கல்கிசையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி

கல்கிசையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
Spread the love

கல்கிசையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி

கல்கிசையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி யாகி உள்ளதாக இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளனர்.

அங்கு வந்த மர்ம ஆயுத தாரிகள் திடீரென 19 வயது இளைஞன் மீது திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர்.

இவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இளைஞன் அந்த இடத்திலேயே பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கல்கிசையில் இடம் பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த வாலிபர் மீது எதற்காக இந்த மர்ம குழுக்கள் ,துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடுத்தின என்பதும் ,எதற்காக அவரை சுட்டு படுகொலை செய்தனர் என்பது தொடர்பான, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அனுரா ஆட்சி ஆட்சியில் ஏறிய பின்னர் ,இந்த வருடத்தில் இதுவரை கால பகுதியில், நூற்றுக்கு மேற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புதிய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவங்களினால், மக்கள் பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்,