இந்திய மீனவர்கள் மீண்டும் கைது
இந்திய மீனவர்கள் மீண்டும் கைது ,எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும், அவர்களிடம் இருந்து ஒரு விசை படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மன்னார் கடற்பரப்பில் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

- பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறது

- தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில்

- தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- 4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில்









