15 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்தியுள்ள மைத்திரிபால
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், இதுவரை 15 மில்லியன் ரூபாயை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார் என உயர் நீதிமன்றில் பிரேரணை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய தொகையான 85 மில்லியன் ரூபாயை 2024 ஜூன் 30 ஆம் திகதி முதல் வருடத்துக்கு 8.5 மில்லியன் ரூபாய் வீதம் 10 தவணைகளாக செலுத்தப்படும் என அவர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
15 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்தியுள்ள மைத்திரிபால
அதனடிப்படையில், எஞ்சியுள்ள இழப்பீட்டை 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் 2033 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 வரை வருடாந்தம் வழங்குவதற்கு அனுமதிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி தனது பிரேரணையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் மாதாந்தம் 97,500 ரூபாய் ஓய்வூதியம் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 54,285 ரூபாயையும் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன

- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி

- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்

- ஷிராந்தி ராஜபக்ஷவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

- உடல்நலக்குறைவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

- நாவலபிட்டிய நகர சபைத் தலைவர் மற்றும் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

- முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தம்மாம்–கொழும்பு விமான சேவைகளை அக்டோபர் 18 வரை நிறுத்திவைக்கிறது

- தேசிய மருத்துவமனையின் இதயவியல் பிரிவில் ஷிராந்தி ராஜபக்ச அனுமதி

- இலஞ்ச ஆணைக்குழுவால் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது








