிபதி இன்று (30) சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

இதன் போதே ஜனாதிபதி கோட்டபாய மேற்குறித்த அனைத்து தனிநபர் தகவல்களையும் ஒரு தரவு மையத்தின் கீழ் சேகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார்.

தற்போது பல தகவல் மையங்களின் கீழ் அனைத்து தரவுகளும் சேகரிக்கப்படுகின்றன.

எனவே மேற்குறிப்பிட்ட அனைத்து தரவுகளையும் ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவந்து அதனூடாக பொது

மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.

இதன் மூலம் தவறான மற்றும் மோசடியான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சியில் அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரை அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் மிக முக்கியமானதாகும்.

எனவே அனைத்து நிறுவனங்களையும் ஒரு வலைப்பின்னலுக்குள் கொண்டு வருவதன் மூலம் பாரிய அனுகூலங்கள் ஏற்படும்.

அதேபோல் நடைமுறையில் உள்ள தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சினால்

நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் அனுகூலங்கள் மற்றும் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

அதேபோல் பாடசாலைகளில் காணப்படும் கணனி ஆய்வக திட்டத்தை கல்வி அமைச்சிடம் ஒப்படைப்பதன்

முக்கியதுவம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா,கனடா ,உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்த முறைமை கையாள பட்டு வருகிறது ,அதனை அப்டியே காப்பி அடித்துள்ளார் கோட்டாபய .

அமெரிக்காவில் வாழ்ந்த கால பகுதியில் இந்த விடயங்களை நேரடியாக அனுபவித்த கோட்டா இதனை அமூல் படுத்தியுள்ளார் ,

இதுபோல தனிமனித அக்கருத்து ,மற்றும் மனித வாழ்வு ,பாதுகாப்பு ,சுதந்திரத்தை அளித்தால் சிறப்பாக இருக்கும்

அவ்வழியே நீதித்துறையை வாழ வைத்தால் இலங்கை உலக பரப்பில் செழிப்புறும்

Posted in இலங்கை செய்திகள்

120 தமிழ் பொலிசாருக்கு திடீர் இடமாற்றம்

வடக்கில் -120 தமிழ் பொலிசாருக்கு திடீர் இடமாற்றம்

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் இந்த இடமாற்றம் உடனடி அமுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த 120 தமிழ் ,பொலிஸாருக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் யாழ். மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கான

கலந்துரையாடலின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சட்டத்தரணி ஒருவர் தமிழ் பொலிஸார் தான் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவுகின்றார்கள் என்ற

தொனியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பிரகாரம், வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரினால் இந்த இடமாற்றம் குறிப்பாக தமிழ் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் பொலிஸார் மீது குறிவைக்கப்பட்டமை தொடர்பில் பல விசனங்கள் எழுந்துள்ளன. மூவின பொலிஸாரும் கடமையில் இருக்கின்ற போது, ஏனைய குறிப்பாக தமிழ் பேசும், தமிழ் பொலிஸார் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

120 தமிழ் பொலிசாருக்கு திடீர் இடமாற்றம்

உண்மையில் லஞ்சம் மற்றும் பொலிஸ் நிலையத்தில் செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் வெளியில் தகவல் செல்வதாக கூறி, இடமாற்றம் தொடர்பில்

செய்யப்பட்ட சிபார்சில், லஞ்சம் பெறுபவர்களுக்கும், தகவல் வழங்குபவர்களுக்கும், இடமாற்றம் வரவில்லை.

இந்த குறி வைப்பு, தமிழ் பொலிஸாரை பழி வாங்கும் நோக்கில் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 வருடங்களாக யாழ்ப்பாணத்தில் கடமையாற்றியவர்கள் இடமாற்றம் செய்யப்படாது, திறமையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும், இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதிலும், கடந்த காலங்களில் அதிக கஷ்டப் பிரதேசங்களான, மன்னார், அடம்பன், நெடுங்கேணி, வவுனியா, முல்லைத்தீவு, கொக்கிளாய், பகுதிகளில்

கடமையாற்றிவிட்டு, ஓரிரு வருடங்களில் யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்களுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றம், தமிழ் பொலிஸாரை பழிவாங்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பலரால் முன்வைக்கப்பட்ட போதிலும்,

