துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள்
துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள் ,கொஸ்கொட பொலிஸ் பிரிவின் மஹைந்துருவ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (30) காலை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
119 என்ற எண்ணுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி செயல்படாததால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டிற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிக்கப்படும் பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்று வீட்டின் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்









