15 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்தியுள்ள மைத்திரிபால
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், இதுவரை 15 மில்லியன் ரூபாயை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார் என உயர் நீதிமன்றில் பிரேரணை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய தொகையான 85 மில்லியன் ரூபாயை 2024 ஜூன் 30 ஆம் திகதி முதல் வருடத்துக்கு 8.5 மில்லியன் ரூபாய் வீதம் 10 தவணைகளாக செலுத்தப்படும் என அவர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
15 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்தியுள்ள மைத்திரிபால
அதனடிப்படையில், எஞ்சியுள்ள இழப்பீட்டை 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் 2033 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 வரை வருடாந்தம் வழங்குவதற்கு அனுமதிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி தனது பிரேரணையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் மாதாந்தம் 97,500 ரூபாய் ஓய்வூதியம் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 54,285 ரூபாயையும் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன

- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகை

- நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழை

- காகதகஸ்திகிலியாவில் தந்தம் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட காட்டு யானை

- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்

- வங்காள விரிகுடாவில் ‘முரசு’ புயல்

- 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கலைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன – நிதி அமைச்சகம்

- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது








