மரண மௌனம்

மரண மௌனம்
Spread the love

மரண மௌனம்

என்னை மறந்துவிட்டு
நீ சந்தோசமாக இருப்பாயா
ஆமென்பது உனது பதில் எனில்
மரணத்தின் மெளனத்தில்
நான் மூழ்க விரும்புகிறேன்.

உன் நினைவுகள் தோளில் வீழ்ந்தால்
நானும் வாழ்வேன் என்ற நம்பிக்கை,
நீ சிரிக்கும்போது
என் மனம் காற்றில் சிறகுவிரிக்கும்.
உன் கோவமோ
என்னை இருள்குகையில் தள்ளாட வைக்கும்

நீ எனை மறந்து சென்ற பாதை
நான் காணாமல் போன திசை,
நீ மீளவும் இன்முகத்துடன் நடந்தால்
எனக்குள் ஒரு நிலவெழுச்சி பிறக்கும்.

என்னையும் என் காதலையும்
ஒர் கனவென எண்ணி விலகினால்,
அந்த கனவின் இறுதியில்
நான் இல்லை, என் மரண ஒலியில்
நீ சந்தோசித்திரு
அது போதும் எனக்கு

என்னை மறந்துவிடு
அது உனக்கு இன்பமெனில்
நான் மரித்துவிடுவேன்,
ஆனால் ஒருபோதும்
உன்னை மறக்காது என் காதல்.