துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள்
துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள் ,கொஸ்கொட பொலிஸ் பிரிவின் மஹைந்துருவ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (30) காலை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
119 என்ற எண்ணுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி செயல்படாததால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டிற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிக்கப்படும் பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்று வீட்டின் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை

- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு

- ஈராக்கில் உள்ள ஈரானிய குர்து தளத்தின் மீது டெஹ்ரான் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்

- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு









