கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள்
கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள் நேற்று வெளியான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2023(2024) பெறுபேறுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான இரவீந்திரராசா பிருந்தா,
அன்பழகம் மீனுஜா ஆகியோர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அந்தவகையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
அதேபோல், அன்பழகன் மீனுஜா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
இதற்கமைய, வர்த்தக பிரிவு பெறுபேறுகளில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முன்னணி வகிக்கிறது.
குறித்த மாணவிகளுக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் மாணவர்கள் தற்போது அதி உயர் பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்தது வருவது ,கல்வியால் ரீதியில் அதி வளர்ச்சி கொண்டுள்ளதை இந்த மாணவர்கள் சாதனை விபரங்கள் எடுத்து காட்டுகின்றன .















