இந்திய மீனவர்கள் மீண்டும் கைது
இந்திய மீனவர்கள் மீண்டும் கைது ,எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும், அவர்களிடம் இருந்து ஒரு விசை படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மன்னார் கடற்பரப்பில் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.45 மில்லியன் வாட்ஸ்அப் பரிசு மோசடி வழக்கில் பெண் கைது

- நாளையில் இருந்து வரி அறவீடு எல்லோருக்கும் அப்படிக்கும் அனுரா அரசு

- தெருநாய்களைக் கண்காணிப்பதற்காக அவற்றுக்கு மைக்ரோசிப் பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டது

- பிரதமர் ஹரினி அந்திகுவா மற்றும் பார்புடாவுக்குப் புறப்பட்டார்

- போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 வயது இளைஞர் காயம்









