விபத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்
விபத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் ,ராகமவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்
ராகம, தெவத்தையில் இருந்து தம்புவ சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராகம, கண்டலியத்த பலுவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- உலகில் அதிக வரியை அறவிடும் நாடக இலங்கை

- 17 மாவட்டங்களில் மோசமான வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- அர்னாப் புயல் கடற்கரையைத் தாக்கியதால் 1,80,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

- நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு உத்தரவு

- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது








