Posted in மருத்துவம்

உதட்டு முத்தம் கொடுத்தா உடம்பு குறையுமாம்

ஒருமுறை இதழில்- உதட்டு முத்தம் கொடுத்தா – உடம்பு குறையுமாம் -முத்தம் கொடுக்கும் போது

2 முதல் 6 கலோரிகள் நம் உடலில் இருந்து கரைக்கப்படுகிறது.

மிக ஈடுபாட்டுடன் கொடுக்கப்படும் முத்தத்தினால் ஒரு மணி நேரத்திற்கு 100 கலோரிகளை எரிக்கமுடியும். இது 20 நிமிட உடற்பயிற்சிக்கு சமமானதாகும்.

இதன் மூலமாக எளிய மற்றும் இனிய வழியில் உங்கள் உடல் எடையை குறைக்கலாம்.

  1. லிப் டு லிப் முத்தம் குடுக்கும் போது 30க்கும் மேற்பட்ட முக தசைகளை தூண்டுகிறது. இது உங்கள் முகத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உண்டாவதை குறைக்கிறது. இதன் மூலம் உங்கள் முகம் இளமையாக தோற்றம் அளிக்கும்.

உடல் எடையை குறைக்கும் லிப் டு லிப் முத்தம்

  1. இதழ் முத்தம் உங்கள் இரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது. இது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
உதட்டு முத்தம் கொடுத்தா உடம்பு குறையுமாம்
  1. நீங்கள் முத்தமிடும் போது, ​​உமிழ்நீர் உற்பத்தி உங்கள் வாயில் அதிகரிக்கிறது, இது பற்களில் உருவாகும் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி உங்கள் பற்கள் மீது உருவாகும் கேவிட்டிகளை குறைக்க உதவுகிறது
  2. .
  3. ஜப்பானிய ஆராய்ச்சியின்படி, 30 நிமிட முத்தம் ஹிஸ்டமின் எனும் ரசாயனம் உடலில் உற்பத்தி ஆவதை குறைக்கிறது.
  4. இந்த ஹிஸ்டமின் எனும் ரசாயனம் தான் தும்மல், மூக்கு ஒழுகுதல் மற்றும் கண்களில் நீர் வடிதல் காரணமான ஒன்று. எனவே தும்மலை முத்தம் கொடுத்தும் குறைக்கலாம்.
  5. முத்தம் எண்டார்ஃபின் எனும் ரசாயனம் உடலில் உற்பத்தி ஆவதை அதிகரிக்கிறது, இந்த எண்டார்ஃபின் உங்களின் சந்தோஷமாக உணரவைக்கும் உணர்ச்சிகளின் வெளியீட்டை தூண்டும். பின்னர் நீங்கள் மகிழ்ச்சியாக உணரலாம்.

இதன் பின்னர் தயங்காது ,கூச்ச படைத்து உங்களுக்கு பிடித்தவர்கள் உதடடை இறுக்கி அழுத்தி உதட்டு முத்தம் கொடுங்கள் .

ஆசையும் தீரும் ,உடல் எடையும் குறையும் ,ஆண்களே யாக்கிரதை குண்டு பெண் பிள்ளைகளை கண்ணுற்றால் ஓடி ஒளிந்து விடுங்கள் .

ஏறி உட்க் கார்ந்து உதட்டை கழுவி காய போட்டுவிட போகின்றனர் ,சும்மாவா என்ன உதட்டு முத்தம் ,பணம் இல்லாது ஓசியில் என்றால் ஓகே தான் ,கவனம் உதடு கிழிந்துவிடும்

Posted in சினிமா

அஜித் படத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை

அஜித் படத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை

நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் தவிர வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

குறிப்பாக அஜித்தின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவே நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.

பின்னர் நஸ்ரியா நடிப்பதாக தகவல்கள் வெளியானது. அவர் மறுத்து விட்ட நிலையில் யாமி கவுதம் தான் வலிமை பட நாயகி என வைரலானது.

இலியானா

ஆனால் இந்தத் தகவல்கள் எதுவுமே உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் இலியானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

வலிமையில் போலீஸ் அதிகாரி, கார் ரேஸ் வீரர் என அஜித் இரண்டு கேரக்டர்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

எனவே அதில் ஒரு கேரக்டருக்கு ஜோடியாக இலியானா நடிக்கலாம் எனத் தெரிகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக இருந்த இலியானா, தமிழில் கேடி, நண்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Posted in சினிமா

ஒரே நேரத்தில் 5 படங்கள் தயாரிக்கும் பா.ரஞ்சித்

ஒரே நேரத்தில் 5 படங்கள் தயாரிக்கும் பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார்

பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் 5 தமிழ் படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளனர்.

இயக்குனர்கள் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, பா.ரஞ்சித்தின் குழுவில் இருந்த சுரேஷ் மாரி, அகிரன்

மோசஸ் மற்றும் பிராங்க்ளின் ஆகியோர் இந்த 5 படங்களை இயக்க இருக்கிறார்கள்.

பா.ரஞ்சித்

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனுஷ் படப்பிடிப்பில் தனது இரண்டாவது படத்தை முடித்த பின்னர் இது மாரி

செல்வராஜின் மூன்றாவது படமாகவும், விஜய் சேதுபதி தயாரித்த மேற்கு தொடர்ச்சி மலை படத்திற்குப் பிறகு

லெனின் பாரதியின் இரண்டாவது படமாகவும் இருக்கும். மேலும் இந்த படங்கள் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்

தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படவுள்ளன

Posted in சினிமா

ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது – கமல்ஹாசன்

ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது – கமல்ஹாசன்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இதற்கிடையில், இந்த சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில்

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) போலீசார் தாக்குதல் நடத்தினர்.

ஜாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு

கண்டனம் தெரிவித்து நேற்று முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் திரண்ட மாணவர்கள், குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராகவும், டெல்லியில்

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர்.

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் பல்கலைக்கழகத்திற்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் ஒரு பிரிவினர் கல்லூரியை விட்டு வெளியேறாமல் உள்ளேயே அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று 2-வது நாளாகவும் போராட்டம் நீடித்துவருகிறது. மாணவர்களின் போராட்டம் நீடிப்பதையொட்டி

பலகலைக்கழக வளாகம் மற்றும் மெயின் வாசலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவரும் மாணவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதி அளிக்காததால் வாசலில் இருந்தவாறு மாணவர்களிடம்

கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

கமல்ஹாசன்

மாணவர்களுடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:-

”எனது நாடு, ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆகையால் நான் இங்கு வந்துள்ளேன்.

எனக்கு பல்கலைக்கழகத்திற்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

நான் இறக்கும்வரை, என்னை ஒரு மாணவன் என்றுதான் அழைத்துக் கொள்வேன். மாணவர்களின் பாதுகாவலனாக அவர்களின் குரலாக நான் இங்கு வந்துள்ளேன்.

மத்திய அரசு மாணவர்களை படிக்கும் இடத்திலேயே அகதியாக்கியுள்ளது. போராடும் மாணவர்களுக்கு உணவு

கொடுக்காமல் கல்லூரி உணவகங்களை பூட்டியது இந்த அரசிற்கு அவமானம். குடியுரிமை சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்

Posted in உளவு செய்திகள்

மகிந்தா கோட்டாவுக்கு இடையில் பனிப்போர்

மகிந்தா கோட்டாவுக்கு இடையில் பனிப்போர் வெடித்தது – அண்ணன் சொல்லை கேட்க மறுக்கும் தம்பி

இலங்கையில் மகிந்த ஆட்சியில் பல மில்லியன் சுருட்டி கொண்டவரும் ,புலிகள் சொத்துக்களை பறிமுதல் செய்து சுகம் கண்ட கோட்டபாய

இன்றைய இலங்கையின் ஜனாதிபதியாக வலம் வருகிறார் ,தம்பி ஆளட்டும் என மகிந்தாவும் அயராது தனது உழைப்பை கொட்டி கொடுத்தார் ,

ஆனால் மகிந்தாவின் சிபாரிசுகள் எல்லாம் தட்டி கழிக்க பட்டு கோட்டா தனது பாதையில் செல்கிறார் ,

தனது சொல்லுக்கு மரியாதை தர மறுக்கும் கோட்டாவுடன் காரசாரமாக மகிந்த உள்ளக ரீதியாக மோதி வருகிறாராம்

,விரைவில் ஆளும் பிரதமர் பதவியை திறந்து செல்ல நேரிடும் எனவும் அவரது நட்பு வட்டாரங்கள் கூறுகின்றன . பதவி வந்தால் அண்ணன் என்னடா தம்பி என்னடா ..!

Posted in உளவு செய்திகள்

வன்னி பகுதியில் நடமாடும் – மர்ம வெள்ளை வான் – பீதியில் தமிழர்

வன்னி பகுதியில் நடமாடும் – மர்ம வெள்ளை வான் – பீதியில் தமிழர்

வன்னி பகுதியில் சில நாட்களாக மர்ம வெள்ளை வான் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக முல்லை சாலை பரந்தன் மக்கள் தெரிவித்துள்ளனர் .

கருப்பு கண்ணாடிகள் ஓட்ட பட்ட இந்த வான் மிக வேகமாக செல்வதாகவும் மக்கள் கூடும் இடத்தின் அருகில் காத்து

நின்று செல்வதாக அதனை கண்ணுற்ற மக்கள் பீதியுடன் தெரிவிக்கின்றனர் ,

இதில் உலவுவது சிங்கள இராணுவ புலனாய்வாளர்களாக இருக்கலாம் எனவும் இவை இராணுவ முகாம் அருகில்

அதிகம் நடமாடுவதாக அந்த மக்கள் மேலும் தெரிவிக்கினறனர் ,

ஓசை படாமல் கடத்தல்கள் இடம்பெறுகிறதா என்ற அச்சம் மேலோங்கியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் 5 மில்லியன் நிதியுதவி – கோட்டா உத்தரவு

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் 5 மில்லியன் நிதியுதவி – கோட்டா உத்தரவு

இலங்கையில் உள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் சுமார ஐந்து மில்லியன் ரூபா விகிதம் ஒதுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது ,

நாட்டின் அபிவிருத்தியே தமது முதல் நோக்கு என முழங்கி வரும் கோட்டபாய இந்த வேலைத்திட்டத்தை நடைமுறை படுத்தவுள்ளார் ,

இலங்கையை சுருட்டி தமது பையில் போட்ட இதே கொள்ளையடி கும்பல்கள் அபிவிருத்தி என்ற போர்வையில்

பல மில்லியனை சுருட்டி போடும் கபட நாடகமே இது என நோக்க முடிகிறது ,

அபிவிருத்தியின் மூலமே புரையோடி போயுள்ள பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என கோட்டா உளறி

திரிவது எவ்விதத்தில் சாத்தியம் என்பதே தமிழர்கள் கேள்விகளாக வீழ்ந்து கிடக்கிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் – இறக்குமதி வரி அதிகரிப்பு – ஆடம்பர வாகனங்கள் விலை உயர்வு

இலங்கையில் – இறக்குமதி வரி அதிகரிப்பு – ஆடம்பர வாகனங்கள் விலை உயர்வு

இலங்கையில் ஆடம்பர வாகனங்களான ஜீப் ரக வாகனங்கள் உள்ளிட்டவைகளிற்கு அதிக வரி

அறிவிடப்படுவதால் தற்போது இந்த வாகனத்தின் விலை அதிகரித்துள்ளது ,

அத்தியாவசிய பொருட்களின் விலையில் குறைப்பு செய்துள்ள அரசு இந்த ஆடம்பர வாகன வரி விதிப்பு

அதிகரிப்பை அடுத்தே இந்த விலை உயர்வு அதிகரித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

யாழில் – தமிழர்களுக்கு வீடு கட்டி வழங்கும் இராணுவம் – படங்கள் உள்ளே

யாழில் – தமிழர்களுக்கு வீடு கட்டி வழங்கும் இராணுவம் – படங்கள் உள்ளே

இலங்கை – யாழ்ப்பாணம் கரவெட்டி மற்றும் பருத்துறை பகுதியில் வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்களிற்கு இராணுவம் வீடுகள் கட்டி வழங்குவதாக தெரிவித்துள்ளது

,இதன் பிரகாரம் யாழ் இராணுவ தளபதி மேயர் ஜெனரல் வன்னிசூரியவினால் இந்த வீடுகள் கட்டி கொடுக்க பட்டுள்ளன .

மக்கள் வாழ்விடங்களில் இருந்து இராணுவம் விலக்க பட வேண்டும் என ஆகிய நாடுகள் சபை தெரிவித்துள்ள நிலையில் இராணுவம் தொடர்ந்து அவர்கள் கூறும்

பயங்கரவாதிகள் அழிக்க பட்ட மண்ணில் தொடர்ந்தும் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் ஒருவர் நியமனம்

இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் ஒருவர் நியமனம்

இலங்கையின் கோட்டாவின் ஆட்சி தளத்தில் இராணுவத்தில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன

,அவ்விதம் தற்பொழுது இராணுவத்துக்கு புதிய பேச்சாளர் ஒருவர் நியமிக்க பட்டுள்ளார்

பிரிகேடியர் சந்தன விக்கிரசிங்கே என்ற இராணுவ தளபதியே இவ்விதம் தனது பொறுப்பை ஏற்று கொண்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி சிதறிய சிறைச் சாலை வான் – ஒருவர்பலி

விபத்தில் சிக்கி சிதறிய சிறைச் சாலை வான் – ஒருவர்பலி

இலங்கையில் – சிறைச்சாலை வான் ஒன்று விபத்தில் சிக்கி சிதைத்தது ,இதன் பொழுது சிறைச்சாலை ஊழியர் ஒருவர் பலியானார் ,

மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர் ,மேற்படி சம்பவத்துடத்துடன் தொடர்பு பட்டனர் என்ற குற்ற சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

வான் பலத்த சேதமடைந்த நிலையில் போலீசார் மீட்டு சென்றுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

மனைவியை வெட்டி கொன்ற கணவன் – வேடிக்கை பார்த்த இருபொலிஸார் – பணிநீக்கம்

மனைவியை வெட்டி கொன்ற கணவன் – வேடிக்கை பார்த்த இருபொலிஸார் – பணிநீக்கம்

இலங்கை – கேகாலை நீதிமன்றில் நேற்று கணவனால் மனைவி நீதிமன்ற வாழ்கத்தின் அருகில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார் ,

இந்த சம்பவத்தை தடுக்காது வேடிக்கை பார்த்தனர் என்ற குற்ற சாட்டில் இரு போலீசார் பணி நீக்கம் செய்ய பட்டுள்ளனர் ,

தொடர்ந்து இவர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் குடிகார்களிடம் -168 மில்லியன் தண்டம்

இலங்கையில் குடிகார்களிடம் -168 மில்லியன் தண்டம்

இலங்கை மதுவரி திணைக்களத்தினால் மேற்கொள்ளல் பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் பொழுது தமது

விதிகளுக்கு முறைகேடாக செயல்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தண்டத்தின் மொத்த பெறுமதி சுமார் 168 மில்லியன் ரூபாய்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

உலக வங்கி இலங்கைக்கு 25 மில்லியன் கடன் வழங்க தீர்மானம்

உலக வங்கி இலங்கைக்கு 25 மில்லியன் கடன் வழங்க தீர்மானம்

இலங்கையில் ஆளும் அரசு அபிவிருத்தி என்ற போர்வையில் உலகநாடுகளிடம் கடன்களை வாங்கி

குவிகிறது ,இவ்விதம் தற்போது உலக வங்கியிடம் சுமார் 25 மில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது

,இலங்கையின் இந்த விண்ணப்பத்திற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது ,விரைவில் மேற்படி பணம் கட்டம் கட்டமாக வழங்க படும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

நாம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட போவதில்லை – நாமல் – முழங்கினார்

நாம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட போவதில்லை – நாமல் – முழங்கினார்

இலங்கையில் மீளவும் மகிந்த குடும்பம் ஆட்சியில் ஏறியுள்ளது ,இவ்வேளை தமது அரசானது அரசியல்

பழிவாங்கல்களில் ஈடுபடப்போவதில்லை என மகிந்த மகன் நாமல் ராஜபக்ஸா தெரிவித்துள்ளார் .

இவ்வாறு கூறிய படியே முன்னாள் அமைச்சர்கள் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படும் நகர்வுகள் முடுக்கிவிட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast
Posted in இலங்கை செய்திகள்

கட்சி தலைவர் பதவி வேண்டும் – அடம்பிடிக்கும் சஜித் பிரேமதாசா ..!

கட்சி தலைவர் பதவி வேண்டும் – அடம்பிடிக்கும் சஜித் பிரேமதாசா ..!

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகள் முற்றி வெடித்துள்ளது ,இலங்கையின்

பிரதான காட்சிகளாக விளங்கிய பொதுஜன ஐக்கிய முனன்ணி ,மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகள் என்பன காணாமல் போகும் நிலை உருவெடுத்துள்ளது

.சந்திரிக்காவின் பரம்பரை கட்சி காணாமல் போயுள்ளது ,அதுபோன்ற நிலை ஒன்று ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஏற்படவுள்ளது ,

ரணில் சஜித் மோதல்கள் முற்றி வெடித்துள்ள நிலையில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது ,விரைவில்

சஜித் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பார் என பரவலாக எதிர்பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

வங்கியை சுற்றிவளைத்த மக்கள் – வைப்பிலிட்ட பணம் அம்போ

வங்கியை சுற்றிவளைத்த மக்கள் – வைப்பிலிட்ட பணம் அம்போ

சிலாபத்தில் கடந்த அரசாங்கத்தின் தலையீட்டால் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படும் வங்கி ஒன்றை அந்த வங்கியின் வைப்பாளர்கள் சிலர் முற்றுகையிட்டுள்ளனர்.

குறித்த வங்கி கடன்களை வழங்குவதாக தெரிவித்து வைப்பாளர்களிடம் பணம் வசூலித்தாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

´பிரதீபாலோக்க கனிஸ்ட தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் கூட்டுறவு சங்கம்´ என்ற பெயரில் சிலாபம் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த வங்கி இயங்கி வந்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் பொது மக்களுக்கு சலுகை வட்டிக்கமைய கடன்களை

வழங்குவதை நோக்காக கொண்டே இந்த வங்கி ஆரம்பிக்கப்படுவதாக வங்கியின் பிரதானி வாடிக்கையாளர்களுக்கு கூறியுள்ளார்.

கடன் வழங்க இருபதாயிரம், பத்தாயிரம் மற்றும் ஐயாயிரம் போன்ற பணத்தொகைகளை ஆரம்ப வைப்பாக வைப்பில்

இடுமாறு வாடிக்கையாளர்களை அந்த வங்கி நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.

அதற்கமைய புத்தளம் மாவட்டத்தில் சுமார் 400 வைப்பாளர்கள் தமது பணத்தை வைப்பில் இட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடன் தொகை வழங்கப்படாமையால் பிரதேச மக்கள் நேற்று (17) வங்கி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட குறித்த வீட்டை சுற்றிவளைத்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம்

இலங்கையில் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம்

இலங்கை தமிழர் வடக்கு பகுதியில் என்றுமில்லாதவறு மணல் கொள்ளையர்கள் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்

,இயக்கச்சி ,முகமாலை ,முல்லைத்தீவு பகுதிகளில் அதிக அளவான மணல்கள் கொள்ளையிட படுகின்றன ,இதனால்

மேற்படி நிலப்பகுதி தாழ்நில பகுதியாக உருவெடுத்து வருகிறது ,

கோட்டா ஆட்சியில் மணல் ஏற்றுவதற்கு இருந்த பத்திரம் பெறும் சட்டம் தளர்த்த பட்ட நிலையில் இந்த அமோக கொள்ளை இடம்பெற்று வருகிறது .

இதற்கு எதிராகவே மக்கள் வடக்கு பகுதியில் ஏ ஒன்பது சாலையை மறித்து போராட்டத்தில் குதித்தனர்

Posted in உளவு செய்திகள்

இலங்கையில் குண்டுகள் வெடிக்கலாம் – அமெரிக்கா செய்த அவசர காரியம்

இலங்கையில் குண்டுகள் வெடிக்கலாம் – அமெரிக்கா செய்த அவசர காரியம்

இலங்கையில் குண்டுகள் வெடிக்கலாம் – அமெரிக்கா செய்த அவசர காரியம்

இலங்கையில் கோட்டபாய ஆட்சி அமைய பெற்றுள்ளதல் மீளவும் இலங்கையில் தொடர் குண்டுகள் வெடிக்கலாம் என்ற நிலை காணப்படுகிறது ,இந்தியா ,

மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக சிங்கள ஆளும் அரசு செயல் பட்டு வருகிறது ,இதன் எதிரொலியாக இலங்கையின்

முக்கிய பகுதிகளில் அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என அமெரிக்கா கருதுகிறது ,

அதனால் என்னவோ தமது நாட்டவர்கள் இலங்கைக்கு பயணம் செய்வது கவனமாக செயல்படுமாறும் ,பொது

இடங்களில் மிக அவதானத்துடன் நடந்து கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது ,

இந்த அவசர எச்சரிக்கை இலங்கைக்கு அமெரிக்கா எதையோ சொல்ல முனைகிறது என்பதை எடுத்து காட்டுகிறது

Posted in இலங்கை செய்திகள்

5க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய தமிழீழ அணி ! இறுதிச்சுற்றுக்கு தேர்வு video

5க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய தமிழீழ அணி ! இறுதிச்சுற்றுக்கு தேர்வு video

கிழக்கு துர்கிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கிய தமிழீழ உதைபந்தாட்ட அணி, 5க்கு 0 என்ற கோல் கணக்கில்

வெற்றியீட்டி,CONIFA உலக உதைபந்தாட்ட கிண்ணத்துக்கான இறுதிச்சுற்றுக்கான தேர்வுப் போட்டிக்கு தேர்வாகியது.

இன்று சனிக்கிழமை பிரான்சில் இடம்பெற்றிருந்த போட்டியின் வெற்றியுடன் 2020ம் ஆண்டு மசடோனியாவில்

இடம்பெற இருக்கின்ற இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளது.

பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, சுவிஸ், ஜேர்மனி, நோர்வே, இத்தாலி என புலம்பெயர் தேசங்களில் இருந்து

இளையோர்கள் தமிழர் தேசத்தை பிரதிபலித்து , தமிழீழ உதைபந்தாட்ட அணியாக ஒருங்கிணைத்திருந்தனர்.

2013ம் ஆண்டு தோற்றம் பெற்ற CONIFA Confederation of Independent Football அமைப்பானது அரசுகளற்ற இனங்களுக்கு,

உலக சிறுபான்மை தேசிய இனக்குழுமங்களுக்கும் என உலக எல்லைகளைக் கடந்த வகையில் ஆடுகளத்தினை

உருவாக்கி அனைத்துலக கிண்ணத்துக்கான போட்டிகளை நடாத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

ஈழத்தமிழினம் தன்னை வலிமையுள்ள ஓர் இனமாக மாற்றுவதற்கு தனது அனைத்து துறைசார் வளங்களை, நாடுகடந்த வகையில் ஒருங்கிணைத்து வருகின்றது

என்பதற்கு சான்றாக புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழ்இளையோர்கள் ஈழத்தமிழர் தேசத்தை பிரதிபலிக்கும்

வகையில் தமிழீழ உதைhttp://ethirinews.com/பந்தாட்ட அணியாக பங்கெடுத்திருப்பதானது உற்சாகத்தினையும் நம்பிக்கையையும் தருகின்றது

என தனது வாழ்த்துச் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

https://www.youtube.com/watch?v=vg883B0OviM&feature=youtu.be