கண்டியில் விபத்து நால்வர் படுகாயம்
கண்டியில் இன்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கண்டி, கட்டுகஸ்தோட்டை வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில்
இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது

- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

- நாவலபிட்டியாவில் விருந்தில் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது

- இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் 5,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை









