10 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை சிக்கிய திருடன்
இளைஞர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து தங்க நகைகள், கைக் கடிகாரம், தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அறுவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி குறித்த குழுவினர் தொலைபேசி ஊடாக குறித்த இளைஞனை மறவன்புலவுக்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு இளைஞனைத் தாக்கி அவரிடமிருந்த நான்கரைப் பவுண் தங்க நகைகள், இரண்டு கையடக்க தொலைபேசிகள், கைக்கடிகாரம் மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
அதன் பெறுமதி 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை சிக்கிய திருடன்
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சிலாபத்தைச் சேர்ந்த 3 பெண்களும், கனகராயன்குளத்தை சேர்ந்த இரு ஆண்களுமாக ஐவர் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது குறித்த நகைகளை கொள்வனவு செய்த வவுனியாவைச் சேர்ந்த கடை உரிமையாளர் அவற்றை உருக்கி தங்க தட்டுகளாக மாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த சந்தேக நபர்கள் 6 பேரையும் நேற்றைய தினம் ஆஜர்படுத்திய போது அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பல்வேறு சர்வதேச தரவரிசைகளில் இலங்கை தனது உலகளாவிய நிலையை மேம்படுத்தியுள்ளது – ஜனாதிபதி
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்து திறைசேரிக்கு சுமையாக உள்ளது ஜனாதிபதி
- ருவன்வெலி மகா சேயா அருகே போராட்டத் தளத்தில் வன்முறை மோதல்கள் வெடித்தன
- தகவலறிந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஊடக எழுத்தறிவு இன்றியமையாதது – பிரதமர் ஹரினி
- வணக்கத்துக்குரிய கஸ்ஸப தேரோ மற்றும் மேலும் இரண்டு பிக்குகள் பொலிஸ் காவலில்
- நிலச்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான சாலை மூடல்
- கித்துல்கலாவில் முச்சக்கர வண்டி-லாரி மோதலில் இருவர் காயம்
- கொழும்பில் பயணிகள் ட்ரோன் சேவை
- சிறைத் தண்டனைக்கு எதிரான ஹிருனிகா பிரேமச்சந்திரா வழக்கு
- கடுங்கன்னாவ பகுதியில் மேலும் பாறைச்சரிவுகள் ஏற்படும் அபாயம்

















