Author: நலன் விரும்பி
ஒரே நாளில் இத்தாலியில் 49 பேர் பலி – உயிர் குடிக்கும் கொரனோ
ஒரே நாளில் இத்தாலியில் 49 பேர் பலி – உயிர் குடிக்கும் கொரனோ
இத்தாலியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஓரே நாளில் சுமார்
49 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை சுமார் 200 பேர் பலி யாகியுள்ளனர் ,மேலும் 4,600
பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மறு அறிவித்தல் வரை பல் கலைக் கழகம் ,மற்றும் பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன ,
பொது இடங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்க பட்டுள்ளது ,தொடர்ந்து வேகமெடுக்கும் இந்த நோயினை தடுக்க
மருந்து இல்லாது 91 நாடுகள் திணறி வருகின்றன .
இந்த நோயானது பிரிட்டனில் பரவி வருகிறது ,இதுவரை
இருவர் பலியாகியுள்ளனர் மேலும் 194
பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் தமிழர்களுக்கு அவசர எச்சரிக்கை
அவுஸ்ரேலியாவில் வசிக்கும் தமிழர்களுக்கு அவசர எச்சரிக்கை
உலகின் 91 நாடுகளில் கொரனோ வைரஸ் பரவியுள்ள நிலையில் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களை
அங்குள்ள இலங்கை தூதரகத்தில் தமது பெயர்களை பதிவு செய்து கொள்ளும் படி இலங்கை அரசு அவசர வேண்டுதல் விடுத்துள்ளது
இந்த நோயின் தாக்கம் அதிகரித்தால் அவர்களை இலங்கைகைக்கு பாதுகாப்பபாக அழைத்து வரும்
முன்மாதிரி நடவடிக்கை திட்டம் இதுவென தெரிவிக்க பட்டுள்ளது
இந்த சந்தர்ப்பத்தில் அங்குள்ள தமிழர்களை தரவுகளை பெற்று கொள்வதும் ,அவர்களை நாடு கடத்தும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதை இது காண்பிக்கிறது

மரங்கடத்தும் கும்பல்; மடக்கிய பொலிசார்
மரங்கடத்தும் கும்பல்; மடக்கிய பொலிசார்
வவுனியா புதூர் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரகுற்றிகளை கடத்த முற்பட்ட இருவர் தப்பித்து சென்றுள்ளதாகவும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
புதூர் காட்டு பகுதியில் முதிரைமரக்குற்றிகள் கடத்த இருப்பதாக புளியங்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி பேர்ணான்டு தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கடத்த தயாராக இருந்த 15 முதிரை மரக்குற்றிகளும், மரம் அறுக்கும் இயந்திரம், கோடரி, கத்தி மற்றும் பஜாஜ் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிசாரின் வருகையையடுத்து அங்கிருந்து தப்பியிருந்ததாகவும் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் புளியங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
புலிகள் தாக்குதல் நடத்த திட்டமாம் – வட,கிழக்கில் இராணுவம் குவிப்பு
புலிகள் தாக்குதல் நடத்த திட்டமாம் – வட,கிழக்கில் இராணுவம் குவிப்பு
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் பெரும் தொகையில் குவிக்க பட்டுள்ளனர்
.தமிழீழ விடுதலை புலிகள் மீண்டும் தாக்குதல் நடத்த கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த படை குவிப்பு இடம்பெற்றுள்ளதாம் .
முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்ய பட்ட நிலையில் கிடைக்க பெற்ற தகவலை அடுத்தே இந்த இராணுவ குவிப்பு இடம்பெற்றுள்ளது
ஆளும் மகிந்த சகோதரர்கள் ஆட்சியில் ஆண்டு தோறும் இவ்வாறான செயல் பாடுகள் தமிழர் பகுதிகள் மீது சிங்கள அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடுவது குறிப்பிட தக்கது

