இதுவரையில் தேர்தல் நிலவரம்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை
Spread the love

இதுவரையில் தேர்தல் நிலவரம்

இதுவரையிலான தேர்தல் நிலவரங்கள் தற்போது தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில்,

உள்ளூராட்சித் தேர்தலில் இன்று காலை10 மணிவரையிலான இடம்பெற்ற வாக்களிப்பு வீதம்,

நுவரெலியா 22 %, பதுளை 22 %, மொனராகலை 15 %, அனுராதபுரம் – 20 %, யாழ்ப்பாணம் 18 %, மன்னார் 23 %, வவுனியா 31.5 %, திகாமடுல்ல 24%

கம்பஹா 20 %, மாத்தறை 20 %, களுத்துறை 20 %, பொலனறுவை 21 %, கொழும்பு 18 %, புத்தளம் 20 %, காலி 19 %, இரத்தினபுரி 20 %

அம்பாந்தோட்டை 19 %, கிளிநொச்சி 22 %, மாத்தளை 25 %, கேகாலை 20 %, கண்டி 21 %

அனைத்து பிரதேசங்களிலும் சுமூகமாக வாக்களிப்புக்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே 17 மாநகர சபைகளுக்கு மூவாயிரத்து 519 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1 மாநகர சபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் உள்ளூர் அதிகார சபைகள் இருக்கின்றன.

மலையகத்தில் மக்கள் ஆர்வமாக சென்று தத்தம் வாக்குப்பதிவினை மேற்கொண்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல் தொகுதியில் மக்கள் மந்தகதியில் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்ற போதிலும், அதிக எண்ணைக்கையானோர் வாக்களித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மன்னாரில் 114 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன.

இத் தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும் அதேநேரம் ஒவ்வோர் நிலையத்திலும் அதிகூடிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களித்ததன் பின்னர் அமைதியாக வீடுகளுக்குச் செல்லுங்கள் என்றும்,

நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை முறையாகக் கடைப்பிடியுங்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு தனக்கான பொறுப்பை நிறைவேற்றியுள்ளது. இனி உங்களின் பொறுப்பை நிறைவேற்றுங்கள்.

சுதந்திரமானதும் நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும்.

வாக்களிப்பு நிலையத்தினுள் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தல், படம் எடுத்தல், காணொளிகளைப் பதிவு செய்தல், ஆயுதங்களை வைத்திருத்தல், புகைப் பிடித்தல், மதுபானம் அருந்துதல் அல்லது போதைப்பொருட்கள் உபயோகித்தல்,

மதுபானம் அருந்திவிட்டு அல்லது போதைப்பொருள்கள் பாவனையுடன் வாக்கெடுப்பு நிலையத்துக்குச் செல்லுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை நாட்டு மக்கள் அனைவரும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். வாக்கெடுப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் முழு வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

ஆகவே, அவதானத்துடன் செயற்பட வேண்டும்.” – என்றார்.

இந்நிலையில், கண்டி – பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னொருவ பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர்

திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.