கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் மீட்பு
அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியில் வயல் நிலத்தை பண்படுத்திக்கொண்டிருந்த வேளையில் நேற்று (31) பகல் குறித்து கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் காணி உரிமையாளரால் அருகில் உள்ள இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இராணுவத்தினரால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
குறித்த கைக்குண்டுகளை பாதுகாப்பாக அடையாளப்படுத்திய பொலிசார், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
- நில்வாலா மற்றும் ஜின் நதிகளின் சில பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு
- நுவரெலியாவில் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த இளைஞர் கைது
- காசா மருத்துவமனை மீது இஸ்ரேலிய தாக்குதலில் அறுவை சிகிச்சை நிபுணர் உட்பட ஆறு பேர் பலி
- ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 23 வாகனங்கள் மோதிய விபத்தில் டிரக் கட்டுப்பாட்டை இழந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்
- இத்தாலிய பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல்