600 கிலோ போதைவஸ்தை கடத்திய மாஸ்ட்டர் மைண்ட் சரண்
600 கிலோ போதைவஸ்தை கடத்திய மாஸ்ட்டர் மைண்ட் சரண்
இலங்கை கடற்படையால் படகிலம் கடத்தி வரப்பட்ட அறுநூறு கிலோ போதைவஸ்துடன் படகு ஒன்று மடக்கி
பிடிக்க பட்டது ,மேற்படி படகில் போதைவஸ்து கடத்தலை மேற்கொண்ட நபரை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர் .
இவர்கள விடுத்த வேண்டுதலுக்கு இணங்க அதன் முக்கிய மூளையாக செயல் பட்ட நபர் ஒருவர் காவல்துறையில்
சரண் அடைந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு சரண் அடைந்தவரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது .
இந்த கடத்தல் பின்புலத்தில் செயல் பட்ட யாவரும் கைது செய்ய படலாம் என நம்ப படுகிறது

கொரோனா வைரஸ் பரவாது தடுக்க நடவடிக்கை எடுக்க – கோட்டா உத்தரவு
கொரோனா வைரஸ் பரவாது தடுக்க நடவடிக்கை எடுக்க – கோட்டா உத்தரவு
கொரோனா வைரஸ் தொற்று நாட்டினுள் பரவாதவாறு தவிர்ப்பதற்கு உரிய விஞ்ஞானபூர்வமான முறைமை
ஒன்றை பின்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொரோனா ஒழிப்பு விசேட செயலணிக்கு பணிப்புரை விடுத்தார்.
அரசாங்கமும் சுகாதாரத்துறை நிபுணர்களும் ஆரம்பம் முதலே மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக
பிராந்தியத்தில் கொரோனா வைரசிற்கு வெற்றிகரமாக முகங்கொடுத்த நாடாக இலங்கை உள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்தும் இந்த நிலைமையை பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து
கண்டறியுமாறும் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.
ஈரான், தென்கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றது. அந் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை
தருகின்றவர்களை 14 நாட்களுக்கு நோய்த்தொற்று தடைகாப்பு செய்ய வேண்டும் என்று செயலணி, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயமற்ற நாடாக இலங்கையை தொடர்ந்தும் வைத்திருக்க முடியும் என்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
தற்போது முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் பல்வேறு வைத்தியசாலைகளில் சந்தேகத்திற்கிடமான
நோயாளிகள் வெற்றிகரமாக நோய்த்தொற்று தடைகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா
தொற்றுக்குள்ளான எந்தவொரு இலங்கையரும் நாட்டிற்குள் கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வருகை
தருகின்றவர்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் இருக்குமானால் அதனை மறைத்துக் கொண்டிருக்காது
சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நோய்த் தொற்றுவதை தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களின் வாயிலாக
தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் நோய்த்தொற்று தடைகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியிருந்தால் அதற்குத்
தேவையான இடங்கள், வளவாளர்கள், வசதிகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கு தயாராக இருக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
மேல் மாகாண ஆளுநர் வைத்தியர் சீத்தா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர,
சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்
அணில் ஜாசிங்க ஆகியோரும் கொரோனா ஒழிப்பு விசேட செயலணியின் உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

ரயிலுக்குள் பாய்ந்து யாழில் நபர் தற்கொலை
ரயிலுக்குள் பாய்ந்து யாழில் நபர் தற்கொலை
காங்கேசன்துறையில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்தின் முன் படுத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (06) மாலை 6.45 மணியளவில், ஸ்ரான்லி வீதிக்கும், பலாலி வீதி ஆரியகுளம் பகுதிக்குமான
இடையில், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியைச் சேர்ந்த சுரேஸ் வயது (35) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
உயிரிழந்தவர் இலங்கை போக்குவரத்து சேவை (சி.ரி.பி) பஸ் நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்துள்ளார்.
கடந்த வாரம், மது போதையில் வேலைக்கு சென்ற போது, நிர்வாகத்தினரால் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும்,
கடந்த 05 ஆம் திகதியும் தற்கொலை செய்யப் போவதாக முயற்சித்த போது, நண்பர்கள் அவரை தடுத்து காப்பாற்றியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று மது போதையில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கிடைத்த தகவலின் பிரகாரம், ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி அறிந்த உறவினர்கள்,
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வருகை தந்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கும் சென்றுள்ளனர்.

உடைந்தது யனை கட்சி – இரண்டாக போட்டி -வெல்ல போவது யார் ..?
உடைந்தது யனை கட்சி – இரண்டாக போட்டி -வெல்ல போவது யார் ..?
இலங்கை அரசியலில் மிக பெரும் கட்சிகளாகி விவிளங்கி வந்த ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்ட பதவி போட்டி
காரணமாக அந்த கட்சி இரண்டாக உடைந்த்துள்ளது .
இதில் சஜிதா ,மற்றும் ரணில் தலைமையில் தேர்தல் போட்டி இடம்பெறுகிறது .
இந்த பாராளுமன்ற தேர்தலில் 22 இடஙக்ளில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடும் என ரணில் அணியினர் அறிவித்துள்ளனர் .
அவ்வாறு நோக்கின் ஆசனங்கள் மிக குறைந்த நிலையிலேயே ரணில் கட்சி பெறும் ,இந்த தேர்தலில் பிரிந்து சென்று இரு கட்சிகளாக போட்டியிடும் நபர்களின் பலம்
தெரிய வரும் எனவும் ஒருவேளை சஜித் அணியினர் வெற்றி பெற்றால் ரணில் இருந்த இடம் இல்லாது காணாமல் போகும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு கொரனோ -அவதியில் நோயாளர்
இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு கொரனோ -அவதியில் நோயாளர்
இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு கொரனோ -அவதியில் நோயாளர் இத்தாலியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல நூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு பாதிக்க
குடும்ப நல மருத்துவர்கள்
பட்டவர்களின் குடும்ப நல மருத்துவர்கள் GP ,150 பேருக்கு இந்த நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இதனால் ஒரு குடும்ப நல மருத்துவருக்கு கீழ் சிகிச்சை பெற்று வந்த 1500 பேர் விகிதம் சுமார் இரண்டு லட்ச்சம் மக்கள் மருத்துவர்கள் இன்றி தவித்து வருவதாக முக்கிய ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது
அவ்வாறு எனின் இதன் தாக்கம் இத்தாலிய அரசு கூறுவதை விட பல
பீதியில் அரசுகள்
மடங்கு மேல் ஆகும் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது .மக்கள் கொந்தளித்து விடுவார்கள் என்ற பீதியில் அரசுகள் இந்த நோயின் தாக்கத்தை மறைத்து ,குறைத்து கூறி வருகின்றமை குறிப்பிட தக்கது full video

லொறிக்குள் பதுங்கி வந்த 10 அகதிகள் லண்டனில் கைது
லொறிக்குள் பதுங்கி வந்த 10 அகதிகள் லண்டனில் கைது
பேலியம் நாட்டில் இருந்து பிருட்டனுக்குள் நுழைந்த லொறி ஒன்றுக்குள் பதுங்கி வந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் 4 பெரியவர்கள் ஏனையவர்கள் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
தற்போது லொறி சாரதி கைது செய்ய பட்டுள்ளார் .
இவர்கள் அனைவரும் லாரியின் சக்கரத்தின் அச்சில் பதுங்கியவாறு பயணித்துள்ளனர்
லொறி வேகமாக பயணிக்கும் பொழுது மிக ஆபத்தான ஒன்று பயணம் ,மிகவும் குளிர் நிலவும் இவ்வேளையில்
இவர்கள் உயிரை பணயம் வைத்து இவ்வாறு லண்டனுக்குள் புகுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேலும் இது தொடர்பான ஆட்கடத்தல் குற்ற சாட்டில் சோதனை நடத்திய பொழுது இருவர் ஆயுதங்களுடன் கைது செய்ய பட்டுள்ளனர்

பிரிட்டனில் கொரனோ வைரஸ் 163 பேர் பாதிப்பு -20,000 பேர் சோதனை
பிரிட்டனில் கொரனோ வைரஸ் 163 பேர் பாதிப்பு -20,000 பேர் சோதனை
பிரிட்டனில் இதுவரை சுமார் 163 பேர் கொரனோ வைரசால் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் இருபதயிரம் பேருக்கு இதன் சோதனை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து இன்று மட்டும் 48 பேர் அடையாளம் காண பட்டுள்ளனர்
எனினும் சீனாவை போல பிரிட்டனில் இரண்டாயிரம் பேர் வரை பாதிக்க பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது
தொடர்ந்து தமது எண்ணிக்கையை அதிகரித்து செல்வதும் ,இவ்வளவு பெரும் தொகையில் சோதனை இடம் பெற்றுள்ளதாகக் பிரிட்டன் அறிவித்துள்ளது சநதேகத்தை வலுப்படுத்தியுள்ளது
லூசியம் பகுதி மருத்துவமனையில் இருந்து இவ்வாறு பாத்திக்க பட்டவர்கள் சென்றுள்ளதாக நம்ப படுகிறது
பிரிட்டீஸ் எயார் வைஸ் விமான சிப்பந்திகள் ,ஊழியர்களுக்கும் கொரானோ வைரஸ் உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மக்களே உசார் ,சீனாவை போல பிரிட்டனும் தற்போது லாக் டவுன் ஆகும் நிலை ஏற்படும் போல் உள்ளது மேற்படி நோயின் புள்ளி விபர தகவல் இதனையே காண்பிக்கிறது

சீனாவுக்கான விமான பயணங்களை இரத்து செய்த்த இலங்கை
சீனாவுக்கான விமான பயணங்களை இரத்து செய்த்த இலங்கை
உலகை பதற வைத்து வரும் கொரனோ வைரஸ் தாக்குதல்
எதிரொலியை அடுத்து இலங்கையில் இருந்து சீனாவுக்கு செல்லும்
அணைத்து விமான சேவைகையும் திடிரென இலங்கை இரத்து
செய்துள்ளது
இது போல மேலும் பல நாடுகள் இரத்து செய்துள்ளன .நோயின்
வேகமெடுக்கும் பரவலை அடுத்தே இந்த பயண தடையை
இலங்கை புரிந்துள்ளது ,வரவேற்க தக்க செயல் என அவதானிகள்
கருத்துரைத்த வருகின்றனர்

பிள்ளையை பெற்று பற்றைக்குள் எறிந்து விட்டு ஓடிய பெண் – பிரிட்டனில் பயங்கரம்
பிள்ளையை பெற்று பற்றைக்குள் எறிந்து விட்டு ஓடிய பெண் – பிரிட்டனில் பயங்கரம்
பிரிட்டன் woodland in Hampshire.Southampton பகுதியில் தாயோ
ஒருவர் பிள்ளையை பெற்று பற்றைக்குள் எறிந்து விட்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது ,
சிசு சடலமாக மீட்க பட்டுள்ளது ,மேற்படி பெண்ணை
காவல்துறையினர் வலைவிரித்து தேடி வருகின்றனர்
இது போன்ற சம்பவங்கள் பிரிட்டனில் நடப்பது அபூர்வம் .
மிகவும் பிரசவ துறையில் தேர்ச்சி பெற்றே பெண்ணே இந்த சிசுவை
எறிந்து விட்டு சென்றுள்ளார் ,இவர் முன்னர் குழந்தை பெற்ற
அனுபவம் கொண்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
எனினும் இதுவரை குறித்த பெண் கைது செய்ய படவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளது
,மக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்

மிரட்டி வரும் கொரோனா வைரஸ்… தமிழ் மருத்துவரை அழைத்துள்ள சீனா!
மிரட்டி வரும் கொரோனா வைரஸ்… தமிழ் மருத்துவரை அழைத்துள்ள சீனா! !
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் அச்சுறுத்தி வருகிறது. அங்குள்ள மக்கள் நோய்
தடுப்புக்காக தமிழர்களின் உணவான ரசம் சமைப்பது குறித்து அங்குள்ள தமிழ் மக்களிடம் கேட்டறிந்து உணவுடன் சேர்த்து வருகிறார்கள்.
நோய்களை கட்டுப்படுத்தும் மிளகு, சீரகம், பூண்டு உள்பட பல்வேறு மருத்துவ குணமுடைய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப் படும்
ரசம் அங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பல நிறுவனங்கள், உணவுடன் ரசத்தை சேர்த்துசாப்பிடுங்கள் என்று அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளன.
கொரோனா வைரஸ் சித்தமருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என சித்த மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக
தமிழகத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்தை சீனா வர அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
அலோபதி மருந்துகளை விட சித்தா மற்றும் ஆயுர்வேத, ஓமியோபதி மருந்துகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதாக பல்வேறு
தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
நோயாளிகளிடையே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் சித்த மருத்துவ மருந்துகள் முன்னிலை வகிக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமாக, வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தியர்களின் உணவு வகையில் ஒன்றான ரசம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் பூண்டு,
மிளகு, சீரகம் உள்பட பல்வேறு மருத்துவ குணமுடைய மசாலா பொருட்கள் சேர்க்கப்படுவதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதாக சிங்கப்பூர் மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அறிந்த அங்குள்ள உணவுபொருட்கள் விற்பனை நிறுவனங்கள், பொதுமக்கள் உணவில் ரசம் அதிக அளவில்
சேர்க்குமாறு விளம்பரப்படுத்தி வருகின்றன.பல இடங்களில் விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டு உள்ளன.
அதுபோன்ற விளம்பர பதாதைகளில், ‘இந்தியர்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தும் ரசத்துக்கு நோய் களை குணமாக்கும் சக்தி உள்ளது.
குறிப்பாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரசம் சாதமே வழங்கி வந்துள்ளனர். இதில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக ரசத்தில் சேர்க்கப்படும் பூண்டு, மிளகு, சீரகம் போன்ற மசாலா பொருட்களுக்கு மருத்துவ குணம் உள்ள நிலையில், உணவுடன்ரசம் சேர்த்துக் கொள்ளவும்” என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்புகள் காரணமாக, சிங்கப்பூர் மக்கள் அங்கு வசிக்கும் தமிழர்களிடம் ரசம் எப்படி சமைப்பது என்பதையும் கேட்டு
அறிந்துகொண்டு, அதனை அருந்தி வருகின்றனர். பலசரக்கு அங்காடிகளில் ரசப்பொடிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
பெரும்பாலோனோர் அசைவ உணவுகளை தவிர்த்து காய்கறிளையே சமைத்து உணவருந்தி வருகின்றனர். தங்களின்
உணவுகளுடன் அன்றாடம் ரசம் சாப்பிடுவதையும் வாடிக்கையாகி வருகின்றனர்.
யுடியூப் வலைதளங்களிலும் பல்வேறு வகையான ரசம் வைப்பது எப்படி என தேடி வருவதும் அதிகரித்து வருகிறது.

கரு – ரணில் திடீர் சந்திப்பு – பேசியது என்ன ..?
கரு – ரணில் திடீர் சந்திப்பு – பேசியது என்ன ..?
இலங்கையின் யானை கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றும் கரு ஜெயசூரியா ஆகியோருக்கு இடையில் திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது
இது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை சமரச படுத்தும் நோக்கம் கொண்ட பேச்சாக இவை உள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளன
சஜித் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்கிறார் இவ்வாறான நிலையில் பெரும் பன்மை பலம் இன்றி யானை கட்சி தவிக்கும் நிலை தோற்றம் பெற்றுள்ளது

பொலிஸ் அதிகாரிகள் என கோரி லஞ்சம் பெற முயன்ற பெண் உள்ளிட்டட நால்வர் கைது
பொலிஸ் அதிகாரிகள் என கோரி லஞ்சம் பெற முயன்ற பெண் உள்ளிட்டட நால்வர் கைது
இலங்கையில் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் என கோரி பெண் ஒருவரிடம் லஞ்சம் பெற முயன்ற பெண் உள்ளிட்ட நால்வர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர் ,இந்த குழு இதுபோல பலரை மிரட்டி கப்பம் பெற்று வந்துள்ளது அம்பலமாகியுள்ளது

யாழில் வாகனத்தை அடித்து நொறுக்கிய ஆவா குழு
யாழில் வாகனத்தை அடித்து நொறுக்கிய ஆவா குழு
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் தரித்து நின்ற வாகனம் ஒன்றை ஆவா குழுவினர் அடித்து நொறுக்கியுள்ளனர்
குறித்த குழுவை சேர்ந்த நபர்களை தாம் கைது செய்து வருவதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மேற்படி தாக்குதலை
நடத்தியவர்களை கைது செய்யாமை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
மக்களின் செல்வாக்குடன் இந்த குழு செயல் பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

சமையல் பாத்திரம் வழங்கி வரும் முன்னாள் அமைச்சர்
சமையல் பாத்திரம் வழங்கி வரும் முன்னாள் அமைச்சர்
நுவரெலியா மாவட்டம் பீட்ரூ தோட்டம் லவர்சிலிப் பிரிவு ஸ்ரீ முத்துமாரியமன் தோட்ட ஆலய பரிபாலன சபையின்
வேண்டுகோலுக்கு அமைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ்
முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் நிதி
ஓதுக்கீட்டின் மூலம் சமையல் பாத்திரங்கள் கையளிக்கப்பட்டது


பிரிட்டன் Liverpool பகுதியில் மூவர் கொரனோ வைரசால் பாதிப்பு
பிரிட்டன் Liverpool பகுதியில் மூவர் கொரனோ வைரசால் பாதிப்பு
பிரிட்டன் Alder Hey Hospital in Liverpool மருத்துவ மனையில் மூவர்
கொரனோ வைரஸ் பாதிப்பால் அடையாளம் கண்டு பிடிக்க
பட்டுள்ளனர் .
இதில் சிறுவர் ஒருவர் உள்ளடங்களாக மூவர் அடங்கு கின்றனர்
மேலும் பிரிட்டன் தழுவிய நிலையில் 116 பேர் அடையாளம் காண
பட்டுள்ளனர் ,முதன் முதலாக பிரிட்டனில் ஒருவர் பலியாகியுள்ளார்
மிக வேகமாக தற்பொழுது குறித்த நாட்டையும் கொரனோ ஆக்கிரமித்து
வருகிறது ,இதன் வேகமான பரவல் காரணமாக மக்கள் மத்தியில்

ஈரான் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை – நிறுத்துமா இந்தியா ..?
ஈரான் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை – நிறுத்துமா இந்தியா ..?
இந்தியா சிறுபான்மை முஸ்லீம்கள் மீது மேற்கொண்டு வரும் தொடர் அடக்குமுறைகள் ,வன்முறைகள் ,கைதுகள் ,பழிவாங்கும்
சம்பவங்களை உடனே நிறுத்த வேண்டும் என ஈரான் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்து மத ஆட்சியாளர்களினால் மேற்கொள்ள படும் இந்த தாக்குதல்கள் உடன் நிறுத்த பட வேண்டுமென ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது
ஈரானின் இந்த எச்சரிக்கையை செவி மடுத்து இந்தியா செல்லுமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்