இந்த இடமாற்றம் இன்னும் தமிழ் இளைஞர்களுக்கு பொலிஸில் இணைவதற்கான ஆர்வத்தை குறைப்பதுடன், பொலிஸ் நிலையத்தில் மொழி ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

Posted in இலங்கை செய்திகள்

பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து

பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து

இலங்கை – மாவனெல்லா பகுதியில் தனியார் பயணிகள் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்தது பள்ள தாக்கில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த எட்டு பேர் படு காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

சாரதியின் அலட்சிய போக்கே மேற்படி விபத்துக்கு காரணம் என தெரியவருகிறது

பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து
Posted in இலங்கை செய்திகள்

முல்லையில் – காணாமல் போன வாலிபன் சடலமாக மீட்பு

முல்லையில் – காணாமல் போன வாலிபன் சடலமாக மீட்பு

வன்னி – முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் கடலில் குளிக்க சென்ற 16 வயது வாலிபன் நீரில் அடித்து செல்ல பட்டு காணாமல் போனார் ,அவ்வாறு காணாமல் போன் வாலிபன் தற்போது சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இராணுவத்தின் சுழியோடிகள் மேற்கொண்ட தேடுதலின் பொழுதே இவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

தந்தை மகன் காணமல் போன நிலையில் தந்தை சடலம் மீட்க பட்ட நிலையில் தற்பொழுது மகனும் சடலமாக மீட்க பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

59 கிலோ தங்கத்தை – வான் தளத்தில் பறித்த அரசு

இலங்கை -59 கிலோ தங்கத்தை – வான் தளத்தில் பறித்த அரசு

இலங்கை – கட்டுநாயாக்க வான்தளம் ஊடாக வெளிநாடுகளில் இருந்தும் ,

இலங்கையில் இருந்து இடம்பெற்று வந்த முறைமையற்ற கடத்தல்கள் ,சட்டவிரோத செயல்பாடுகள் ஊடாக இலங்கை அரசு பலத்த கொள்ளை இலாபத்தை ஈட்டியுள்ளது .

இதன் படி கடந்த வருடன் ஐம்பத்தி ஒன்பது கிலோ தங்கம் அரசுடைமையானதால் சுமார் 375 மில்லியன் வருமானமாக கிடைத்துள்ளது .

அதுபோல வேறு கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல்பாடுகளினால் சுமார் அறுநூறு மில்லியன் வரை கிடைக்க பெற்றுள்ளதாக இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

10 மில்லியன் போதைவஸ்து கடத்திய வாலிபன் கைது

10 மில்லியன் போதைவஸ்து கடத்திய வாலிபன் கைது

இலங்கை – மன்னார் பகுதியில் பேரூந்து ஒன்றின் ஊடாக சுமார் ஒருகிலோ எடையுள்ள ஹெராயின் போதைவஸ்தை

கொழும்புக்கு கடத்தி செல்லும் போது வாலிபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுளளார் .

கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர் அப்டுத்த பட்டுளளார்.
இதன் மொத்த பெறுமதி சுமார் பத்து மில்லியன் இலங்கை ரூபாய்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

அமைச்சர் டக்கிளசுக்கு தும்புதடி பூசை செய்த பெண்கள்

வவுனியாவில் -அமைச்சர் டக்கிளசுக்கு தும்புதடி பூசை செய்த பெண்கள்

இலங்கையில் மகிந்த ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தமது உறவுகளை தேடி போராடட்ம நடத்தி வருகின்றனர் ,

இவர்களின் இந்த போராட்டம் சுமார் .
1045 நாட்களை எட்டியுள்ள நிலையில் இதுவரை அந்த மக்களுக்கு எதுவித தீர்வும் கிட்டவில்லை .

ஆனால் மக்களை கடத்திய டக்கிளஸ் தற்போது அரசுடன் இது தொடர்பாக உரையாடி காணாமல் ஆக்க பட்ட உறவுகளுக்கு தீர்வு வாங்கி தருவதாக

தெரிவித்ததை அடுத்து கொந்தளித்த மக்கள் .
அவரது நிழல் படத்திற்கு சனி ,தும்புதடி ,செருப்பு கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்

இது போல தமிழ் தேசிய கூத்தமைப்பு சுமந்திரன் ,சம்பந்தருக்கு வழங்க வேண்டும் அப்பொழுது தான் தீர்வான தீர்வு கிட்டும் .

அமைச்சர் டக்கிளசுக்கு