மூழ்கிய ரசிய கப்பல் 30 பேர் மாயம்

Spread the love

மூழ்கிய ரசிய கப்பல் 30 பேர் மாயம்

ரசியாவின் மோஸ்க்கோ என்றழைக்க படும் போர் கப்பல் மீது உக்கிரேன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது ,இதில் அந்த கப்பல் கரும் கடல் பகுதியில் மூழ்கியது

இந்த கப்பல் மூழ்கும் பொழுது அதில் பணியாற்றிய 24 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்,மேலும் முப்பது பேர் காணாமல் போயுள்ளனர்

எதிரி நாட்டின் ஏவுகணையில் சிக்கிய இந்த மிதக்கும் போர் கப்பல் சேதமாக்க பட்டது ,அவ்விதம் எதிரிகளினால் சேதமாக்க பட்ட கப்பலானது கட்டி இழுத்து வரப்படும் பொழுது கடலில் மூழ்கியதாக ரசியா தெரிவித்துள்ளது

மூழ்கிய ரசிய கப்பல் 30 பேர் மாயம்

எதிரி ஏவுகணை தாக்குதலில் சிக்கி மூழ்கிய ரசியா கப்பலில் உள்ளே தங்கி இருந்த முப்பது ரசியாவினது இராணுவத்தினர் காணமல் போயுள்ளதாக ,முக்கிய உளவுத்துறை நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் எதிர் தாக்குதல்களில் சிக்கி ,இதுவரை இருபதாயிரம் ரசியா எதிரி இராணுவம்
பலியாகியுள்ளதாக எதிரி நாடான உக்கிரேன் தொடர்ந்து கூறி வருகிறது

அதிவேக தாக்குதல் கலமாக விளங்கிய இந்த மிதக்கும் வீரமிகு சண்டை கப்பலானது உக்கிரேன் ஏவுகணையின் தாக்குதல் மூலம் மூழ்கடிக்க பட்டது ரசியாவின் இராணுவத்திற்கு பெரும் இழப்பாக கருத படுகிறது

கடல் பலத்தை எந்த நாடு கொண்டுள்ளதோ அந்த நாடே உலகை ஆளும் என்கின்ற முதலாம் உலக போர் கோட்பாட்டு தத்துவ வரலாறு சான்றாக அமையப் பெற்றுள்ளது

அவ்விதமான போரியல் விதிகளின் கீழே உலக வல்லாதிக்க நாடுகள் தமது கடற்படையை விஸ்தரித்து வருகின்றனர்

அதற்கு என பல மில்லியன் டொலர்களை ஆண்டு தோறும் பாதுகாப்பு செலவீனத்திற்கு ஒதுக்கி புதிய மிதக்கும் போர் கலங்களை உருவாக்கி வருகின்றனர்

இது நாடுகளுக்கு இடையில் பெரும் போட்டா போட்டி நிலையை உருவாக்க்கி வைத்துள்ளது

தமது கப்பலானது மூழ்கடிக்கப் படவில்லை என அறிவித்த எதிரி நாட்டு இராணுவம் பின்னர் அது கட்டி இழுத்து வரும் பொழுது மூழ்கியது என்ற செய்தி உக்கிரேன் படைகள் கூறுகின்ற எதிரி படைகளின் இழப்பு விகிதத்தை ஏற்று கொள்ள வைக்கிறது

உலகின் முதல் எதிரியாக விளங்கும் ரசியாவினது இராணுவ தாக்குதல்களில் தமக்கு ஏற்பட்ட முழு இழப்பு விபரங்களை உக்கிரேன் இராணுவம்

மூடி மறைத்து எதிரியாக விளங்கும் ரசியாவின் இராணுவ இழப்பை ஊதி பெருக்கி கூறி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply