ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை (04) இடம்பெற்றது.
அதன்போது நவீன முன்னெடுப்புகள் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இலங்கையில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் மற்றும் காலநிலை சவால்களுக்கு நிலையான
தீர்வுகளை அமுல்படுத்த இலங்கை தயாரித்துள்ள விரிவான திட்டம் குறித்தும் இதன்போது ஜனாதிபதி விளக்கினார்.
ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்
காலநிலை மாற்றத்தை திறம்படக் கையாள்வதற்குத் தேவையான நிதி திரட்டும் முக்கியமான பிரச்சினை குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன்
, காலநிலை தொடர்பானத் திட்டங்களுக்கு நிதி மூலங்களை மேம்படுத்துவதில் தனியார் துறையின் பங்களிப்பு இன்றியமையாதது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் அதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை நேரில் காண
விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
- இருவர் வெட்டி படுகொலை
- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை
- ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் விசாரணை
- கலு கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு
- மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு முன்னறிவிப்பு எச்சரிக்கை
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை
- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை
- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை



















