சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக- கையெழுத்து வேட்டை !

Spread the love

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கோரி கையெழுத்து வேட்டை – பொங்கி எழுந்த தமிழர்கள் -பீதியில் சிங்கள தேசம்

சர்வதேச நீதிமன்றில் இலங்கை

ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானம், சிறிலங்காவை அனைத்துலக குற்றிவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தக் கோரும் வகையில் அமையவேண்டுமென்பதனை வலியுறுத்தி, ஜேர்மன்

அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இணையவழி கையெழுத்து இயக்கம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

கூட்டு நாடுகள்

சிறிலங்கா தொடர்பில் தீர்மானத்தினை முன்னெடுக்கின்ற கூட்டு நாடுகளில் ஒன்றாக ஜேர்மனும் இருக்கின்றது. கனடா, பிரித்தானிய

ஆகிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் அந்நாடுகளில் இடம்பெற்று வருகின்றது.

இதனொரு அங்கமாக ஜேர்மனியிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இணையவழியிலான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு www.gerechtigkeitfürtamilen.de எனும் இணையவழி மூலமாகமக்களால் ஒப்பமிடப்பட்டு வருகின்றன.

1) சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கான பரிந்துரையோடு, ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அனுப்ப வேண்டும்.

2) மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள், இனப்படுகொலை மீண்டும் நிகழ்வதைத் தடுக்கும் பொருட்டு, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களே தமிழ்த் தேசிய இனச்சிக்கலுக்கான நிரந்தர அரசியல் தீர்வினைக் காண அனுமதிக்கப்பட வேண்டும்.

சிங்கள அடக்குமுறை

சிறிலங்காவை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இந்தச் சிக்கல் பீடித்துள்ளது. இந்தச் சிக்கல் 1958, 1977, 1983 ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான கொடிய கட்டமைக்கப்பட்ட

இனப்படுகொலைகளாக வெளிப்பட்டது. 1983-2009 போர்க் காலத்திலும் அதன் பின்விளைவாகவும் தமிழர்களுக்கு எதிரான

போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றம் ஆகியவற்றிலும் வெளிப்பட்டது.

பாதிப்புக்காளான மக்கள் பொதுவாக்கெடுப்பின் வழியாக அரசியல் தீர்வு காண்பதில் பங்கேற்க அதிகாரமளித்தல் வேண்டும். பொதுவாக்கெடுப்பு என்பதே பொருத்தமான ஜனநாயக

பொறிமுறையாகும். ஏனென்றால் இலங்கைத்தீவில் நீடித்த நிலையான தீர்வுக்குத் தமிழர்களின் பங்கேற்பு இன்றியமையாதது என்பதோடு, பொதுவாக்கெடுப்பு ஈடுசெய் நீதியின் ஓர் அம்சமாகவும் அமையும்.

போர் பாதிப்பு

3) போரினால் விதைவைகளான 90,000 தமிழ்ப் பெண்களின் நிலைகுறித்தும், காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்தும், சட்டத்துக்குபுறம்பாகச்

சிறைவைக்கப்பட்ட தமிழ்போர்க் கைதிகளின் நிலைமை குறித்தும், வெள்வேறு காரணிகளின் முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு குறித்தும், இராணுவமயமாக்கல் குறித்தும், ஐ.நா

மனிதவுரிமைகளுக்கான உயராணையர் அலுவலகத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஐ.நா மனிதவுரிமைப் பேரவைக்கு தொடர்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

ஆகிய மூன்று நிலைப்பாடுகளை ஜேர்மன் உட்பட கூட்டு நாடுகளால் கொண்டு வரப்பட இருக்கின்ற புதிய தீர்மானத்தில் உள்ளடக்க வேண்டும் என கோரியுள்ள இந்த கையெழுத்து இயக்கம்,

தாயக தமிழ் அரசியல் தரப்பு, சிவில் சமூகமும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் ஆகியன எடுத்துள்ள ஒன்றுபட்ட நிலைப்பாட்டையும், சிறிலங்காவை

சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்துக்கு பாராப்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ள ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கையினையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை செய்திகள் 20 படிக்க இதில் அழுத்துங்க

நடிகை ராதிகா திடீர் அறிவிப்பு

Author: நலன் விரும்பி

Leave a Reply