சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்
Spread the love

சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல் சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியை குறிவைத்த ஹூதி ஏவுகணையை அழித்ததாக சவூதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹூதியின் பாலிஸ்டிக் ஏவுகணையைத் தங்களது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்ததாக சவூதி தலைமையிலான கூட்டணி கூறியுள்ளது.

முன்னதாக, சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்பு ஆணையம் கமிஸ் முஷைத், அபா, தாயிஃப் மற்றும் நஜ்ரான் ஆகிய பகுதிகளில் எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. பின்னர், ஆபத்து நீங்கிவிட்டதாக அறிவித்தது.