புலி பாயும் பொறுத்திரு

Spread the love

புலி பாயும் பொறுத்திரு

படை விட்டு ஓடியவா
பகலவனை கொன்றாயா ..?
இறந்தான் உடலை இழுத்து
வீதி உலா வந்தாயா …?

பிரபாகரன் பிரம்மனடா
பிறப்பான் நாளையடா
வதம் செய்ய வருவாண்டா
வரி புலியை தருவாண்டா

பத்தாண்டு மேல் கடக்க
பாரெங்கும் புலி பாயும்
பூகோள அரசியலில்
பூகம்பம் இதுவாகும்

புதை குழியை தோண்டி வைத்து
புத்த பிரான் ஆட்டுகிறார்
செய்த கொலை பழிதீர்க்க
இலங்கை துண்டாகுமடா

அண்ணன் தம்பி ஆட்சியில
அடிதடி வீதி வர
பார் ஓடி பாய்ந்து வரும்
படை நடத்தி தமிழ் வீடு தரும்

காடையராம் சிங்களவர்
காலடியில் கதறுகின்ற
நாள் ஒன்று நாளை வரும்
நம்பி இரு சேதி தரும் …!

பிரபாகரனை கொன்று இழுத்து வந்ததாக கோ….ட் …டா..கூறிய போது
வன்னி மைந்தன்
ஆக்கம் 20-01-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *