முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு
மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வத்தை பிரதேசத்திலுள்ள வீதியோரத்தில் முன்னாள் விமானப் படை வீரர் ஒருவர் சடலமாக இன்று (28) மீட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கை விமானப் படையில் விமானப் படை வீரராக பணிபுரிந்த நிலையில், அதிலிருந்து விலகியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்றதுடன், முதற்கட்ட விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு
இதன்போது புத்தளம் பிராந்திய பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரனைகளை முன்னெடுத்தனர்.
மேலும், பொலிஸ் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அங்கு பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இது ஒரு கொலையாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார், பல கோணங்களில் விசாரணைகளையும், முறைப்பாடுகளையும் பதிவுசெய்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் , சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணையை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்
- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்
- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி
- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது
- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது
- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது
- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை
- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்
- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது
- சீனாவின் ஆயுதங்கள் ஈரான் போர் முனையில் அலறும் அமெரிக்கா
















